வனம் என்றாவது தூங்குமோ?
அங்கு மனிதர் வசிப்பதில்லை
எனவே தூங்கும் தொல்லையில்லை
இரவின் இருளிலிலும்
மரங்களைக் கிழித்துச் செல்லும் காற்றால்
சலசலக்கும் மரங்கள்
அம்மரங்களுக்குத் தூக்கம் என்று ஒன்று
உண்டோ?
தூங்காத மரங்கள்
தூங்குமூஞ்சி மரங்களாயினும்
வனத்தில் தூங்குவது சாத்தியமில்லை!
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்
இரைக்காகக் காத்திருக்கும் மிருகங்கள்
இவை தூங்குவதில்லை
காங்க்ரீட் வனத்தில் தூக்கம் நிச்சயம்
பசித்தால் தூக்கம்,உண்டால் தூக்கம்
சோம்பலில் தூக்கம்,உழைப்பால் தூக்கம்
இரவில் தூக்கம்,பகலில் தூக்கம்
ஆனால் மரங்கள் அடர்ந்த வனம் என்றும்
தூங்காவனம்தான்!
அருமையான விளக்கம் வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ் மணம் 2
Room pottu think pannuveergalo !
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு"தூங்காத மரங்கள்
தூங்குமூஞ்சி மரங்களாயினும்
வனத்தில் தூங்குவது சாத்தியமில்லை!"
மிக அழகான கற்பனைச் செரிவு.
வாழ்த்துக்கள்.
God Bless You
புரிந்த மாதிரித்தான் தோன்றுகிறது.
பதிலளிநீக்கு//தூங்குமூஞ்சி மரங்களாயினும் வனத்தில் தூங்குவது சாத்தியமில்லை!//
பதிலளிநீக்குஅருமையாகச் சொன்னீர்கள். :)
தூங்குகின்ற மனங்கள்
பதிலளிநீக்குதுயிலெழப் பாடினீர்
தூங்கா வனத்தை
துணைக்கு அழைத்து!
த ம 4
நட்புடன்,
புதுவை வேலு
அப்படித்தான் போல...
பதிலளிநீக்குரசித்தேன்...
தூங்கா வனம் ,
பதிலளிநீக்குவனம் மட்டுமா ?
தூங்க மனம்
தூக்க மாத்திரை போடாமல்
தூங்கமுடியா மனிதர்கள்
தூக்கத்தில் நடப்பவர்கள்
சிரிப்பவர்கள்
பேசுபவர்கள்
கனவுகாண் பவர்கள்
மூச்சு விடுதல்
உள்ளிழுத்தல்
மனித இரத்த ஓட்டம்
இதயத் துடிப்பு என
மனிதனும் தூங் காவனம் தானே?
தூங்கு மூஞ்சி மரம்போல் .
வயது முதிர்ந்து விட்டால் மனிதனும் தூங்கா வனம்தானே!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
அருமையான விளக்கம் பகிர்வுக்கு நன்றி த.ம 9
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனிதா மனிதத்தை இழந்தாயடா..:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தூங்கா வனம் என்பதே அருமையான சொல்லாடல்.
பதிலளிநீக்குகவிதையும் சிறப்பாக உள்ளது.
தொடர்கிறேன்.
நன்றி.
கவிதை சிறப்பாக உள்ளது.
பதிலளிநீக்குவணக்கம்
ஐயா.