தூக்கம்
வரவில்லை.
கடிகாரத்தைப்
பார்க்கிறேன்.
மணி 3.
சன்னல்
வழியாக வெளியே பார்க்கிறேன்.
காலனியைச்
சுற்றிய பாதையில்
இரவு முழுதும் விளக்குகள் எரியும்.
இன்று என் வீட்டின் பின் இருக்கும்
விளக்கு எரியவில்லை.
ஆனால்
லேசான நிலவொளி இருக்கிறது.
கதவைத்
திறந்து வெளியே வருகிறேன்.
முன்பெல்லாம்
வேப்ப மரம்,தென்னை
மரம் எனப் பல மரங்கள் இருக்கும்.
இப்போது
நாகலிங்கம் தவிர எதுவும் இல்லை.
கான்க்ரீட்
தளம்தான்.
சரி,கொஞ்ச நேரம் நடக்கலாம் என
எண்ணி நடக்கத் தொடங்குகிறேன்.
சிறிது
தூரம் சென்றதும் பாதை இடது புறமாகத் திரும்பும்.அது வரை நடந்து விட்டேன்.
மறு
கோடியில் யாரோ நிற்பது போல் தெரிகிறது.
என்னை
மாதிரியே தூக்கம் வராத எவரோ என எண்ணுகிறேன்.
மேலே
செல்லாமல் அங்கேயே நின்று யார் என உற்றுப் பார்க்கிறேன்.
ஒரு
பெண்!
திடீரென்று
நாடகத்தில் அடிப்பது போல் அவள் மீது வெளிச்சம் அடிக்கிறது.
வெண்மை நிற உடை.
விரித்துப் போட்ட கூந்தல்.
கைகளில் எதையோ வைத்து
உருட்டிக் கொண்டிருக்கிறாள்.
அந்த தூரத்திலும் எனக்குத்
தெரிகிறது யாரோ புதியவள்.
எங்கள் காலனிப் பெண்ணல்ல.
இரவுக் காவலாளி யாரையாவது
அழைத்து வந்து விட்டானோ?
இதெல்லாம் வேறு நடக்கிறதா?
அருகில் சென்று பார்க்கலாமா?
ஓரடி முன் எடுத்து வைக்கிறேன்.
ஏதோ தடுக்கிறது
அப்போது அவளே முன்னேறி
வருவதைப் பார்க்கிறேன்.
திடீரென்று ஒரு பயம் என்னை ஆட்கொள்கிறது.
நாலடி பின் நகர்ந்து
நாகலிங்க மரத்தடியை அடைகிறேன்.
காலையில் பூக்கத் தயாராக
இருக்கும் ஒரு பூவைப்ப் பறிக்கிறேன்.
அவள் வந்து கொண்டிருக்கிறாள்…கைகளை
விரித்த படி.ஒரு அணைப்புக்குத் தயராக.
அந்தப் பூவை அவள் மீது
தூக்கி எறிகிறேன்.
பூ அவள் மீது விழுந்ததும்
ஒரு விகாரமான ஓலி எழும்புகிறது அவளிடம்.
அப்படியே பற்றி எரிகிறாள்.அவ்வளவுதான்
அங்கு எதுவும் மிச்சமில்லை.
ஒரு துர்நாற்றம் மட்டும்
பரவுகிறது.
“ஓம் நமச்சிவாய” சொல்லிக்கொண்டே
இருக்கிறேன்.
வேர்வை வெள்ளம்.
எங்கோ ஆழ்வது போன்ற உணர்வு.
கண் விழிக்கிறேன்.
உடலெல்லாம் வேர்வை.
கனவுதானா?
மணியைப் பார்க்கிறேன்
3 மணி.
சன்னல் வழியே வெளியே
பார்க்கிறேன்.
மெல்லிய நிலவொளி தவிர
வேறு வெளிச்சம் இல்லை.
என்ன பைத்தியக்காரக்
கனவு!
வெளியே போகிறேன்
நடக்கத் தொடங்குகிறேன்
சிறிது
தூரம் சென்றதும் பாதை இடது புறமாகத் திரும்பும்.
அது
வரை நடந்து விட்டேன்.
மறு
கோடியில் யாரோ நிற்பது போல் தெரிகிறது!
……………............
……………...............
.....................! !
I felt as if I was reading a novel of Sujatha!
பதிலளிநீக்குகனவாகினும் கிளுகிளுப்பூட்டும் இந்தக் கதை அருமை. நன்றாகவே கதை விட்டுள்ளீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
கனவில் வந்ததை கற்பனை பன்னி அருமையாக கதையாக தொகுத்தமைக்கு மிக்க நன்றி. த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இளமை திரும்புகிறது...!
பதிலளிநீக்கு