தொடரும் தோழர்கள்

வியாழன், மே 28, 2015

லாட்ஜில் ஒரு ரெய்டு!



”டக் டக் டக்”

கதவு தட்டப்பட்டது

மீண்டும்..மீண்டும்..

நாராயணனுக்கு விழிப்பு வந்து விட்டது.

கடிகாரத்தைப் பார்த்தான்.

மணி 12.10

இந்த நேரத்தில் யார்?

அந்த லாட்ஜில் வழக்கமாக நடக்கும் அந்த செயல்களை அறிந்திருந்தாலும்,பார்த்திருந்தாலும் இன்று வரை அதனால் அவர்களுக்குப் பாதிப்பு இல்லை.

இப்போது ஏதாவது?

கதவு மீண்டும்...

அறைத் தோழனும் எழுந்து விட்டான்.

நாணா கதவைத் திறந்தான்

உள்ளே நுழைந்தவர் ஒரு போலிஸ் அதிகாரி.

”நீங்கள்தான் சந்திரசேகரனா?”கேட்டார்

“இல்லை.நான் நாராயணன்.”

” அவர்தானா” என்றார் தோழனைக்காட்டி

”அவர் வெங்கட்ராமன்,சந்திரசேகரன் ஊருக்குப் போயிருக்கிறார்”

அந்த அதிகாரி அறிமுகம் செய்து கொண்டார்”நான் வேணுகோபால்,ஐ.பி.எஸ்.உதவிக் கண் காணிப்பாளர்.சந்திரசேகரன் அவர் நண்பரிடம் சொன்ன தகவலின் அடிப்படையில்தான் இன்று ரெய்டு வந்தோம்.மிக மோசமான லாட்ஜ் ஆக இருக்கிறதே,இங்கு ஏன் வசிக்கிறீர்கள்?விரைவில் எங்காவது மாறிப் போய்விடுங்கள்.சந்திரசேகரன் வந்தும் சொல்லுங்கள்”

அவர் போய் விட்டார்.நண்பர்கள் இருவரும் பயத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.
என்ன பண்னித் தொலைத்திருக்கிறான் இந்தச் சந்துரு.?பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருக்கூடாதோ?வேண்டாத வம்பு.

ஒரு ஃப்ளாஷ் பேக்.....

சில நாட்களுக்கு முன்.

சந்திரசேகரனின் வகுப்புத்தோழனான குமார் ஐபிஎஸ்,அந்த ஊரில் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சியில் இருந்தவன்,அவனைப் பார்க்க வந்தான்.அப்போது சந்திரசேகரன் அவனிடம் அந்த லாட்ஜில் தடையின்றி நடக்கும் தொழில் பற்றிக் கூறி விட்டான்

அவன்  உதவிக்கண்காணிப்பாளரிடம் சொல்ல அதன் விளைவே இந்த ரெய்டு.

இப்போது,அறைக்குள்ளிருந்தவாறு பார்த்தார்கள் நண்பர்கள்.

சில பெண்களையும் ஆண்களையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

கதவைச் சாத்திக் கொண்டு படுத்த இருவருக்கும் உறக்கமே வரவில்லை.

மறுநாள் காலை.காலை 5 மணியளவில் ஊரிலிருந்து திரும்பி லாட்ஜை அடைந்தான் சந்திரசேகரன்.

அவனைப் பார்த்ததும் வரவேற்பு மேசையில் இருந்த மேலாளர் சொன்னார்”சார். உங்களுக் கெல்லாம்  இந்த லாட்ஜ் சரிப்படாது.சீக்கிரம் காலி பண்ணிடுங்க”அவர் சொற்களில் ஒரு மரியாதை,பயம்,வெறுப்பு எல்லாம் கலந்திருப்பதாகத் தோன்றியது

“என்ன சார் திடீர்னு?”

”போயிடுங்க.ரெண்டு பேருக்கும் பிரச்சினையில்லை.உங்க அறைத்தோழர்கள் கிட்ட சொல்லணும்னு இருந்தேன்.நீங்க வந்துட்டீங்க. அவங்க கிட்ட சொல்லுங்க.”

அதற்கு மேல் பேச அவர் விருப்படவில்லை என்பது தெரிந்தது.

அறையை அடைந்தான் சேகர்.கதவைத் தட்டினான்.

திறந்த நண்பர்கள் நடந்ததையெல்லாம் கூறினார்கள்.

அன்று மாலை ஊரெங்கும் சுற்றி ஒரு வீட்டு மாடியில் இருந்த ,வாடகை அதிகமான ,அறையை முடிவு செய்தனர்.

இரு நாட்களில் அங்கு மாறினர்.

அதன் பின் சுவாரஸ்யமான காட்சிகள் காணக்கிடைக்கவில்லை!

(நிகழ்வுகள் அனைத்தும் உண்மை.காவல்துறை அதிகார்களின் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.பயிற்சியில் இருந்த அதிகாரி,நேர்மையின் இலக்கணமானவர், பிற்காலத்தில் மிக உயர்ந்த பதவியை அடைந்தார்)

9 கருத்துகள்:

  1. வாழ்வியல் அனுபவங்கள் என்றென்றும் மறக்க இயலாதவை
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  2. யதார்த்தமான விடயங்கள்
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  3. தலைப்பினைப்போலவே மிகவும் விறுவிறுப்பான ஆரம்பம். ஆனாலும் சப்பென்ற முடிவு. அதுதான் தங்களின் எழுத்துத்திறமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. சுவைமிகு சுவராஸ்யம்
    தம + 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சொல்லும் காவல் அதிகாரி யாரென அறிந்துகொண்டேன். அவரிடம் விடுதியில் நடப்பக்டு பற்றி சொன்னக்டு நீங்கள் தானே?

    பதிலளிநீக்கு