தொடரும் தோழர்கள்

வியாழன், ஏப்ரல் 17, 2014

தேவலோக மயிலை!



நான் சென்னை மயிலை விவேகானந்தா கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த காலத்தில், மயிலையை ஒரு தேவ லோகம் என்றே நான் சொல்லி வந்தேன்.

காரணங்கள் என்ன என்று யோசிக்கிறீர்களா?

சொல்கிறேன்.

தேவலோகத்தில் முக்கியமான இரண்டு உண்டு அவை கற்பகமும்,காமதேனுவும்.

அதாவது கற்பகத் தருவும் காமதேனுப் பசுவும்.

கேட்டதையெல்லாம் தரும் கற்பகத் தரு.

அது போலவே அன்னை கற்பகாம்பாள் அருள் பாலிக்கும் தலம் மயிலை.

நினைத்தவுடன் சென்று படம் பார்க்க லஸ்ஸில் காமதேனு திரையரங்கம்!

மேலும் தேவ லோகத்தில் ரம்பை,ஊர்வசி,மேனகா,திலோத்தமை எனப் பல அழகிகள்.

அந்த வயதில் பார்க்கும் பெண்ணெல்லாமே ரம்பை,ஊர்வசிகள்தானே! அதுவும் மயிலை!

தேவலோகத்தில் அமுதம்.

டாங்க் உடுப்பியில் அமுதம் போன்ற காப்பி!

தேவலோகத்தில் பொழுது போக்க இசை,நாட்டியம் ,நாடகம்.

இங்கே விடுதியை விட்டு வெளியே வந்து சாலையைக் கடந்தால் மைலாப்பூர் ஃபைன் 
ஆர்ட்ஸ் .

அப்பொதெல்லாம் செண்டிமெண்டலாகச் சில நாடகக் குழுக்கள்,அங்குதான் தங்கள் புதிய நாடகங்களை அரங்கேற்றுவார்கள்.

மேடை ஏறுவதற்கு முதல் நாள் முழு மேடை ஒத்திகை உண்டு.

அப்படிப் பல நாடகங்களை மேடை ஒத்திகையிலேயே பார்த்து ரசித்ததுண்டு .

நாங்கள் ஐந்தாறு நண்பர்கள் மட்டுமே செல்வோம்.

பழக்கம் காரணமாக எங்களை அனுமதிப்பார்கள்.

ராகினி ரெக்ரியேஷன்ஸின்(கே.பாலசந்தர்) மெழுகு வர்த்தி,சர்வர் சுந்தரம்,நீர்க்குமிழி, விவேகாவின்(சோ) மெட்ராஸ் பை நைட் இப்படிப் பல!

ஒரு முறை ஒரு குழுவைச் சேர்ந்த ஒரு நடிகர்(பெயரைச் சொல்வது முறையன்று) எங்களிடம் வந்து ஆங்கிலத்தில்ஒத்திகையைப் பார்த்தீர்கள் என்றால் நாடகத்தை ரசிக்க முடியாதுஎன்றார்.

எங்கள் திமிர் சும்மா இருக்குமா?”நாடகத்தைப் பார்க்க மாட்டோம்என்று திருப்பி அடித்தோம்.

பாவம் அவர்.

இயலும் இசையும் ரசிக்க ஆள்வார்பேட்டை வீனஸ் காலனியில் வாரியார் ஸ்வாமிகளின் கம்பராமாயணம், பட்டி மன்றங்கள்,கர்நாடக சங்கீதக் கச்சேரிகள்(அப்போதே கர்னாடக சங்கீத்த்தில் ஆர்வம் உண்டு).

படிப்பதும் உண்டு! :)))



32 கருத்துகள்:

  1. #அந்த வயதில் பார்க்கும் பெண்ணெல்லாமே ரம்பை,ஊர்வசிகள்தானே! அதுவும் மயிலை!#
    சரியாச் சொல்லுங்க ,அது கயிலையா ,மயிலையா ?
    த ம 3

    பதிலளிநீக்கு
  2. தற்போது காமதேனு தியேட்டர் கல்யாண மண்டபமாக மாறிவிட்டது.... மயிலை பக்கம் அடிக்கடி போனாலும் கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் எப்போதாவது தான் தரிசிப்பதுண்டு. கூடவே கிரி டிரேடிங்கையும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய அந்த இரண்டாண்டுகள் மறக்க முடியாதவை சரவணன்!
      நன்றி

      நீக்கு
  3. கடைசி சொற்றொடருக்கு முன் எப்போதாவது என்று போடலாமோ?!

    பதிலளிநீக்கு
  4. அலைகள் மட்டுமா...? குறும்புகளும் ஓய்வதில்லை ஐயா... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  5. படிப்பதும் உண்டு! :)))

    அனுபவப்படிப்பு...!!

    பதிலளிநீக்கு
  6. குசும்பு பிடிச்ச தாத்தா :))) ஏதோ தேவ லோகம் மயில் என்று உற்று நோக்கி
    வெள்ளிக் கிழமை அதுவுமா இதுவல்லவோ பகிர்வு என்று நினைத்தால்
    வழமை போலவே அனுபவக் குசும்பு :))))))) வாழ்த்துக்கள் ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தா?!இது அநியாயம்!இளநரையைப் பார்த்துத் தவறாகச் சொல்லி விட்டீர்கள்.நான் 69 வயதே நிறைந்த இளைஞன்!! :))
      நன்றி

      நீக்கு
    2. உண்மை தான் உண்மை தான் நம்பீற்றோம் :))))) தங்களுக்கு வயது என்றும்
      பதினாறே வாழ்த்துக்கள் ஐயா பிறரை மகிழ வைக்கும் அன்பு இதயத்திற்கு
      இந்த இளமை என்றும் நிலைத்திருக்கட்டும் .

      நீக்கு
  7. 1951-கல்லூரிக்கு அருகாமையில் இருந்த டி வி எஸ் சந்தானம் அவர்களின் வீடு எளிமையக இருந்தது கண்டு மதுரைக்காரனான எனக்கு ஆச்சரியமாக இருந்தது.இப்போ நினைத்தாலும் அபபடித்தான்.கம்பன் புகழ்பாடி இஸ்மாயில் வீடும் அது மாதிரிதான்.டிஆர் மஹாலிங்கதின் கப்பல் வீடு (சம்ஷ்க்ருத கல்லூரிக்கெதிரில்) ப்ரமாண்டமாக இருப்பதை பார்த்து,மூக்கின் மேல் கை வைத்து ஆக்சரியப்பட்டதுண்டு.வீணை பாலச்சந்தரின் வீடு நடுத்தரம்.அமைதியான இடம்.கொடுத்துவைத்த்து 2 வருடங்கள்தான் சல்லிவன் கார்டன் தெரு முனை நாட்டிய தேவியை மறக்கமுடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மலரும் நினைவுகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் போல் தெரிகிறதே!பகிருங்களேன்.
      நன்றி ஐயா

      நீக்கு
    2. விவேகானந்தா கல்லூரி தமிழ் ஆசிரியர் ராசமணிக்கனாரிக்கனாரின் மாணவர்களில் இன்றய கல்கி ஆசிரியர் ராஜேந்திரன் அவர்களும் ஒருவர்.மாலை வேளைகளில் கல்கி அவர்கள் ஃபோர்ட் காரில் வந்து தன் மகனை அழைத்துச்செல்வார்.அந்த காரை ஒரு நாள் தள்ளி ஷ்டார்ட் செய்த அனுபவம் கோடி பெறும்.கல்கி அவர்களுடன் சிவகாமியின் சபத நாடக ஒத்திகையின்போது உடன் இருந்து வேடிக்கை பார்த்தை என்னவென்று சொல்ல..கல்கி அவர்கள் தாத்தா ராமனுஜாச்சாரியின்மேல் வைத்திருந்த மதிப்பின் காரணமாக கல்கி பத்திரிக்கையில் அவர்களின் ஃபோட்டோவை .அட்டைப்படத்தில் போட்டு ஒரு தலையங்கம் எழுதினார்.ராஜாஜி அவர்களுக்கு அது பிடிக்கவில்லை.மோசமாக விமரிசித்து,மக்களின் கண்டனத்துக்குள்ளானார்.தாத்தா ஒரு தீவிர சங்கீத ரசிகர்.நவராத்ரி நாட்களில் ஹோமில் கச்சேரிகள் நடைபெறும்.புகழ்பெற்ற பாடகர்கள் வந்து விழாவை கௌரவிப்பார்கள்.பெண் பாடகர்களை அழைக்கமாட்டார்.ராமகிருஷ்ண க்ருபா அமெச்சூரின் பக்தி நாடகங்கள் சாஷ்வத அம்சம் இன்னும் எத்தனையோ சுகானுபவங்கள்.

      நீக்கு
  8. 1951-கல்லூரிக்கு அருகாமையில் இருந்த டி வி எஸ் சந்தானம் அவர்களின் வீடு எளிமையக இருந்தது கண்டு மதுரைக்காரனான எனக்கு ஆச்சரியமாக இருந்தது.இப்போ நினைத்தாலும் அபபடித்தான்.கம்பன் புகழ்பாடி இஸ்மாயில் வீடும் அது மாதிரிதான்.டிஆர் மஹாலிங்கதின் கப்பல் வீடு (சம்ஷ்க்ருத கல்லூரிக்கெதிரில்) ப்ரமாண்டமாக இருப்பதை பார்த்து,மூக்கின் மேல் கை வைத்து ஆக்சரியப்பட்டதுண்டு.வீணை பாலச்சந்தரின் வீடு நடுத்தரம்.அமைதியான இடம்.கொடுத்துவைத்த்து 2 வருடங்கள்தான் சல்லிவன் கார்டன் தெரு முனை நாட்டிய தேவியை மறக்கமுடியாது

    பதிலளிநீக்கு
  9. கொடுத்து வைத்தவர்
    அதற்கும் நிச்சயம் அதிர்ஷ்டம் வேண்டுமல்லவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பகம் தரிசனம் ஒவ்வொரு வெள்ளியன்றும் என்றால் அதிர்ஷ்டம்தானே!
      நன்றி ரமணி

      நீக்கு
  10. சல்லிவன் கார்டன் வீதி பெயர் மாற்றம் பொறுத்தமானதா?ராமக்ருஷ்ணா இல்லத்தின் முன்னுள்ள சிலை காக்காய் உட்காருவதர்க்காகவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் பெயர் மாற்றங்களில் பொருத்தம் வேறா?
      சிலைகள் எல்லாமே அதற்காகத்தான்!
      நன்றி

      நீக்கு
    2. ப்ரபல பாய்ஷ் கம்பனிகளை தொடர்ந்து அமெச்சூர் நாடக அமைப்புக்கள் உருவாகிய ஆரம்பகாலத்தில்,ராமகிருஷ்ண க]கிருபாஅமெச்சுர் அரங்கேற்றிய சிவகாமியின் சபதம்,அனைவரின் பாரட்டைபெற காரணமாகவிருந்ததது, முக்கிய பாத்திரங்களில் நடித்த இரு ராமமூர்த்திகளின்(ஒருவர் டாக்டர் மற்ரறொருவர் இஞ்னியர்) அசத்தும் நடிப்பும் கல்கி அவர்களின் நேரடி கண்காணிப்பும்தான்.இந்த நடகம் இன்று காமராஜர் அரங்கம் அமைந்துள்ள வெட்டவெளியில் அமைத்த கொட்டகையில் ஒரு தமிழ் விழாவிர்க்காக நடைபெற்றபோது மெட்ராசே அதிர்ந்ததென்றால் நம்புவீர்களா.கோபலரத்தினம் அவர்களால் நாடகமாக்கப்பட்ட அந்த நாடகம் பிற்கால்த்தில் டி கே எஷ் சகொதரர்களால் ப்ரபலமாக்கப்பட்டது..பெண் வேடம் பொட்ட இன்ஞ்னியர் ரமமூர்தி அவர்களை என்ன சொல்லி பாராட்டினாலும் பாராட்டியவர்கள் பாராட்டுக்குறியவர்கள் அந்த அமெச்சூர் சபையை உருவாக்கியவர் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ராமானுஜாச்சாரியவர்களை கலை உலகம் மறந்துவிட்டதோ.அவர்கள் தன் சகோதருடன் இணைந்து உருவாக்கிய ராமகிருஷ்ணா மிஷன் ஹோம் எத்தனை எழை மாணவர்களுக்கு வாழ்வளித்தது என்பது சரித்திரம்.அவர்களின் மூத்த சகோதரரின் சிலையைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன்

      நீக்கு
    3. அக்காலக் கலை உலகு பற்றி நிறைய அனுபவங்கள் இருக்கும்போல் தெரிகிறது.
      பதிவின் மூலம்,இல்லையேல் பிளஸ்ஸின் மூலம் பகிரலாமே!
      நன்றி

      நீக்கு

    4. ஆகட்டும்.மீண்டும் சந்திப்போம்

      நீக்கு
  11. அடக்கடவுளே..... ஏதோ பக்தி முத்தி போய் எழுதிய பதிவு என்று
    நான் வரவில்லை.
    ஆனால்....
    என்னமா வார்த்தையில் விளையாடி இருக்கிறீர்கள்.......
    ரசித்தேன் பித்தன் ஐயா.

    (69 வயதானால் தாத்தா இல்லையா?)

    பதிலளிநீக்கு
  12. எப்போதும் போலவே சுவையான நினைவுகள்...

    தலைப்பில் ஒரு குசும்பு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல பதிவு. பழைய அனுபவங்களை மீட்டிப் பார்ப்பதென்பது சுகமானது. தாத்தாவாவது வயதில் இல்லை என்பது உண்மை. Andi CHAMY அவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்ததும் ரசிக்க வைத்த்தது. த.ம. 11 .என் தளத்தில்: http://newsigaram.blogspot.com/2014/04/100happydays.html #100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays .

    பதிலளிநீக்கு
  14. எங்க ஊரைப் பற்றி உயர்த்தியாக எழுத் இருக்க்கிறீர்கள். திரு சந்தானம் எங்கள் பாட்டியின் வீட்டில் வாடகைதாரராக இருந்த காலம். பிறகு டிசில்வா சாலையில் பெரிய வீடு கட்டிப் போனார்கள். அவர் குழந்தைகள் எங்கள் வீட்டுக்காரர் எல்லாம் ஒன்றாகவிளையாடினவர்கள்.மயிலையின் அழகு எங்கும் வராது.

    பதிலளிநீக்கு