ஒரு அரசியல்வாதி விபத்தில் இறந்த பின் அவர்
உயிர் மேலுலகம் சென்றது.
அங்கு வாயிலில் ஒரு தேவதை நின்று
கொண்டிருந்தது.
தேவதை சொன்னது”நீங்கள் மிகப் பிரபலமானவர்.எனவே
எங்கு செல்வது-சொர்க்கமா, நரகமா-எனத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு
வழங்கப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு இடத்திலும் ஒரு நாள் இருந்து தாங்கள் முடிவு
செய்யலாம்”
தலைவர் சொன்னார்”பார்க்கவே
வேண்டாம்.நான் சொர்க்கத்துக்கே செல்ல விரும்புகிறேன்”
தேவதை சொன்னது”மன்னிக்கவும்,விதிகளை மீற
முடியாது”
அவர் முதலில் நரகத்துக்கு அழைத்துச்
செல்லப்பட்டார்.
உள்ளே நுழைந்ததும் பிரமித்துப் போனார்.
எங்கும் பசுமை.
ஆடம்பர மாளிகைகள்
குளு குளு என்று இருந்தது
அவர் அறிந்த அரசியல்வாதிகள் பலரை அங்கு கண்டார்
அனைவரும் ஆடம்பரமான ஆடை அணிகளுடன்
காணப்பட்டனர்.
தெருவெல்லாம் ரத்தினக் குவியல்கள்.
குடித்துக் களிக்க மது வகைகள்,
அளவில்லாமல்.
உண்பதற்குப் பல வித உணவுகள்.
பாலும் தேனும் ஓடும் ஒரு நாடு போல்
என்று எண்ணினார் அவர்.
அந்த நாள் மிக மிக இனிமையாகக் கழிந்தது.
மறு நாள் சொர்க்கத்துக்கு அழைத்துச்
செல்லப்பட்டார்.
அனைவரும் வெண்ணிற ஆடை அணிந்து
மகிழ்ச்சியாக மேகக்கூட்டங்களில் பாடி ஆடியவாறு இருந்தனர்.
அவருக்குப் பசியே எடுக்கவில்லை;எனவே
உணவைப் பற்றி எண்ணவில்லை.
அனைவரும் அது போலவே.
அந்த நாளும் விரைவாகக் கழிந்தது.
மறுநாள் தேவதை வந்து அவரிடம் கேட்டது”எங்கு
செல்ல எண்ணியுள்ளீர்கள்?”
அவர் சொன்னர்”இரண்டுமே
இனிமைதான்;ஆயினும் நரகமே மிக இனிமை;அங்குதான் செல்ல விரும்புகிறேன்.
அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
உள்ளே சென்றார்.
பின்னால் கதவு சாத்தப்பட்ட்து.
அவர் அதிர்ந்தார்
எங்கும் ஒரு அரை இருட்டு.
வறண்ட பிரதேசமாக இருந்த்து.
சூடு தீப்பிழம்பாகத் தாக்கிற்று
அவர் அறிந்த அதே பலர் கிழிந்த ஆடைகளோடு
கடுமையான வேலைகளில் ஈடுபட்டி ருந்தனர்.
அவருக்கு ஒரே குழப்பம்.
ஒருவரிடம் கேட்டார்”நேற்று மாதிரி
இல்லாமல் எல்லாம் தலைகீழாக மாறி இருக்கிறதே?”
அவர் சொன்னார்”இதுதான் உண்மை நிலை.நேற்று
நாங்கள் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தோம்.இன்று நீங்கள் வாக்களித்து இந்த இடத்தைத்
தேர்ந்தெடுத்து விட்டீர்கள்.”
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கதை சூப்பர் .
பதிலளிநீக்குநன்றி முரளி
நீக்குநலந்தானே?
அருமை...அருமை...
பதிலளிநீக்குநன்றி
நீக்குஇந்த கதையை வேறு மாதிரி படித்திருக்கிறேன். இருப்பினும் (தேர்தல்) நேரத்திற்கு பொருத்தமான கதை.
பதிலளிநீக்குஅதுதானே முக்கியம்!
நீக்குநன்றி
அருமை அருமை
பதிலளிநீக்குஎம்டனுக்கு எம்டர்கள் பதிலடி அருமை
நன்றி ரமணி
நீக்குtha.ma 4
பதிலளிநீக்குExcellent Sir! Enjoyed verymuch!
பதிலளிநீக்குநன்றி பாலகணேஷ்
நீக்குஅட...! ரொம்பவே ரசித்தேன் ஐயா...
பதிலளிநீக்குநன்றி டிடி
நீக்குயதார்த்தம் உணர்ந்து,சந்தர்ப்பம் பார்த்து அடித்திருக்கிறீர்கள்,ஐயா!நன்று!!!
பதிலளிநீக்குநன்றி சுப்ரமணியம் யோகராசா
நீக்குசிறப்பான கதை தக்க சமயத்தில் சரியாக நகர்த்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா .
பதிலளிநீக்குநன்றி அம்பாளடியாள்
நீக்குபோட்டாச்சி! (ஒட்டு)
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா
நீக்குஐயா நலம் தானே ...அம்மா எப்படி இருக்காங்க ?
பதிலளிநீக்குதக்க நேரத்தில் தக்க பகிர்வு.
இருவரும் நலமே சசிகலா!
நீக்குஅன்புக்கு நன்றி
கடைசியில் கலக்கலான முடிவு! சூப்பர் கதை!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குசூப்பர்...
பதிலளிநீக்குநன்றி குமார்
நீக்குஅருமையான கதை ஐயா! தேர்தல் நேரத்துக்கு சாலப்பொறுத்தம்.
பதிலளிநீக்குநன்றி தனிமரம்
நீக்குஅட... அருமை... அசத்திட்டீங்க...
பதிலளிநீக்குநன்றி சிகரம் பாரதி
நீக்குஅரசியல்வாதி வாழும்போதே சொர்க்கத்தில் அல்லவா இருக்கிறான் ,மக்களை நரகத்தில் தள்ளிவிட்டு ! செத்த பிறகு அவன் எங்கே போனாலென்ன ?இதில் நமக்கு அற்ப சந்தோசம் ?
பதிலளிநீக்குத ம +1
அங்கும் பொய் பிரசாரங்களை விடவில்லை என்பதே செய்தி!
நீக்குநன்றி ஹே பகவான்!
வேறு விதமாக ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். தேர்தல் சமயத்தில் இப்படி மாற்றியதும் நன்றாக இருக்கிறது.....
பதிலளிநீக்கு