எனது சனநாயக உரிமையை நிலைநாட்டி,கடமையை நிறைவேற்றி விட்டேன்.
சென்றேன்;வாக்களித்தேன்; வந்தேன்.காத்திருப்பே இல்லை!
காலை
மணி 9.25.ஒட்டுப்போட்டு
விட்டு வரலாம் என முடிவெடுத்தேன்; புறப்பட்டேன்.
எதிர்ப்பட்ட எங்கள் குடியிருப்புப் பெண்மணியிடம் கேட்டேன்”கூட்டம் எப்படி?”
எதிர்ப்பட்ட எங்கள் குடியிருப்புப் பெண்மணியிடம் கேட்டேன்”கூட்டம் எப்படி?”
பாரத்
முது நிலைப்பள்ளி.
இரு அறைகளின் வாசலில் அனுமார் வால் போல வரிசை.
ஒரு அறை வாசலில் உட்கார்ந்திருந்த போலிஸ் மட்டுமே..
அவரை அணுகினேன்.159 தானே? கேட்டேன்
உம்மம்.போங்க!சென்றேன் ;வாக்களித்தேன்;திரும்பினேன்.
இரு அறைகளின் வாசலில் அனுமார் வால் போல வரிசை.
ஒரு அறை வாசலில் உட்கார்ந்திருந்த போலிஸ் மட்டுமே..
அவரை அணுகினேன்.159 தானே? கேட்டேன்
உம்மம்.போங்க!சென்றேன் ;வாக்களித்தேன்;திரும்பினேன்.
மற்ற
அறைகளில் கூட்டம் அதிகமிருக்க நம் அறையில் ஏன் கூட்டம் இல்லை?யோசித்தேன்
மூன்று முடிவுகள்!
1)எங்கள் பகுதியில் பெரும்பான்மையினர் காலை சீக்கிரமே வாக்களித்து விட்டனர்.....வாய்ப்பு மிக மிக குறைவு
2)மதியம் வாக்களிக்கலாம் எனக் காத்திருக்கிறார்கள்.......இருக்கலாம்.
3)என்னத்த ஓட்டு என்னத்தை போட்டு என்று விருப்பமின்றி இருக்கிறார்கள்.....சாத்தியம்!!
மூன்றாவது காரணம் இருக்கக்கூடாது என்பதே என் பிரார்த்தனை!
மூன்று முடிவுகள்!
1)எங்கள் பகுதியில் பெரும்பான்மையினர் காலை சீக்கிரமே வாக்களித்து விட்டனர்.....வாய்ப்பு மிக மிக குறைவு
2)மதியம் வாக்களிக்கலாம் எனக் காத்திருக்கிறார்கள்.......இருக்கலாம்.
3)என்னத்த ஓட்டு என்னத்தை போட்டு என்று விருப்பமின்றி இருக்கிறார்கள்.....சாத்தியம்!!
மூன்றாவது காரணம் இருக்கக்கூடாது என்பதே என் பிரார்த்தனை!
நீங்களும் வாக்களித்து விட்டீர்கள் அல்லவா?
வாக்களிப்பதில் உள்ள நன்மைகள் பல…
அவையாவன…..
எல்லோரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சலுகைகள் பல வழங்கப் பட்டிருக்கின்றன!
உங்கள் விரல் மிக சக்தி வாய்ந்தது
1)ராம்ராஜ் பருத்தி ஆடைகள் 1000 ரூபாய்க்கு வாங்கினால்,உங்கள் கறை படிந்த விரல் ஒரு துண்டு இலவசமாக வாங்கித்தரும்!
2)மக்டொனால்டில் ஒரு ராயேல் சாப்பாடு வாங்கி விரல் நீட்டுங்கள்.ஒரு மக்ஃப்ளர்ரி(இது என்னவோ எனக்குத் தெரியாது;எனக்குத் தெரிந்த்தெல்லாம் இட்லி,தோசை வகையறாதான்!) இலவசம்!
3)லக்மே அழகு நிலையத்தில் முடிவெட்டுக்கு 50% தள்ளுபடி!
கேக் உலகத்தில் கேக் வாங்கினால் 15% தள்ளுபடி!
அயனாவரம் ராஜா கோழிக்கறி ஆட்டுக்கறி மையத்தில் 1 கிலோ கோழி விலையில் ரூ.20 தள்ளுபடி!
இன்னும் இப்படிப் பலப்பல!
ஓட்டுப்போட்டாச்சில்ல!
புறப்படுங்க.
முடிதிருத்தி,அழகு செய்து கொண்டு,புது ஆடை அணிந்து தோளில் துண்டுடன் கேக் சுவைத்து,
பெயர் தெரியாத ஏதோ ஒன்றையும் சாப்பிட்டு, கோழி வாங்கிச் சமைத்துச் சாப்பிட்டுத் தேர்தல் திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்!
ஐயா ஒட்டு போடுவதில் இவ்வளவு விஷயம் அடங்கியிருக்கா? ஐயகோ எனக்கு ஓட்டுரிமை இல்லையே.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
நல்ல மலிவு விலை.....
அழைப்பு விடுக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
த.ம.3வது வாக்கு
பதிலளிநீக்கு-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சென்றேன்;வாக்களித்தேன்; வந்தேன்.காத்திருப்பே இல்லை!
பதிலளிநீக்குஇங்கும் அப்படித்தான..
நீல்கிரீஸில் கறைபடிந்த விரல் நீட்டில் வாங்கும் பொருட்களுக்கு ஐந்து சத்வீதம் தள்ளுபடி..
எ /இப்படியாவது வாக்களிக்க மக்களைத் தூண்டுவது ஜனநாயகம்!
பதிலளிநீக்குநான் ஒண்ணும் ஓட்டுப் போட முடியாது ஆனா சந்தோசமா தாறத
பதிலளிநீக்குவாங்கிச் சாப்பிடுவோமில்ல :))) எடுங்க எடுங்க குடுங்க குடுங்க
உரிமையோடு நான் கேட்கும் உணவுப் பண்டங்களை :))))
நானும் காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிக்கு சென்று நான்காவது ஆளாக நின்று வாக்களித்து எனது சனநாயக கடமையை ஆற்றிவிட்டேன். காலை வேளை என்பதால் கூட்டமே இல்லை. மதியம் 3 மணி வரை தமிழகம் முழுதும் சுமார் 60 விழுக்காடு வரை வாக்குகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. இது 80 விழுக்காடு வரை ஆகும் என்பது என் கருத்து.
பதிலளிநீக்குகறை படிந்த விரலுக்கு இத்தனை சலுகைகளா? தகவலுக்கு நன்றி!
அடேங்கப்பா... விரலின் சக்தி...
பதிலளிநீக்குஜனநாயகக் கடமையைச் செய்ததிற்கு வாழ்த்துக்கள் .நான் காலை சென்றபோது கூட்டம் இல்லை .5 நிமிடத்தில் முடித்து விட்டு வந்துவிட்டேன்.
பதிலளிநீக்குஎன் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டேன் ஐயா! எங்கள் ஊரில் நல்ல கூட்டம்!
பதிலளிநீக்குஉங்கள் வாக்கு ஒன்றின் மூலம், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குத.ம - 6
இம்முறை வன்முறை ஏதும் இல்லாதது மகிழ்ச்சி...
பதிலளிநீக்குஓட்டு போடுவதற்கு முன் என்ன என்ன தந்தார்கள்..... என்பதையும் சொல்லி இருந்தால் நாங்களும் அறிந்திருப்போம்.....)))))
பதிலளிநீக்குரைட்டு.
பதிலளிநீக்கு//பாரத் முது நிலைப்பள்ளி. // முதுமக்கள் ஓட்டுப் போட பொருத்தமான இடம் தான்!
பதிலளிநீக்குமுதுமக்கள் மட்டுமல்ல;என் போன்ற இளைஞர்களும் அங்கு வாக்களித்தனர் செங்கோவி!
நீக்குநன்றி
விரலின் சக்தி....
பதிலளிநீக்குதில்லியிலும் இப்படி சில விளம்பரங்கள் வந்தன! :))) என்னால் தான் ஓட்டுப் போட முடியவில்லை - தேர்தல் ஆணையம் என் மேல் ஏதோ கோபம் கொண்டு பட்டியலிலிருந்து பெயரை நீக்கி விட்டது! :(