தொடரும் தோழர்கள்

புதன், டிசம்பர் 21, 2011

அங்கிள்! இது லேடீஸ் டாய்லெட்!!


இது நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.

கிண்டி ரேஸ் கிளப்பில்,என் நண்பர் ஒருவர் உறுப்பினர்.

அவர் என்னையும் சேர்த்துச் சில நண்பர்களை அங்கு ஒரு நாள் மாலை அழைத்துச் சென்றார்.

உணவின்போது  நடுவில் டாய்லெட் போக விரும்பினேன். வெயிட்டரைக் கேட்ட போது அங்கு அருகில் இருந்த டாய்லெட்டைக்  காட்டினார். சென்றேன். உள்ளே முதலில் கை கழுவும்  இடம்.அதை அடுத்து ஒரு கதவுக்குப்  பின் டாய்லெட்.நான் முடித்துவிட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தால்………!!

வாஷ் பேசின் முன் நின்று கண்ணாடியைப் பார்த்துத் தன் ஒப்பனையைச் சரி செய்து கொண்டிருந்தாள் ஒரு பெண்.இளம் பெண் அல்ல. பேரிளம் பெண். நான் திடுக்கிட்டேன்.ஆனால் அந்தப் பெண் பதட்டமின்றி என்னைப் பார்த்துச் சொன்னாள்,அன்கிள்!இது லேடீஸ் டாய்லெட்

நான் நொந்து போனேன்.

தவறாக லேடீஸ் டாய்லெட்டுக்கு வந்து மாட்டிக் கொண்டதற்கு அல்ல.

ஒரு பேரிளம்பெண் என்னைப் பார்த்து ’அன்கிள்’ என்று அழைத்து விட்டாளே என்றுதான்!!ஹா,ஹா,ஹா.

சமீபத்திய நிகழ்ச்சி.
 
சில நேரங்களில் உண்மை நமது முகத்தில் அறைவது போல் வெளிப்படும்.
இது அப்படித்தான்.

இரு நாட்களுக்கு முன்,கச்சேரி கேட்டுவிட்டு,(ஞானாம்பிகாவில் டிஃபனும் சாப்பிட்டு விட்டுத்தான்!) மயிலைக் குளம்  வரை தானியில் வந்து அங்கிருந்து  பேருந்து பிடித்தேன்.பேருந்தில் சரியான கூட்டம்.சீட்டு வாங்கி வீட்டு ஒரு இருக்கையின் அருகே நின்று கொண்டேன். இருக்கையில் அமர்ந்திருந்த நடு வயதுக் காரர் என்னை நிமிர்ந்து பார்த்தார்.”நீங்க உட்காருங்க சார்” எனச் சொல்லியபடியே எழுந்தார்.நான் இருக்கட்டும் என்று  மறுத்தும் அவர் விடவில்லை.கட்டாயப்படுத்தி என்னை  அமர்த்திவிட்டார். இது என் வயதுக்குக் கிடைத்த சலுகை.”நீ வயதானவன்; உன்னால்  நிற்க முடியாது என்று அவர் சொல்லாமல்  சொல்லி விட்டார்.அவரது இந்த சலுகைக்கு நன்றி.அதே நேரம் நான் என்னதான் மனதளவில் இளைஞன் என்று சொல்லிக் கொண்டாலும் உடல் தோற்றம் சலுகைக்குரியவனாக மாற்றி விடுகிறதே!வருத்தம்தான்!!

இந்நிகழ்ச்சியை யு.எஸ்.ஸில் இருக்கும் என் அண்ணன் மகளிடம் சொன்னபோது அவள் சொன்னாள்”உங்கள் முகத்தைப் பார்த்தால்  வயதானவராகத் தெரியவில்லை.ஆனால் தலை முடி தும்பைப்பூவாக வெளுத்து விட்டது.சாயம் பூசினால் சரியாகி விடும்.”

யோசித்தேன்.அப்படிச் சாயம் பூசியாவது என் வயதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன?ஏன் வேடம் புனைய வேண்டும்? நான் நானாகவே இருந்து விட்டுப்போகிறேன்.

ஆனால் இந்த வயதில் நான் இளைஞர்களின் களமான பதிவுலகில்  அவர்களுடன் போட்டியிட்டுப் பதிவு எழுதிக் கொண்டிருப்பது நியாயமா? நான் செய்ய வேண்டிய வேறு எவ்வளவோ பணிகள் இருக்கின்றனவே!

எனவே  சில முடிவுகளைக் கட்டாயமாக எடுத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆண்டு முடிவுக்குள் ஒரு முடிவு எடுத்து விடுவேன்.

பார்க்கலாம்;புத்தாண்டு எப்படிப் பிறக்கிறதென்று?
 ..................................
சென்னை இசை விழா:--

ஸ்ரீராம் கேட்டிருந்தார்,யார் கச்சேரி என்று இரு வரி பகிரலாமே என்று.   
உன்னி,சௌம்யா கச்சேரி பற்றி முன்பே எழுதி விட்டேன்.

19th--கே.ஜே.யேசுதாஸ்------------பெருங்காயம் வைத்த பாண்டம்!
20-----ஓ.எஸ்.தியாகராஜன்---------சாஸ்திரீய சுத்தம்!
21-----மல்லாடி சகோதரர்கள்------சுவையான ஆந்திர நெய்ப்பெசரட்டு!
.....................................................
நபர்-1--சகோதரர்களில் ஒருவரின் குரலில் ஒரு கம்மல் இருக்கிறது.

நபர்-2--அதனால்தான் எல்லோரும் காதுல போட்டுக்கறா!!

.................................................


58 கருத்துகள்:

  1. சுவையான கச்சேரி....

    மனதிற்கு இன்னும் இளமைதானே.... :)


    நல்ல பகிர்வு...

    பதிலளிநீக்கு
  2. புலி வருது புலி வருது ...வாசு

    பதிலளிநீக்கு
  3. Sir!
    Entha periya mudivum edukka vendam. Ungalai pola Tharamaana Pathivargal pathivulagil romba kammi. Write always without interval.
    TM 2.

    பதிலளிநீக்கு
  4. இந்த வயசிலையும் குசும்பு....ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...பத்து வருசமெண்டாலும் வயசு வயசு தானே :P

    பதிலளிநீக்கு
  5. இந்த வயசிலையும் குசும்பு....ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...பத்து வருசமெண்டாலும் வயசு வயசு தானே :P

    பதிலளிநீக்கு
  6. சுவையான அனுபவம் ,புத்தாண்டில் எடுக்கும் முடிவு என்னவாகும் என்று யோசிக்கவைத்துவிட்டீர்கள் ஐயா

    த.ம 4

    பதிலளிநீக்கு
  7. யார் என்ன சொன்னால் என்ன..இளமை என்பது மனசப் பொறுத்ததுதான்..அனுபவம் சுவை..

    வரவை எதிர்பார்க்கிறேன்..

    செத்தபின்புதான் தெரிந்தது..

    பதிலளிநீக்கு
  8. நல்ல நகைச்சுவையான அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு முதலில் மிக்க நன்றி அய்யா!

    //இளைஞர்களின் களமான பதிவுலகில் அவர்களுடன் போட்டியிட்டுப் பதிவு எழுதிக் கொண்டிருப்பது நியாயமா? நான் செய்ய வேண்டிய வேறு எவ்வளவோ பணிகள் இருக்கின்றனவே!//

    தயவு செய்து அப்படி சொல்ல வேண்டாமைய்யா! பதிவுலகை போட்டி களமாக கருத வேண்டாம். இது ஒரு அனுபவ பகிர்வுக்கான களம். அதிலும் தங்களைப்போன்ற முதிர்ந்த அனுபவசாலிகள் இதுவரை தாங்கள் வாழ்வில் பெற்ற எத்தனையோ அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு இது ஒரு மிகச்சரியான இடம். தாங்கள், தங்களின் வாழ்வின்பால் பெற்ற அனுபவங்களை, உங்களின் குழந்தைகளிடமும், பேரன் பேத்திகளிடமும் அறிவுரையாக சொல்லியிருப்பீர்கள். உங்களின் வாழ்க்கை அனுபவங்கள் உங்களின் பேரன் பேத்திகளுக்கு மட்டும்தானா? எங்களுக்கெல்லாம் கிடையாதா? முதல் தலைமுறையின் அனுபவம்தானே, அதற்க்கு அடுத்த தலைமுறையினை செம்மை படுத்தும். அதுதானே வளர்ச்சி. அனுபங்களை அறிவுரையாக சொல்லும்போது இளம் தலைமுறையினருக்கு அது அறுவையாக(!) போய்விடலாம். ஆனால் அது அனுபவ பகிர்வாக மாறும்போது, சக நண்பனிடம் நம் வாழ்வை பகிர்ந்து கொள்வது போல மாறிவிடும். இந்த நிலையில் தங்களது அனுபவங்கள் அப்படியே எனக்குள் இறங்கிக்கொள்ளும். ஒவ்வொரு அனுபவமும் விலை மதிக்க முடியாதது அய்யா! தங்களது விலை மதிக்க முடியா அனுபவங்கள் எங்களைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு மிக அவசியமய்யா! தயவு செய்து அதற்க்கு தடை செய்ய வேண்டாம். இளம் தலைமுறையினர் தங்களைப்போன்றவர்களின் அனுபவ பகிர்வுகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். தயவு செய்து எங்களது காத்திருப்பை எமாற்றமாக்கி விடாதீர்கள். தாங்கள் செய்ய வேண்டிய எவ்வளவோ மிக முக்கியமான பணிகளுள் ஒன்றாக இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து அய்யா! அதே நேரத்தில் தங்களின் தற்போதைய வாழ்க்கை சூழ்நிலை எனக்கு தெரியாது. ஒரு வேலை தங்களது வாழ்கை சூழ்நிலை ஒத்து வருமாயின், தங்களுக்கு விருப்பமிருப்பின் தயவு செய்து தங்களது அனுபவ பகிர்வுகளை தொடருங்கள் அய்யா! மிக்க நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  9. அட ,பல்பு மேட்டரா?
    பல்புகள் பலவிதம்,ஒவ்வொன்றும் ஒரு விதம.ஆனால் உங்களை அங்கிள் என்று சொன்னவரை வன்மையாக நமது யூத் பதிவர் சங்கத்தின் சார்பாக கண்டிக்கிறோம்.என்னைக்கும் நாம யூத் தான் சார்.தொடர்ந்து எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்,ஐயா!அப்போ நாமளும் கம்மல் போட்டுக்க வேண்டியதான்!

    பதிலளிநீக்கு
  11. அன்பின் சென்னை பித்தன் - பதிவுலகத்தில் தங்களைப் போன்ற அனுபவம் பெற்றவர்கள் பகிரத்தான் வேண்டும். வலைச்சரம் வேறு பொறுப்பேற்க வேண்டும் - புத்தாண்டிலும் பதிவுலகில் கலக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  12. பத்து ஆண்டுகளுக்கு முன்பே ‘அங்கிள்’என்று சொல்லியிருந்தால் இப்போது எப்படி
    சொல்லியிருப்பார்கள்?

    புறத் தோற்றத்தால் வயதானவர் போல் பிறர்க்குத் தெரிந்தாலும் நீங்கள் இளைஞர் தான். 100 வயது பெரியவர் (இந்தியர்) ஒருவர் இலண்டனில் மாரத்தான் நடைப்பயணத்தில் கலந்து கொண்டிருக்கும்போது, பதிவுலகின் மார்க்கண்டேயனான தாங்கள் ஏன் வயதைப்பற்றி சிந்திக்கவேண்டும்?

    புத்தாண்டில் இன்னும் பல புதிய சிந்தனைகளை,கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்(றோம்)!

    நான் சொல்வதையும் ‘காதில்’ போட்டுக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. பத்து ஆண்டுகளுக்கு முன்பே ‘அங்கிள்’என்று சொல்லியிருந்தால் இப்போது எப்படி
    சொல்லியிருப்பார்கள்?

    புறத் தோற்றத்தால் வயதானவர் போல் பிறர்க்குத் தெரிந்தாலும் நீங்கள் இளைஞர் தான். 100 வயது பெரியவர் (இந்தியர்) ஒருவர் இலண்டனில் மாரத்தான் நடைப்பயணத்தில் கலந்து கொண்டிருக்கும்போது, பதிவுலகின் மார்க்கண்டேயனான தாங்கள் ஏன் வயதைப்பற்றி சிந்திக்கவேண்டும்?

    புத்தாண்டில் இன்னும் பல புதிய சிந்தனைகளை,கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்(றோம்)!

    நான் சொல்வதையும் ‘காதில்’ போட்டுக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. ஹா.ஹா.ஹா.ஹா. நல்ல அனுபவப்பகிர்வு சுவாரஸ்யமாக இருக்கு

    பதிலளிநீக்கு
  15. ////ஆனால் இந்த வயதில் நான் இளைஞர்களின் களமான பதிவுலகில் அவர்களுடன் போட்டியிட்டுப் பதிவு எழுதிக் கொண்டிருப்பது நியாயமா? நான் செய்ய வேண்டிய வேறு எவ்வளவோ பணிகள் இருக்கின்றனவே!

    எனவே சில முடிவுகளைக் கட்டாயமாக எடுத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

    யோசித்துக் கொண்டிருக்கிறேன்////

    நீங்கள் யோசிக்கவே தேவையில்லை உங்களைப்போன்றவர்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்கின்றோம் எனவே நீங்கள் ஏன் உங்களை அப்படி நினைக்கின்றீர்கள் தொடர்ந்து பதிவுலகில் கலக்குங்க பாஸ் நாங்கள் இருக்கோம் பக்க பலமாக

    பதிலளிநீக்கு
  16. தலைச்சாயம் ஓக்கே. ஆனால் அது நாயர் பிடிச்ச புலிவாலாக்கும் கேட்டோ..... ஒருமுறை ஆரம்பிச்சா..... ம்ஹூம் மெயிண்டெய்ன் பண்ணியே ஆகணும்:(

    ஞானாம்பிகா என்னோட ஃபேவரிட்.

    உணவும் சரி, உபசரிப்பும் சரி சூப்பர்தான்!

    பதிலளிநீக்கு
  17. மிகவும் அருமையான அனுபவப் பதிவு.
    மனதிற்கு என்றைக்குமே வயது கிடையாது என்பது சிறப்பு.

    அதுபோலவே எழுத்துக்கும் வயது கிடையாது.தங்களின் அனுபவம் இன்றைய இளைஞர்களுக்கு பாடமாக இருக்கும்.தொடர்ந்து எழுதுங்கள்,சார்.

    பதிலளிநீக்கு
  18. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //சுவையான கச்சேரி....

    மனதிற்கு இன்னும் இளமைதானே.... :)


    நல்ல பகிர்வு...//
    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
  19. Vasu கூறியது...

    //புலி வருது புலி வருது ...வாசு//
    வரத்தான் போகுது!
    நன்றி வாசு.

    பதிலளிநீக்கு
  20. துரைடேனியல் கூறியது...

    //Sir!
    Entha periya mudivum edukka vendam. Ungalai pola Tharamaana Pathivargal pathivulagil romba kammi. Write always without interval.
    TM 2.//
    இறைவன் சொல்றான்;இவன் செய்யறான்!
    அன்புக்கு நன்றி டேனியல்.

    பதிலளிநீக்கு
  21. மைந்தன் சிவா கூறியது...

    //இந்த வயசிலையும் குசும்பு....ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...பத்து வருசமெண்டாலும் வயசு வயசு தானே :P//
    ஹா,ஹா. நன்றி மைந்தா!

    பதிலளிநீக்கு
  22. தமிழ்வாசி பிரகாஷ் கூறியது...

    // அனுபவ பகிர்வு...//
    நன்றி பிரகாஷ்

    பதிலளிநீக்கு
  23. M.R கூறியது...

    // சுவையான அனுபவம் ,புத்தாண்டில் எடுக்கும் முடிவு என்னவாகும் என்று யோசிக்கவைத்துவிட்டீர்கள் ஐயா

    த.ம 4//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  24. shanmugavel கூறியது...

    //சுவாரஸ்யமான அனுபவம்.//
    நன்றி சண்முகவேல்.

    பதிலளிநீக்கு
  25. மதுமதி கூறியது...

    //யார் என்ன சொன்னால் என்ன..இளமை என்பது மனசப் பொறுத்ததுதான்..அனுபவம் சுவை..

    வரவை எதிர்பார்க்கிறேன்..

    செத்தபின்புதான் தெரிந்தது..//
    நன்றி மதுமதி.

    பதிலளிநீக்கு
  26. வே.சுப்ரமணியன். கூறியது...

    நல்ல நகைச்சுவையான அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு முதலில் மிக்க நன்றி அய்யா!

    //இளைஞர்களின் களமான பதிவுலகில் அவர்களுடன் போட்டியிட்டுப் பதிவு எழுதிக் கொண்டிருப்பது நியாயமா? நான் செய்ய வேண்டிய வேறு எவ்வளவோ பணிகள் இருக்கின்றனவே!//

    //தயவு செய்து அப்படி சொல்ல வேண்டாமைய்யா! பதிவுலகை போட்டி களமாக கருத வேண்டாம். இது ஒரு அனுபவ பகிர்வுக்கான களம். அதிலும் தங்களைப்போன்ற முதிர்ந்த அனுபவசாலிகள் இதுவரை தாங்கள் வாழ்வில் பெற்ற எத்தனையோ அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு இது ஒரு மிகச்சரியான இடம். தாங்கள், தங்களின் வாழ்வின்பால் பெற்ற அனுபவங்களை, உங்களின் குழந்தைகளிடமும், பேரன் பேத்திகளிடமும் அறிவுரையாக சொல்லியிருப்பீர்கள். உங்களின் வாழ்க்கை அனுபவங்கள் உங்களின் பேரன் பேத்திகளுக்கு மட்டும்தானா? எங்களுக்கெல்லாம் கிடையாதா? முதல் தலைமுறையின் அனுபவம்தானே, அதற்க்கு அடுத்த தலைமுறையினை செம்மை படுத்தும். அதுதானே வளர்ச்சி. அனுபங்களை அறிவுரையாக சொல்லும்போது இளம் தலைமுறையினருக்கு அது அறுவையாக(!) போய்விடலாம். ஆனால் அது அனுபவ பகிர்வாக மாறும்போது, சக நண்பனிடம் நம் வாழ்வை பகிர்ந்து கொள்வது போல மாறிவிடும். இந்த நிலையில் தங்களது அனுபவங்கள் அப்படியே எனக்குள் இறங்கிக்கொள்ளும். ஒவ்வொரு அனுபவமும் விலை மதிக்க முடியாதது அய்யா! தங்களது விலை மதிக்க முடியா அனுபவங்கள் எங்களைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு மிக அவசியமய்யா! தயவு செய்து அதற்க்கு தடை செய்ய வேண்டாம். இளம் தலைமுறையினர் தங்களைப்போன்றவர்களின் அனுபவ பகிர்வுகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். தயவு செய்து எங்களது காத்திருப்பை எமாற்றமாக்கி விடாதீர்கள். தாங்கள் செய்ய வேண்டிய எவ்வளவோ மிக முக்கியமான பணிகளுள் ஒன்றாக இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து அய்யா! அதே நேரத்தில் தங்களின் தற்போதைய வாழ்க்கை சூழ்நிலை எனக்கு தெரியாது. ஒரு வேலை தங்களது வாழ்கை சூழ்நிலை ஒத்து வருமாயின், தங்களுக்கு விருப்பமிருப்பின் தயவு செய்து தங்களது அனுபவ பகிர்வுகளை தொடருங்கள் அய்யா! மிக்க நன்றி அய்யா!//
    உற்சாகமளித்து விட்டீர்கள். அன்புக்கு மிக்க நன்றி சுப்ரமணியன்.

    பதிலளிநீக்கு
  27. ரஹீம் கஸாலி கூறியது...

    //sari uncle//
    :-( ! நன்றி கஸாலி.

    பதிலளிநீக்கு
  28. கோகுல் கூறியது...

    //அட ,பல்பு மேட்டரா?
    பல்புகள் பலவிதம்,ஒவ்வொன்றும் ஒரு விதம.ஆனால் உங்களை அங்கிள் என்று சொன்னவரை வன்மையாக நமது யூத் பதிவர் சங்கத்தின் சார்பாக கண்டிக்கிறோம்.என்னைக்கும் நாம யூத் தான் சார்.தொடர்ந்து எழுதுங்க.//
    நன்றி கோகுல்!

    பதிலளிநீக்கு
  29. மகேந்திரன் கூறியது...

    //சுவையான பதிவு ஐயா....//
    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  30. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //களைகட்டிய கச்சேரி!//
    நன்றி இராஜராஜேஸ்வரி!

    பதிலளிநீக்கு
  31. Yoga.S.FRகூறியது...

    // வணக்கம்,ஐயா!அப்போ நாமளும் கம்மல் போட்டுக்க வேண்டியதான்!//
    நன்றி Yoga.S.FR

    பதிலளிநீக்கு
  32. cheena (சீனா) கூறியது...

    //அன்பின் சென்னை பித்தன் - பதிவுலகத்தில் தங்களைப் போன்ற அனுபவம் பெற்றவர்கள் பகிரத்தான் வேண்டும். வலைச்சரம் வேறு பொறுப்பேற்க வேண்டும் - புத்தாண்டிலும் பதிவுலகில் கலக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
    தங்கள் அன்புக்கு நன்றி சீனா!

    பதிலளிநீக்கு
  33. வே.நடனசபாபதி கூறியது...

    // பத்து ஆண்டுகளுக்கு முன்பே ‘அங்கிள்’என்று சொல்லியிருந்தால் இப்போது எப்படி
    சொல்லியிருப்பார்கள்?

    புறத் தோற்றத்தால் வயதானவர் போல் பிறர்க்குத் தெரிந்தாலும் நீங்கள் இளைஞர் தான். 100 வயது பெரியவர் (இந்தியர்) ஒருவர் இலண்டனில் மாரத்தான் நடைப்பயணத்தில் கலந்து கொண்டிருக்கும்போது, பதிவுலகின் மார்க்கண்டேயனான தாங்கள் ஏன் வயதைப்பற்றி சிந்திக்கவேண்டும்?

    புத்தாண்டில் இன்னும் பல புதிய சிந்தனைகளை,கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்(றோம்)!

    நான் சொல்வதையும் ‘காதில்’ போட்டுக்கொள்ளுங்கள்.//
    போட்டுக் கொண்டேன்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  34. K.s.s.Rajh கூறியது...

    //ஹா.ஹா.ஹா.ஹா. நல்ல அனுபவப்பகிர்வு சுவாரஸ்யமாக இருக்கு//
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  35. K.s.s.Rajh கூறியது...

    ////ஆனால் இந்த வயதில் நான் இளைஞர்களின் களமான பதிவுலகில் அவர்களுடன் போட்டியிட்டுப் பதிவு எழுதிக் கொண்டிருப்பது நியாயமா? நான் செய்ய வேண்டிய வேறு எவ்வளவோ பணிகள் இருக்கின்றனவே!

    எனவே சில முடிவுகளைக் கட்டாயமாக எடுத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

    யோசித்துக் கொண்டிருக்கிறேன்////

    // நீங்கள் யோசிக்கவே தேவையில்லை உங்களைப்போன்றவர்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்கின்றோம் எனவே நீங்கள் ஏன் உங்களை அப்படி நினைக்கின்றீர்கள் தொடர்ந்து பதிவுலகில் கலக்குங்க பாஸ் நாங்கள் இருக்கோம் பக்க பலமாக//
    மகிழ்வாக இருக்கிறது! நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  36. துளசி கோபால் கூறியது...

    // தலைச்சாயம் ஓக்கே. ஆனால் அது நாயர் பிடிச்ச புலிவாலாக்கும் கேட்டோ..... ஒருமுறை ஆரம்பிச்சா..... ம்ஹூம் மெயிண்டெய்ன் பண்ணியே ஆகணும்:(

    ஞானாம்பிகா என்னோட ஃபேவரிட்.

    உணவும் சரி, உபசரிப்பும் சரி சூப்பர்தான்!//
    விலையும் சூப்பர்தான்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  37. RAMVI கூறியது...

    //மிகவும் அருமையான அனுபவப் பதிவு.
    மனதிற்கு என்றைக்குமே வயது கிடையாது என்பது சிறப்பு.

    அதுபோலவே எழுத்துக்கும் வயது கிடையாது.தங்களின் அனுபவம் இன்றைய இளைஞர்களுக்கு பாடமாக இருக்கும்.தொடர்ந்து எழுதுங்கள்,சார்.//
    அன்புக்கு நன்றி RAMVI

    பதிலளிநீக்கு
  38. இந்த அங்கிள் பல்பு அனுபவம் எனக்கும் உண்டு.
    சங்கீதக் கச்சேரிகளுக்கு ரெண்டு வரி விமர்சனம் ஜோர்!
    எத்தனை பணிகள் இருந்தாலும் பதிவெழுதுவது உங்களுக்கு ஒரு ரிலாக்சேஷனாகவும் வாசிப்பவர்களுக்கு அனுபவப் பகிர்வாகவும் இருக்கும். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  39. என்னாது புது முடிவா...? தல பேசாம சும்மா இருங்க, முடிவு அது இதுன்னு கிளம்புநீங்க, அடுத்த பிளேன் பிடிச்சி அருவாளோட வீட்டுக்கே வந்துருவேன்..!!!

    பதிலளிநீக்கு
  40. எடுக்கும் முடிவு நல்லதாய் இருக்கட்டும்.புத்தாண்டில் புது பொலிவுடன் வலம் வர வேண்டும் என் இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  41. >>>ஒரு பேரிளம்பெண் என்னைப் பார்த்து ’அன்கிள்’ என்று அழைத்து விட்டாளே என்றுதான்!!ஹா,ஹா,ஹா.



    தாத்தா என அழைச்சிருக்கனும் ஹி ஹி

    பதிலளிநீக்கு
  42. //அதே நேரம் நான் என்னதான் மனதளவில் இளைஞன் என்று சொல்லிக் கொண்டாலும் உடல் தோற்றம் சலுகைக்குரியவனாக மாற்றி விடுகிறதே!வருத்தம்தான்!!

    //

    விடுங்க பாஸ் .. ஒரு ஜீன்ஸ் , கிளாஸ் , t ஷர்ட் போடுங்க .. அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு
  43. ஐயா சென்னை பித்தன் உடலால் வயதானாலும் மனதளவில் இளைஞனாக இருப்பது நல்லது. அதில் தவறில்லை. சுஜாதா தனது இறுதிநாட்கள்வரையிலும் எவ்வளவு இளமையான படைப்புக்களை தந்துகொண்டிருந்தார். இளைஞருடன் போட்டிபோட்டுக்கொண்டு எழுதுங்கள் படிக்க ஆவலாக இருக்கிறோம். ஹீ ஹீ நானும்கூட உங்கமாதிரி இளைஞன் தான்.

    பதிலளிநீக்கு
  44. ஸ்ரீராம். சொன்னது…

    //இந்த அங்கிள் பல்பு அனுபவம் எனக்கும் உண்டு.
    சங்கீதக் கச்சேரிகளுக்கு ரெண்டு வரி விமர்சனம் ஜோர்!
    எத்தனை பணிகள் இருந்தாலும் பதிவெழுதுவது உங்களுக்கு ஒரு ரிலாக்சேஷனாகவும் வாசிப்பவர்களுக்கு அனுபவப் பகிர்வாகவும் இருக்கும். தொடருங்கள்.//
    நன்றி ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  45. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //என்னாது புது முடிவா...? தல பேசாம சும்மா இருங்க, முடிவு அது இதுன்னு கிளம்புநீங்க, அடுத்த பிளேன் பிடிச்சி அருவாளோட வீட்டுக்கே வந்துருவேன்..!!!//
    பயமுறுத்தாதீங்க மனோ!இந்த சிபிதான் ராங் பண்றாரு.அருவாளுக்கு அங்கதான் வேலை!
    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  46. FOOD NELLAI கூறியது...

    //எடுக்கும் முடிவு நல்லதாய் இருக்கட்டும்.புத்தாண்டில் புது பொலிவுடன் வலம் வர வேண்டும் என் இறைவனை வேண்டுகிறேன்.//
    நன்றி சங்கரலிங்கம்!

    பதிலளிநீக்கு
  47. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    >>>ஒரு பேரிளம்பெண் என்னைப் பார்த்து ’அன்கிள்’ என்று அழைத்து விட்டாளே என்றுதான்!!ஹா,ஹா,ஹா.



    // தாத்தா என அழைச்சிருக்கனும் ஹி ஹி//
    கொழுப்பா?!
    மனோ வராறு ,அருவாளோட!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  48. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    //அதே நேரம் நான் என்னதான் மனதளவில் இளைஞன் என்று சொல்லிக் கொண்டாலும் உடல் தோற்றம் சலுகைக்குரியவனாக மாற்றி விடுகிறதே!வருத்தம்தான்!!

    //

    // விடுங்க பாஸ் .. ஒரு ஜீன்ஸ் , கிளாஸ் , t ஷர்ட் போடுங்க .. அவ்வளவுதான்//
    கிளாஸ்,டீ சர்ட் இருக்கு.ஜீன்ஸ் வாங்கிட்டாப் போச்சு!
    நன்றி ராஜா!

    பதிலளிநீக்கு
  49. அம்பலத்தார் கூறியது...

    //ஐயா சென்னை பித்தன் உடலால் வயதானாலும் மனதளவில் இளைஞனாக இருப்பது நல்லது. அதில் தவறில்லை. சுஜாதா தனது இறுதிநாட்கள்வரையிலும் எவ்வளவு இளமையான படைப்புக்களை தந்துகொண்டிருந்தார். இளைஞருடன் போட்டிபோட்டுக்கொண்டு எழுதுங்கள் படிக்க ஆவலாக இருக்கிறோம். ஹீ ஹீ நானும்கூட உங்கமாதிரி இளைஞன் தான்.//

    :)) நன்றி அம்பலத்தார்.

    பதிலளிநீக்கு
  50. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    //படித்து கருத்துகளை சொல்லுங்கள்


    2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?//
    இதோ!

    பதிலளிநீக்கு
  51. எழுத்தாளர் சுஜாதா கடைசிக் காலங்களில் எழுதிய வற்றையும் இன்றும் இளைஞர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். அது போல நீங்களும் எழுதுவதை விட வேண்டாம். முடியும் வரை தொடருங்கள்.பலவிதமான ரசிகர்கள் பதிவுலகில் வலம் வந்து வந்து கொண்டிருக்கிறார்கள் (பதிவர்கள் உட்பட)

    பதிலளிநீக்கு
  52. எழுத்தாளர் சுஜாதாபோல கடைசிவரை தொடர்ந்து எழுதுங்கள்.ஆயிரக்கணக்கான பதிவர்களே உங்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  53. நீங்கள் சொல்வது போல் இளைஞர்களுடன் போட்டி போடக்கூடாது தான். அதனால் இப்பொழுதே எழுதுவதை நிறுத்திக்கொள்ளவும். கொஞ்சம் இருங்கள்.. உங்களை விட முதியவர் ஒருவர் எழுதுகிறாரே. நீங்கள் இளைஞர் போலத் தோன்றுகிறதே... CUT! மறுபடியும்.. retake..

    பதிலளிநீக்கு