ஒரு காலத்தில் சில சபாக்களே இருந்த நிலை மாறி,இன்று நூற்றுக் கணக்கில் சபாக்கள் வந்துவிட்டன.இந்தப் பெருக்கம் சில வருந்தத்தக்க விளைவு களையும் தோற்றுவித்திருக்கிறது.சில புதிய சபாக்கள்,வளரும் இளம் கலைஞர்களுக்கு,வாய்ப்பளிக்கப் பணம் கேட்டிருப்பதாக வரும் செய்திகள்.இது தொடரக்கூடாது.தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இந்த ஆண்டு சில பெரிய பாடகர்கள் தங்கள் கச்சேரிகளைக் குறைத்துக் கொள்வதென முடிவு செய்திருக்கின்றனர் .இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை.இதன் மூலம் பல வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.
ஒரு காலத்தில் சபாக்களில் தமிழ்ப்பாடல்கள் அதிகம் பாடப் படவில்லை. ஆனால் இப்போது நிறையத் தமிழ்ப்பாடல்களையும் கேட்க முடிகிறது. பாபனாசம் சிவன்,கோபாலகிருஷ்ண பாரதி ,பாரதியார், அருணசலக் கவிராயர்,பெரியசாமித்தூரன் ஆகியோரது பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுகின்றன.
இந்த இசை விழாவுக்காகவே,அநேக வெளிநாடு வாழ் தமிழர்கள் சென்னை வந்து பதினைந்து,இருபதுநாட்கள் தங்கி,எல்லா சபாக்களையும் ஒரு சுற்றுச் சுற்றி விட்டுச் செல்கின்றனர்.இரண்டு மாதங்களுக்கு முன்பே நியூ உட்லாண்ட்ஸ்,மற்றும் மயிலை, ஆழ்வார்ப்பேட்டைப் பகுதிகளில் இருக்கும் சேவைக் குடியிருப்புகள் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.
சில சபாக்களில் இருக்கும் உணவகங்களில் சபாக்களின் உள்ளே இருப்பதை விட அதிகமான கூட்டம் இருக்கிறது!விலையெல்லாம் அதிகமாக இருந்தாலும் யாரும் சாப்பிட யோசிப்பதில்லை.புது உணவு வகைகள் எல்லாம் கிடைப்பது ஒரு காரணமோ?
இன்று இப்பதிவு எழுதக் காரணம் நானும் ஜோதியில் கலந்து விட்டதுதான்! ஆம்;இரண்டு நாட்களாக நாரத கான சபா கச்சேரிக்குப் போக ஆரம்பித்து விட்டேன்.சீசன் டிக்கட்.அடுத்த ஆண்டு 2 ஆம் தேதி வரை தொடரும். காண்டீன்?!--ஒரு காப்பியோடு சரி (ரூபாய்.15/=)
பயப்படாதீர்கள்!கேட்ட கச்சேரிகளைப் பற்றியெல்லாம் எழுதி உங்களைப் போரடிக்க மாட்டேன்!
(இது வரை மீள் பதிவு;இனி)
இன்று!
எங்கள் சபாவில் இன்று மாலை 4.30 க்குத் திரு. உன்னி கிருஷ்ணன் அவர்களின் இன்னிசை.மறக்க முடியாத காபி ராகம்,கும்பகோணம் டிகிரி காப்பி போல,அழகான லதாங்கியில் ராகம் தானம் பல்லவி என்று கச்சேரி அமர்க்களம்!
காண்டீன் பற்றிச் சொல்லவில்லையென்றால் எப்படி? கச்சேரியில் பாடப்பட்ட எதுகுல காம்போதி போல் இனிப்பாக, மக்மல் பூரி.லதாங்கி ரா.தா.ப. போல், சட்னி வகைகளுடன் தோசை, காபிராகம் போல் சுவையான காப்பி .நான் சாப்பிட்டது இவ்வளவே! ஆனால் பில்?! ----ரூ.95/ ஓய்வுதியத்தில் வாழ்க்கை நடத்தும் ஒரு முதிய இளைஞனுக்கு,இதெல்லாம் வயிற்றுக்கு இசைந்த தாயிருப்பினும்,பாக்கெட்டுக்கு இசைந்து வருமோ?!ஹா,ஹா!
மார்கழிப் பொங்கல்-3(இசை விழா)"
பதிலளிநீக்குகச்சேரியும் காண்டீனும் கலந்து இசையுடன் ருசியாக அளித்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
இளம் கலைஞர்களுக்கு பணம் கேட்பது தவறு.இது கலையை வளர்க்க உதவாது.
பதிலளிநீக்குமீள் பதிவும் இன்றைய அப்டேட்-உம் நன்று... இனி தினமும் உங்கள் பக்கத்தில் கச்சேரிதான்...
பதிலளிநீக்குஇரவு வணக்கம்,ஐயா!//////பயப்படாதீர்கள்!கேட்ட கச்சேரிகளைப் பற்றியெல்லாம் எழுதி உங்களைப் போரடிக்க மாட்டேன்!////அங்கே நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிரலாம்,இல்லையா?சுப்புடு போல் விமர்சனம் எல்லாம் வேண்டாம்,ஹி!ஹி!ஹி!!!!!
பதிலளிநீக்குArumai Sir!
பதிலளிநீக்குKacheri patri innum kooda eluthalame.
TM 4.
ம்ம்ம்
பதிலளிநீக்கு//!கேட்ட கச்சேரிகளைப் பற்றியெல்லாம் எழுதி ...//
பதிலளிநீக்குஅடடா.... என்னைப்போன்ற 'ஞான சூன்யங்களுக்கு' இது(வும்) வேணும்.
கருணை காட்டுங்க கொஞ்சம்!!!!
நீங்கள் குறிப்பிட்ட ராகங்கள் பற்றி தெரியாவிட்டாலும்
பதிலளிநீக்குதிரு,உன்னிகிருஷ்ணன் அவர்கள் பாடல்களை கேட்டிருக்கிறேன்.
அருமையான குரலுக்கு சொந்தக்காரர்...
அப்படியே அங்கு உள்ள விலைவாசியையும் தெரிவித்துள்ளமை அருமை..
இப்படி இசை விழாக்களில் தமிழ் ஒலிக்க வேண்டுமென்றுதான் எழுத்தாளர் கல்கி நிறையக் கட்டுரைகள் எழுதி வலியுறுத்தினார். பார்க்க இன்று அவர் இல்லையே... புதிய திறமையாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் சொன்னது மிகச் சரியே! தொடரட்டும் அனுபவங்கள்...
பதிலளிநீக்கு“செவுக்குண வில்லாத போழ்து சிறிது
பதிலளிநீக்குவயிற்றுக்கும் ஈயப் படும்.” என்கிறார் தெய்ப்வப்புலவர். நீங்களோ செவிக்கான உணவோடு, சிறிது(?) வயிற்றுக்கும் உணவு இட்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
மக்மல் பூரி, சட்னி வகைகள் தோசை மற்றும் காப்பி பற்றி எழுதி எங்களையும் கச்சேரிக்கு போகத் தூண்டிவிட்டீர்கள். எதற்காக எனக் கேட்கவேண்டாம்.!
நீங்க கச்சேரிப் பற்றி ஏழுதலாமே,சார்..வெளியூரில் உள்ள எங்களைப் போன்றோருக்கு சென்னை இசைவிழாவில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்குமே?
பதிலளிநீக்குமுடிந்தால் வாரத்திற்கு ஒரு பதிவிலாவது அந்த வாரத்து நிகழ்ச்சிகளை தொகுத்து கொடுங்களேன்.தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்..
பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. தனித்தனியாகச் சொல்ல இயலாமைக்கு நேரமின்மையே காரணம்.
பதிலளிநீக்குமுதல் வேலையாக கேன்டீன் பற்றிப் படித்தேன். (எப்பவுமே prioritiesல் கவனம் செலுத்துறவன் நான்). 'மக்மல் பூரி.லதாங்கி ரா.தா.ப.' வா? என்னதிது? இது எப்பல்லேந்துண்ணா? கர்நாடக சங்கீதக் கச்சேரிக்கு வந்தா ஏதோ காஷாய சமாசாரம் மாதிரி இருக்கே?
பதிலளிநீக்குஇது போன்ற இசை விழா நிகழ்ச்சிகள், சபாக்கள் மதுரை, திருச்சி, கோயமுத்தூர் போன்ற நகரங்களில் உண்டா?
'சேவைக் குடியிருப்புகள்' பற்றி நேரமிருந்தால் எழுதுங்களேன்?
பதிலளிநீக்குஅப்பாதுரை சொன்னது…
பதிலளிநீக்கு//முதல் வேலையாக கேன்டீன் பற்றிப் படித்தேன். (எப்பவுமே prioritiesல் கவனம் செலுத்துறவன் நான்). 'மக்மல் பூரி.லதாங்கி ரா.தா.ப.' வா? என்னதிது? இது எப்பல்லேந்துண்ணா? கர்நாடக சங்கீதக் கச்சேரிக்கு வந்தா ஏதோ காஷாய சமாசாரம் மாதிரி இருக்கே?//
லதாங்கி ராகத்தில் பாடிய ராகம் தானம் பல்லவி போல் தோசை சட்னி சாம்பார்!இனிமையான எதுகுல காம்போதி போல் மக்மல் பூரி!அவ்வளவுதான்.இதில் காஷாயம் எங்கிருந்து வந்தது?
//இது போன்ற இசை விழா நிகழ்ச்சிகள், சபாக்கள் மதுரை, திருச்சி, கோயமுத்தூர் போன்ற நகரங்களில் உண்டா?//
சின்ன ஊர்களில் கூட சபாக்கள் உண்டு.நான் இருந்த மதுரை , கரூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் சபாக்கள் இருந்தன.மதுரை ராகப்ரியாவில் கச்சேரிகள் எல்லாம் பாண்டியன் ஹோட்டல் ஹாலில் சேம்பர் ம்யூசிக் தான்!(நோ மைக்) ஆனால் இசை விழாக்கள் இருப்பதாகத்தெரியவில்லை.
நன்றி
அப்பாதுரை கூறியது...
பதிலளிநீக்கு//'சேவைக் குடியிருப்புகள்' பற்றி நேரமிருந்தால் எழுதுங்களேன்?//
new assignment?! will try.
மக்மல்பூரி என்னானு தெரியல.. ஹிஹி.. காஷாயம் பேர் மாதிரி இருந்துதுங்கோ.
பதிலளிநீக்கு@RAMVI
பதிலளிநீக்குகொஞ்சம் ஆரம்பித்து விட்டேன்.பார்க்கலாம்.நன்றி.