தொடரும் தோழர்கள்

செவ்வாய், டிசம்பர் 20, 2011

மார்கழிப் பொங்கல்-4-(கோலம்)-கொஞ்சம் இசைவிழாவும்!!

பொங்கலைத் தவிர மார்கழியின் மற்றோர் விசேஷம்-கோலம்.வீட்டு வாசலைத் தெளித்துப் பெருக்கி அழகான பெரிய பெரிய கோலங்களாக வரைந்து,நடுவில் ஒரு பூசணிப்பூவைச் சாணியில் செருகி வைத்த பின் அந்த வாசலே மிக அழகாகி விடும்.இன்று சென்னையில் குடியிருப்புகள் பெருகிப் போனபின், பெரிய கோலங்கள் போட ஏது இடம்.?ஆயினும் மைலாப்பூர் மாதிரி சில இடங்களில்,சில வீடுகளில் இந்தப் பழக்கம் அழியாமல் காப்பாற்றுப்பட்டு வருகிறது.மைலாப்பூர் விழா நடக்கும்நேரத்தில்,மயிலையில் மாட வீதியில் கோலப் போட்டியே நடை பெறும்.அன்று அங்கு சென்று பார்க்க வேண்டும் அந்த அழகை!மாதிரிக்குச் சில கோலங்கள் கீழே--

மாக்கோலம்.விசேஷ நாட்களில் போடுவது.






புள்ளிக் கோலம்.வாசலில் போடும் கோலங்களில் ஒன்று








பூக்கோலம். ஓணத்தின்போது போடப்படுவது.




அந்த அதிகாலை நேரத்தில் குனிந்து நிமிர்ந்து அமர்ந்து,பெரிய கோலம் போடுவது பெண்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியும் கூட!

இந்தக் கோலம் போடும் கலை மறைந்து வருகிறதோ என எண்ணுகிறேன்.

நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில்,காலையில் படிக்கும் சாக்கில்,சீக்கிரம் எழுந்து,கையில் புத்தகத்துடன் வீட்டு வாசலில் நின்று. அந்தத் தெருவில் எல்லா வீட்டு வாசல்களிலும் போடப்படும் கோலத்தை(கோலத்தை மட்டுமா!) ரசித்ததுண்டு.

இந்நேரம் ஒரு புதுக்கவிதை நினைவுக்கு வருகிறது.கவிதை வரிகளும் நினைவில்லை;எழுதியவர் பெயரும் நினைவில்லை.என் வார்த்தைகளிலேயே அதன் கருத்தைத் தருகிறேன் –

குனிந்து நிமிர்ந்து,பெருக்கிக்
கோலம் போட்டுப் போனாள்!
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு!

(இது வரை மீள் பதிவு)
(மு.மேத்தா அவர்களின் கவிதை என சிவகுமாரன் சொல்லத் தெரிந்து கொண்டேன்)
இன்று---சபாவில் கேட்டது , கச்சேரி மட்டுமல்ல!

மாமி-1 :   மாமி!நேத்து என்னால வர முடியலே!நன்னாருந்ததா?
மாமி-2:திவ்யமா இருந்தது.அந்த அசோகா ஹல்வாவும்,வாழைப்பூ வடையும் பிரமாதம்!
மாமி-1:மாமி.நான் காண்டீனைப் பத்திக் கேக்கலே;கச்சேரி பத்திக்கேட்டே.ன்!
----------------------------------------------


36 கருத்துகள்:

  1. அசோகா அல்வாவும், வாழைப்பூ வடையும் போல சுவையான பகிர்வு... :)

    கோலம் பார்க்க [நானும் கோலத்தினை மட்டுமே சொன்னேன்] வேண்டுமெனில் ஸ்ரீரங்கத்தில் பார்க்க வேண்டும். இன்றைக்கும் போடுகிறார்கள்....

    பதிலளிநீக்கு
  2. @வெங்கட் நாகராஜ்
    ஸ்ரீரங்கமே அழகுதானே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கோலம் போடும் கலை மறைந்து வருகிறதோ என எண்ணுகிறேன். //

    இப்போல்லாம் ஸ்டிக்கர் ஓட்டுறாங்க தல...!!!

    பதிலளிநீக்கு
  4. கடைசியா செம ஜோக், ஆண்டவா திங்குறதுக்கு என்றே சில ஜென்மங்கள் ஹா ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  5. கற்றுக்கொண்டு கோலம் போட்ட அனுபவம் எனக்கு உண்டு.குளிர்கூட அவ்வளவாக தெரியாது.

    பதிலளிநீக்கு
  6. சீக்கிரம் எழுந்து,கையில் புத்தகத்துடன் வீட்டு வாசலில் நின்று. அந்தத் தெருவில் எல்லா வீட்டு வாசல்களிலும் போடப்படும் கோலத்தை(கோலத்தை மட்டுமா!) ரசித்ததுண்டு.

    //அசோகா அல்வாவும், வாழைப்பூ வடையும் //


    ரச்னையான படைப்பு.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா,
    கோல நினைவுகளோடு காதற் காலக் கவிதையினையும் பகிர்ந்திருக்கிறீங்க.

    அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  8. நானும் எங்கள் அல்லூர் கிராமத்தில் தினமும் காலையில் விதவிதமான கோலங்களை வருடம் முழுவதும் பார்க்கிறேன். ஆனால் கோலம் போடுவது மாமிகளல்ல! அவர்களும் அவர்தம் மகள்களும் விசேஷ நாட்களில் மட்டும் வண்ணக் கோலங்கள் போடுவார்கள். மற்ற நாட்களிலெல்லாம் ’முறைவாசல்’ தெளிக்கும் வேலைக்காரிகள் தான்!

    இன்னொன்று, நீங்கள் குறிப்பிட்டிருந்த மேத்தாவின் கவிதையை சுஜாதாகூட சிலாகித்திருக்கிறார். ஆனால் அந்தக் கவிதை, வேலைக்காரி அறையைக் கூட்டும்போது நினைப்பதாக வரும்.

    பதிலளிநீக்கு
  9. அதிகாலைக் கோலங்கள் தான் எத்தனை அழகு.
    இன்று பார்க்க முடிவதே இல்லை..
    மார்கழி மாதத்தில் சில தெருக்களில் மட்டும்
    தரிசனமாக...

    பதிலளிநீக்கு
  10. மைலாப்பூர் பக்கம் போனா பூசணிப் பூவும், அழகு கோலமும் பாக்கலாமா? இதோ புறப்பட்டுட்டேன். அந்தக் கவிதையை எழுதியவர் கல்யாண்ஜி என்றுதான் என் நினைவு. மு.மேத்தா அல்ல! ஜோக் அருமை!

    பதிலளிநீக்கு
  11. என்ன சபா யார் கச்சேரி என்றும் இரண்டு வரி பகிரலாமே...

    கச்சேரி எந்த அளவு ரசிக்க முடியுமோ அந்த அளவு அறுசுவை அரசர்களின் சுவையையும் ரசிக்க வேண்டியது அவசியம்! செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கும் வயிறு நிறைந்த பின் மறுபடி செவிக்கும் மறுபடி மறுபடி ஈயலாம்!

    கோலப் பாராவுக்கு நினைவு வந்த பாடல் "வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா...வச்சுப்புட்டா...நேசத்திலே என் மனசைத் தச்சிப்புட்டா...தச்சிபுட்டா...!" :)))

    பதிலளிநீக்கு
  12. மார்கழி மாதம் போடப்படும் கோலங்களைப் பற்றி எத்தனை தடவை எழுதினாலும்,சொன்னாலும் திகட்டாது என்பதே உண்மை.மீள் பதிவை திரும்பவும் இரசித்துப் படித்தேன்.

    பதிவின் கடைசியில் தந்த
    அந்த Tail Piece ‘சூப்பர்’!

    பதிலளிநீக்கு
  13. கோலம் அருமையா இருக்கு.. நானும் காபி பண்ணி வச்சுட்டேன்



    வாங்க வாழ்த்துங்க

    செல்லக் குட்டி பிறந்தநாள்

    பதிலளிநீக்கு
  14. எங்க கிராமத்துல விட இங்கதான் (திருப்பூர்) அதிகமா தினமும் கோலம் போடறாங்க.. விடிகாலை 4 மணிக்கே எழுந்து குளிச்சு கோலம் போட்டு கோவிலுக்கு போறாங்க... நானும் முயற்சி பன்றேன்.. ஆனால் 4 மணிக்கெல்லாம் நம்மால முடியலிங்க அய்யா........



    வாங்க வாழ்த்துங்க

    செல்லக் குட்டி பிறந்தநாள்

    பதிலளிநீக்கு
  15. கோலத்தை மட்டுமா!- உங்க நேர்மை அருமை அண்ணே ஹிஹி!

    பதிலளிநீக்கு
  16. மார்கழிக்கோலம் மனதில் மறக்காத காலம் உங்கள் ஞாபகப்பகிர்வு சுவாரஸ்யம்.

    த.ம-7

    பதிலளிநீக்கு
  17. அருமை பித்தரே!
    கோலம் பார்த்து இரசித்த
    உங்களுக்கும் மனசு சுகமாச்சா...
    அல்லது....?
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  18. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    இந்தக் கோலம் போடும் கலை மறைந்து வருகிறதோ என எண்ணுகிறேன். //

    //இப்போல்லாம் ஸ்டிக்கர் ஓட்டுறாங்க தல...!!!//
    காலம் செய்யும் ’கோலம்’!
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  19. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //கடைசியா செம ஜோக், ஆண்டவா திங்குறதுக்கு என்றே சில ஜென்மங்கள் ஹா ஹா ஹா ஹா...//

    கேண்டீன் இருக்கிற சபாக்களுக் குத்தான் கூட்டம் வருகிறது!

    பதிலளிநீக்கு
  20. shanmugavel கூறியது...

    //கற்றுக்கொண்டு கோலம் போட்ட அனுபவம் எனக்கு உண்டு.குளிர்கூட அவ்வளவாக தெரியாது.//
    அப்படிப்போடு!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  21. இராஜராஜேஸ்வரி கூறியது...

    சீக்கிரம் எழுந்து,கையில் புத்தகத்துடன் வீட்டு வாசலில் நின்று. அந்தத் தெருவில் எல்லா வீட்டு வாசல்களிலும் போடப்படும் கோலத்தை(கோலத்தை மட்டுமா!) ரசித்ததுண்டு.

    //அசோகா அல்வாவும், வாழைப்பூ வடையும் //


    //ரச்னையான படைப்பு.. பாராட்டுக்கள்..//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. நிரூபன் கூறியது...

    //வணக்கம் ஐயா,
    கோல நினைவுகளோடு காதற் காலக் கவிதையினையும் பகிர்ந்திருக்கிறீங்க.

    அருமை ஐயா.//

    நன்றி நிரூ!

    பதிலளிநீக்கு
  23. mazhai.net கூறியது...

    //கோலம் அருமை:)//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  24. R.S.KRISHNAMURTHY கூறியது...

    // நானும் எங்கள் அல்லூர் கிராமத்தில் தினமும் காலையில் விதவிதமான கோலங்களை வருடம் முழுவதும் பார்க்கிறேன். ஆனால் கோலம் போடுவது மாமிகளல்ல! அவர்களும் அவர்தம் மகள்களும் விசேஷ நாட்களில் மட்டும் வண்ணக் கோலங்கள் போடுவார்கள். மற்ற நாட்களிலெல்லாம் ’முறைவாசல்’ தெளிக்கும் வேலைக்காரிகள் தான்!

    இன்னொன்று, நீங்கள் குறிப்பிட்டிருந்த மேத்தாவின் கவிதையை சுஜாதாகூட சிலாகித்திருக்கிறார். ஆனால் அந்தக் கவிதை, வேலைக்காரி அறையைக் கூட்டும்போது நினைப்பதாக வரும்.//
    யாராயிருந்தாயென்ன?கூட்டும்போது குப்பையாகும் மனசுக்கு!
    நன்றி

    பதிலளிநீக்கு
  25. மகேந்திரன் கூறியது...

    //அதிகாலைக் கோலங்கள் தான் எத்தனை அழகு.
    இன்று பார்க்க முடிவதே இல்லை..
    மார்கழி மாதத்தில் சில தெருக்களில் மட்டும்
    தரிசனமாக...//
    ஆம்,மகேந்திரன்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  26. கணேஷ் கூறியது...

    // மைலாப்பூர் பக்கம் போனா பூசணிப் பூவும், அழகு கோலமும் பாக்கலாமா? இதோ புறப்பட்டுட்டேன். அந்தக் கவிதையை எழுதியவர் கல்யாண்ஜி என்றுதான் என் நினைவு. மு.மேத்தா அல்ல! ஜோக் அருமை!//
    நன்றி கணேஷ்!

    பதிலளிநீக்கு
  27. ஸ்ரீராம். கூறியது...

    // என்ன சபா யார் கச்சேரி என்றும் இரண்டு வரி பகிரலாமே...

    கச்சேரி எந்த அளவு ரசிக்க முடியுமோ அந்த அளவு அறுசுவை அரசர்களின் சுவையையும் ரசிக்க வேண்டியது அவசியம்! செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கும் வயிறு நிறைந்த பின் மறுபடி செவிக்கும் மறுபடி மறுபடி ஈயலாம்!

    கோலப் பாராவுக்கு நினைவு வந்த பாடல் "வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா...வச்சுப்புட்டா...நேசத்திலே என் மனசைத் தச்சிப்புட்டா...தச்சிபுட்டா...!" :)))//
    என் ஓசி சீசன் டிக்கட் நாரதகான சபாவுக்குத்தான்.எனவே எல்லாக் கச்சேரிகளும் அங்குதான். உன்னி,சௌம்யா பற்றி ஏற்கனவே சொல்லி விட்டேன்.மற்ற இரண்டு பற்றி இன்று சொல்லி விடுகிறேன்.
    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  28. வே.நடனசபாபதி கூறியது...

    //மார்கழி மாதம் போடப்படும் கோலங்களைப் பற்றி எத்தனை தடவை எழுதினாலும்,சொன்னாலும் திகட்டாது என்பதே உண்மை.மீள் பதிவை திரும்பவும் இரசித்துப் படித்தேன்.

    பதிவின் கடைசியில் தந்த
    அந்த Tail Piece ‘சூப்பர்’!//
    நன்றி சபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  29. எனக்கு பிடித்தவை கூறியது...

    //கோலம் அருமையா இருக்கு.. நானும் காபி பண்ணி வச்சுட்டேன்



    வாங்க வாழ்த்துங்க

    செல்லக் குட்டி பிறந்தநாள்//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  30. எனக்கு பிடித்தவை கூறியது...

    //எங்க கிராமத்துல விட இங்கதான் (திருப்பூர்) அதிகமா தினமும் கோலம் போடறாங்க.. விடிகாலை 4 மணிக்கே எழுந்து குளிச்சு கோலம் போட்டு கோவிலுக்கு போறாங்க... நானும் முயற்சி பன்றேன்.. ஆனால் 4 மணிக்கெல்லாம் நம்மால முடியலிங்க அய்யா........



    வாங்க வாழ்த்துங்க

    செல்லக் குட்டி பிறந்தநாள்//
    திருப்பூரா?மூன்றாண்டுகள் அங்கு வங்கி மேலாளராகப் பணி புரிந்திருக்கிறேன்.நல்ல மக்கள்!

    பதிலளிநீக்கு
  31. விக்கியுலகம் கூறியது...

    //கோலத்தை மட்டுமா!- உங்க நேர்மை அருமை அண்ணே ஹிஹி!//
    அதெல்லாம் தாண்டி வருவதுதான் வாழ்க்கை!
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  32. K.s.s.Rajh கூறியது...

    // மார்கழிக்கோலம் மனதில் மறக்காத காலம் உங்கள் ஞாபகப்பகிர்வு சுவாரஸ்யம்.

    த.ம-7//
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  33. கவி அழகன் கூறியது...

    //நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  34. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    //அருமை பித்தரே!
    கோலம் பார்த்து இரசித்த
    உங்களுக்கும் மனசு சுகமாச்சா...
    அல்லது....?
    புலவர் சா இராமாநுசம்//
    :) நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு