தொடரும் தோழர்கள்

சனி, டிசம்பர் 24, 2011

வாழ்க்கைப் பாடங்கள்!


புதிய சமுத்திரங்களை நீங்கள் கண்டு பிடிக்க முடியாது, கரை கண்ணுக்குத்தெரியாமல் மறைவதைக் கண்டு  பயந்தால்!

வாழ்க்கை என்பது உங்கள் மனப்பாங்கைப் பொறுத்ததே!

1.சிப்பாய்: சார் .நம்மை நாலா புறமும் எதிரிகள் சூழ்ந்து விட்டார்கள்!

மேஜர்:ரொம்ப நல்லது.நாம் எந்தப் பக்கத்தில் வேண்டுமானாலும் தாக்கலாம்!

2.அதிக அன்பு வைப்பது ஆபத்தானது.இழக்கும்போது வலி ஏற்படும். தனிமை என்பது நல்லது.பல விஷயங்களைக் கற்றுத்தரும்.அதை  இழக்கும் போது எல்லாம் கிடைக்கும்!

3.முகத்தின் முன் உண்மையாக இருப்பவர்கள் வாழ்வில் முக்கியமல்ல. உங்கள் முதுகுக்குப் பின்னும் உண்மையாக நடப்பவர்களே முக்கியம்.
                                            
4.ஒரு முட்டைக்கு வெளியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் ஒரு   உயிரை  முடிக்கிறது.ஆனால் உள்ளிருந்து  கொடுக்கப்படும் அழுத்தம்   ஒரு உயிரின் ஆரம்பம். பெரிய விஷயங்கள் உள்ளிருந்துதான் பிறக்கின்றன!

5.தன்முனைப்பின்(ego)) காரணமாக,நேசிக்கும் ஒருவரை இழப்பதை விட,நேசிக்கும் ஒருவரிடம் தன்முனைப்பை இழப்பது சிறந்தது!

6.உறவு ஒளிர்வது மகிழ்ச்சியான நேரங்களில் கை குலுக்குவதால் அல்ல.நெருக்கடியான நேரங்களில் இறுகப் பற்றுவதால்!

7.சுடப்பட்ட  தங்கம் நகையாகிறது.அடிக்கப்பட்ட செம்பு பாத்திரமாகிறது.உடைக்கப்பட்ட கல் சிலையாகிறது.அதுபோல்   வாழ்வில் நீங்கள் பெறும் வலிகள் உங்களை மேலும் மதிப்பு வாய்ந்தவர்களாக்கும்.

8.ஒருவரை நம்பும்போது முழுவதும் நம்புங்கள்.முடிவில் இந்த     இரண்டில் ஒன்று கிடைக்கும்வாழ்க்கையில் ஒரு நல்ல பாடம்;    அல்லது ஒரு நல்ல நட்பு/உறவு!

9.தொலைபேசியைக் கண்டு பிடித்தவர் கிரஹாம் பெல் என்பது தெரியும்.ஆனால்,அவர் தொலைபேசியில் தன் மனைவி,மகளிடம் பேசியதில்லை.ஏன் தெரியுமா?இருவரும் காது கேளாதவர்கள்!
மற்றவர்களுக்காக வாழ்வதே வாழ்க்கை!

10.இறைவன் எங்கும் இருக்கிறான் என்றால் இத்தனை கோவில்கள் எதற்காக?

 காற்று எங்கும் இருக்கிறது;பின் விசிறி எதற்காக?காற்றை நாம் உணர்வதற்கு விசிறி தேவை!

16 கருத்துகள்:

  1. //9.தொலைபேசியைக் கண்டு பிடித்தவர் கிரஹாம் பெல் என்பது தெரியும்.ஆனால்,அவர் தொலைபேசியில் தன் மனைவி,மகளிடம் பேசியதில்லை.ஏன் தெரியுமா?இருவரும் காது கேளாதவர்கள்!
    மற்றவர்களுக்காக வாழ்வதே வாழ்க்கை!

    10.இறைவன் எங்கும் இருக்கிறான் என்றால் இத்தனை கோவில்கள் எதற்காக?

    காற்று எங்கும் இருக்கிறது;பின் விசிறி எதற்காக?காற்றை நாம் உணர்வதற்கு விசிறி தேவை!//

    இரண்டும் மிக அருமை...

    பதிலளிநீக்கு
  2. இரவு வணக்கம் ஐயா!இனிய நத்தார் வாழ்த்துக்கள்!அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. 10 முத்துக்களைத் தந்துள்ளீர்கள். அதில் 3ம் 4ம் டாப்! அதீத அன்பினால் ஏற்படும் ஏமாற்றத்தைத் தாங்குவது மிகக் கடினம். நல்ல விஷயங்களைப் பதியனிட்டதற்கு என் மனமார்ந்த நன்றி! உங்களுக்கு என் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. பதிவில் கூறப்பட்ட ஒவ்வொரு கருத்தும் சிந்திக்க வைக்கின்ற, தன்னம்பிக்கை தருகின்ற, வாழ்க்கைக்கு தேவையான பாடங்கள் தான். நல்ல கருத்துக்களை தந்தமைக்கு நன்றிகள் பல!

    பதிலளிநீக்கு
  5. உண்மை தான் - 2,6,9 என்னை கவர்ந்தது

    பதிலளிநீக்கு
  6. ஒரு நல்ல இடுகையை வாசித்த திருப்தி மட்டும் இல்லையைய்யா! ஒரு நல்ல அனுபவத்தை பெற்றுக்கொண்ட முழு மன திருப்தியும் நான் அடைந்திருக்கிறேன். அனைத்து வரிகளும் ஒரு மனிதனின் வாழ்க்கையை சிறப்புடைய செய்பனவை. பதிவுக்கு கோடான கோடி, மனப்பூர்வமான நன்றிகளைய்யா!

    பதிலளிநீக்கு
  7. //ஒரு முட்டைக்கு வெளியிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் ஒரு உயிரை முடிக்கிறது.ஆனால் உள்ளிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் ஒரு உயிரின் ஆரம்பம். பெரிய விஷயங்கள் உள்ளிருந்துதான் பிறக்கின்றன!//

    மிக அருமையான பாடம்...

    நல்ல கருத்துகள் ஐயா... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அதிக அன்பு வைப்பது ஆபத்தானது.இழக்கும்போது வலி ஏற்படும். தனிமை என்பது நல்லது.பல விஷயங்களைக் கற்றுத்தரும்.அதை இழக்கும் போது எல்லாம் கிடைக்கும்!

    அனுபவத்தால் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள்!" பயன்மிக்கவை..

    பதிலளிநீக்கு
  9. இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுதினங்களின் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  10. வாழ்கை தத்துவங்கள் பத்து .... அனைத்தும் முத்துக்கள் ....குறிப்பாக நட்பு / கடவுள் பற்றிய கருத்துக்கள் ...வாசு

    பதிலளிநீக்கு
  11. அத்தனையும் அருமை. பெரிய விஷயங்கள் உள்ளிருந்தே பிறக்கின்றன - நினைக்க நினைக்க பாதிக்கும் கருத்து.

    பதிலளிநீக்கு
  12. இருக்கும் காற்றை தூண்ட மின் விசிறி
    இருக்கும் கடவுளை தூண்ட கற்சிலை-கரசேவைக்கு செங்கல்

    பதிலளிநீக்கு