தொடரும் தோழர்கள்

செவ்வாய், டிசம்பர் 20, 2011

உவ்வே!

இப்போதுதான்  ஒரு ஜோக் படித்தேன்.உடன் அதை உங்களுடன் கண்டிப்பாகப்  பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியதன் விளைவே இந்தக் குறும் பதிவு.

மருத்துவக்கல்லூரியில் உடற்கூறு அமைப்பியல் பற்றி செய்முறைப்பாடம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடந்து கொண்டிருந்தது.மேசையின் மீது ஒரு இறந்த நாயின் உடல் கிடந்தது.

மருத்துவ விரிவுரையாளர் கூறினார்”மருத்துவர்களாகப் போகும் உங்களுக் கெல்லாம் அருவருப்பு என்பதே இருக்கக் கூடாது.அப்போதுதான் சிறப்பாகச் செயலாற்ற முடியும்”

இவ்வாறு சொல்லிவிட்டு அவர் அந்த நாயின் ஆசன வாயில் தன் ஒரு விரலை நுழைத்து எடுத்தார்.பின் விரலை வாயில் வைத்துச் சப்பினார்.பின் அனைவ ரையும்  பார்த்துச்சொன்னார்.”நீங்களும் இது போல் செய்யுங்கள்”அனைவரும் மிகுந்த அருவருப்புடன் அதைச் செய்து முடித்தனர்.சிலருக்கு வாந்தியே வந்து விட்டது.

பின் அவர் சொன்னார்.”அடுத்த மிக முக்கியமான பண்பு எதையும் கூர்ந்து கவனித்தல்.நான் எனது நடு விரலை உள்ளே நுழைத்தேன்.ஆனால் ஆள்காட்டி விரலைச் சப்பினேன்!!”

இது வெறு நகைச்சுவை மட்டுமல்ல;வாழ்க்கையின் தத்துவம்!நம்மைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிப்பதின் அவசியத்தை உணர்த்தும் நகைச்சுவை!

சக பதிவர்களே!உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்.பதிவெழுத அநேக தகவல்கள் கிடைக்கும்!

43 கருத்துகள்:

  1. இதை அருவருப்பு இல்லாம படிச்சதினால, இனிமேல நாங்களும் டாக்டர்தான்!

    பதிலளிநீக்கு
  2. அட....உன்னை சுற்றி உள்ளதை....கவனி - உவ்வே மூலம்

    பதிலளிநீக்கு
  3. அருவெறுப்புதான் என்றாலும் மிகப்பெரிய தத்துவத்தை சொல்லியிருக்கிறார். பகிர்வுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  4. ஹா ஹா ஹா! சூப்பர் பாஸ்!
    ஆனா உவ்வே! :-)

    பதிலளிநீக்கு
  5. கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேறு வழியே அகப் படவில்லையா பேராசிரியருக்கு...!!!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்,ஐயா!அருமையான?!அருவருப்புக் கதை!பதிவர்கள் கவனிப்பார்களாக!!!!

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் சொல்வது சரியே. நம்மைச்சுற்றி நடப்பதை கூர்ந்து கவனித்து எழுதுவதால் தான் உங்களைப் போன்றோர் பதிவுலகின் மன்னர்களாக இருக்கின்றீர்கள்.

    அந்த நிகழ்வு நடந்த இடம்
    கால் நடை மருத்துவக்கல்லூரியாக இருக்கவேண்டும்.என்ன சரிதானே?

    பதிலளிநீக்கு
  8. //பின் அவர் சொன்னார்.”அடுத்த மிக முக்கியமான பண்பு எதையும் கூர்ந்து கவனித்தல்.நான் எனது நடு விரலை உள்ளே நுழைத்தேன்.ஆனால் ஆள்காட்டி விரலைச் சப்பினேன்!!”//

    - மிகவும் அருமை. தொடரவும் சார்.

    தமிழ்மணம் 9.

    பதிலளிநீக்கு
  9. >>சக பதிவர்களே!உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்.பதிவெழுத அநேக தகவல்கள் கிடைக்கும்!

    குட்

    பதிலளிநீக்கு
  10. படித்தவுடன் முதலில் தோன்று
    வது அருவருப்பே!
    ஆனாலும் அதில் நல்லதொரு
    பாடம் உள்ளது!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. //அடுத்த மிக முக்கியமான பண்பு எதையும் கூர்ந்து கவனித்தல்//

    ஓஹோ!

    பதிலளிநீக்கு
  12. இப்படி ஏமாற்றியிருக்கக் கூடாது.போகட்டும் பதிவர்களுக்கு சொன்னது பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  13. சக பதிவர்களே!உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்.பதிவெழுத அநேக தகவல்கள் கிடைக்கும்!//

    இதைத்தான் எழுத்தாளர்களின் பல்கலைகழகம் சுஜாதா அவர்கள் புதிய எழுத்தாளர்களுக்கு அடிக்கடி சொல்லுவதை வாசித்து இருக்கிறேன் தல, அந்த அடிப்படையில்தான் என்னுடைய பதிவுகளில் என்னை சுற்றி நடப்பவைகளை பகிர்ந்து வருகிறேன்...!!!

    பதிலளிநீக்கு
  14. நன்றி சபாபதி அவர்களே!அப்படித்தான் இருக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  15. ஒரு விரல் மூலம் எவ்ளோ பெரிய தத்துவத்தினைப் போதித்திருக்கிறார் பேராசிரியர்,
    கவனக் குறைவால் நாம் பலவற்றை இழக்கிறோம்! கவனமாக இருப்பின் பல்வற்றை அடைகிறோம் என்பதனை இந்த தத்துவம் சொல்லி நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  16. இது வெறு நகைச்சுவை மட்டுமல்ல;வாழ்க்கையின் தத்துவம்!நம்மைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிப்பதின் அவசியத்தை உணர்த்தும் நகைச்சுவை!

    சக பதிவர்களே!உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்.பதிவெழுத அநேக தகவல்கள் கிடைக்கும்!

    அனுபவம் பேசுகிறது!

    ஒருவிரல் தத்துவம்!??

    பதிலளிநீக்கு
  17. கூர்ந்து கவனித்தல் என்பதை விளக்க வேறு உதாரணம் கிடைக்கவில்லையா?
    காந்திஜி கூறுவது போல் End cannot justify the means

    பதிலளிநீக்கு
  18. கூர்ந்து கவனித்தல் என்பதை விளக்க வேறு உதாரணம் கிடைக்கவில்லையா?
    காந்திஜி கூறுவது போல் End cannot justify the means

    பதிலளிநீக்கு