தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

சாம்பார் பற்றிய தகவல்!

சாம்பார் என்றதும் நம் நினைவுக்கு வருவது,இரண்டு செய்திகள்.

ஒன்று தமிழ்நாட்டின் முக்கிய உணவான சாம்பார்.

மற்றொன்று ஜெமினி கணேசன்!

அவர் ஏன் சாம்பார் என்றழைக்கப்பட்டார் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது.

இப்பதிவு ஜெமினி கணேசன் பற்றியதல்ல.
உண்மையான அசல் சாம்பார் பற்றியது.

நானூறு ஆண்டுகளுக்கு முன்தான் மிளகாய் என்பது இந்தியாவுக்கு அறிமுகமாயிற்று. தக்காளி,உருளைக் கிழங்கு,வெங்காயம் ஆகியவையும், வெள்ளையர்களால் இங்கு கொண்டு வரப் பட்டவையே!

எனவே நியாயமாக நமக்கு உடன் எழும் சந்தேகம்”அதற்கு முன் தமிழ்நாட்டில் சாம்பார் எப்படித்தயாரிக்கப் பட்டது?வடநாட்டில்,தக்காளியும்,வெங்காயமும் இல்லாமல் சப்பாத்திக்குப் பக்க வாத்தியமான சப்ஜிகள் எப்படிச் செய்தார்கள்?”

ஆனால் 400 ஆண்டுகளுக்கு முன்பே,தென்னாட்டில் புளி பயன்படுத்தப்பட்டது. அப்போதும் அவர்கள் குழம்பு செய்திருக்க வேண்டும்.ஆனால் மிளகாய் இல்லாததால் மிளகு உபயோகப் படுத்தப் பட்டிருக்க வேண்டும்.கேரளாவின் மிளகூட்டலும், தமிழகத்தின் பொரித்த குழம்பும், புளி,மிளகாய் இல்லாமல்,மிளகு,சீரகம் மட்டும் கொண்டு தயாரிக்கப் படுபவையே.


இந்த சாம்பார் என்பது எப்போது எப்படி வந்தது?

இது பற்றிய ஒரு தகவல்--
“தஞ்சை மண் முன்பு மராத்தியர்களால் ஆளப்பட்டது.அவர்களில் ஒரு அரசனான, சம்போஜி சமையலில் வித்தகர்(பீமன்,நளன் போல்!)

ஒரு நாள் அவர் தனது பிரிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.ஆம்தி என்று அழைக்கப்படும் குழம்பு போன்ற ஒரு பதார்த்தம்.புளிக்குப் பதிலாக ’கொகும் ’ என ஒரு பொருளை-மராத்தா பகுதியில் கிடைப்பது- உபயோகிப்பார்கள்.ஆனால் அன்று மராத்தாவிலிருந்து கொகும் வந்து சேரவில்லை .அதை எப்படி ராஜாவிடம் சொல்வது என எல்லோரும் பயந்து கொண்டிருந்தனர்.ராஜாவின் விதூஷகர் அவரிடம் அங்கு புளி என்று ஒன்று கிடைக்கும் அதை உபயோகிக்கலாம் என்று சொல்ல,அன்று சம்போஜி, துவரம் பருப்பு,காய்கள்,மிளகாய் ,புளி உபயோகித்துச் செய்த குழம்பு எல்லோருக்கும் மிகவும் பிடித்து விட்டது.சம்போஜி செய்த அந்த உணவுதான் சாம்பார் எனப் பின்னாளில் வழங்கப்பட்டது!

வெங்காய சாம்பார் என்றாலே நாக்கில் நீர் ஊறும்!

அதைச் சுவையாகச் செய்வதெப்படி?

இதோ திருமதி ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் செய்முறை---

தேவையான பொருள்கள்:
சின்ன வெங்காயம் – 25
புளி – சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி – 2
துவரம் பருப்பு – 1/2 கப்
சாம்பார்ப் பொடி - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா அரைக்க:
சின்ன வெங்காயம் – 6
தனியா – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
தாளிக்க:
எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை
செய்முறை:
• துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ள்வும்.
• புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
• மசாலா சாமான்களை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
• வாணலியில் எண்ணையச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அத்துடன் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை வதக்கிக் கொள்ள வேண்டும்.
• வெங்காயம் வதங்கியதும், தக்காளித் துண்டுகள், புளிக் கரைசல், உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
• கொதிக்கத் தொடங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும்.
• இறுதியில் வேகவைத்த துவரம்பருப்பைச் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
• இந்தச் சாம்பாருக்கு மணத்தையும் சுவையையும் தருவதில் மசாலாவில் அரைத்துவிடும் சின்னவெங்காயம், கொத்தமல்லித் தழையின் பங்குதான் மிக முக்கியமானது. ஹோட்டல் சாம்பாரின் சுவையை அதுவே தருகிறது. எனவே சாம்பாருக்கு சின்ன வெங்காயம் உரிக்க நேரமில்லாவிட்டாலும், அதற்குப் பதில் பெரிய வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில அரிந்துபோட்டு, மசாலாவிற்கு மட்டும் 4,5 சின்ன வெங்காயம் உபயோகித்தாலே ஓரளவு சுவையைக் கொண்டுவந்து விடலாம்.

நன்றி ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்!

சாம்பார் மணக்கிறதா?!


59 கருத்துகள்:

  1. நலமா தலைவா ...கூடங்குளம் அணு உலையை தமிழகத்தை விட்டு அகற்றும் போராட்டங்களில் பிசியாக இருந்ததால் நீண்ட நாட்கள் வர முடியவில்லை ....

    பதிலளிநீக்கு
  2. மணம் வீசும் மனம் கவர்ந்த சாம்பார் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சாம்பாருக்கும், உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சாம்பார் பற்றிய தகவல்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  5. மணம் வீசும் மனம் கவர்ந்த சாம்பார் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. சாம்பாரு பற்றி பதிவா..ஆனா நான் சாம்பாரு செய்தால் வேறு மாதிரி தான் வரும் ஹிஹி

    இட்டிலியும் சாம்பாரும் சூப்பரா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. நான் சக்தி மசாலாப் பொடி பாக்கெட்டை படிச்சே சாம்பார் வச்சிருவேன்..

    பதிலளிநீக்கு
  8. மணக்க மணக்க சாம்பாரு

    தமிழ் மணத்துல ஆறு

    பதிலளிநீக்கு
  9. தமிழ்மணம் 9


    சாம்பார் சூப்பர் சாம்பார் ... அருமை

    பதிலளிநீக்கு
  10. அவர் ஏன் சாம்பார் என்றழைக்கப்பட்டார் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது.

    ஒரு வேளை அவரது நடிப்பு சாம்பார் சாதம் சாப்பிட்டது போல இருந்ததால் இருக்கலாமோ...

    பதிலளிநீக்கு
  11. மிளகாய் இல்லாததால் மிளகு உபயோகப் படுத்தப் பட்டிருக்க வேண்டும்

    ....மிளகு - வெளிநாட்டினரால் அதிகம் விரும்பப்பட்ட விலைமதிப்புள்ள பொருளாக இருந்து இருக்கிறது. History says that India attracted many travelers and traders for its spices and wealth. அந்த வேளையில், காரத்துக்காக மிளகாய் இங்கே இறக்குமதி செய்து விட்டு, மிளகு ஏற்றுமதி பொருளாய் கொண்டு இருக்கிறார்கள். மிளகுக்கு பதிலாக வந்த காய் என்பதுதான், நாளடைவில், மிளகாய் என்று ஆனது என்று வாசித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. koodal bala கூறியது...

    // நலமா தலைவா ...கூடங்குளம் அணு உலையை தமிழகத்தை விட்டு அகற்றும் போராட்டங்களில் பிசியாக இருந்ததால் நீண்ட நாட்கள் வர முடியவில்லை ....//
    மிக முக்கியமான வேலையாத்தான் இருந்திருக்கீங்க!வாழ்த்துகள் பாலா!

    பதிலளிநீக்கு
  13. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //மணம் வீசும் மனம் கவர்ந்த சாம்பார் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.//

    நன்றி இராஜராஜேஸ்வரி!

    பதிலளிநீக்கு
  14. தமிழ் உதயம் கூறியது...

    //சாம்பாருக்கும், உங்களுக்கும் நன்றி.//

    நன்றி தமிழ் உதயம்!

    பதிலளிநீக்கு
  15. malgudi கூறியது...

    // சாம்பார் பற்றிய தகவல்கள் அருமை.//
    நன்றி மால்குடி!

    பதிலளிநீக்கு
  16. சமுத்ரா கூறியது...

    //மணம் வீசும் மனம் கவர்ந்த சாம்பார் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.//

    நன்றி சமுத்ரா!

    பதிலளிநீக்கு
  17. கந்தசாமி. கூறியது...

    //சாம்பாரு பற்றி பதிவா..ஆனா நான் சாம்பாரு செய்தால் வேறு மாதிரி தான் வரும் ஹிஹி

    இட்டிலியும் சாம்பாரும் சூப்பரா இருக்கும்.//

    நன்றி கந்தசாமி!

    பதிலளிநீக்கு
  18. செங்கோவி கூறியது...

    //நான் சக்தி மசாலாப் பொடி பாக்கெட்டை படிச்சே சாம்பார் வச்சிருவேன்..//
    அவ்வளவுதான்!
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  19. M.R கூறியது...

    // மணக்க மணக்க சாம்பாரு

    தமிழ் மணத்துல ஆறு//
    குட்டிக் கவிதை!
    நன்றி ரமேஷ்!

    பதிலளிநீக்கு
  20. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //தமிழ்மணம் 7..//

    நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  21. சாம்பார் என்றதும் நம் நினைவுக்கு வருவது,இரண்டு செய்திகள்.

    ஒன்று தமிழ்நாட்டின் முக்கிய உணவான சாம்பார்.

    மற்றொன்று ஜெமினி கணேசன்!

    அவர் ஏன் சாம்பார் என்றழைக்கப்பட்டார் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. //

    அட சொல்லுவிங்கன்னு எதிர் பாத்தேன் .ஏமாற்றிவிட்டீர்கள்!
    ஆனால் பதிவில் ஏமாற்றவில்லை!

    பதிலளிநீக்கு
  22. மாய உலகம் கூறியது...

    // தமிழ்மணம் 9


    சாம்பார் சூப்பர் சாம்பார் ... அருமை//

    நன்றி ராஜேஷ்.

    பதிலளிநீக்கு
  23. FOOD கூறியது...

    //மணம் வீசும் பதிவு. சும்மா கம கம.//
    நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  24. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    அவர் ஏன் சாம்பார் என்றழைக்கப்பட்டார் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது.

    //ஒரு வேளை அவரது நடிப்பு சாம்பார் சாதம் சாப்பிட்டது போல இருந்ததால் இருக்கலாமோ...//
    இருக்கலாம்!
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  25. பாரத்... பாரதி... கூறியது...

    //வணக்கங்களும், வாக்குகளும்..//
    நன்றி பாரத்!

    பதிலளிநீக்கு
  26. Chitra கூறியது...

    மிளகாய் இல்லாததால் மிளகு உபயோகப் படுத்தப் பட்டிருக்க வேண்டும்

    // ....மிளகு - வெளிநாட்டினரால் அதிகம் விரும்பப்பட்ட விலைமதிப்புள்ள பொருளாக இருந்து இருக்கிறது. History says that India attracted many travelers and traders for its spices and wealth. அந்த வேளையில், காரத்துக்காக மிளகாய் இங்கே இறக்குமதி செய்து விட்டு, மிளகு ஏற்றுமதி பொருளாய் கொண்டு இருக்கிறார்கள். மிளகுக்கு பதிலாக வந்த காய் என்பதுதான், நாளடைவில், மிளகாய் என்று ஆனது என்று வாசித்து இருக்கிறேன்.//
    சரிதான். தகவலுக்கு நன்றி!(வருகை,வாக்கு, பின்னூட்டம் அனைத்துக்கும்)

    பதிலளிநீக்கு
  27. அஹா.........துபாய் வரை மணக்கிறது. என்னை னினைவிருக்கிறதா ? வந்துவிட்டேன். இனியும் வருவேன். அடுத்து என்ன ரசமா?
    வெளுத்து கட்டுங்க :)))

    பதிலளிநீக்கு
  28. அஹா.........துபாய் வரை மணக்கிறது. என்னை னினைவிருக்கிறதா ? வந்துவிட்டேன். இனியும் வருவேன். அடுத்து என்ன ரசமா?
    வெளுத்து கட்டுங்க :)))

    பதிலளிநீக்கு
  29. அஹா.........துபாய் வரை மணக்கிறது. என்னை னினைவிருக்கிறதா ? வந்துவிட்டேன். இனியும் வருவேன். அடுத்து என்ன ரசமா?
    வெளுத்து கட்டுங்க :)))

    பதிலளிநீக்கு
  30. கக்கு - மாணிக்கம் கூறியது...

    //அஹா.........துபாய் வரை மணக்கிறது. என்னை னினைவிருக்கிறதா ? வந்துவிட்டேன். இனியும் வருவேன். அடுத்து என்ன ரசமா?
    வெளுத்து கட்டுங்க :)))//

    கக்குவை மறக்க முடியுமா?என்ன இப்படிக் காணாமல் போய்விட்டாரே என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்.நீங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  31. சாம்பார் வாசனை இங்க வரை வீசுதே,
    செய்முறை விளக்கமும் கூடவே
    தந்திருப்பது இன்னும் நல்ல இருக்கு.

    பதிலளிநீக்கு
  32. சாம்பாரைப்பற்றி விரிவாக சொன்னதற்கு நன்றி.
    திரு ஜெமினி கணேசனை சாம்பார் என அழைத்த காரணம் அவர் சைவ உணவு சாப்பிட்டதால்தான். இன்று கூட கேரளாவில் சைவ உணவு சாப்பிடுபவர்களை’பச்சகறி’ என அழைப்பார்கள்.தமிழ்நாட்டில் சிலசமயம் சைவ உணவு சாப்பிடுவோரை ‘தயிர் வடை’ எனவும் அழைப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
  33. Lakshmi கூறியது...

    // சாம்பார் வாசனை இங்க வரை வீசுதே,
    செய்முறை விளக்கமும் கூடவே
    தந்திருப்பது இன்னும் நல்ல இருக்கு.//
    முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி லக்ஷ்மி அவர்களே!

    பதிலளிநீக்கு
  34. வே.நடனசபாபதி கூறியது...

    சாம்பாரைப்பற்றி விரிவாக சொன்னதற்கு நன்றி.
    //திரு ஜெமினி கணேசனை சாம்பார் என அழைத்த காரணம் அவர் சைவ உணவு சாப்பிட் டதால்தான். இன்று கூட கேரளா வில் சைவ உணவு சாப்பிடுபவர் களை’பச்சகறி’ என அழைப்பார்கள். தமிழ்நாட்டில் சிலசமயம் சைவ உணவு சாப்பிடுவோரை ‘தயிர் வடை’ எனவும் அழைப்பதுண்டு.

    தகவலுக்கு நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  35. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    //இன்று என் வலையில் ..

    பல்சுவை வலைதளம் விருது//

    noted!

    பதிலளிநீக்கு
  36. கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமாக படிப்பையே பிரதான தொழிலாக கொண்டிருக்கும் மாணவர்களையும் கல்லூரிகளில் இவன் சரியான சாம்பாரக இருக்கிறானே என்று கூறுவதுண்டு. சாம்பார் அருமை. வாயில் எச்சில் ஊற வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  37. கே. ஆர்.விஜயன் கூறியது...

    //கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமாக படிப்பையே பிரதான தொழிலாக கொண்டிருக்கும் மாணவர்களையும் கல்லூரிகளில் இவன் சரியான சாம்பாரக இருக்கிறானே என்று கூறுவதுண்டு. சாம்பார் அருமை. வாயில் எச்சில் ஊற வைத்துவிட்டீர்கள்.//
    நன்றி விஜயன்!

    பதிலளிநீக்கு
  38. சாம்பாருக்குப் பின்னே சாதி இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சாதி குழம்பென்றால் இன்னொரு சாதி சாம்பார்.
    சாம்பாருக்குத் தனிச்சுவை அவ்வளவாகக் கிடையாது. உடன் சேர்க்கும் காய், மாமிசங்களினால் தான் சாம்பாருக்குச் சுவையே வருகிறது. ஜெமினி கணேசனைத் தனியாக ரசிக்க முடியுமா.. ம்ம்ம்.
    சாம்பாருக்கு விவஸ்தை கிடையாது. எந்தக் காய்கறியுடனும் சேரும். எந்த உணவு வகையோடும் (அனேகமாக) சேரும். ஜெமினியும்.

    பதிலளிநீக்கு
  39. சாம்பார் கமகமவென மணக்கிறது...

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. சாம்பாறு குடுத்து அசத்தீற்ரீங்க. மிக்க நன்றி ஐயா .
    தமிழ் மணம் 15 போட்டாச்சு எங்களையும் கவனியுங்க .

    பதிலளிநீக்கு
  41. சார்... உங்களை சென்னை பதிவர் சந்திப்பிற்கு அன்போடு அழைக்கிறோம்...

    http://goundamanifans.blogspot.com/2011/08/4.html

    பதிலளிநீக்கு
  42. அப்பாதுரை கூறியது...

    //சாம்பாருக்குப் பின்னே சாதி இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சாதி குழம்பென்றால் இன்னொரு சாதி சாம்பார்.
    சாம்பாருக்குத் தனிச்சுவை அவ்வளவாகக் கிடையாது. உடன் சேர்க்கும் காய், மாமிசங்களினால் தான் சாம்பாருக்குச் சுவையே வருகிறது. ஜெமினி கணேசனைத் தனியாக ரசிக்க முடியுமா.. ம்ம்ம்.
    சாம்பாருக்கு விவஸ்தை கிடையாது. எந்தக் காய்கறியுடனும் சேரும். எந்த உணவு வகையோடும் (அனேகமாக) சேரும். ஜெமினியும்.//

    ஆகா!தமிழ்சங்கம் தீர்க்க முடியாத பிரச்சினையை தனி யொருவராக வந்து தீர்த்து வைத்த அப்பாதுரையே!பிடியுங்கள் கிழி!இது பொற்கிழி அல்ல வெறும் சொற்கிழி!

    நன்றி ,நன்றி!

    பதிலளிநீக்கு
  43. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //சாம்பார் கமகமவென மணக்கிறது...

    நல்ல பகிர்வுக்கு நன்றி.//
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  44. அம்பாளடியாள் கூறியது...

    //சாம்பாறு குடுத்து அசத்தீற்ரீங்க. மிக்க நன்றி ஐயா .
    தமிழ் மணம் 15 போட்டாச்சு எங்களையும் கவனியுங்க .//
    நன்றி அம்பாளடியாள்!

    பதிலளிநீக்கு
  45. Philosophy Prabhakaran கூறியது...

    // சார்... உங்களை சென்னை பதிவர் சந்திப்பிற்கு அன்போடு அழைக்கிறோம்...

    http://goundamanifans.blogspot.com/2011/08/4.html//
    கிண்டலா?யூத் பதிவர் சந்திப்பு என்று போட்டு விட்டு என்னை அழைக்கிறீர்கள்?அங்கு வந்தால் உள்ளேயே அனுமதிக்க மாட்டார்கள்!
    நான் வரலைப்பா!

    பதிலளிநீக்கு
  46. சாம்பார் நெசமாவே மணக்கிறது ஐயா.

    பதிலளிநீக்கு
  47. உங்க சாம்பாரை நினச்சாலே வாயூறுது!

    பதிலளிநீக்கு
  48. சாம்பார் மணக்கிறதா?!////எங்கேய்யா மணக்கிறது?தமிழ் நாட்டுக்கு வந்தால் தான்!(வாயில எச்சி மட்டும் ஊறுது)

    பதிலளிநீக்கு
  49. வெங்காயம் வெள்ளையர்களால்தான் (400 ஆண்டுகளுக்கு முன்பு?) நம் நாட்டுக்கு வந்தது என்பதற்கு ஆதாரம் இருந்தால் பார்க்க விரும்புகிறேன். உள்ளி என்ற பொதுப் பெயரில் பூண்டு, வெங்காயம் முதலியன தொன்றுதொட்டுக் குறிக்கப்படுகின்றன. "வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன" எனத் தொடங்குமொரு சித்தர் பாடல் 400 வருடங்களுக்குள்தான் எழுதப்பட்டிருக்குமா என்ற கேள்வி எழுகிறது. "அகத்தியர் இரண்டாயிரம்" என்ற சித்த மருத்துவப் புத்தகத்தில் வெங்காயத்தின் குணங்கள் என்றொரு பாடலையும் காண்கிறேன். சித்தர்கள், சித்த மருத்துவம் இவற்றின் பழமையை ஒட்டி, உங்கள் கூற்றினை மீளாய்வு செய்து பார்க்கவும். நன்றி!

    பதிலளிநீக்கு
  50. சாம்பார் வெங்காயம் என்று செல்லமாக அழைக்கப்படும் வெங்காயம் நம் நாட்டு பயிராகும். ஒருவேளை பெரிய வெங்காயம் என்ற ஒருவகை தக்காளி, கேரட் , பீன்ஸ் போன்றவற்றோடு அந்நியர்களால் நம் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம். வெள்ளை பூண்டும்,சிறிய வெங்காயமும் நம் நாட்டு உணவு முறையாகவே இருக்கலாம்.
    நண்பர் சுந்தர வடிவேலுவின் விளக்கம் சரிதான் என்று என்ன வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  51. @சுந்தரவடிவேல்
    எங்கோ படித்ததைப் பகிர்ந்து கொண்டேன்.அவ்வளவே!ஆராய்ந்து பார்க்கவில்லை.உங்கள் கூற்று சரியாக இருக்கலாம்.அல்லது கக்கு மாணிக்கம் சொல்வது போல் பெரிய வெங்காயம் வெளியிலிருந்து வந்ததாக இருக்கலாம். இன்னும் அதிக தகவலுக்கு முயன்று பார்க்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  52. @கக்கு - மாணிக்கம்

    நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது! இன்னும் தகவல் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி கக்கு!

    பதிலளிநீக்கு