இது எனக்குப் பிடித்த எனது பதிவுகளில் ஒன்று!ஒரு நாள் குளிக்கும்போது மனதில் வெடித்துச் சிதறிய வார்த்தைகள்!இன்று ஒரு மீள் பதிவாக்க மனம் விழைகிறது-----
---------------------
பிரம்மாண்டப் பிரபஞ்ச மௌனத்தின் பேரொலி
அண்ட பேரண்ட ஆதாரப் பெருஞ்சூட்டின் நடுக்கும் குளிர்
விரிந்து நிற்கும் மயானப் பிண வாடையின் சுகந்தம்
எல்லையற்ற ஆகாசக் கும்மிருட்டின் கூசும் ஒளி
நடக்கட்டும் நாடகம்
அடிக்கட்டும் தாரை தப்பட்டை
வெடிக்கட்டும் தரை பிளந்து
துடிக்கட்டும் பிறவா உயிர்
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!
ஒற்றைக் குருசைக் கையில் ஏந்திவா!
நெற்றி நிறையத் திருநீறு பூசி வா!
திருக் கபால மேட்டிலே திருமண் இட்டு வா!
தொப்பி அணிந்து திசை நோக்கித் தொழுது வா!
மனித நேயம் தொலை!
மதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!
நாடகமே உலகம்
நாமெல்லாம் நடிகர்கள்
எழுதியவன் யார்?
இயக்குபவன் யார்?
யாருக்கும் விடை தெரியாக் கேள்விகள்
நாடகமே கொஞ்ச நேரம்
வேடம் கலைத்த பின் போகுமிடம் ஒன்றன்றோ
பிரிவினையின் உஷ்ணத்தில்
குளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள்
இல்லாமல் போகட்டும்.
தொடங்கட்டும் ஊழிக் கூத்து!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
நாடகமே கொஞ்ச நேரம்
பதிலளிநீக்குவேடம் கலைத்த பின் போகுமிடம் ஒன்றன்றோ// உண்மையான வரிகள்..
நாடகமே கொஞ்ச நேரம்
பதிலளிநீக்குவேடம் கலைத்த பின் போகுமிடம் ஒன்றன்றோ//
//உண்மையான வரிகள்..//
நன்றி கருன்.
//மனித நேயம் தொலை!
பதிலளிநீக்குமதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!//
ருத்ர தாண்டவம் ஆடியிருக்கீங்களே..
செங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு//மனித நேயம் தொலை!
மதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!//
// ருத்ர தாண்டவம் ஆடியிருக்கீங்களே..//
நன்றி செங்கோவி.
குளிக்கும் போது கிடைத்த வார்த்தைகளே இவ்வளவு தகிக்கிறன என்றால் , கோபத்தில் இருக்கும் போது யோசித்திருந்தால், ஊழிக்கால ருத்ர தாண்டவமாகியிருக்கும் போல...
பதிலளிநீக்குபடிக்கவே பயமாய் இருக்கே. ரொம்ப கோபத்தில் எழுதிய பதிவா? அல்லது உங்களை எழுதத்தூண்டியது ஏதாவது ஒரு நிகழ்வா?
பதிலளிநீக்குசில திரைப் படங்களில் வரும் உச்ச கட்ட காட்சிக்கான பாடல் போல உள்ளது !
பதிலளிநீக்குநாடகமே உலகம்
பதிலளிநீக்குநாமெல்லாம் நடிகர்கள்
எழுதியவன் யார்?
இயக்குபவன் யார்?
யாருக்கும் விடை தெரியாக் கேள்விகள்
உண்மையான வரிகள்
நாடகமே கொஞ்ச நேரம்
வேடம் கலைத்த பின் போகுமிடம் ஒன்றன்றோ
இதை உணர்ந்தால் சண்டை ஏது
சச்சரவுதான் ஏது ?
பாரத்... பாரதி... கூறியது...
பதிலளிநீக்கு//குளிக்கும் போது கிடைத்த வார்த்தைகளே இவ்வளவு தகிக்கிறன என்றால் , கோபத்தில் இருக்கும் போது யோசித்திருந்தால், ஊழிக்கால ருத்ர தாண்டவமாகியிருக்கும் போல...//
தண்ணிரால் குளிர்வாகுமா இக்கோபம்?
நன்றி பாரத்!
கே. ஆர்.விஜயன் கூறியது...
பதிலளிநீக்கு//படிக்கவே பயமாய் இருக்கே. ரொம்ப கோபத்தில் எழுதிய பதிவா? அல்லது உங்களை எழுதத்தூண்டியது ஏதாவது ஒரு நிகழ்வா?//
பொதுவான நடப்புதான்.
நன்றி விஜயன்.
koodal bala கூறியது...
பதிலளிநீக்கு//சில திரைப் படங்களில் வரும் உச்ச கட்ட காட்சிக்கான பாடல் போல உள்ளது !//
நன்றி பாலா.
M.R கூறியது...
பதிலளிநீக்குநாடகமே உலகம்
நாமெல்லாம் நடிகர்கள்
எழுதியவன் யார்?
இயக்குபவன் யார்?
யாருக்கும் விடை தெரியாக் கேள்விகள்
உண்மையான வரிகள்
நாடகமே கொஞ்ச நேரம்
வேடம் கலைத்த பின் போகுமிடம் ஒன்றன்றோ
//இதை உணர்ந்தால் சண்டை ஏது சச்சரவுதான் ஏது ?//
உண்மை.
நன்றி M.R
இரு வேறு துருவங்களை
பதிலளிநீக்குஅதன் மாறு உருவங்களை
வலிமையான வார்த்தைகளின்
வழியே வடித்திருப்பது அழகு
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி
அத்தனையும் உண்மையான வரிகள். நிஜமாகவே ஒரு ஊழிக்குத்து தேவைதான்.
பதிலளிநீக்குபொங்கி வரும் கவிதை வெள்ளம்....
பதிலளிநீக்குA.R.ராஜகோபாலன் கூறியது...
பதிலளிநீக்கு//இரு வேறு துருவங்களை
அதன் மாறு உருவங்களை
வலிமையான வார்த்தைகளின்
வழியே வடித்திருப்பது அழகு
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி//
நன்றி ராஜகோபாலன்.
வெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//அத்தனையும் உண்மையான வரிகள். நிஜமாகவே ஒரு ஊழிக்குத்து தேவைதான்.//
நன்றி வெங்கட்!
FOOD கூறியது...
பதிலளிநீக்கு//நச் நச்சுன்னு அசத்தியிருக்கீங்க.//
நன்றி சங்கரலிங்கம் சார்!
Chitra கூறியது...
பதிலளிநீக்கு//பொங்கி வரும் கவிதை வெள்ளம்....//
நன்றி சித்ரா!
குளிக்கும்போது கூலாக வார்த்தை வரும் என்று பார்த்தால் வெடித்து சிதறி அல்லவா வந்திருக்கின்றன...உக்கிரத்தில் இருந்தால் பயங்கரமாக இருக்கும் என நினைக்கிறேன்... மனித நேயம் தொலை!
பதிலளிநீக்கு//மதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!//
உண்மை ஐயா... இன்றைய சமூகம் போகும் பாதையை பார்த்தால்..வரும் ஜெனரேசனை நினைத்தால் நிலைக்கொள்ளவில்லை... நன்றி
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்குகுளிக்கும்போது கூலாக வார்த்தை வரும் என்று பார்த்தால் வெடித்து சிதறி அல்லவா வந்திருக்கின்றன...உக்கிரத்தில் இருந்தால் பயங்கரமாக இருக்கும் என நினைக்கிறேன்... மனித நேயம் தொலை!
//மதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!//
//உண்மை ஐயா... இன்றைய சமூகம் போகும் பாதையை பார்த்தால்..வரும் ஜெனரேசனை நினைத்தால் நிலைக்கொள்ளவில்லை... நன்றி//
நன்றி மாய உலகம்!
மனிதர்களைப் பக்குவப்படுத்துவதற்கு-சமைப்பதற்கு ஏற்படுத்தப்பட்டவையே சமயங்கள். சமயம் என்ற சொல்லுக்குப் பதிலாக மதத்தைப் பயன்படுத்துவதால்தான் மனிதன் மதம் பிடித்து அலைகின்றான் போலும்.ஜனநாயகத்தையும் அன்பையும் கொண்டு பயங்கரவாதத்தைத் தண்டிக்கவேண்டும்.
பதிலளிநீக்குArumai Sir...
பதிலளிநீக்குOvvoru variyum arputham...
Diski: Kandippaaga Ithu template comment alla...Nambungal.
மனிதர்களைப் பக்குவப்பட்த்துவதற்கு-சமைப்பதற்கு ஏற்படுத்தப்பட்டவையே சமயங்கள். சமயம் என்ற சொல்லுக்குப் பதிலாக மதத்தைப் பயன்படுத்துவதால்தான் மனிதன் மதம் பிடித்து அலைகின்றான் போலும். வன்முறையை அகற்றுவதற்கு, அரசியலும் மதமும் இரண்டறக் கலப்பதைத் தவிர்க்கவேண்டும்.
பதிலளிநீக்கு//மனித நேயம் தொலை!
பதிலளிநீக்குமதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!//
super super
9 vote in tamil manam ...
பதிலளிநீக்குஅண்ணே அலை அடிச்சாப்பல இருக்குன்னே உங்க கவிதை...கோபத்துடன் மோதி இருக்கீங்க போல!
பதிலளிநீக்கு//பிரிவினையின் உஷ்ணத்தில்
பதிலளிநீக்குகுளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள்
இல்லாமல் போகட்டும்.//
சாபம் கொடுத்திருக்கிறீர்கள். அது நடக்கட்டும்.
மீண்டும் படிக்கத்தூண்டுகின்ற இது போன்ற பதிவுகளை மீண்டும் பலமுறை பதிவேற்றலாம்.
மனித நேயம் தொலை!
பதிலளிநீக்குமதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!//
என்னாச்சு தல, ருத்ரதாண்டவமே ஆடி இருக்கீங்க.....!!!
நியாயமான தாண்டவம்தான்...!
பதிலளிநீக்குசீராசை சேதுபாலா கூறியது...
பதிலளிநீக்கு//மனிதர்களைப் பக்குவப்படுத்துவதற்கு-சமைப்பதற்கு ஏற்படுத்தப்பட்டவையே சமயங்கள். சமயம் என்ற சொல்லுக்குப் பதிலாக மதத்தைப் பயன்படுத்துவதால்தான் மனிதன் மதம் பிடித்து அலைகின்றான் போலும்.//
சரியே!
//ஜனநாயகத்தையும் அன்பையும் கொண்டு பயங்கர வாதத்தைத் தண்டிக்கவேண்டும்//.
முடியுமா!
நன்றி சேதுபாலா!
டக்கால்டி கூறியது...
பதிலளிநீக்கு// Arumai Sir...
Ovvoru variyum arputham...
Diski: Kandippaaga Ithu template comment alla...Nambungal.//
நம்பினேன்.
நன்றி டக்கால்டி.
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு//மனித நேயம் தொலை!
மதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!//
//super super//
நன்றி ரியாஸ்!
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு// 9 vote in tamil manam ...//
எத்தனை நன்றி சொல்லலாம்?!
விக்கியுலகம் கூறியது...
பதிலளிநீக்கு//அண்ணே அலை அடிச்சாப்பல இருக்குன்னே உங்க கவிதை...கோபத்துடன் மோதி இருக்கீங்க போல!//
ஆம்!
நன்றி விக்கி.
வே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//பிரிவினையின் உஷ்ணத்தில்
குளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள்
இல்லாமல் போகட்டும்.//
//சாபம் கொடுத்திருக்கிறீர்கள். அது நடக்கட்டும்.//
ததாஸ்து!
// மீண்டும் படிக்கத்தூண்டுகின்ற இது போன்ற பதிவுகளை மீண்டும் பலமுறை பதிவேற்றலாம்.//
நன்றி ஐயா.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்குமனித நேயம் தொலை!
மதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!//
//என்னாச்சு தல, ருத்ரதாண்டவமே ஆடி இருக்கீங்க.....!!!//
உள்ளக் குமுறல்!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//நியாயமான தாண்டவம்தான்...!//
நன்றி மனோ.
சென்னைக்காரருக்கு இன்று என் இவ்வளவு கோபம்,
பதிலளிநீக்குசொல்லியது எல்லாம் சமூகத்தின் மீது உள்ள கோபமாகவே தெரிகிறது
சென்னைக்காரருக்கு இன்று என் இவ்வளவு கோபம்,
பதிலளிநீக்குசொல்லியது எல்லாம் சமூகத்தின் மீது உள்ள கோபமாகவே தெரிகிறது
பாலா பட க்ளைமாக்ஸ் மாதிரி இருக்கு சார்!
பதிலளிநீக்குஐயா குளிக்கும் போது கூட நேரத்தை வீணாக்கவில்லை....
பதிலளிநீக்குஅப்படி என்ன குளிக்கும் போது இந்தக்கவிதை வந்ததன் காரணம் என்ன...
ஏதும் செய்தி பார்த்துவிட்டு போனீங்களா?
நல்ல காலம் குளியல் சட்டிகள் பத்திரமாய் இருந்ததா?hahaha....
அனைத்தும் உண்மையை சொல்கிறது கவிதை..
எல்லாம் நாடகம் தான்....
நல்ல ஆவேசமான கவிதை..
! ஸ்பார்க் கார்த்தி @ கூறியது...
பதிலளிநீக்கு//சென்னைக்காரருக்கு இன்று என் இவ்வளவு கோபம்,
சொல்லியது எல்லாம் சமூகத்தின் மீது உள்ள கோபமாகவே தெரிகிறது//
ஆம் கார்த்தி!
நன்றி.
! சிவகுமார் ! கூறியது...
பதிலளிநீக்கு// பாலா பட க்ளைமாக்ஸ் மாதிரி இருக்கு சார்!//
நன்றி சிவகுமார்.
vidivelli கூறியது...
பதிலளிநீக்கு// ஐயா குளிக்கும் போது கூட நேரத்தை வீணாக்கவில்லை....
அப்படி என்ன குளிக்கும் போது இந்தக்கவிதை வந்ததன் காரணம் என்ன...
ஏதும் செய்தி பார்த்துவிட்டு போனீங்களா?//
இல்லை!தானாகவே எழுந்த எண்ண அலைகள்!
நல்ல காலம் குளியல் சட்டிகள் பத்திரமாய் இருந்ததா?hahaha....
அனைத்தும் உண்மையை சொல்கிறது கவிதை..
எல்லாம் நாடகம் தான்....
//நல்ல ஆவேசமான கவிதை..//
நன்றி விடிவெள்ளி.
முன் படித்த நினைவில்லை. முதல் தீம்தரிகிட அட்டகாசம்.
பதிலளிநீக்குஐயாவிற்க்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபித்தரே! புதுயுக சித்தரே! இன்றுமுதல் நான் உமது பக்தர்
பதிலளிநீக்குஅருமை!
புலவர் சா இராமாநுசம்
நிகழ்வுகளை நிதானமாய் சொல்லிச் செல்கிறது உங்கள் வரிகள். அருமை...
பதிலளிநீக்குஅப்பாதுரை கூறியது...
பதிலளிநீக்கு// முன் படித்த நினைவில்லை. முதல் தீம்தரிகிட அட்டகாசம்.//
நன்றி அப்பாதுரை.
M.R கூறியது...
பதிலளிநீக்கு// ஐயாவிற்க்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//
நன்றி நண்பரே.வாழ்த்துகள் உங்களுக்கும்!
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்கு//பித்தரே! புதுயுக சித்தரே! இன்றுமுதல் நான் உமது பக்தர்
அருமை!//
ஐயா!உங்கள் அன்புக்கு நான் அடிமை!
நன்றி!
பலே பிரபு கூறியது...
பதிலளிநீக்கு// நிகழ்வுகளை நிதானமாய் சொல்லிச் செல்கிறது உங்கள் வரிகள். அருமை...//
நன்றி பிரபு!
மீண்டும் வணக்கம் ஐயா,
பதிலளிநீக்குதலைப்பே புயலாய் ருத்ர தாண்டவம் ஆடும் ஒரு நிலையினை விளக்கும் வண்ணம் வைத்திருக்கிறீங்க.
உள்ளார்ந்தமாக இறங்கிப் படித்துப் பார்க்கிறேன்.
இது எனக்குப் பிடித்த எனது பதிவுகளில் ஒன்று!ஒரு நாள் குளிக்கும்போது மனதில் வெடித்துச் சிதறிய வார்த்தைகள்!இன்று ஒரு மீள் பதிவாக்க மனம் விழைகிறது-----//
பதிலளிநீக்குஐயாவும் என் கட்சி என்பதனை நிரூபித்திருக்கிறீங்க.
எனக்கும் குளிக்கும் போது,
வேலையில் இருக்கும் போது தான் கற்பனைகள் வந்து உதிக்கும், சில வேளை அவற்றினைப் பற்றிப் பிடித்து வைக்க முடியாமல் பறக்க விட்டு விட்டு,
அடச்...சே அருமையான ஒரு கற்பனையினைத் தவற விட்டு விட்டேன் என்று வருந்துவதுமுண்டு.
பிரம்மாண்டப் பிரபஞ்ச மௌனத்தின் பேரொலி
பதிலளிநீக்குஅண்ட பேரண்ட ஆதாரப் பெருஞ்சூட்டின் நடுக்கும் குளிர்
விரிந்து நிற்கும் மயானப் பிண வாடையின் சுகந்தம்
எல்லையற்ற ஆகாசக் கும்மிருட்டின் கூசும் ஒளி
நடக்கட்டும் நாடகம்
அடிக்கட்டும் தாரை தப்பட்டை
வெடிக்கட்டும் தரை பிளந்து
துடிக்கட்டும் பிறவா உயிர்
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!//
ஒரு கவிஞனுக்கோ, அல்லது படைப்பாளிக்கோ சமூகத்தின் மீது கோபம் வருகின்ற போது,
அது ஒட்டு மொத்தச் சமூகத்தினையும் வேரோடு பிடுங்குவது போன்ற தோற்றப்பாட்டினைத் தருவது இயல்பு தான்.
ஆனால் உங்களின் அனுபவ வெளிப்பாட்டினை அடிப்படையாக வைத்து இந்தக் கவிதையினை நோக்கும் போது,
உங்கள் வாழ் நாளில் இடம் பெற்ற கொடூரங்களை, இவ் உலகில் நிகழும் அக்கிரமங்களை கண்டு மனம் கொத்தித்தன் உணர்வு வெளிப்பாட்டினை இக் கவிதை பிரதிபலித்து ஆவேசம், கோபம், வெறுப்பு, முதலிய உணர்வுகளைத் தாங்கி வந்திருக்கிறது.
பிரம்மாண்டப் பிரபஞ்ச மௌனத்தின் பேரொலி
பதிலளிநீக்குஅண்ட பேரண்ட ஆதாரப் பெருஞ்சூட்டின் நடுக்கும் குளிர்
விரிந்து நிற்கும் மயானப் பிண வாடையின் சுகந்தம்
எல்லையற்ற ஆகாசக் கும்மிருட்டின் கூசும் ஒளி
நடக்கட்டும் நாடகம்
அடிக்கட்டும் தாரை தப்பட்டை
வெடிக்கட்டும் தரை பிளந்து
துடிக்கட்டும் பிறவா உயிர்
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!//
இயற்கை மூலமாக, இயற்கை அன்னையின் சீற்றம் மூலமாக கோரத் தாண்டவம் ஊழிக் கூத்தாக இடம் பெற்று, ஒற்றுமையின்றி இருக்கும் சமூகத்தை அழிக்க வேண்டும் எனும் வகையில் உங்கள் கவிதையில் கோபக் கனலினை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.
ஒற்றைக் குருசைக் கையில் ஏந்திவா!
பதிலளிநீக்குநெற்றி நிறையத் திருநீறு பூசி வா!
திருக் கபால மேட்டிலே திருமண் இட்டு வா!
தொப்பி அணிந்து திசை நோக்கித் தொழுது வா!
மனித நேயம் தொலை!
மதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!//
மதங்களின் பெயராலும், மதவாதிகளின் எண்ணக் கருத்துக்களாலும், உலகில் பல சண்டைகள் நிகழ்கின்றனவே,
மதங்களால் மதம் பிடித்து உலகமே ஊழித் தாண்டவமாடி அழிந்து போ...எனும் உணர்வினை இவ் வரிகள் வெளிப்படுத்தி நிற்கிறது.
நாடகமே உலகம்
பதிலளிநீக்குநாமெல்லாம் நடிகர்கள்
எழுதியவன் யார்?
இயக்குபவன் யார்?//
வாழ்க்கையினை நன்றாக உணர்ந்து, அனுபவித்து எழுதியுள்ள உங்களின் இவ் வரிகள் தத்துவத்தினைச் சொல்லுகிறது.
யாருக்கும் விடை தெரியாக் கேள்விகள்
பதிலளிநீக்குநாடகமே கொஞ்ச நேரம்
வேடம் கலைத்த பின் போகுமிடம் ஒன்றன்றோ
பிரிவினையின் உஷ்ணத்தில்
குளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள்
இல்லாமல் போகட்டும்.
தொடங்கட்டும் ஊழிக் கூத்து!//
பிரிவினைவாதம் மூலம் அரசியல் பிழைப்பு நடத்துவோருக்கும் ஊழிக் கூத்தின் மூலம் சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.
கவிஞனின் கோபம், இங்கே ஊழிக் கூத்தாக வெளிப்பட்டிருக்கிறது,
சமூகத்தில் பிரிவினையினைத் தூண்டி விட்டுப் பிழைப்பு நடத்துவோர் மீதான கோபக் கனலினை,
உலகம் மீதும், இயற்கை அன்னை மீதும், மதங்கள் மீதும் கொட்டித் தீர்த்திருக்கிறீங்க.
ஊழிக் கூத்து: உலகில் பிரிவினைவகள், மதவாதம் கண்டு கொதித்த கவிஞனின் மனக் குமுறல் அல்லது சாபம்.
ஊழிக் கூத்து: உலகில் பிரிவினைவகள், மதவாதம் கண்டு கொதித்த கவிஞனின் மனக் குமுறல் அல்லது சாபம்.
பதிலளிநீக்குநிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு// மீண்டும் வணக்கம் ஐயா,
தலைப்பே புயலாய் ருத்ர தாண்டவம் ஆடும் ஒரு நிலையினை விளக்கும் வண்ணம் வைத்திருக்கிறீங்க.
உள்ளார்ந்தமாக இறங்கிப் படித்துப் பார்க்கிறேன்.//
வாங்க நண்பரே!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குஇது எனக்குப் பிடித்த எனது பதிவுகளில் ஒன்று!ஒரு நாள் குளிக்கும்போது மனதில் வெடித்துச் சிதறிய வார்த்தைகள்!இன்று ஒரு மீள் பதிவாக்க மனம் விழைகிறது-----//
//ஐயாவும் என் கட்சி என்பதனை நிரூபித்திருக்கிறீங்க.
எனக்கும் குளிக்கும் போது,
வேலையில் இருக்கும் போது தான் கற்பனைகள் வந்து உதிக்கும், சில வேளை அவற்றினைப் பற்றிப் பிடித்து வைக்க முடியாமல் பறக்க விட்டு விட்டு,
அடச்...சே அருமையான ஒரு கற்பனையினைத் தவற விட்டு விட்டேன் என்று வருந்துவதுமுண்டு.//
இங்கும் அப்படியே!இன்று கூட மாலை வெளியே செல்லும்போது உதித்த புதிய கற்பனைகளில் பாதிக்கு மேல் வீடு வந்து சேரும்போது, மறந்து, மறைந்து விட்டன.என்ன செய்ய?
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குபிரம்மாண்டப் பிரபஞ்ச மௌனத்தின் பேரொலி
அண்ட பேரண்ட ஆதாரப் பெருஞ்சூட்டின் நடுக்கும் குளிர்
விரிந்து நிற்கும் மயானப் பிண வாடையின் சுகந்தம்
எல்லையற்ற ஆகாசக் கும்மிருட்டின் கூசும் ஒளி
நடக்கட்டும் நாடகம்
அடிக்கட்டும் தாரை தப்பட்டை
வெடிக்கட்டும் தரை பிளந்து
துடிக்கட்டும் பிறவா உயிர்
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!//
//ஒரு கவிஞனுக்கோ, அல்லது படைப்பாளிக்கோ சமூகத்தின் மீது கோபம் வருகின்ற போது,
அது ஒட்டு மொத்தச் சமூகத்தினையும் வேரோடு பிடுங்குவது போன்ற தோற்றப்பாட்டினைத் தருவது இயல்பு தான்.
ஆனால் உங்களின் அனுபவ வெளிப்பாட்டினை அடிப்படையாக வைத்து இந்தக் கவிதையினை நோக்கும் போது,
உங்கள் வாழ் நாளில் இடம் பெற்ற கொடூரங்களை, இவ் உலகில் நிகழும் அக்கிரமங்களை கண்டு மனம் கொத்தித்தன் உணர்வு வெளிப்பாட்டினை இக் கவிதை பிரதிபலித்து ஆவேசம், கோபம், வெறுப்பு, முதலிய உணர்வுகளைத் தாங்கி வந்திருக்கிறது.//
ஆம் தோழரே!இதை எழுதிய அன்று முழுவதும் ஒரு அமைதி யில்லா நிலையில்தான் இருந்தேன்!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குபிரம்மாண்டப் பிரபஞ்ச மௌனத்தின் பேரொலி
அண்ட பேரண்ட ஆதாரப் பெருஞ்சூட்டின் நடுக்கும் குளிர்
விரிந்து நிற்கும் மயானப் பிண வாடையின் சுகந்தம்
எல்லையற்ற ஆகாசக் கும்மிருட்டின் கூசும் ஒளி
நடக்கட்டும் நாடகம்
அடிக்கட்டும் தாரை தப்பட்டை
வெடிக்கட்டும் தரை பிளந்து
துடிக்கட்டும் பிறவா உயிர்
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!//
//இயற்கை மூலமாக, இயற்கை அன்னையின் சீற்றம் மூலமாக கோரத் தாண்டவம் ஊழிக் கூத்தாக இடம் பெற்று, ஒற்றுமையின்றி இருக்கும் சமூகத்தை அழிக்க வேண்டும் எனும் வகையில் உங்கள் கவிதையில் கோபக் கனலினை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.//
அந்தக்கனல் பிறவா உயிர்களையும் விடவில்லை!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குஒற்றைக் குருசைக் கையில் ஏந்திவா!
நெற்றி நிறையத் திருநீறு பூசி வா!
திருக் கபால மேட்டிலே திருமண் இட்டு வா!
தொப்பி அணிந்து திசை நோக்கித் தொழுது வா!
மனித நேயம் தொலை!
மதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!//
//மதங்களின் பெயராலும், மதவாதிகளின் எண்ணக் கருத்துக்களாலும், உலகில் பல சண்டைகள் நிகழ்கின்றனவே,
மதங்களால் மதம் பிடித்து உலகமே ஊழித் தாண்டவமாடி அழிந்து போ...எனும் உணர்வினை இவ் வரிகள் வெளிப்படுத்தி நிற்கிறது.//
மதம் என்ற பெயரில் மதம் பிடித்து அலைவோரை என்ன செய்ய?
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குநாடகமே உலகம்
நாமெல்லாம் நடிகர்கள்
எழுதியவன் யார்?
இயக்குபவன் யார்?//
//வாழ்க்கையினை நன்றாக உணர்ந்து, அனுபவித்து எழுதியுள்ள உங்களின் இவ் வரிகள் தத்துவத்தினைச் சொல்லுகிறது.//
இந்த யதார்த்தம் ஏன் அனைவருக்கும் புரிவதில்லை? புரிந்தாலும் ஏன் புரியாதவர்களாக நடந்து கொள்கிறார்கள்?அதுவே என் வருத்தம்!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குயாருக்கும் விடை தெரியாக் கேள்விகள்
நாடகமே கொஞ்ச நேரம்
வேடம் கலைத்த பின் போகுமிடம் ஒன்றன்றோ
பிரிவினையின் உஷ்ணத்தில்
குளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள்
இல்லாமல் போகட்டும்.
தொடங்கட்டும் ஊழிக் கூத்து!//
//பிரிவினைவாதம் மூலம் அரசியல் பிழைப்பு நடத்துவோருக்கும் ஊழிக் கூத்தின் மூலம் சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.
கவிஞனின் கோபம், இங்கே ஊழிக் கூத்தாக வெளிப்பட்டிருக்கிறது,
சமூகத்தில் பிரிவினையினைத் தூண்டி விட்டுப் பிழைப்பு நடத்துவோர் மீதான கோபக் கனலினை,
உலகம் மீதும், இயற்கை அன்னை மீதும், மதங்கள் மீதும் கொட்டித் தீர்த்திருக்கிறீங்க.
ஊழிக் கூத்து: உலகில் பிரிவினைவகள், மதவாதம் கண்டு கொதித்த கவிஞனின் மனக் குமுறல் அல்லது சாபம்.//
நெகிழ்ந்து போனேன் நிரூ. இப்படி ஒரு விரிவான,வரிக்கு வரி அலசலை நான் எதிபார்க்கவில்லை. என் உள்ளக் குமுறலை அப்படியே எதிரொலித்திருக்கிறீர்கள்.எப்படி நன்றி சொல்வேன்?
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு//ஊழிக் கூத்து: உலகில் பிரிவினைவகள், மதவாதம் கண்டு கொதித்த கவிஞனின் மனக் குமுறல் அல்லது சாபம்.//
குமுறலே!சாபம் கொடுக்க நாம் யார்?
நன்றி,நன்றி ......நன்றி நிரூபன்!
ஒரு கூத்து மேடையில் இருந்த அனுபவம் வருகிறது . அருமை ஐயா
பதிலளிநீக்குதேடிப் படித்துக் கருத்துச் சொன்னமைக்கு நன்றி சகோதரி.
பதிலளிநீக்கு