தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

நேதாஜியும் பத்மனாப ஸ்வாமியும்!

நேதாஜி அவர்கள் சிறிது காலம் திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி கோவிலில் மறைந்திருந்தாராம்!இப்படியொரு சந்தேகம் அக்கால ஆங்கிலேய அரசுக்கு எற்பட்டது!

1941 இல் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட வெளிநாடு சென்ற நேதாஜி,ரகசியமாகத் திரும்பி வந்து மாறு வேடத்தில் பத்மனாபஸ்வாமி கோவிலில் இருப்பதாக ஒரு அநாமதேயக் கடிதம் அப்போதைய மதராஸ் ராஜதானியின் ஆங்கிலேய நிர்வாகிக்குக் கிடைக்கவும்,லெஃப்ட்.கர்னல் ஜி.பி.மர்ஃபி என்ற அதிகாரி,திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானான சர்.சி.பி.ராமசாமி ஐயரவர்களுக்குக் கடிதம் எழுதிக் கோவிலையும் அதன் சுற்றுப்புரத்தையும் கண்காணிக்கச் சொன்னாராம்.--(அங்கேயும் சிபியா??!!)அவ்வாறே செய்யப்பட்டதாகவும்,ஆனால் தடயமேதும் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.

இத்தனை ஆண்டுகளாக மிகப் பெரிய புதையலைக் காப்பாற்றி வந்த பத்மனாபஸ்வாமி, சில நாட்கள் நேதாஜியைக் காப்பாற்றியிருக்க மாட்டாரா என்ன?!

புர்ஜ் காலிஃபாவில் ரமலான் நோன்பு
---------------------------------

ஒரே கட்டிடத்தில் குடியிருப்பவர்களுக்கு நோன்பு நேரம் வெவ்வேறாக அமைய முடியுமா?துபாய் புர்ஜ் கலிஃபாவில் உள்ளவர்களுக்கு அவ்வாறு நேர்ந்திருக்கிறது!160 ஆவது தளத்தில் வசிப்பவர்களுக்கு சூரியோதயம் முன்பாகவும்,மறைவு சிறிது நேரம் கழித்தும் தெரிவதால் அவர்களுக்கு நோன்பு நேரங்கள் மாற்றப் பட்டிருக்கின்றன.80-150 தளங்களில் வசிப்பவர்கள் தங்கள் மாலை இஃப்தார் உணவை இரண்டு நிமிடம் கழித்தும்,151-160 தளங்களில் வசிப்பவர்கள் ,மூன்று நிமிடம் கழித்தும் உண்ணுமாறுநேர்ந்திருக்கிறது!

(நன்றி:இந்தியாவின் நேரங்கள்;8-8-2011)

42 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா,
    சில நாட்கள் வலையில் பதிவுகளைப் படிக்க முடியவில்லை, ஆணியில் மாட்டியிருந்தேன்.
    நலமாக இருக்கிறீங்க தானே?

    பதிலளிநீக்கு
  2. இத்தனை ஆண்டுகளாக மிகப் பெரிய புதையலைக் காப்பாற்றி வந்த பத்மனாபஸ்வாமி, சில நாட்கள் நேதாஜியைக் காப்பாற்றியிருக்க மாட்டாரா என்ன?! //

    டைம்மிங் காமெடி..

    சூப்பரோ சூப்பர்.

    பதிலளிநீக்கு
  3. நோன்பு பற்றிய வித்தியாசமான நேரப் பகிர்விற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. நேதாஜி பற்றிய புதிய தகவல் தெரிந்துக் கொண்டேன்..


    நன்றி...

    பதிலளிநீக்கு
  5. நேதாஜி பத்தி புது நியூஸா இருக்கே

    பதிலளிநீக்கு
  6. VERY NEW NEWS AIYAAA
    THANK U ..
    BOTH NEWS I CAN RELATE
    BECOZ I RESPECT NETAJI AND AM ALSO
    FASTING ..

    TQ VERY MUCH ...

    பதிலளிநீக்கு
  7. //இத்தனை ஆண்டுகளாக மிகப் பெரிய புதையலைக் காப்பாற்றி வந்த பத்மனாபஸ்வாமி, சில நாட்கள் நேதாஜியைக் காப்பாற்றியிருக்க மாட்டாரா என்ன?! // நச்சுன்னு சொன்னீங்க சார்.

    பதிலளிநீக்கு
  8. தகவல்களுக்கு நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  9. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //முதல் வாசகன்..//
    முதல் நன்றி!

    பதிலளிநீக்கு
  10. நிரூபன் கூறியது...

    //வணக்கம் ஐயா,
    சில நாட்கள் வலையில் பதிவுகளைப் படிக்க முடியவில்லை, ஆணியில் மாட்டியிருந்தேன்.//
    //நலமாக இருக்கிறீங்க தானே?//
    நலமே!எதை மாட்டியிருந்தீர்கள்?
    வலையையா?கணினியையா?
    மூக்குக் கண்ணாடியையா?

    பதிலளிநீக்கு
  11. நிரூபன் கூறியது...

    இத்தனை ஆண்டுகளாக மிகப் பெரிய புதையலைக் காப்பாற்றி வந்த பத்மனாபஸ்வாமி, சில நாட்கள் நேதாஜியைக் காப்பாற்றியிருக்க மாட்டாரா என்ன?! //

    // டைம்மிங் காமெடி..

    சூப்பரோ சூப்பர்.//
    :)நன்றி!

    பதிலளிநீக்கு
  12. நிரூபன் கூறியது...

    //நோன்பு பற்றிய வித்தியாசமான நேரப் பகிர்விற்கு நன்றி ஐயா.//
    நன்றி நிரூ!

    பதிலளிநீக்கு
  13. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    // நேதாஜி பற்றிய புதிய தகவல் தெரிந்துக் கொண்டேன்..


    நன்றி...//
    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  14. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //நேதாஜி பத்தி புது நியூஸா இருக்கே//

    புதுசுதான்!
    நன்றி சதீஷ்.

    பதிலளிநீக்கு
  15. ரியாஸ் அஹமது கூறியது...

    //VERY NEW NEWS AIYAAA
    THANK U ..
    BOTH NEWS I CAN RELATE
    BECOZ I RESPECT NETAJI AND AM ALSO
    FASTING ..

    TQ VERY MUCH ...//
    க்யாஹுவா?க்யோன் அங்க்ரேசி?
    ஷுக்ரியா!

    பதிலளிநீக்கு
  16. ரியாஸ் அஹமது கூறியது...

    // TAMILMANAM VOTED//
    நன்றி ரியாஸ்.

    பதிலளிநீக்கு
  17. செங்கோவி கூறியது...

    //இத்தனை ஆண்டுகளாக மிகப் பெரிய புதையலைக் காப்பாற்றி வந்த பத்மனாபஸ்வாமி, சில நாட்கள் நேதாஜியைக் காப்பாற்றியிருக்க மாட்டாரா என்ன?! // //நச்சுன்னு சொன்னீங்க சார்.//
    :) நன்றி செங்கோவி.

    பதிலளிநீக்கு
  18. M.R கூறியது...

    // தகவல்களுக்கு நன்றி அய்யா//
    நன்றி ரமேஷ்!

    பதிலளிநீக்கு
  19. FOOD கூறியது...

    // வணக்கம் சார்.இரு வித்யாசமான ஆனால் டைமிங் தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.//
    நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  20. //(அங்கேயும் சிபியா??!!)//
    சர் சி.பி.இராமசாமி அய்யர் ,திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த போது திருவனந்தபுரத்திலிருந்து கோட்டயம் செல்லும் இரயில் பயணம் செய்துகொண்டு இருந்தாராம். கொல்லம் ஜங்ஷன் இரயில் வந்தபோது அதிக நேரம் கிளம்பாமல் இருந்தது கண்டு ‘என்ன காரணம்?; என விசாரித்தபோது திருவாங்கூர் பார்வர்ட் வங்கியின் நெறியாளர் திரு சி.பி.க்காக காத்திருப்பதாக சொன்னார்களாம். அப்போது அவர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இரண்டு சி.பி இருக்கக்கூடாது எனச்சொன்னதாகவும்,சொல்வார்கள். எனவே அப்போதே இன்னொரு சி.பி இருந்திருக்கிறார்!!!

    பதிவில் நீங்கள் எழுதியது போல்,நிச்சயம் பத்மனாபஸ்வாமி, சில நாட்கள் நேதாஜியைக் காப்பாற்றியிருப்பார்.

    ஒரு வீடு இரு வாசல் என்பதுபோல். ஒரே பதிவில் இரு வேறு செய்திகளை தந்திருக்கிறீர்கள். ஒரே கட்டிடத்தில் குடியிருப்பவர்களுக்கு நோன்பு நேரம் வெவ்வேறாக அமைந்த செய்தி அறிந்து ஆச்சரியப்பட்டேன். தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. இரண்டுமே சுவாரசியமான தகவல்கள். ரம்ஜான் மேட்டர் உண்மைதானா?

    பதிலளிநீக்கு
  22. வே.நடனசபாபதி கூறியது...

    //(அங்கேயும் சிபியா??!!)//
    //சர் சி.பி.இராமசாமி அய்யர் ,திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த போது திருவனந்தபுரத்திலிருந்து கோட்டயம் செல்லும் இரயில் பயணம் செய்துகொண்டு இருந்தாராம். கொல்லம் ஜங்ஷன் இரயில் வந்தபோது அதிக நேரம் கிளம்பாமல் இருந்தது கண்டு ‘என்ன காரணம்?; என விசாரித்தபோது திருவாங்கூர் பார்வர்ட் வங்கியின் நெறியாளர் திரு சி.பி.க்காக காத்திருப்பதாக சொன்னார்களாம். அப்போது அவர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இரண்டு சி.பி இருக்கக்கூடாது எனச்சொன்னதாகவும்,சொல்வார்கள். எனவே அப்போதே இன்னொரு சி.பி இருந்திருக்கிறார்!!!//

    புதிய சுவாரஸ்யமான தகவல்!

    // பதிவில் நீங்கள் எழுதியது போல்,நிச்சயம் பத்மனாபஸ்வாமி, சில நாட்கள் நேதாஜியைக் காப்பாற்றியிருப்பார்.//
    அதே!(மலையாளம்)

    // ஒரு வீடு இரு வாசல் என்பதுபோல். ஒரே பதிவில் இரு வேறு செய்திகளை தந்திருக்கிறீர்கள். ஒரே கட்டிடத்தில் குடியிருப்ப வர்களுக்கு நோன்பு நேரம் வெவ்வேறாக அமைந்த செய்தி அறிந்து ஆச்சரியப்பட்டேன். தகவலுக்கு நன்றி.//
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  23. பாலா கூறியது...

    // இரண்டுமே சுவாரசியமான தகவல்கள். ரம்ஜான் மேட்டர் உண்மைதானா?//
    இரண்டுமே இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திகள் பாலா!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  24. இரண்டுமே ஆச்சரியமூட்டும் வித்தியாசமான தகவல்கள்..

    பதிலளிநீக்கு
  25. நேதாஜியை பிடிக்க கடைசி வரை எந்த கொம்பனாலயும் முடியாம போச்சு.. இதற்கு கடவுளுடைய அனுகிரகமும் அவருக்கு இருந்திருக்கு..நேதாஜிக்கு ஜே....தெரிந்துக்கொண்டோம்... நன்றி

    பதிலளிநீக்கு
  26. நோன்பு பற்றி நேரத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  27. இத்தனை ஆண்டுகளாக மிகப் பெரிய புதையலைக் காப்பாற்றி வந்த பத்மனாபஸ்வாமி, சில நாட்கள் நேதாஜியைக் காப்பாற்றியிருக்க மாட்டாரா என்ன?!
    ஆகா....கலக்கல் காமடி.நன்றி ஐயா பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  28. ஐயய்யோ அங்கேயும் சிபி'யா.....??!! அவ்வ்வ்வ்வ்வ்....

    பதிலளிநீக்கு
  29. நிச்சயமாக காப்பாற்றியிருப்பார்.....
    வாசிக்கக்கூடிய அளவான பதிவு....
    ஐயா புதிய தகவல் நேதாஜியைப்பற்றி அறிந்துகொண்டேன்...
    நல்ல பதிவு...
    நோன்பு பற்றியதான பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  30. Chitra கூறியது...

    //பகிர்வுக்கு நன்றிங்க.//

    நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  31. அமைதிச்சாரல் கூறியது...

    //இரண்டுமே ஆச்சரியமூட்டும் வித்தியாசமான தகவல்கள்..//
    நன்றி அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  32. மாய உலகம் கூறியது...

    // நேதாஜியை பிடிக்க கடைசி வரை எந்த கொம்பனாலயும் முடியாம போச்சு.. இதற்கு கடவுளுடைய அனுகிரகமும் அவருக்கு இருந்திருக்கு..//
    நிச்சயம்.
    //நேதாஜிக்கு ஜே.... தெரிந்துக் கொண்டோம்... நன்றி//
    நன்றி மாய உலகம்.

    பதிலளிநீக்கு
  33. மாய உலகம் கூறியது...

    //நோன்பு பற்றி நேரத்தை பகிர்ந்தமைக்கு நன்றி//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  34. அம்பாளடியாள் கூறியது...

    இத்தனை ஆண்டுகளாக மிகப் பெரிய புதையலைக் காப்பாற்றி வந்த பத்மனாபஸ்வாமி, சில நாட்கள் நேதாஜியைக் காப்பாற்றியிருக்க மாட்டாரா என்ன?!
    //ஆகா....கலக்கல் காமடி.நன்றி ஐயா பகிர்வுக்கு.//
    நன்றி அம்பாளடியாள்!

    பதிலளிநீக்கு
  35. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // ஐயய்யோ அங்கேயும் சிபி'யா.....??!! அவ்வ்வ்வ்வ்வ்....//
    :)

    பதிலளிநீக்கு
  36. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // சூப்பரான புதிய தகவல் தல....!!!//
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  37. vidivelli கூறியது...

    // நிச்சயமாக காப்பாற்றியிருப்பார்.....
    வாசிக்கக்கூடிய அளவான பதிவு....
    ஐயா புதிய தகவல் நேதாஜியைப்பற்றி அறிந்துகொண்டேன்...
    நல்ல பதிவு...
    நோன்பு பற்றியதான பகிர்வுக்கு நன்றி ஐயா.//
    நன்றி விடிவெள்ளி.

    பதிலளிநீக்கு
  38. அட இது புதிய தகவலாக இருக்கிறதே.... இருந்தாலும் இருக்கும்.... அங்கிருந்து புதிய புதையல்களாக வந்து கொண்டு இருக்கிறதே... :)))

    பதிலளிநீக்கு