தொடரும் தோழர்கள்

செவ்வாய், மே 24, 2011

யார் ஆட்சி?!

இந்தியாவில் இப்போது யார் ஆட்சி?

தெற்கில் அம்மா (ஜெயலலிதா)

கிழக்கில் அக்கா(didi) (மம்தா பேனர்ஜி)

வடக்கிலும் அக்கா(behanji) (மாயாவதி)

தலைநகரில் அத்தை (ஷீலா தீக்‌ஷித்)

நடுவில் அன்னை (மேடம் சோனியா காந்தி)

உச்சியில் பாட்டி (ஜனாதிபதி-ப்ரதிபா பாட்டீல்)

வீட்டில் மனைவி (அவரவர் மனைவியின் பெயர்)

இருந்தும் பலர் சொல்கிறார்கள் “இது ஆண்களின் ராஜ்ஜியம்”

என்ன அநியாயம்?!

(ஒரு கணவனின் புலம்பல்!)

34 கருத்துகள்:

  1. ஓஹோ இதைத்தான் அனுபவம் என்று சொல்வார்களோ?

    பதிலளிநீக்கு
  2. என்ன கொடுமை சார் இது...

    அப்பிடி சொல்லி தப்பிச்சிக்க வேண்டியதுதான்...

    பதிலளிநீக்கு
  3. ஏதோ நாலு பேர் பெண்கள் அதிகாரத்தில் இருந்தால் போதுமா? இதுதான் பெண் விடுதலையா என கேட்டு வம்புக்கு வருவார்கள்.தயாராக இருங்கள்.:))

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா24 மே, 2011 அன்று 5:59 PM

    சூப்பரோ சூப்பர்...ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லி தப்பியுங்கள்

    பதிலளிநீக்கு
  5. அதானே….. ஆனாலும் நீங்க சொன்னா ஏத்துக்கவா போறாங்க!!! :)

    பதிலளிநீக்கு
  6. அம்ம்மா நான் இந்த விளையாட்டுக்கு வரலைங்கோ.....

    பதிலளிநீக்கு
  7. இந்தியாவை சுற்றி என்ன இருக்கிறது...???

    பதில் : வடக்கே இமயமலையும், தெற்கே இந்திய பெருங்கடலும்,கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே அரபிகடலும் இந்தியாவை சுற்றி உள்ளன...[[ஆத்தீ எஸ்கேப்]]

    பதிலளிநீக்கு
  8. !* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

    //ஓஹோ இதைத்தான் அனுபவம் என்று சொல்வார்களோ?//
    அப்படியா!
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  9. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    // என்ன கொடுமை சார் இது...

    அப்பிடி சொல்லி தப்பிச்சிக்க வேண்டியதுதான்...//
    ”ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி”
    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  10. கக்கு - மாணிக்கம் கூறியது...

    // ஏதோ நாலு பேர் பெண்கள் அதிகாரத்தில் இருந்தால் போதுமா? இதுதான் பெண் விடுதலையா என கேட்டு வம்புக்கு வருவார்கள்.தயாராக இருங்கள்.:))//
    உங்கள் பெயர் நாரதரா?உங்கள் ஊர் அய்யம்பேட்டையா?(இதுக்கும் யாராவது சண்டைக்கு வருவாங் களோ ; என் நேரமே சரியில்லப்பா!)
    நன்றி கக்கு!

    பதிலளிநீக்கு
  11. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //சூப்பரோ சூப்பர்...ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லி தப்பியுங்கள்//
    எங்கு அவர்கள் தலைமையில் இல்லை?குளிர்பானம்,மென்பொருள் என்று எல்லாவற்றிலும் கலக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
    நன்றி சதீஷ்!

    பதிலளிநீக்கு
  12. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //அதானே….. ஆனாலும் நீங்க சொன்னா ஏத்துக்கவா போறாங்க!!! :)//
    நான் பாரதி வழி வந்தவன்.
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  13. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அம்ம்மா நான் இந்த விளையாட்டுக்கு வரலைங்கோ.....//
    இப்படி ஓடிப்போனா எப்படி?தளபதி இல்லாம என்ன செய்ய!

    பதிலளிநீக்கு
  14. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //இந்தியாவை சுற்றி என்ன இருக்கிறது...???

    பதில் : வடக்கே இமயமலையும், தெற்கே இந்திய பெருங்கடலும்,கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே அரபிகடலும் இந்தியாவை சுற்றி உள்ளன...[[ஆத்தீ எஸ்கேப்]]//
    பூகோளம் எல்லாம் நல்லாப் படிச்சிருக்கீங்க போல!
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா24 மே, 2011 அன்று 8:14 PM

    ஹிஹிஹி சூப்பர் ஐயா அப்பா இந்தியாவில் பெண்களுக்கு பூரண உரிமை கிடைத்துவிடும் போல ....

    பதிலளிநீக்கு
  16. ஆஹா..ரொம்ப டேஞ்சரான இடத்துக்கு வந்துட்டம் போலிருக்கே..அப்படியே எஸ் ஆகிட வேண்டியது தான்!

    பதிலளிநீக்கு
  17. FOOD சொன்னது…

    //பெண் விடுதலை போர்ப்படை தளபதி புகழ் ஓங்குக:))
    அய்யா, எப்படில்லாம் சிந்திக்கிறீங்க!//

    ” பட்டங்கள் ஆள்வதும்,சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று முழங்கிய பாரதியின் வழி நான்!
    நன்றி சங்கரலிங்கம்!

    பதிலளிநீக்கு
  18. செங்கோவி கூறியது...

    //ஆஹா..ரொம்ப டேஞ்சரான இடத்துக்கு வந்துட்டம் போலிருக்கே..அப்படியே எஸ் ஆகிட வேண்டியது தான்!//
    ஓடாதீங்க!சக்தி இல்லையேல் சிவமில்லை;சிவமில்லையேல் சக்தியில்லை!
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  19. இனிமே வீட்டுலே முறிக்கி கிட்டு திரியபிடாது ஐயாவே சொல்லிடீங்க ,நானும் இனி சரண்டர் ..

    பதிலளிநீக்கு
  20. ரியாஸ் அஹமது சொன்னது…

    //இனிமே வீட்டுலே முறிக்கி கிட்டு திரியபிடாது ஐயாவே சொல்லிடீங்க ,நானும் இனி சரண்டர் ..//
    அது புத்திசாலித்தனம்!வாழ்க வளத்துடன்!
    நன்றி ரியாஸ்!

    பதிலளிநீக்கு
  21. வீட்டில் மனைவி (அவரவர் மனைவியின் பெயர்)///

    இருங்க உங்க வூட்டுக்கு ஒரு போன் போட்டுக் கேட்டுச் சொல்றேன். செம காமெடியா சிந்தித்திருக்கீங்க. எல்லா இடமுமே பெண்கள் மயமா, இனி நாம தான் பெண்ணாதிக்கம் என்று சொல்லி கொடி பிடிக்க வேண்டிய நிலமை வந்திடும் போல இருக்கே.

    பதிலளிநீக்கு
  22. நிரூபன் சொன்னது…

    வீட்டில் மனைவி (அவரவர் மனைவியின் பெயர்)///

    //இருங்க உங்க வூட்டுக்கு ஒரு போன் போட்டுக் கேட்டுச் சொல்றேன். செம காமெடியா சிந்தித்திருக்கீங்க. எல்லா இடமுமே பெண்கள் மயமா, இனி நாம தான் பெண்ணாதிக்கம் என்று சொல்லி கொடி பிடிக்க வேண்டிய நிலமை வந்திடும் போல இருக்கே.//

    ஃபோன் எண் வேண்டுமா? இருங்க வீட்டுல கேட்டுச் சொல்றேன்!
    நன்றி நிரூபன்!

    பதிலளிநீக்கு
  23. நல்ல அலசல்.ஆனால் ஒரு திருத்தம்.மதுரைப் பக்கமாயிருந்தால் நீங்கள் சொன்னது சரி.என்னைப் போல் சிதம்பரம் பக்கத்தை சேர்ந்தவராயிருந்தால்?

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா26 மே, 2011 அன்று 3:50 AM

    //பிறப்பிலிருந்து நமது கண்கள் ஒரே அளவில்தான் இருக்கின்றன//

    இதற்கே 1,76,000 கோடி தென்பட்டிருக்கிறது. இன்னும் பெரிய கண்ணாக இருந்தால் அண்டைநாட்டு கஜானாவுக்கும் ஆபத்துதான்!

    பதிலளிநீக்கு
  25. “இது ஆண்களின் ராஜ்ஜியம்”//
    நன்கு ஆட்சியும், ஆராய்ச்சியும் செய்து கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  26. வே.நடனசபாபதி கூறியது...

    //நல்ல அலசல்.ஆனால் ஒரு திருத்தம்.மதுரைப் பக்கமாயிருந்தால் நீங்கள் சொன்னது சரி.என்னைப் போல் சிதம்பரம் பக்கத்தை சேர்ந்தவராயிருந்தால்?//
    எந்தப் பக்கமானாலும்,அம்மாதான் ஆட்சி!
    நன்றி சபாபதி!

    பதிலளிநீக்கு
  27. ! சிவகுமார் ! கூறியது...

    //பிறப்பிலிருந்து நமது கண்கள் ஒரே அளவில்தான் இருக்கின்றன//

    // இதற்கே 1,76,000 கோடி தென்பட்டிருக்கிறது. இன்னும் பெரிய கண்ணாக இருந்தால் அண்டைநாட்டு கஜானாவுக்கும் ஆபத்துதான்!
    இது எனக்குத் தோணலையே!
    நன்றி சிவகுமார்!

    பதிலளிநீக்கு
  28. இராஜராஜேஸ்வரி கூறியது...

    “இது ஆண்களின் ராஜ்ஜியம்”//
    // நன்கு ஆட்சியும், ஆராய்ச்சியும் செய்து கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள்.//
    பெண் சக்தியின் பெருமை!
    நன்றி இராஜராஜேஸ்வரி!

    பதிலளிநீக்கு
  29. அந்த அரபிக் கடலோரம்
    ஒரு............
    யாரையும் காணலேயே

    மென்மையானவர்கள்
    மேன்மைதங்கியவர்களாக

    ஏதாவது தடையா

    பதிலளிநீக்கு
  30. வேல்முருகன் அருணாசலம் கூறியது...

    //அந்த அரபிக் கடலோரம்
    ஒரு............
    யாரையும் காணலேயே

    மென்மையானவர்கள்
    மேன்மைதங்கியவர்களாக

    ஏதாவது தடையா//

    அதானே!தெரிந்தால் சொல்லுங்கள்!
    நன்றி வேல்முருகன் அருணாசலம்!

    பதிலளிநீக்கு
  31. ரூம் போட்டு யோசிப்பீர்களோ ! வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  32. Vasu சொன்னது…

    // ரூம் போட்டு யோசிப்பீர்களோ ! //
    ஹி,ஹி,ஹி!
    நன்றி வாசு!

    பதிலளிநீக்கு
  33. அப்பாதுரை கூறியது...

    //அதானே?//
    உடன்பட்டே ஆக வேண்டும்!
    நன்றி அப்பாதுரை!

    பதிலளிநீக்கு