தொடரும் தோழர்கள்

வியாழன், மே 12, 2011

தேர்தல் முடிவுகள்-ஜெ என்ன ஆவார்?

இது ஒரு மாதத்துக்கு முன்பே எழுதிச் சேமித்து வைத்த பதிவு.

வெளியிடலாமா,வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் இன்றே கடைசி வாய்ப்பு என்பதால் வெளியிடுகிறேன்.

கணிப்புப் பலிக்கா விட்டால் கவலையில்லை-நான் ஒன்றும் பிரபல சோதிடன் இல்லை!

பலித்தால் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்,நானும் ஒரு சோதிடன் என்று!

இதோ கணிப்பு!

செல்வி ஜெயலலிதாவின் ஜாதகம்-
---------------------------------------------

லக்னம்-மிதுனம்.

நட்சத்திரம்-மகம்,3ஆம் பாதம்.

ராசி- சிம்மம்

2இல் சனி,3இல் சந்திரன்,செவ்வாய்,5இல் கேது,7இல் குரு,9இல் சூரியன்,புதன்,10இல் சுக்ரன்,11இல் ராகு.

நடப்பு ராகு தசை,சந்திர புக்தி-29-07-2011.

தசா நாதன் ராகு சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் நிற்கிறார்.

புக்தி நாதன் சந்திரன் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் நிற்கிறார்.

ராகு தசை 16-08-2012 இல் முடிந்து குரு தசை ஆரம்பமாகிறது.

குரு கேதுவின் மூல நட்சத்திர சாரம் பெற்றுள்ளார்.

கோசாரத்தில் சனி ராசிக்கு 2 இல்,--ஏழரை ஆண்டுச் சனியின் கடைசிப் பகுதியில் நிற்கிறார்.

குரு ராசிக்கு 8 இல் நிற்கிறார்.

தசா நாதன், கறுப்பு நிற ராகு ,உபஜய ஸ்தானத்தில், 10 இல் உச்சமடைந்த 5.12 அதிபதியான சுக்கிரனின் சாரத்தில் நிற்பது நன்மையே.லக்னாதிபதியான புதனுக்கும் ராகுவுக்கும் ஒத்துப் போகும்.


புக்திநாதன் சந்திரன் ,முயற்சி ஸ்தானமாகிய 3 இல் ,5இல் நின்ற கேதுவின் சாரம் பெற்றிருக்கிறார்.கேதுவுக்கு இடம் தந்த சுக்கிரன்,10 இல் உச்சம்.

தசா நாதன் ராகு,புக்திநாதன் சந்திரனையும்,தனக்கு இடம் தந்த செவ்வாயையும் பார்க்கிறார்.எனவே செவ்வாயின் முழுப் பலன்களையும் தானே எடுத்துக் கொண்டு ஜாதகிக்கு அளிப்பார்.

தசா நாதன் ராகுவையும்,புக்தி நாதன் சந்திரனையும் 7 இல் சொந்த வீட்டில் நின்ற
குரு பார்க்கிறார்.

தேர்தல் நடக்கும் நேரம் குரு கோசார ரீதியில் ராசிக்கு 8இல் இருப்பது நன்மையல்ல.பல தடங்கல்கள்,இடைஞ்சல்களுக்குக் காரணமாகும்.ஆனால்,வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதிக்கு முன்பே,
மே 8 ஆம் தேதி கோசாரத்தில் குரு மேஷத்துக்கு நகர்ந்து நன்மை தரும் இடத்துக்குப் போகிறார்.

முடிவுகள் அறிவிக்கும் தினத்தன்று கோசார நிலைமை----ராசி நாதன் சூரியன் ராசிக்கு 9 இல் உச்சம்;ராசிக்கு யோகன் செவ்வாய்,ராசிக்கு 9 ஆம் வீடாகிய சொந்த மேஷத்தில்,ராசிக்குத் தொழில் ஸ்தானாதிபதியான சுக்ரன்,ராசிக்கு 9 இல்,(தர்ம கர்மாதிபதி யோகம்),ராசிக்குத் தன லாபாதிபதியாகிய புதன்,ராசிக்கு 9 இல்,அனைத்துக்கும் மேலாக,ராசிக்குப் பஞ்சமன் குரு 9 இல்.;வேறென்ன வேண்டும்,வெற்றியை அளிக்க!

தேர்தல் தினத்தன்று குரு அனுகூலமாக இல்லை.எனவே ஆட்சி அமைப்பது நிச்சயம் என்றாலும்,கருப்பு ராகுவின் பலம் தேவைப் படும் என நினைக்கிறேன்.

அடுத்த தசாநாதனான குரு கேது சாரமே பெற்றிருப்பதால்.கேதுப் ப்ரீதி அவசியமாகிறது.

அவசியம் காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோயிலுக்குச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும்.

33 கருத்துகள்:

  1. தேர்தல் தினத்தன்று குரு அனுகூலமாக இல்லை.எனவே ஆட்சி அமைப்பது நிச்சயம் என்றாலும்,கருப்பு ராகுவின் பலம் தேவைப் படும் என நினைக்கிறேன்.//

    இதில் விஜகாந்தின் உதவி தேவைப்படும் என்பதைத் தானே நாசுக்காகச் சொல்லுகிறீர்கள்.
    யதார்த்தமும் இது தானே!
    ஹி...ஹி...

    பதிலளிநீக்கு
  2. இன்னும் ஒரு நாள் வெயிட் பண்ண வேண்டியிருக்கிறது.

    //அவசியம் காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோயிலுக்குச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும்.//

    இதை யாராச்சும் ஜெ இன் காதில் போட்டிடுங்க....

    பதிலளிநீக்கு
  3. //தேர்தல் நடக்கும் நேரம் குரு கோசார ரீதியில் ராசிக்கு 8இல் இருப்பது நன்மையல்ல.//

    மக்கள் நன்மையல்லாத நேரத்தில் வாக்களித்ததை, முடிவுகள் அறிவிக்கும் தினத்தன்று உள்ள கோசார நிலைமை எவ்வாறு மாற்றமுடியும் என்பதை தாயை செய்து விளக்கவும்.

    பதிலளிநீக்கு
  4. V.Nadanasabapathy கூறியது...

    //தேர்தல் நடக்கும் நேரம் குரு கோசார ரீதியில் ராசிக்கு 8இல் இருப்பது நன்மையல்ல.//

    //மக்கள் நன்மையல்லாத நேரத்தில் வாக்களித்ததை, முடிவுகள் அறிவிக்கும் தினத்தன்று உள்ள கோசார நிலைமை எவ்வாறு மாற்றமுடியும் என்பதை தாயை செய்து விளக்கவும்.//
    முக்கியமானது தசாபுக்தி; கோசாரம் என்பது கூடுதல் பலம்.ஜெக்குத் தசா புக்தி நல்லதே. தேர்தல் நேரத்தில் கோசாரம் சரியில்லாத மையால், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது சிரமமாகி விடும். அவ்வளவே!
    நன்றி சபாபதி!

    பதிலளிநீக்கு
  5. நிரூபன் கூறியது...

    இன்னும் ஒரு நாள் வெயிட் பண்ண வேண்டியிருக்கிறது.

    //அவசியம் காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோயிலுக்குச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும்.//

    // இதை யாராச்சும் ஜெ இன் காதில் போட்டிடுங்க....//
    அவங்களுக்கு இல்லாத சோதிடர்களா?

    பதிலளிநீக்கு
  6. நிரூபன் கூறியது...

    தேர்தல் தினத்தன்று குரு அனுகூலமாக இல்லை.எனவே ஆட்சி அமைப்பது நிச்சயம் என்றாலும்,கருப்பு ராகுவின் பலம் தேவைப் படும் என நினைக்கிறேன்.//

    //இதில் விஜகாந்தின் உதவி தேவைப்படும் என்பதைத் தானே நாசுக்காகச் சொல்லுகிறீர்கள்.
    யதார்த்தமும் இது தானே!
    ஹி...ஹி...//
    அதேதான்!
    நன்றி நிரூபன்!

    பதிலளிநீக்கு
  7. என்ன தல இப்படி இறங்கிட்டிங்க...
    இன்னும் ஒரு நாள் பொருத்துங்க..

    பதிலளிநீக்கு
  8. இவைகள் ஒன்றுமே என் தலைக்கு புரியவில்லை. யார் வந்தாலும் பழி வாங்குவது திருப்பி அடிப்பது போன்ற கீழ்மை குணங்கள் இல்லாமல் கொஞ்சமாவது நம் மக்களை பற்றி நினைக்கட்டும்.மின் தட்டுப்பாட்டை அகற்ற ஆவன செய்யட்டும்.

    பதிலளிநீக்கு
  9. அய்யாவும் அவரின் அருமை புதல்வியும் என்ன ஆவார்கள்???

    பதிலளிநீக்கு
  10. .எனவே ஆட்சி அமைப்பது நிச்சயம் //
    யதார்த்தமான ஜோதிடத்திற்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  11. நாளை எல்லாம் வெளுத்துரும் ஹே ஹே ஹே ஹே ஹே....

    பதிலளிநீக்கு
  12. ஐயய்யோ நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா தல...

    பதிலளிநீக்கு
  13. # கவிதை வீதி # செளந்தர் சொன்னது…

    // என்ன தல இப்படி இறங்கிட்டிங்க...
    இன்னும் ஒரு நாள் பொருத்துங்க..//
    நாளைக்கும் இது பற்றி ஒரு பற்றி ஒரு பதிவு இருக்கும்ல!

    பதிலளிநீக்கு
  14. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்!

    பதிலளிநீக்கு
  15. Rajeswari கூறியது...

    .எனவே ஆட்சி அமைப்பது நிச்சயம் //
    //யதார்த்தமான ஜோதிடத்திற்குப் பாராட்டுக்கள்.//
    நன்றி இராஜராஜேஸ்வரி!

    பதிலளிநீக்கு
  16. FOOD கூறியது...

    // என்ன நீங்களுமா?//
    எனக்குத் தெரிந்த ஜோதிடத்தை எப்போது பயன்படுத்துவது!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  17. tr manasey கூறியது...

    //ஐயய்யோ நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா தல...//
    ஹா ஹா ஹா!
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  18. tr manasey கூறியது...

    //நாளை எல்லாம் வெளுத்துரும் ஹே ஹே ஹே ஹே ஹே....//
    நாளை மற்றுமொருநாள்!

    பதிலளிநீக்கு
  19. என்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களில் சோதிடமும் ஒன்று.
    எனது நண்பர் ஒருவர் ஜெ தான் வெற்றிப் பெறுவார் என்று புத்தகம் போட்டுள்ளார்.

    அவரும் அரை மணி நேரம் என்ன என்னவோ சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் சொன்ன பல்வேறு தலைவர்களின் வெற்றி தோல்வி (அனைத்து செய்திகளும்)உண்மையானால் மட்டுமே எனது பதிவில் அவரைப் பற்றிக் குறிப்பிட உள்ளேன்.

    மற்றபடி, சோதிடம் என்பது பூவாத்தலையா மட்டுமே என்பதே எனது எண்ணம்.

    பதிலளிநீக்கு
  20. It would have been nice if the horoscope of Mr.Karunanithi, if available, had also been analyzed,and compared with that of Ms.Jayalalitha.for when there are two persons in the field, their relative strengths should be taken into account to arrive at some sort of conclusion. I do not know if my perception is right. In any case, if the lot of the people of Tamil Nadu improves , irrespective of who wins, it would be good. Vasudevan

    பதிலளிநீக்கு
  21. நல்ல அலசல்..கேப்டனையா கருப்பு ராகுன்னு சொல்றீங்க..அவரை நம்ப முடியாதே..

    பதிலளிநீக்கு
  22. ///பலித்தால் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்,நானும் ஒரு சோதிடன் என்று!///

    -------------கொழந்தே ......:)))))

    பதிலளிநீக்கு
  23. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //ஹா ஹா ஹா சி எம் ஆகிட்டார்//

    மக்கள் நிறைய எதிர்பார்க் கிறார்கள்.நிறைவேற்ற வேண்டும்!
    முன்பே வந்த பின்னூட்டங்களும், என் பதில்களும் நீக்கபாட்டு விட்டன,பிளாக்கர் பிரச்சினையில்!
    நன்றி சிபி!

    பதிலளிநீக்கு
  24. கக்கு - மாணிக்கம் கூறியது...

    ///பலித்தால் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்,நானும் ஒரு சோதிடன் என்று!///

    // -------------கொழந்தே ......:)))))//
    என்ன ஒரு தீர்க்க தரிசனம்,இல்லையா?!!
    நன்றி கக்கு!

    பதிலளிநீக்கு
  25. உங்கள் கணிப்பு பலித்ததில் சந்தோசம் ஐயா!

    பதிலளிநீக்கு
  26. வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //அம்மா சியம்.//
    நல்லது நடக்கட்டும்!
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  27. செங்கோவி கூறியது...

    //உங்கள் கணிப்பு பலித்ததில் சந்தோசம் ஐயா!//
    இந்த ஆட்சியில் நன்மைகள் நடந்தால் உண்மையான சந்தோசம்!
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  28. அமுதா கிருஷ்ணா கூறியது...

    //அய்யாவும் அவரின் அருமை புதல்வியும் என்ன ஆவார்கள்???//
    இன்றுதான் இந்தக் கமெண்ட் மாடரேஷனுக்காக மின்னஞ்சலில்
    வந்தது!காலம் பதில் சொல்லி விட்டது!
    நன்றி அமுதா கிருஷ்ணா!

    பதிலளிநீக்கு
  29. செங்கோவி கூறியது...

    //நல்ல அலசல்..கேப்டனையா கருப்பு ராகுன்னு சொல்றீங்க..அவரை நம்ப முடியாதே..//

    இன்றுதான் இந்தக் கமெண்ட் மாடரேஷனுக்காக மின்னஞ்சலில்
    வந்தது!காலம் பதில் சொல்லி விட்டது!
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு