காலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு வெகு நேரம் முன்பாகவே விமான நிலையம் சென்று தவிப்புடன் காத்திருந்தேன்.விமானம் தரையிறங்கிய அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில் வெளி வரும் மனிதர்களைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதோ,அவள் வந்துவிட்டாள்.அவள்தான். இடைப்பட்ட காலம் அவள் உடலைச் சிறிது சதைப் பிடிப்பாக்கியிருந்தது. அதனால் அவள் அழகு கூடியிருந்ததே தவிரக் குறையவில்லை. அவள் நடையில் நளினமும், கம்பீரமும் கலந்து இருந்தது.எவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு நளினம்,எவரையும் மரியாதையுடன் நோக்கவைக்கும் ஒரு கம்பீரம்.அவளும் என்னைப் பார்த்து விட்டாள்.அங்கிருந்தே என்னைப் பார்த்துக் கையசைத்தாள்.
”ஹாய்,கிருஷ்” என்றபடியே என்னை நெருங்கி என் கையைப் பிடித்தாள்.எனக்கு அவளது முதல் தொடுகை நினைவுக்கு வந்தது.”ஹலோ,மேரி” என்றபடியே அவள் கையில் இருந்த பெட்டியை வாங்கிக்கொண்டேன்.இருவரும் என் மகிழ்வுந்தை!(கார்) நோக்கி நடந்தோம்.
கார் புறப்பட்டதும் அவள் கேட்டாள்”இப்போது எங்கே போகிறோம்,கிருஷ்?”
“என் வீட்டுக்கு.ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருப்பதை விட அதிக வசதியை உனக்கு நான் செய்து தருகிறேன்”சிரித்துக் கொண்டே சொன்னேன்.
”உன் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் ஒரு இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை.”-மேரி
” யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை.வந்து பார்.”என் பதில்.காரில் சென்று கொண்டிருக்கும்போதே நான் கேட்டேன்”மேரி,மிஸ்டர்.மேரி என்ன செய்கிறார்?”
அவள் சிரித்தாள்”நான் இன்னும் மிஸ்தான்”
” ஏன் மேரி?”-அவள் பதிலளித்தாள்”சில கேள்விகளுக்குப் பதில் கிடையாது அன்பு நண்பரே.அது சரி, உங்கள் மறுபாதி என்ன செய்கிறார்?குழந்தைகள்?”
“பொறு,பொறு.வீட்டுக்குப் போனதும் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.”
வீட்டை அடையும் வரை என் குடும்பம் பற்றிய அவளது கேள்விகளுக்குப்பதில் சொல்லாமல் வேறு எதையோ பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினேன்.அவள் ஜெ.என்.யு.டில்லியில் பணி புரிவதையும் ஒரு கருத்தரங்குக்காக சென்னை வந்திருப்பதையும் அறிந்து கொண்டேன்.நான் வங்கிப்பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற்று தற்போது ஒரு”தொழில்துறை-வங்கிக்கடன்” ஆலோசகனாக இருப்பதையும் பற்றிக் கூறினேன்.
என் குடியிருப்பை அடைந்து வண்டியை நிறுத்திவிட்டு என் “ஃப்ளாட்”டை அடைந்து பூட்டிய கதவைத் திறக்க சாவியை எடுத்தபோது அவள் கேட்டாள்”என்ன, கிருஷ்,வீட்டில் யாரும் இல்லையா?”
உள்ளே நுழைந்துகொண்டே சொன்னேன்”இல்லை மேரி.இப்போது நான் மட்டும்தான்”
“அப்படியென்றால்–?”
” இல்லை,மேரி.நீ நினைப்பது போலில்லை.அவள் இப்போது இல்லை பத்தாண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டாள்.என் இரு பையன்களும் பிலானியில் படிக்கிறார்கள்.எனவே இப்போது நான் தனி.”
அவள் என் தோளில் கை வைத்து ஆறுதலாக அழுத்தினாள்,”வருந்துகிறேன், கிருஷ்.”
"விடு மேரி .எல்லாம் பழைய கதை.”
அவளை அவளுக்கென்று ஒதுக்கிய அறைக்கு அழைத்துச்சென்றேன்.”இது உன் அறை.எல்லா வசதிகளும் உள்ளது”.
“சரி கிருஷ்.நான் என்னைச் சிறிது புதிப்பித்துக் கொண்டு புறப்படுகிறேன்.”
” நான் உன்னை அங்கு கொண்டு சேர்க்கிறேன். நீ இங்கு இருக்கும் வரை நான்தான் உனக்கு வாகன ஓட்டுனர்.”
சிறிது நேரத்தில் அவள் புறப்பட்டாள். பல்கலைக்கழக வளாகத்தில் அவளை இறக்கி விட்டேன்.”கிருஷ்,மாலை சந்திப்போம்.நிறையப் பேசலாம் ”
வீட்டுக்குத் திரும்பினேன்.எந்த வேலையிலும் கவனம் செல்லவில்லை.மாலையின் வருகைக்காகக் காத்திருந்தேன்.
மாலை 6 மணி அளவில் மேரியிடமிருந்து ஃபோன் வந்தது.இன்னும் அரை மணி நேரத்தில் புறப்படப்போவதாகத் தெரிவித்தாள்.நான் அங்கு சென்று அவளைஅழைத்து வருவதாகக் கூறி விட்டுப் புறப்பட்டுச் சென்றேன்.அரங்கின் வாசலிலே மேரி நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி ஐந்தாறு பேர் நின்று அவளுடன் பேசிக் கொண்டிருந்தனர்.என்னைக் கண்டதும் மேரி அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.அவர்கள் மறுநாள் அவளது உரைக்காக ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினர்.நான் மேரியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.காஃபி அருந்தி விட்டுப் பல விஷயங்கள் பற்றிப்பேசிக் கொண்டிருந்தோம். இரவு உணவுக்காக வெளியே சென்றோம்.அவள் விருப்பப்படி சுவையான தென்னிந்திய உணவு கிடைக்கும் உணவகத்துக்குச் சென்றோம். மேரிக்கு அந்த உணவு மிகவும் பிடித்திருந்தது.
வீடு திரும்பிய பின் சிறிது நேரம் வரவேற்பறையில் சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.அவளிடம் நான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்கத் தயங்கிக் கொண்டே இருந்தேன்.திடீரென்று மேரி கூறினாள்”பால்கனியில் அமர்ந்து பேசுவோமே, கிருஷ்”
பால்கனிக்கு வந்தோம்.அவள் விருப்பப் படித் தரையில் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்துகொண்டோம். அவள் கண்கள் எங்கோ தொலைவானத்தில் லயித்திருந்தன . ”இப்படித்தான் நாங்கள் குடும்பமாக பால்கனியில் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம்.அது ஒரு காலம்,கிருஷ்”-அவள் சொன்னாள்
நான் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அவள் கடந்தகால நினைவுகளில் சஞ்சரிப்பதைப் புரிந்து கொண்டேன் . இதுதான் சரியான நேரம்;கேட்டு விடலாம்
“மேரி,உன்னிடம் ஒன்றுகேட்கவேண்டும். கேட்கலாமா?”
”உம்”எங்கோ லயித்தபடி மேரி.
“திடீரென்று என் தொடர்பை ஏன் துண்டித்தாய் மேரி.?”
அவள் நிகழ் காலத்துக்கு வந்தாள்.என்னையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்கள் சிறிது கலங்கியிருப்பது போல் தோன்றியது.பின் சொன்னாள்
”மன்னித்துவிடு,கிருஷ்.இதை நீ கேட்டு விடுவாயோ எனப் பயந்திருந்தேன்.கட்டாயம் கேட்க வேண்டுமே எனத் தவித்திருந்தேன். கேட்டால் எப்படிப் பதில் சொல்வது எனத் திகைத்திருந்தேன்.அந்த நேரத்தில், ஒரு அதீத சோகத்தில் ஆழ்ந்திருந்தபோது அதற்கு மாற்றாக எனக்கு ஒரு துணை தேவைப்பட்டிருக்கிறது-காற்றில் ஆடும் கொடிக்கு ஒரு கொம்பு தேவைப் படுவது போல்.உன்னிடம் நான் எதிர் பார்த்திருந்தது அதுவாகத்தான் இருக்க வேண்டும்.நமது நட்பு வேறு விதமாக இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்.அந்த நிலையில் உன் கடிதம் எனக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது.அது கோபமாக மாறி உன் தொடர்பைத் துண்டிக்கக் காரணமாகி விட்டது.காலம் செல்லச் செல்ல என் கோபம் அர்த்தமற்றது என்பதை உணர்ந்தேன்.நீ எப்போதுமே ஒரு மிக நல்ல நண்பனாகத்தான் இருந்திருக்கிறாய்.தவறு என்னுடையதுதான்.”
நான் அவளை இடை மறித்தேன்.”போதும் மேரி.நடந்ததைப் பற்றி இனிப் பேச வேண்டாம். இந்தக் கணம் நம் நட்பின் கணம்.அதற்காக வாழ்வோம்”
” நன்றி கிருஷ்.மனம் லேசாகி விட்டது.இந்தக் கணத்துக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.” பின் கேட்டாள் ”உன் மடியில் தலை வைத்துச் சிறிது நேரம் படுத்துக் கொள்ளட்டுமா,கிருஷ்?”.ஒரு குழந்தை போலக் கெஞ்சலாக அவ்ள் கேட்டது என்னை நெகிழ வைத்தது.
”செய் ,மேரி”
அவள் என் மடியில் தலை வைத்து உடலைக் குறுக்கிப் படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.ஒரு தாயின் மடியில் படுத்துறங்கும் குழந்தை போல உறங்கும் அவள் முகத்தையே கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.எந்த அளவுக்கு பாசம் வைத்திருந்தால் ஒரு பெண்ணால்,எத்தனைவயதானவளாக இருந்தாலும்,ஒரு ஆணின் மடியில் தலை வைத்துச் சலனமின்றி உறங்க முடியும்?இது நட்பின் மிக உன்னத நிலை.
அரை மணி நேரம் சென்று அவள் கண் விழித்தாள்.பரபரப்புடன் கேட்டாள்”நீண்ட நேரம் தூங்கி விட்டேனா?என்னை எழுப்பியிருக்கலாமே கிருஷ்?”
” எழுப்ப மனம் வரவில்லை மேரி”
“சரி,நான் என் அறைக்குப் போகிறேன்.நாளைய உரையை சிறிது மெருகேற்ற வேண்டும்.நீ போய் உறங்கு”மேரி தன் அறைக்குச் சென்றாள்.நானும் உறங்கச் சென்றேன்.
மறு நாள் காலையில் அவளை பல்கலைக் கழகத்தில் விட்டு வந்தேன்.மதியம் இரண்டு மணிக்கு,முன்பே பேசிவைத்தபடித் தயாராக இருந்த அவளது பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.காத்துக் கொண்டிருந்த மேரியை அழைத்துக் கொண்டு விமானநிலையம் சென்றேன்.அவள் உள்ளே செல்லும் முன் அவளிடம் சொன்னேன்”அடிக்கடி தொடர்பு கொள்,மேரி.நானும் உன்னிடம் தொலை பேசுகிறேன். ”
அவள் முகத்தில் சிறிது சோகம் தெரிந்தது.”கிருஷ், கடைசி நேரத்தில் சொல்லலாம் என்றுதான் இது வரை சொல்லவில்லை.அடுத்த வாரம் நான் அமெரிக்கா செல்கிறேன்.என் துறையில் பிரபலமான இரு பேராசிரியர்கள் ஒரு ஆராய்ச்சியில் அவர்களுடன் இணைந்து பணி புரிய என்னை அழைத்திருக்கின்றனர்.இது மிகப் பெரிய கவுரவம்.இதற்குத் தகுதி உள்ளவளாக நான் செயல்பட வேண்டும்.அங்கு சென்ற பின் என் முழுக் கவனமும் ஆராய்ச்சியில்தான் இருக்க வேண்டும்.உண்ணவும்,உறங்கவும் கூட மிகக் குறைந்த நேரமே எடுத்துக்கொள்ள வேண்டும்,அந்நிலையில் அடிக்கடி தொலை பேசுவதோ,மின்னஞ்சல் அனுப்புவதோ இயலாமல் போகும்.ஆனால் எப்போதும் என் நினைவில் நீ இருப்பாய்.என் வாழ்க்கையில் கடைசி வரை ஒரே நட்பு,உறவு எல்லாமே நீதான்,கிருஷ்”
நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.சமாளித்துக் கொண்டுசொன்னேன்”வாழ்த்துகள்,மேரி.நீ உன் பணியில் வெற்றி பெற்றுப் பேரும் புகழுடன் தாயகம் திரும்ப நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்.நாம் மீண்டும் சந்திக்கும் அந்த நன்னாளுக்காகக் காத்துக் கொண்டு இருப்பேன்.”
மேரி என்னை லேசாக அணைத்துப் பின் என் கையைக் குலுக்கி விட்டு உள்ளே சென்று மறைந்தாள்.
நான் கனத்த மனத்துடன் என் காரை நோக்கி நடந்தேன்.
காத்திருப்பேன் என் நண்பிக்காக;பிரார்த்துக் கொண்டிருப்பேன் அவள் நலனுக்காக!
(இது சாதாரண முடிவு.முடிவில் ஒரு ”ட்விஸ்ட்’ கொடுத்து அசாதாரணமாக்கினால்!
கிழே வருகிறது.பிடிக்காதவர்கள் மன்னியுங்கள்)
–x–x–x–x-x–x
இரண்டாவது முடிவு ஒன்று வைத்திருந்தேன்.
ஆனால் நண்பர்கள் பலரும் அது தேவையற்றது,கிறுக்குத்தனமானது,சினிமாத்தனமான ஒரு சோகம் என்றெல்லாம் சொல்லவே,அந்த முடிவை நீக்கிவிட்டேன்-எனக்கும் அது போன்றே தோன்றியதாலும்.
இதில் ஒரு சௌகரியம்--இந்தக்கதையை மீண்டும் தொடரும் ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது!
பார்க்கலாம்.
மேரி திரும்பி வரலாம்;ஒரு வேளை ராதாகிருஷ்ணன் அமெரிக்கா போய் அவளைச் சந்திக்கலாம்.
எப்படியும் அந்த நட்பு நிச்சயம் தொடரும்!
இரண்டு முடிவுகளுமே நன்றாக உள்ளன. ஆனால் இரண்டாவது முடிய சினிமா மாதிரி இருக்கிறது. என் ஓட்டு முதலாவதற்கே.
பதிலளிநீக்குகாத்திருப்பேன் என் நண்பிக்காக;பிரார்த்துக் கொண்டிருப்பேன் அவள் நலனுக்காக!
பதிலளிநீக்கு....very sweet! touching....
அப்பபடியே விட்டிருக்கலாமே ? கடைசியில் அந்த ட்விஸ்ட் ஏன் ? கிறுக்குத்தனமாக படுகிறது. சோகத்தில் சுகம் காண சொல்லிதறுக் சினிமா படங்கள் போல.
பதிலளிநீக்குபாலா கூறியது...
பதிலளிநீக்கு//இரண்டு முடிவுகளுமே நன்றாக உள்ளன. ஆனால் இரண்டாவது முடிய சினிமா மாதிரி இருக்கிறது. என் ஓட்டு முதலாவதற்கே.//
அதுவே என் முடிவும்.எனவேதான் சினிமாத்தனமான முடிவுக்காக முன்பே
மன்னிப்புக் கேட்டு விட்டேன்!
நன்றி பாலா!
Chitra கூறியது...
பதிலளிநீக்குகாத்திருப்பேன் என் நண்பிக்காக;பிரார்த்துக் கொண்டிருப்பேன் அவள் நலனுக்காக!
//....very sweet! touching....//
நன்றி சித்ரா!
கக்கு - மாணிக்கம் கூறியது...
பதிலளிநீக்கு//அப்பபடியே விட்டிருக்கலாமே ? கடைசியில் அந்த ட்விஸ்ட் ஏன் ? கிறுக்குத்தனமாக படுகிறது. சோகத்தில் சுகம் காண சொல்லிதறுக் சினிமா படங்கள் போல.//
i plead guilty for giving a cinematic end!but you are too harsh!
எனக்குப் பிடித்ததும் முதல் முடிவே!
நன்றி கக்கு!
இது சாதாரண முடிவு.//
பதிலளிநீக்குஅதுவே அருமையான முடிவு.
இராஜராஜேஸ்வரி சொன்னது…
பதிலளிநீக்குஇது சாதாரண முடிவு.//
//அதுவே அருமையான முடிவு.//
ஏற்றுக் கொள்கிறேன்!
நன்றி இராஜராஜேஸ்வரி!
நட்புக்கு எல்லையே இல்லை தல....
பதிலளிநீக்குஇந்த பதிவுக்கு என்னால லைக் போட முடியாது, மனசுக்கு கஷ்டமா இருக்கு தல....
பதிலளிநீக்குஆழமான அன்பு.நெகிழ்வான முடிவு !
பதிலளிநீக்குமுதல் முடிவே நல்லா இருக்கு! இரண்டாவது தேவையில்லை என்பதே எனது கருத்தும்.
பதிலளிநீக்குஅண்னே.. போஸ்ட் நீட்..
பதிலளிநீக்குட்விஸ்ட் சுமார்தான்
பதிலளிநீக்குMANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு// நட்புக்கு எல்லையே இல்லை தல....//
நல்ல நட்பு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயும் மலரும்!
நன்றி மனோ!
கருத்தே முக்கியம்.வாக்கு அல்ல!
பதிலளிநீக்குஹேமா கூறியது...
பதிலளிநீக்கு//ஆழமான அன்பு.நெகிழ்வான முடிவு !//
நன்றி ஹேமா!
வெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//முதல் முடிவே நல்லா இருக்கு! இரண்டாவது தேவையில்லை என்பதே எனது கருத்தும்.//
ஆம்,வெங்கட்,பலரது கருத்தும் அதுவே;அம்முடிவை நீகிவிடலாம் என நினைக்கிறேன்!
நன்றி!
FOOD கூறியது...
பதிலளிநீக்கு//இந்த பதிவை படித்து மனம் சோகத்தில் ஆழ்ந்தது. அதிலும் அந்த இரண்டாம் முடிவு-தீர்ப்பை மாத்தி சொல்லுங்க!//
இரண்டாம் முடிவை நீக்கி விட யோசிக்கிறேன்!
நன்றி சங்கரலிங்கம்!
சி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்கு//அண்னே.. போஸ்ட் நீட்..//
நன்றி சிபி!
சி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்கு//ட்விஸ்ட் சுமார்தான்//
நீக்கி விடலாம்!
//எந்த அளவுக்கு பாசம் வைத்திருந்தால் ஒரு பெண்ணால்,எத்தனைவயதானவளாக இருந்தாலும்,ஒரு ஆணின் மடியில் தலை வைத்துச் சலனமின்றி உறங்க முடியும்?இது நட்பின் மிக உன்னத நிலை.//
பதிலளிநீக்குமனதைத் தொட்ட வரிகள்.
முடிவுகள் பிரச்சனை இல்லை.. முதல முடிவே அருமை... தொடரட்டும்..
பதிலளிநீக்கு!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு//முதல முடிவே அருமை... //
பலரது எண்ணமும் அதுவே!
நன்றி கருன்!
முதல முடிவே அருமை... தொடரட்டும்..
பதிலளிநீக்குநண்பரே இந்த விட்ஜெட்டை தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்
திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!
முதலாவது சாதாரண முடிவல்ல..அழுத்தமான முடிவு.
பதிலளிநீக்குநட்போ , காதலோ , அருகிலிருந்தால்தான் நிறைவு என்பதேயில்லை..
பதிலளிநீக்குஒரு நாள் மன நிறைவோடு கிடைத்தாலும் ஆயுசுக்கும் மனதில் சுமந்தே வாழ முடியும்..
நல்ல முடிவே.. நிதர்சனமாகவும்..
காத்திருப்பதும் ஒரு வித சுகமான சுமைதான்..
மனம் லயித்தது இந்தக்கதையின் ஊடே நன்றி தல!
பதிலளிநீக்குசெங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு//முதலாவது சாதாரண முடிவல்ல..அழுத்தமான முடிவு.//
நன்றி செங்கோவி!
எண்ணங்கள் 13189034291840215795 கூறியது...
பதிலளிநீக்குநட்போ , காதலோ , அருகிலிருந்தால்தான் நிறைவு என்பதேயில்லை..
ஒரு நாள் மன நிறைவோடு கிடைத்தாலும் ஆயுசுக்கும் மனதில் சுமந்தே வாழ முடியும்..
நல்ல முடிவே.. நிதர்சனமாகவும்..
காத்திருப்பதும் ஒரு வித சுகமான சுமைதான்.
நன்றி சாந்தி!
விக்கி உலகம் கூறியது...
பதிலளிநீக்கு//மனம் லயித்தது இந்தக்கதையின் ஊடே நன்றி தல!//
நன்றி விக்கி!
இந்தியன் கூறியது...
பதிலளிநீக்கு// முதல முடிவே அருமை... தொடரட்டும்..
நண்பரே இந்த விட்ஜெட்டை தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்
திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!//
நன்றி இந்தியன்!
காவியம் படிப்பது போன்ற உணர்வினை, உங்களின் இப் பதிவு தந்திருக்கிறது, மொழி நடையும் வரணனைகளும் அருமை...
பதிலளிநீக்குஇறுதியில் தந்திருக்கும் ட்டுவிட்ஸ் உம் கலக்கல்.
காவியம் படிப்பது போன்ற உணர்வினை, உங்களின் இப் பதிவு தந்திருக்கிறது, மொழி நடையும் வரணனைகளும் அருமை...
பதிலளிநீக்குஇறுதியில் தந்திருக்கும் ட்டுவிட்ஸ் உம் கலக்கல்.ஆனால் அந்த டுவிட்ஸ் கதையின் போக்கினையும், நீங்கள் கூற வரும் கருத்தின் யதார்த்தத்தையும் மழுங்கடிக்கிறது.
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு//காவியம் படிப்பது போன்ற உணர்வினை, உங்களின் இப் பதிவு தந்திருக்கிறது, மொழி நடையும் வரணனைகளும் அருமை...
இறுதியில் தந்திருக்கும் ட்டுவிட்ஸ் உம் கலக்கல்.ஆனால் அந்த டுவிட்ஸ் கதையின் போக்கினையும், நீங்கள் கூற வரும் கருத்தின் யதார்த்தத்தையும் மழுங்கடிக்கிறது.//
அந்த முடிவைத்தான் நீக்கி விட்டேனே!
நன்றி நிரூபன்!