தொடரும் தோழர்கள்

வெள்ளி, மே 20, 2011

கோபம் கொல்லும்;கோபத்தைக் கொல்லுங்கள்!

பாரதி தன் புதிய ஆத்திசூடியில் சொல்கிறான்,"ரௌத்திரம் பழகு".

கோப்படுவது நல்லதா?இல்லையென்பது பதிலென்றால், பாரதி ஏன் அவ்வாறு சொன்னான்?

பழங்காலக் குரு குலங்களில் போதிக்கப்பட்ட பாடம"ஸத்யம் வத,க்ரோதம் மா குரு"என்பது.இதன் பொருள்"உண்மையே பேசு,கோபம் கொள்ளாதே".

அப்படியானால் கோபம் என்ற உணர்வே தேவையில்லையா?

கோபம் இரண்டு வகை.ஒன்று தேவையற்ற,பலனற்ற கோபம்.நமது சக்தியை வீணாக்கும்,மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கோபம்.

மற்றது நியாயமான கோபம்."சிறுமை கண்டு பொங்குவாய்" என்று பாரதி பாடினானே,அந்தக் கோபம்.

குழந்தையின் நலனுக்காகத் தாய் படும் கோபம்;

மாணவனின் உயர்வு கருதி ஆசிரியர் அடையும் கோபம்.

அலுவலகத்தின் வளர்ச்சிக்காக அதிகாரி கொள்ளும் கோபம்.

சமூக அவலங்களைக் கண்டு எழும் தார்மீகக் கோபம்.

ஆனால் ஆக்க பூர்வமாக இல்லாமல் அழிவு பூர்வமான கோபம் இருக்கிறதே,அது மற்றவர்களுக்கு மட்டுமன்றி,கோபப் படுபவருக்கும் தீமையே விளைவிக்கும்.

ஒரு அறிஞரிடம் அடிமை ஒருவன் இருந்தான்.ஒரு நாள் அவன் கை தவறிச் சூடான தேனீர் நிறைந்த கோப்பையை அறிஞரின் மீது போட்டு விட்டான்.பயந்து போன அடிமை நடுங்கிக் கொண்டே சொன்னான்,"சொர்க்கம் கோபத்தை அடக்குபவரகளுக்கு உரியது".

அறிஞர் சொன்னார்"நான் கோபமடையவில்லையே"

அடிமை மீண்டும் சொன்னான்"சொர்க்கம் தவறு செய்தாரை மன்னிப்பவர்க்கு உரியது."

அறிஞர் சொன்னார்"நான் உன்னை மன்னித்து விட்டேன்."

அடிமை தொடர்ந்தான்,"எல்லாவற்றுக்கும் மேலாக சொர்க்கம் இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்பவர்க்கு உரியது."

அறிஞர் சொன்னார்,"நான் உன்னை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கிறேன்."

இது நமக்கெல்லாம் பாடம்.

(சுவாமி பித்தானந்தாவின் வெளி வராத உரைகளிலிருந்து!)

42 கருத்துகள்:

  1. சமூக அவலங்களைக் கண்டு எழும் தார்மீகக் கோபம். //


    கண்டிப்பா..

    நான் என் பஸ் ல் இதுபற்றி எழுதிய வரிகள் ..

    -------------

    கோபப்படுங்கள்..:
    -------------------------------

    மனதை சாந்தமா வைத்திருக்க
    நாமொண்ணும்
    சப்பானில் பிறக்கவில்லை..

    இயல்பாய் இருந்திருக்கலாம்தான்
    இங்கிலாந்தில் பிறந்திருந்தால்..

    சிரித்துக்கொண்டே வாழப்பழக
    சிங்கப்பூர் சிட்டிசனா?..

    அடுத்தவர் கவலை நமக்கேனென எண்ண
    அமெரிக்காவில் அடுத்த தலைமுறையா?.

    சகித்துக்கொண்டே வாழ
    சீனாவும் இல்லையே...!!

    இன அழிப்பு , தடுக்க இயலாமை
    ஊழலாம் , ஊர்முழுக்க
    அராஜகமும் அடிமைத்தனமும்
    அலங்கோலமாய் அரசாட்சியில்
    கலாச்சாரமென்ற பேரிலே
    கற்பிங்கே பெண்ணுக்காம்..
    இல்லாத கடவுளுக்கே
    இருக்குதாம் சட்டதுணை..
    குழந்தைவதை,குமரிவதை
    குடிக்க மட்டும் குறைவேயில்லை.


    கோபப்படுங்கள் ..
    அமைதி தேடி ஆன்மீகத்தில்
    அலையவேண்டாம்..
    அடுத்தவருக்கு உதவ முடிந்த கோபமே
    அருமையான ஆன்மீகம் , அமைதியெல்லாம்.

    கோபப்படுங்கள்..
    நியாயமான கோபம்
    பாதுகாக்கும்,
    மாற்றம் கொண்டு வரும்,
    நல்லவை பேசும்,
    வழிநடத்தும்,
    விடை கிடைக்கும்,
    நல்ல ஆழுமை தரும்..

    கோபப்படுங்கள்..
    ஆனால் நேர்மையாக
    சுயநலமின்றி மட்டும்..:)

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் இந்த சமூகத்தின் மீது கோபம் தான்..

    பதிலளிநீக்கு
  3. @எண்ணங்கள்
    அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சாந்தி!
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  4. FOOD கூறியது...

    //முதல் வருகை பதிவு.//
    வருகைப் பதிவேட்டில் பதியப்பட்டு விட்டது!

    பதிலளிநீக்கு
  5. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    //நல்லதொரு பகிர்வு அன்பரே//
    மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. FOOD கூறியது...

    //இது நமக்கெல்லாம் பாடம்.//
    //நல்ல பாடம்தான்.//
    நன்றி சங்கரலிங்கம் சார்!

    பதிலளிநீக்கு
  7. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    // எனக்கும் இந்த சமூகத்தின் மீது கோபம் தான்..//
    அவசியமான கோபம்தானே!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா20 மே, 2011 அன்று 1:03 PM

    கோபம் நல்ல ஆயுதம்..சரியாக பயன்படுத்த தெரிய வேண்டும்...

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா20 மே, 2011 அன்று 1:05 PM

    கோபம் அருமையான ஆயுதம் பயன்படுத்த தெரிய வேண்டும்

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா20 மே, 2011 அன்று 1:05 PM

    அருமையான பகிர்வு அய்யா

    பதிலளிநீக்கு
  11. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //கோபம் நல்ல ஆயுதம்..சரியாக பயன்படுத்த தெரிய வேண்டும்...//
    எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்குதான் பயன் படுத்த வேண்டும்!

    பதிலளிநீக்கு
  12. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    // கோபம் அருமையான ஆயுதம் பயன்படுத்த தெரிய வேண்டும்//
    உன்மை!அந்த ஆயுதம் நம்மையே காயப் படுத்தாமல் பயன்படுத்தெரிய வேண்டும்!

    பதிலளிநீக்கு
  13. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //அருமையான பகிர்வு அய்யா//
    நன்றி சதீஷ்!

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா20 மே, 2011 அன்று 1:43 PM

    நல்ல ஒரு பதிவு ஐயா...

    பதிலளிநீக்கு
  15. கோபம் ஒரு நல்ல குணம்- என்பார் ஜெயகாந்தன். அவ்வப்போது நீங்கள் உங்கள் பதிவுகளில் சொல்லும் குட்டிக்கதைகள் நன்றாயிருக்கின்றன.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  16. கந்தசாமி. சொன்னது…

    //நல்ல ஒரு பதிவு ஐயா...//
    நன்றி கந்தசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  17. Amudhavan கூறியது...

    //கோபம் ஒரு நல்ல குணம்- என்பார் ஜெயகாந்தன். அவ்வப்போது நீங்கள் உங்கள் பதிவுகளில் சொல்லும் குட்டிக்கதைகள் நன்றாயிருக்கின்றன. பாராட்டுக்கள்.//
    நன்றி அமுதவன்

    பதிலளிநீக்கு
  18. கோபத்தை பற்றிய பதிவு அருமை. இனி நாங்களும் நியாயம் நடக்க கோபப்படுவோம்.

    பதிலளிநீக்கு
  19. அருமையான பகிர்வுங்க....Good message. நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வே.நடனசபாபதி கூறியது...

    // கோபத்தை பற்றிய பதிவு அருமை. இனி நாங்களும் நியாயம் நடக்க கோபப்படுவோம்.//
    பட வேண்டும்!
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  21. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    // பயனுள்ள , தேவையான பதிவு..//
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  22. Chitra கூறியது...

    //அருமையான பகிர்வுங்க....Good message. நன்றி.//
    நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  23. தேவைப்படும் இடத்தில் நிச்சயம் கோபம் தேவை !

    பதிலளிநீக்கு
  24. அடிக்கடி கோபப்பட்டால், நம் கோபத்திற்கே மரியாதை இருக்காது..உடம்புக்கும் நல்லதல்ல..நல்ல பதிவு ஐயா.

    பதிலளிநீக்கு
  25. நல்லது நடக்குமெனில் கோபமும் நல்லதே… பித்தானந்தாவின் தத்துவங்கள் தொடரட்டும். நல்ல பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. ஹேமா சொன்னது…

    //தேவைப்படும் இடத்தில் நிச்சயம் கோபம் தேவை !//
    உண்மை!
    நன்றி ஹேமா!

    பதிலளிநீக்கு
  27. செங்கோவி கூறியது...

    //அடிக்கடி கோபப்பட்டால், நம் கோபத்திற்கே மரியாதை இருக்காது..உடம்புக்கும் நல்லதல்ல..//
    ஆம்!
    நல்ல பதிவு ஐயா.//
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  28. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //நல்லது நடக்குமெனில் கோபமும் நல்லதே… பித்தானந்தாவின் தத்துவங்கள் தொடரட்டும்.//
    தொடரலாம்!
    //நல்ல பகிர்வுக்கு நன்றி.//
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  29. 40 வயசு வரைக்கும் தான் கோவமெல்லாம் பட முடியும். அதுக்கப்றம் bp .. அது இதுன்னு ஏதாவது start ஆய்டும்... அது வரைக்கும் கோவப் பட்டுக்கலாம்-னு நான் decide பண்ணிருக்கேன்... அந்த decision அ கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு படிச்சு பாத்தா--- ரொம்பவே அருமையான பதிவு தான் இது!
    உங்க blog உம் ரொம்ப நல்லா இருக்கு!

    பதிலளிநீக்கு
  30. பிரமாதம், பிரமாதம்.
    சமீபத்தில் அவசர சென்னைப் பயணம் வந்தேன். சுவாமி பித்தானந்தாவின் தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்க மறந்து போனதில் வருத்தம். அடுத்த விசிட்டில் அவசியம் சந்திக்க ஆசைப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  31. Matangi Mawley சொன்னது…

    //40 வயசு வரைக்கும் தான் கோவமெல்லாம் பட முடியும். அதுக்கப்றம் bp .. அது இதுன்னு ஏதாவது start ஆய்டும்... அது வரைக்கும் கோவப் பட்டுக்கலாம்-னு நான் decide பண்ணிருக்கேன்... அந்த decision அ கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு படிச்சு பாத்தா--- ரொம்பவே அருமையான பதிவு தான் இது!//
    உங்கள் முடிவு சரியே!ஆனால் வயதாகும்போதுதான் கோபமும் அதிகமாக வருகிறது.தேவையற்ற கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது அவசியமே!
    // உங்க blog உம் ரொம்ப நல்லா இருக்கு!//
    நன்றி Matangi Mawley!

    பதிலளிநீக்கு
  32. அப்பாதுரை கூறியது...

    // பிரமாதம், பிரமாதம்.
    சமீபத்தில் அவசர சென்னைப் பயணம் வந்தேன். சுவாமி பித்தானந்தாவின் தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்க மறந்து போனதில் வருத்தம். அடுத்த விசிட்டில் அவசியம் சந்திக்க ஆசைப்படுகிறேன்.//
    ஆகா,உங்களைச் சந்திக்கும் ஒரு நல்ல வாய்ப்புக் கை நழுவி விட்டதே!வருத்தமே!
    அடுத்த முறை கட்டாயம் தொடர்பு கொள்ளுங்கள்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  33. நியாயமான விசயத்திற்குக் கோவம் வரவில்லை என்றாலும்
    தப்புத்தான்.பாரதி கொவப்பட்டார் அநீதியைக்கண்டு இன்று
    அவர் பாட்டுத்தான் பாரதத்தையே ஆளுகின்றதே!...சமீபத்தில்
    ஒரு தகவல் கேட்டேன் பாட்டுக்கள் பாரதிக்கு முன் பாரதிக்குப்
    பின் என்று வகுக்கப்படுவதாக.(சுகி சிவம் ஐயா பேச்சில்)அத்துடன்
    நியாயமே அற்ற விசயத்திற்க்காகக் கோவப்படுபவர்களின் நிலை
    என்ன என்பதைத்தான் இன்றும் காண்கிறோமே.தங்கள் தகவல்
    "இன்றைய காலத்திற்கு ஏற்றதகவல்".பகிர்வுக்கு நன்றி ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. நல்ல பகிர்வு அய்யா...நன்றி...

    பதிலளிநீக்கு
  35. "கோபத்தில் அமைதி காப்பவரே உங்களில் மிகச் சிறந்த வீரன்"

    பதிலளிநீக்கு
  36. நியாயமான கோபம், நியாயமற்ற கோபம் என இருவகைகளில் கோபத்தின் இயல்புகளைத் முன்னிறுத்தி, வாழ்வில் எவ்வாறு கோபத்தை அடக்க வேண்டும் என்பதைத் தத்துவமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  37. @அம்பாளடியாள்
    தாமத்திற்கு மன்னிக்கவும்!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  38. சிராஜ் கூறியது...

    // நல்ல பகிர்வு அய்யா...நன்றி.//

    தாமதத்துக்கு மன்னிக்கவும்.
    நன்றி சிராஜ்!

    பதிலளிநீக்கு
  39. சிராஜ் கூறியது...

    // "கோபத்தில் அமைதி காப்பவரே உங்களில் மிகச் சிறந்த வீரன்"//
    அருமையான மேற்கோள்!

    பதிலளிநீக்கு
  40. நிரூபன் கூறியது...

    // நியாயமான கோபம், நியாயமற்ற கோபம் என இருவகைகளில் கோபத்தின் இயல்புகளைத் முன்னிறுத்தி, வாழ்வில் எவ்வாறு கோபத்தை அடக்க வேண்டும் என்பதைத் தத்துவமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//
    நன்றி நிரூபன்!தாமதத்துக்கு மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு