தொடரும் தோழர்கள்
ஞாயிறு, ஜனவரி 25, 2015
ஹாலிடே ஜாலிடே!
ஜப்பானியர் ஒருவர் சென்னைக்கு வந்தார்.
விமான நிலையத்தில் டாக்ஸியில் ஏறி அடையாறு போகச் சொன்னார்.
டாக்ஸி புறப்பட்டு வேகமாகச் செல்லத் துவங்கியது.
அப்போது டாக்ஸியை முந்திக்கொண்டு ஒரு மோட்டார்சைக்கிள் வேகமாகச் சென்றது
அதைப் பார்த்த ஜப்பானியருக்கு ஒரே ஆனந்தம்,”அது சுஸூகி மோட்டார்சைக்கிள்.எங்கள் நாட்டுத் தயாரிப்பு;எவ்வளவு வேகம் பாருங்கள்”என்று சத்தமாகச் சொன்னார்.
டாக்ஸி ஓட்டுநருக்குக் கடுப்பு.
அடையாறை அடைந்தனர்.
மீட்டர் ரூ.500 ஐக்காட்டியது.
ஜப்பானியர் :‘என்ன இவ்வளவா” என்றார்
ஓட்டுநர் சொன்னார்”உங்கள் நாட்டுத் தயாரிப்பான மோட்டார்சைக்கிள் மிக வேகமாகப் போகிறதென்று பெருமைப்பட்டீர்களே.எங்கள் நாட்டுத் தயாரிப்பான் இந்த மீட்டரின் வேகத்தைப் பார்த்தீர்களா?’ ”
:) :) :) :) :) :) :) :)
சனி, ஜனவரி 24, 2015
சனிக்கிழமை இரவுக் காய்ச்சல்!
சனிக்கிழமை என்பது வாரநாட்களில்
வெள்ளிக்கிழமைக்குப் பின்னும் ,ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னும் வரும் தினம்!
நறநற எனப் பல்லைக் கடிக்கும் சப்தம்
கேட்கிறதே!
அய்யன்மீர்!இது நான் சொல்வதல்ல.
விக்கிபீடியாவில் சனிக்கிழமை பற்றிய
தகவலின் ஆரம்பம் இது!
வெள்ளி, ஜனவரி 23, 2015
தொட்டால் தொடரும்
பதிவர் நண்பர் கேபிள் சங்கரின் “தொட்டால் தொடரும்”இமாலய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
வெற்றியைத் தொட்டால் தொடரும் மேலும் வெற்றிகள்.
பின் வரும் கவுஜக்கும் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’
ஆனால் ’ஸ்பை’யின் குறும்படத்துக்குத் தொடர்பிருக்கலாம்!
வெற்றியைத் தொட்டால் தொடரும் மேலும் வெற்றிகள்.
பின் வரும் கவுஜக்கும் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’
ஆனால் ’ஸ்பை’யின் குறும்படத்துக்குத் தொடர்பிருக்கலாம்!
புதன், ஜனவரி 21, 2015
திருமண வரவேற்பும்,விருந்துச் சாப்பாடும்(நிறைவுப்பகுதி)
வீட்டை விட்டுக் கிளம்பும் முன்பே தன்
தோற்றத்தைக் கொஞ்சம் மேம்படுத்திக் கொண்டி
ருந்தான்.
நல்ல காற்சட்டை,சட்டை அணிந்து மசூதி
பக்கத்துக் கடையில் வாங்கிய ஃபிர்தூஸ் வாசனைத் திரவியத்தைக் கொஞ்சம் தடவிக்
கொண்டிருந்தான்.
இப்போது மணமணக்க மண்டப வாசலில்
நின்றான்.
செவ்வாய், ஜனவரி 20, 2015
திருமண வரவேற்பும்,விருந்துச் சாப்பாடும்!
ராமனாதன் சாப்பாட்டுப் பிரியன்.
ரசித்துச் சாப்பிடுபவன்.
அதுவும் கல்யாணச் சாப்பாடு ,முக்கியமாக வரவேற்பில்
பரிமாறப்படும் உணவு—பன்னீர் பட்டர் மசாலா,சப்பாத்தி,.ஊத்தப்பம்,சட்னி,பிஸிபேளாபாத்,உருளைக்
கறி, பப்படம் வெஜ்.பிரியாணி,வெங்காயப் பச்சடி,காலிப்பூ பக்கோடா,பால் பாயசம், சேனை வறுவல், வெறும்
சாதம்,ரசம்,பகாளாபாத்,வத்தக் குழம்பு,மோர்மிளகாய்,ஐஸ்கிரீம் .குலாப்ஜாமுன்/ கேரட் அல்வா
என்ற அந்த ஒரு கலவை அவனுக்கு மிக மிக பிடிக்கும்,ஆனால் ஒரு நிபந்தனை,எல்லாம் சுவை சரியாக
இருக்க வேண்டும்!
என்னவோ தெரியவில்லை .சென்ற ஆண்டு முழுவதும்
ஒரு திருமண அழைப்பிதழ் கூட அவனுக்கு வரவில்லை.உறவினர்கள்.நண்பர்கள் யாருக்கும் அவனுக்குத்
தெரிந்து திருமணம் நடை பெறவில்லை.அதனால்,திருமணமாகாத நண்பர்களின் பெற்றோரை விட அதிகம்
கவலைப்பட்டவன் ராமனாதன்தான்!இந்தத் தையிலாவது ஏதாவது அழைப்பு வரும் என எண்ணினான்,ஆனால்
இன்று வரை நடக்கவில்லை.அவனது நீண்டகால ஏக்கம் அதிகமானது. ஒரு கல்யாணமாவது நடந்தால் போய்
ஒரு பிடி பிடிக்கலாம் என ஆசைப் பட்டான்.
ஒருநாள்மாலை.வெளியில் சென்று வீடு திரும்பும்போது
வழியில் இருக்கும் திருமண மண்டப வாசலில் இருவர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அவர்கள்
அணிந்திருந்த சீருடையிலிருந்து அவர்கள் திருமணஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் என
தெரிந்தது.
அவர்களிடம் விசாரித்தான்”யார் சமையல்?”
“நளபாகம் நடேசன்தான்”
அந்தப்பெயரைக் கேட்டதும் அவன் நாக்கில் நீர்
ஊற ஆரம்பித்து விட்டது.நளபாகம் நடேசன் சமையல் மிகப் பிரசித்தம்.அதன் சுவையில் மயங்கியவர்
பலர்.ராமனாதன் அவர் பற்றி வெகுவாகக் கேள்விப் பட்டிருந்தாலும்,அவர் சமையல் சாப்பிடும்
வாய்ப்புக் கிட்டியதில்லை.
எப்படியாவது இன்று இந்த இடத்தில் சாப்பிட்டால்………
ஆசை,ஆசை,ஆசை……
ஒரு முடிவுக்கு வந்தான்,
வீடு திரும்பும் வழியில் இருந்த கடையில்
பரிசுப் பொருளை சுற்றிக்கட்டும் வண்ணக் காகிதம் வாங்கினான்.
வீடு திரும்பினான்.
பரணில் கிடந்த ஒரு காலி அட்டைப் பெட்டியை
எடுத்தான்,
அதன் உள்ளே செய்திதாளைக் கசக்கி நிறைத்தான்.
வண்ணத்தாளால் சுற்றி ஒட்டினான்
மேலே ஒரு வெள்ளைத்தாளில் ”வாழ்த்துக்களுடன்-ராமனாதன்”(சொந்தப்
பெயரை எழுதினால் என்ன நடந்து விடப்போகிறது) என்று எழுதி ஒட்டினான்.
எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
மண்டபத்தை அடைந்தான்
(நாளை சந்திப்போம்!)
திங்கள், ஜனவரி 19, 2015
மாதொருபாகன்
கிளம்பிய புழுதி அடங்கவில்லை!
அவ்வளவு எளிதில் அடங்கி விடுமா என்ன?
அனைவர் கண்களையும் மறைக்கும் புழுதி.
திங்கள், ஜனவரி 12, 2015
கற்பழித்துக் கொலை செய்தவன்!
”என்ன.கிஷோர்?என்ன ஒரே பரபரப்பாக இருக்கிறது?”
கிளையின் கடைநிலை ஊழியரைக் கேட்டேன்.
“சார்.ஒரு பெண்ணை வயக்காட்டில கற்பழிச்சுக்
கொன்னிருக்கான் ஒருத்தன்.அவனைகண்டு பிடிச்சுக் கைது பண்ணீட்டாங்க!அதுதான் ஊரெல்லாம் பரபரப்பு.”
’அப்படியா ?
”சரி வேலையை ஆரம்பிக்கலாம்.நீபோய்
நான் நேற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கடன் ஆவணங்களையும்,புத்தகத்தையும்
கொண்டு வா.ஆய்வைத் தொடங்கலாம்”
ஆண்டு 1992.
இடம் ஹரியானா மாநிலத்தில் சாயின்ஸா என்ற
கிராமம்.
எங்கள் வங்கிக் கிளை ஆய்வுக்காகச் சென்றிருந்தேன்.
ஃபரிதாபாத்தில் என் அலுவலகம்.அதன் கீழ்
வரும் கிராமங்களில் இருந்த கிளைகளை ஆய்வு செய்வது என் பணி.
எனக்கான அட்டவணை தில்லி அலுவலகத்திலிருந்து
வரும்.
அதன் படி நான் ஆய்வு நடத்த வேண்டும்.உதவிக்கு ஒரு அதிகாரியும். வருவார்.
தினம் காலை ஃபரிதாபாத்திலிருந்து புறப்பட்டு,
கிளை இருக்கும் ஊருக்கு பஸ்ஸில் சென்று தினமும் வேலை முடிந்த பின் ஃபரிதாபாத்
திரும்பி வரவேண்டும்..
மிகவும் சோர்வு தரும் பணிதான்;அதுவும்
குளிர் நாட்களில்,....?!
அதைப்பற்றி எல்லாம் இன்னொரு பதிவில்
பார்க்கலாம்.
இப்போது சொல்லத் தொடங்கிய செய்திக்கு வரலாம்.
நான் பணியில் ஈடுபட்டிருந்த நேரம்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்.
வெளியில் டமாரச் சப்தம்,மக்களின்
பேச்சுக் குரல் எல்லாம் கேட்டது.
கிஷோர் வந்து எல்லாரையும் வெளியே வந்து
பார்க்கச் சொன்னார்,
ஒரு திறந்த ஜீப்பில்.அந்தக்
குற்றவாளியை விலங்குடன் நிறுத்தி உடல் முழுதும் கரும் புள்ளிகள் குத்தி,அவன் கழுத்தில்
”நானொரு கொலைகாரன்;கற்பழிப்பவன்” என்றெழுதிய அட்டையை மாட்டிக் காவல் துறையினர் ஊர்வலமாக
அழைத்துச் சென்றனர்.
இது போன்ற ஒரு நிகழ்வை நீங்கள் அது
போன்ற இடங்களில்தான் பார்க்க முடியும்.
அதைப் பார்த்த பின் என் மனத்தில் எழுந்த
கேள்வி”அவன் குற்றம் சாட்டப்பட்டவன்தான்; இன்னும் வழக்கு நடந்து குற்றவாளி என
நிரூபிக்கப்படாதவன்.அந்நிலையில் காவல் துறையின் செயல் சரியா.?
வழக்கு நடக்கும்போது
அவன் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் இந்நிகழ்வை எந்த விதத்திலாவது அவனுக்குச்
சாதகாமாக்க முடியுமா?’
விடை தெரியவில்லை.
ஒன்று நிச்சயம்
அவர்கள்(காவல்) செயல் இதயத்தால்
தீர்மானிக்கப்பட்டது;தலையால் அல்ல!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)