தொடரும் தோழர்கள்

புதன், டிசம்பர் 30, 2015

உணவும் உணவு சார்ந்த இடமும்- அடையாரில் ஒரு புதிய விலாசம்!



வாடா!ஓட்டலுக்குப் போய் டிஃபன் சாப்பிட்டு விட்டு வரலாம்

போடா! திரும்பத் திரும்ப அதே மூன்று,நான்கு ஓட்டல்-வசந்த பவன், ஸ்ரீபவன் ,தம்மாத் தூண்டு லக்ஷ்மிசாகர், சங்கீதா;இதை விட்டா டிஃபன் சாப்பிட ,ஏன் சாப்பாட்டுக்குக் கூட நல்ல ஓட்டல் இருக்கா இந்த அடையாரில்!

மாறி விட்டது இந்நிலை.

இன்று முதல் சுவையான  சைவ உணவுக்கு ஒரு புதிய விலாசம் கிடைத்து விட்டது 

ஆம் விலாசம்

கிருஷ்ண விலாசம்!



இன்று கோலாகல ஆரம்பம்

ஆனால் ஏற்கனவே நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில்  ஒரு கிளை இயங்கிக் கொண்டிருக்கிறது

உங்களில் பலர் அங்கு சாப்பிட்டிருக்கக் கூடும்;

எனவே சுவை பற்றி நான் சொல்வது தேவையில்லை என எண்ணுகிறேன்.

விலை சிறிது அதிகம்தான்.






அவர்களின் பிரபல சிந்தாமணி ரவா இட்லி ரூ.    75
                                மசாலா தோசை                155
                                ஃபில்டர் காஃபி                 75
வரிகள் தனி!

அடையார் கிளையின் பொறுப்பாளராக இருக்கும் திலிப்பைச் சந்தித்துப் பேசினேன்.

அடிக்கடி வாருங்கள் என்றார்.

சரிதான்!

இந்த ஓய்வூதியக்கரனுக்கு கட்டுப்படியாகுமா?

பாக்கெட் மட்டுமல்ல,வயிறும்தான்!

டிஸ்கி:நான் மாலை 5 மணிக்குப் போனேன்;மாலை உணவு எதுவும் இல்லை. காலை,மதிய உணவுகள் ஓடியதாகவும்,இனி 6.30க்கு மேல் இரவு உணவு என்றும் சொன்னார்!   அப்படியானால் படங்கள்?....   நான் சாப்பிட நினைத்தவை!அவர்கள் இணையயப் பக்கத்திலிருந்து! 

ஒட்டலை அடுத்து தெரு,அதை அடுத்து புஹாரிஸ்!

உணவு சமத்துவம்!


கண்டிப்பாக இது ஒரு விளம்பரம் அல்ல!இன்றைக்கு ஏதாவது எழுத வேண்டுமே!



11 கருத்துகள்:

  1. நுங்கம்பாக்கம் கிளையில் இதுவரை சாப்பிட்டதில்லை.. நேரம் கிடைத்தால் அடையாறு வரலாம்...

    பதிலளிநீக்கு
  2. கட்டுப்படியாகுமா? காசு ஜாஸ்தி மாதிரித் தெரிகிறது.. கொண்டை இருப்பவர்கள் முடிந்துகொள்ளட்டும்.

    பதிலளிநீக்கு
  3. கண்டிப்பாக இது ஒரு விளம்பரம் அல்ல!
    ஹாஹாஹா விபரமாக தப்பிச்சிட்டீங்க ஐயா

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    உணவுக்கடைக்கு நல்ல விளம்பரம்.த.ம4
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. அடுத்த தடவை சாப்பிடப்போனால் இந்த மாதிரி உங்கள் கடைக்கு இலவச விளம்பரம் செய்தேன் என சொல்லி டிஸ்கவுண்ட் கேளுங்க ஐயா1 நான் எங்க ஹோட்டல் குறித்து இலவசமாய் விளம்பர செய்வோருக்கு இன்னார் சொல்லி வந்தோம் என சொன்னால் சொன்னவருக்கு அவர்களின் அடுத்த ஆர்டருக்கு ஐந்து வீதம் டிஸ்கவுண்ட் செய்வேன். வெப்சைட்களை விட வாய்வார்த்தை மூலம் வரும் விளம்பரங்களுக்கு பலனும் ஜாஸ்தி.

    இந்தப்பதிவை படித்து வந்தோம் என அங்கே செல்பவர்கள் ஓரிருவராவது சொல்ல வேண்டும் என்பது முக்கியம்.ஹாஹா!

    பதிலளிநீக்கு
  6. பார்த்தோன் சார்! ஆனால் விலை கொஞ்சம் எட்ட நிற்க வைத்துவிட்டது, உங்க பர்சுக்கு ஏத்தது இல்லைனு...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. 2016 இனிதாக மலர்க!
    (வேதாவின் வலை)

    பதிலளிநீக்கு
  8. இனிய ஆங்கிலப் புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. மசாலா தோசை 175 ஆ? ஃபில்டர் காபி 75 ரூபாயா? ஐயோ!

    எங்கள் ஏரியாவில் 'ஜூனியர் குப்பண்ணா' என்று ஒரு புதிய ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் சைவம் + அசைவம்!

    பதிலளிநீக்கு

  10. அடையாறில் சிற்றுண்டியும், உணவும் சாப்பிட புதிய விலாசத்தை தந்துள்ளீர்கள். அதற்கு நன்றி! விலைப்பட்டியலைப் பார்க்கும்போது நமது நாடு பணக்கார நாடுகளின் வரிசையில் உள்ளது போல் தெரிகிறது!

    நீங்கள் கூறியது போல் நம்மைப் போன்ற ஓய்வூதியக்காரர்களுக்கு கட்டுப்படியாகாதுதான். மாத சம்பளம் வாங்குவோரும் நாள் தோறும் அங்கு சென்று உணவருந்த இயலாது.

    பதிலளிநீக்கு