தொடரும் தோழர்கள்

செவ்வாய், டிசம்பர் 22, 2015

சீசன் நகைச்சுவை

இது சங்கீத சீசன்

எனவே இந்த சீசனுக்காக இவை....
.............



சபா உறுப்பினர்-:என்ன செயலாளர் சார்! வித்துவானுக்கு இரவு உணவுக்கு என்ன வேணுமாம்?
செயலாளர்: பழம், பால் போதுமாம்!
உறுப்பினர்:  எதுக்கு பழம் பால்?நல்ல புதுப் பாலாவே குடுத்துடலாமே!
!!!!!!!!!!!!
................... 


மாமி-1 :   மாமி!நேத்து என்னால வர முடியலே! நன்னாருந்ததா?

மாமி-2:திவ்யமா இருந்தது.அந்த அசோகா ஹல்வாவும், வாழைப்பூ வடையும் பிரமாதம்!
  மாமி-1:மாமி.நான் காண்டீனைப் பத்திக் கேக்கலே;கச்சேரி பத்திக்கேட்டே.ன்!

...............

நேத்து அந்தச் சகோதரர்கள் கச்சேரி கேட்டீங்களா?

உம்.ஒருத்தர் குரல் கம்மலா இருக்கு.

அதனாலதான் நாலு பேர் காதுல போட்டுக்கறாங்க!

(அரியக்குடி சொன்னதாக நினைவு)

----------
மூன்று ஆண்டுகளாக் கச்சேரிக்குப் போக முடியவில்லை

எவ்வளவு பெரிய இழப்பு.
ஈடு செய்ய முடியாத இழப்பு
மறக்கமுடியாத சில
.........
........
........

ரவா பொங்கல்,அவியல்

ஆப்பம்,காலிஃப்ளவர் குருமா

எலுமிச்சை சேவை சட்னி

டையமண்ட் மசாலா கார தோசை

டபுள் டெக்கர் தோசை

வெஜ்.வெண்பொங்கல் பாசுமதி

ஆந்திரப் பெசரட்டு,அல்லம் பச்சடி
!!!!!!!!!


 



19 கருத்துகள்:

  1. ஸூப்பர் கச்சேரி ஐயா ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  2. செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் என்று சும்மாவா சொன்னார்கள்? ஜோக்ஸ் சூப்பர்!

    பதிலளிநீக்கு
  3. கச்சேரிக்கு போனால் பட்டு சேலையையும் ரசிக்க வேண்டாமோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டும்,பட்டும் ரசிக்கத்தான் வேண்டும்!
      நன்றி பகவான் ஜி

      நீக்கு
  4. //எவ்வளவு பெரிய இழப்பு. ஈடு செய்ய முடியாத இழப்பு//

    ஆஹா, கச்சேரி கிடக்கட்டும். டிபன் ஐட்டங்கள் ஈடு செய்ய முடியாத இழப்புதான். :)

    பதிலளிநீக்கு
  5. ஜோக்ஸ் ரசித்தேன்.

    //காலிஃப்ளவர் குருமா, மசாலா கார தோசை//

    அது சரி, உங்களுக்குத்தான் மசாலா வாசனை பிடிக்காதே... ஒருவேளை பூண்டு மட்டும்தான் பிடிக்காதோ!

    பதிலளிநீக்கு
  6. மசாலாவில் பூண்டு இருந்தாலும் தனியாக வாசனை தெரியாது அல்லவா?
    (சமாளிப்பு.)
    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  7. கச்சேரித் துக்கடாக்கள் அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. இசை விழாவை சம்பந்தப்படுத்தி வரும் நகைச்சுவைகள் எப்போதும் வாய்விட்டு சிரிக்க வைக்கும். தாங்கள் பகிர்ந்துள்ள நகைச்சுவை துணுக்குகளும் அந்த வகையை சேர்ந்தவையே. படித்தேன்! சிரித்தேன்!! இரசித்தேன்!!!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா

    நகைச்சுவையை இரசித்தேன்... அருமையாக உள்ளது த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. சங்கீத சீசன் துணுக்குகள் ரசித்தோம்..

    கீதா: சபா காண்டீன் தனிதான்...மக்கள் எங்க காண்டீன் நல்லாருக்குனே போவாங்க கச்சேரிவிட சில சமயம் அது முந்திக்கும்...இந்தத் தடவை நானும் கச்சேரி மிஸ்ஸிங்க். வீட்டுல டிவில கேக்கறதோட சரி...

    பதிலளிநீக்கு