தொடரும் தோழர்கள்

திங்கள், டிசம்பர் 21, 2015

வைகுண்ட ஏகாதசி.



ஏகாதசி என்பது அமாவாசை/பௌர்ணமிக்குப் பின் வரும் 11வது நாள்.(எல்லோருக்கும் தெரிந்த செய்தியைப் பெரிசா எழுத வந்துட்டியா?)மார்கழி மாதத்தில்,வளர் பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

எல்லா ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவது,வைகுண்ட பலன் தரும் என்பார்கள்(விரதம் என்றால் என்ன?-பட்டினிதான்.! மற்ற சில நியமங்களும் உண்டு.)ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும்.அக்காலத்தில் பெரியவர்கள் சொல்வார்கள்தினம் இரண்டு;வாரம் இரண்டு; மாதம் இரண்டு;வருஷம் இரண்டு என்று.மாதம் இரண்டு என்றால்,இரண்டு ஏகாதசிகளிலும் உண்ணா நோன்பை மேற்கொள்வது. (மற்றவை என்ன என்பது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாதது; எனவே தெரியாவிடில் நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்)ஏகாதசிக்கு மறுநாள், துவாதசியன்று காலை சீக்கிரமே உணவு அருந்த வேண்டும்.(பின்னே ஒரு நாள் பட்டினி என்றால் சும்மாவா?)இதைப் பாரணை என்பார்கள்.பட்டினியை விட்டாலும் பாரணையை விடக் கூடாது என்பர்.இதை நான் தவறாமல் கடைப் பிடிக்கிறேன்.பட்டினியை விட்டு விடுகிறேன்;பாரணையை விடுவதில்லை!பாதிப் புண்ணியம் உண்டோ|? துவாதசி அன்று உணவில் அகத்திக் கீரையும், நெல்லிக்காயும்,,சுண்டைக்காயும் இருக்க வேண்டும்.!இதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்க வேண்டும்.


இப்போது வைகுண்ட ஏகாதசிக்கு வருவோம்.ஆண்டு முழுவதும் விரதம் இருக்க முடியா விட்டாலும், வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் அது மூன்று கோடி ஏகாதசி விரதத்துக்கு சமம் என்று சொல்கிறார்கள்.அதனால் இது முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப் படுகிறது.

இத்தினம் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் மிக விசேஷமாக் கொண்டாடப் படுகிறது. இந்நாளில் மிக முக்கியமான நிகழ்ச்சி சொர்க்க வாசல் திறப்புதான்.அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப் பட்டவுடன்,அவ்வழியாகச் செல்வதற்கு மக்கள் வரிசையில் காத்திருப்பர்.மது கைடவர்களின் வேண்டு கோளுக்கிணங்கி,அன்று அவ்வாசல் வழியாக வருபவர்களுக்கு, அவர்கள் எப்படிப்பட்ட பாவம் செய்தவர்களாயினும் முக்தி அளிப்பதாக பகவான் வாக்களித்தார். எனவேதான் இச்சொர்க்கவாசல் திறப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இன்று நான் கோவிலுக்குப் போகவில்லை.கூட்டமில்லாத சாதாரண நாட்களில்தான் நான் பெரும்பாலும் கோவிலுக்குச் சென்று அமைதியாக வழி பட்டு விட்டு வருவேன்.

வைகுண்டநாதன் அருளால் எல்லாரும் எல்லா நலமும் பெற்று வாழப் பிரார்த்திக்கிறேன்


(சிறிது மாற்றப்பட்ட மீள் பதிவு)

22 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    வைகுண்ட ஏகாதசி பற்றி அற்புத விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. //பட்டினியை விட்டாலும் பாரணையை விடக் கூடாது என்பர்.இதை நான் தவறாமல் கடைப் பிடிக்கிறேன்.பட்டினியை விட்டு விடுகிறேன்; பாரணையை விடுவதில்லை!//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அப்போ நீங்களும் நானும் ஒரே கட்சிதான் போலிருக்கு. :)

    //இன்று நான் கோவிலுக்குப் போகவில்லை.கூட்டமில்லாத சாதாரண நாட்களில்தான் நான் பெரும்பாலும் கோவிலுக்குச் சென்று அமைதியாக வழி பட்டு விட்டு வருவேன். //

    அதே ..... அதே ..... கொள்கையுடன் நானும். :)

    பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    பதிலளிநீக்கு
  3. நானும் இன்று அனுஷ்டிக்கிறேன்
    நாளை நீங்க சொன்ன சமையல்தான்
    எங்கள் வீட்டிலும்...
    சிறப்புப் பதிவு அருமை
    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு
  4. வைகுண்ட ஏகாதசியான இன்று தங்களின் பதிவு அருமை சார்.

    பதிலளிநீக்கு
  5. அட நீங்களும் எங்கள மாதிரியா!!!! நாங்களும் கூட்டமே இல்லாத நாளில்தான் கோயிலுக்குச் செல்வதுண்டு. கூட்டமில்லாத யாருமே கண்டுகொள்ளாத கோயிலுக்கும்தான்.

    கீதா: ஏகாதசி விரதம் இருக்க முடிகின்றதோ இல்லையோ....//துவாதசி அன்று உணவில் அகத்திக் கீரையும், நெல்லிக்காயும்,,சுண்டைக்காயும் இருக்க வேண்டும்.!இதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்க வேண்டும். // இது மட்டும் ரெகுலர்!!!

    பதிலளிநீக்கு
  6. //.மது கைடவர்களின் வேண்டு கோளுக்கிணங்கி,அன்று ...//

    .மது கைடவர்களின் வேண்டு கோளுக்கிணங்கி,அன்று//

    அது யார் மது கைடவர்கள் ?
    மது புரியறது டாஸ்மாக் சமாசாரம்
    கை புரியறது ஹாண்ட்.
    டவர்: செல் சிக்னல் அனுப்பும் கோபுரங்கள்.
    கள்: இதுவும் மது.

    மொத்தமா என்ன சங்கதி ?
    கொஞ்சம் வ்யாக்யானம் தேவை ஸ்வாமி ..!

    சௌந்தர்யா லஹரியிலும் மது கைட பாரே அப்படின்னு வரதாக ஆத்து தாயார் சொல்றா.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  7. முந்தின நாள் பட்டினி கிடப்பதால் வயிறு சூடாகிவிடும். குளிர்ச்சிக்காக நெல்லி, அகத்தி போன்றவை. பட்டினி கிடக்க முடியலனா, இரவு பழம், பால் (பழைய பால் இல்லை. பால் வேற பழம் வேற). இதுவும் முடியாததனால், நிறையபேர், அரிசியா சாப்பிட்டா கணக்குல சேரும்னு, அதை உடைச்சு குறுணையை உபயோகப்படுத்தி கஞ்சியோ உப்புமாவோ சாப்பிடுவார்கள். வாழ்க்கையே நம்பிக்கையில்தான் ஓடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான்.மகாராஷ்ட்ராவில் விரதம் என்றால் சாபுதானா(ஜவ்வரிசி) கிச்சடிதான்!

      நீக்கு
  8. அனைவருக்கும் நலமே விளையட்டும் ஐயா.

    பதிலளிநீக்கு
  9. நாங்களும் உங்கள் கட்சிதான்! இன்று நான் பூஜிக்கும் லஷ்மி நாராயண பெருமானுக்கு திருப்தியாய் அபிஷேகம் செய்து முக்கான்னம் படைத்து விநியோகித்து மகிழ்ந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. அவன் அருள் எல்லோருக்கும் பரவட்டும். நான் எந்த வைகுண்ட ஏகாதசிக்குமே கோவிலுக்குப் போனதில்லை!

    :)))

    பதிலளிநீக்கு
  11. நானும் அறிந்து கொண்டேன்.நன்றி!

    பதிலளிநீக்கு
  12. 53 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும்போது என்னாலும் ஏகாதசி நோன்பு இருக்கமுடியும் என இருந்து காட்டியதுண்டு. ‘பசித்திரு’ என்று வள்ளலார் சொன்னதை இப்போது கடைபிடிப்பதால் அப்படி இருப்பதில்லை. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு