தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 11, 2015

கேள்வி கேட்ட குஷ்பு!



இது குஷ்புவின் கதை!

கதை என்றால் முழுக் கதை அல்ல.

ஒரு நிகழ்வு;சுவாரஸ்யமான நிகழ்வு.

அவ்வளவே.

ஆனால் இது குஷ்பு என்னும் புதுமைப் பெண்ணை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்வு.

அவளது நண்பிகள் அவளிடம் வந்து சொன்னார்கள்,மாப்பிள்ளை ஓம்வீருக்கு புரோகிதர் சொன்ன மந்திரங்களையே சரியாகத் திருப்பிச் சொல்லத் தெரிய வில்லை என்று

ஆம்;குஷ்புவுக்குக் கல்யாணம்

மாப்பிள்ளை ஒரு பட்டதாரி என்றுதான் சொல்லியிருந்தான்.

அவனுக்கா மந்திரங்களைத் திருப்பிச் சொல்லத் தெரியவில்லை?

குஷ்பு யோசித்தாள்

அவனிடம் சென்றாள். 

சுற்றியிருந்த உறவினர்களிடம் சொன்னாள்,தான் மாப்பிள்ளையைச் சில கேள்விகள் கேட்க விரும்புவதாக.

அவனிடம் சில நாணயங்களைக்  கொடுத்துக் கூட்டுத்தொகை எவ்வளவு எனக் கேட்டாள். 

அவன் நாணயங்களைக் கையில் வைத்தபடி விழித்தான்.

அடுத்து அவனிடம் தனது சாமர்த்தியக் கைபேசியைக் கொடுத்து அதைப் பயன்படுத்தச் சொன்னாள்.

அவன் பரிதாபமாக விழித்தான்.

குஷ்பு தெரிந்து கொண்டாள்,அவன் படிப்பு பற்றிப் பொய் சொல்லியிருப்பதை.

கல்யாணம் நின்றது.

புதுமைப் பெண் குஷ்பு.

முழுப் பெயர் குஷ்பு சக்சேனா!

(டைம்ஸ் ஆஃப் இந்தியா,சென்னை,10-12-2015)

0

12 கருத்துகள்:

  1. யாருக்கு வரும் குஷ்புவின் சாமர்த்தியம் :)

    பதிலளிநீக்கு

  2. தலைப்பைப் பார்த்து ‘நம் ஊர்’ குஷ்புதான் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி விஜயதாரணியிடம் ஏதோ கேட்டிருக்கிறார் என நினைத்து படித்தால் வழக்கம்போல் ஏமாற்றிவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  3. இந்த சம்பவத்தை நானும் படித்தேன், உண்மையில் நம்ம ஊர் குஷ்புதான் என்று தலைப்பைப் பார்த்து படிக்கப்போனேன்.

    பதிலளிநீக்கு
  4. அட நம்ம குஸ்பு இல்லீங்களா ?????????
    தம +1

    பதிலளிநீக்கு
  5. செய்தித் தாளில் படித்தேன் ஸார்.

    பதிலளிநீக்கு
  6. குஷ்புவின் சாமர்த்தியம்.... அவருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. ஐயா நலமா எப்படி ஐயா சரியாக கொண்டு வந்து முடிச்சு போடுகின்றீர்கள் அருமை அனைவரையும் ஏமாற்றி விட்டீர்களே...

    பதிலளிநீக்கு
  8. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  9. குஷ்பு என்றவுடன் உண்மையாக சமீபத்திய வெள்ளத்தில் அவர் ஏதேனும் வாய் திறந்தாரோ என்று. அதுவும் அரசியலில் இருப்பதால் மாட்டிக் கொண்டுவிட்டாரோ என்று...ஹஹ்

    குஷ்பு என்று ஆரம்பித்து ஸக்சேனாவில் முடித்தது அதுதான் செபி சார். ரெண்டு குஷ்புக்களுமே சாமர்த்தியசாலிகள் தான்!!!!

    (அது சரி மந்திரம் உச்சரிக்கத் தெரியவில்லை என்றால் படிக்காதவன் என்று ஆகிவிடுமா....படித்த பலருக்குமே மந்திரங்கள் சொல்லத் தெரியவில்லையே அதனால்தான்...ஹிஹி...இந்தக் கீதாவும் அதில் அடக்கம்...)

    பதிலளிநீக்கு