தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஏப்ரல் 05, 2015

சன்டே,ஃபன்டே !

இரு மனைவிகள் பேசிக் கொண்டார்கள்
ம.1:நேற்று எப்படி?
ம 2:மகா மோசம்.என் கணவர் அலுவலகத்திலிருந்து வந்தார்.5 நிமிடம் கழித்து சாப்பிட்டார்; அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தூங்கி விட்டார்.உனக்கு எப்படி?
ம 1.பிரமாதம்.என் கணவர் திரும்பியதும் என்னை உணவுக்கு வெளியே அழைத்துச் சென்றார். சாப்பாட்டுக்குப் பின் கைகளைக் கோர்த்தவாறே வீடு வரை நடந்தோம்.வீட்டுக்கு வந்த பின் வீடு முழுவதும் மெழுகு வர்த்தி ஏற்றினார். ஆகா!

அதே நேரத்தில் அவர்கள் கணவர்கள் பேசிக் கொண்டனர்

க 1.நேற்று எப்படி?
க.2.பிரமாதம்.அலுவலகத்திலிருந்து வந்தேன்.உணவு தயாராக இருந்தது. நன்றாகச் சாப்பிட்டேன்..சிறிது நேரம் கழித்து நன்றாகத் தூங்கி விட்டேன்.நீ எப்படி?
க.1.மகா மோசம்.வீட்டுக்கு வந்தேன்.மின்சார பில் கட்டாததால், இணைப்பத் துண்டித் திருந்தார்கள் ஒரே இருட்டு .என்ன செய்ய.சாப்பிட மனைவியை வெளியே அழைத்துச் சென்றேன்;ஏகப்பட்ட செலவு.திரும்ப பஸ்ஸுக்குக் கூடக் காசில்லை.நடந்தே வீடு திரும்பினோம்.வெளிச்சம் வேண்டுமே?வீடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தேன்.
-------------------------------------------------------
எதையும் சொல்லும் விதம் முக்கியம்!

7 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    தாங்கள் சொல்வது போல எதையும் சொல்லும் விதம் முக்கியம்.... உண்மைதான்

    உரையாடலை படித்து படித்து சிரித்தேன் ஐயா.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம.2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. சொலது எப்படி என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது...

    நல்ல பகிர்வு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான உரையாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

    மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வெகுநாட்கள் முன்பு வந்திருந்த இதை நானும் ஒரு சிறுகதையாக்கிக் கொடுத்திருந்தேன்.

    தலைப்பு: நேத்து ராத்திரி ............ யம்மா

    http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_03.html

    பதிலளிநீக்கு
  4. பார்வை ஒன்று கோணம் இரண்டு தமிழ் மணம் நான்கு.

    பதிலளிநீக்கு
  5. நானும் இதே நகைச்சுவையை பதிவாக்கி இருக்கிறேன்.. http://maadipadimadhu.blogspot.com/2014/09/3.html

    பதிலளிநீக்கு