தொடரும் தோழர்கள்

திங்கள், ஏப்ரல் 06, 2015

திங்கள் சந்தை.



இது திங்கள் சந்தை.இந்தப் பெயர் சொன்னதும் என் நினைவுக்கு வருவது குமரி மாவட்த்தில் உள்ள ஓர் ஊர்….திங்கள்சந்தை.அதை இப்போது திங்கள் நகர் என்றும் அழைக்கிறார்களாம். நான் 1977இல் முளகுமோடு என்னும் ஊரில் இருந்தபோது பரிச்சயமான ஊர் இது.நெய்யூர் என்றும் சொல்வார்கள்.

எனக்குத் தெரிந்த  இன்னொரு திங்கள் சந்தை டில்லியில்.கரோல்பாக்கில் கடைகள் அனைத்துக்கும் திங்கட்கிழமை விடுமுறை.அப்போது மிக நீளமான அஜ்மல்கான் ரோடில் பிளாட்பாரக் கடைகள் முளைத்து விடும் பேரம் பேசத் தெரிந்தால் மலிவாக எதையும் வாங்கலாம்.

 ஊரைப் பொறுத்து வெவ்வேறு நாட்களில் சந்தை நடைபெறும். இது போன்ற சந்தைக்காகவே காத்திருந்து பொருள் வாங்குபவர் பலருண்டு.

அந்தக் காலத்தில் கிராமத்தில் சந்தைகளில் விலை கூறுவது குழூஉக்குறிகளின் மூலம் என்று சொல்வார்கள்.சலகை,சலகைத்தட்டை போன்றெல்லாம் குழூஉக்குறிகள் அமைந்திருக்கும்.

தகுதிச் சொல் வழக்குகள் மூன்று வகைப்படும்.அதில் ஒன்று குழூக்குறி.மற்ற இரண்டும் மங்கலம், இடக்கரடக்கல் ஆகும்.தாலி பெருகிற்று என்பது மங்கலச் சொல்லாகும்.கால் கழுவினான் என்பது இடக்கரடக்கல் ஆகும்.

இப்பொதெல்லாம் பல்பொருள் அங்காடி என்கிறோம்.சூப்பர் மார்க்கெட் என்கிறோம். ஷாப்பிங் மால் என்கிறோம்.இதற்கெல்லாம் முன்னோடி சந்தை.அந்தக்காலம் முதல் பிரபலமாக இருப்பது.

தமிழ்நாட்டில் உழவர்சந்தை பற்றி அறிந்தவர்கள் சொல்வர் அதன் பயன் பற்றி.

 தமிழ்ப்படங்களில் சந்தை ஒரு முக்கியமான களம்;மற்றது திருவிழா

சந்தையில் நாயகனுக்கும் ரவுடிகளுக்கும் சண்டை தூள் பறக்கும்.கடைகள் சேதமாகும்; எல்லாம் ஒரு பெண்ணுக்காகவே இருக்கும்.

அவர்கள் சந்தைக்குப் போவதே  சண்டைக்குப் போவதற்காகத்தானோ எனத் தோன்றும்!

சந்தை என்றாலே விற்பவர்கள்,வாங்குபவர்கள்,கூட்டமாகப் பேசுபவர்கள் என்று அனைவரின் உரத்த குரலாலும் இரைச்சல் மிகுந்தே காணப்படும்.எனவேதான் எங்காவது இரைச்சல் அதிகமாக இருந்தால் சந்தை மாதிரி இருக்கிறது எனச் சொல்வார்கள்.

இயன்றால் அடுத்த திங்கள் சந்தையில் சந்திப்போம்,பல சரக்குடன்!



18 கருத்துகள்:

  1. குழூஉக்குறிகள் பற்றி இன்னும் கொஞ்சம்...

    பதிலளிநீக்கு
  2. சலகை, சலகைத்தட்டை, குழூஉக்குறி, இடக்கரடக்கல் எல்லாம் வழகொழிந்த சொற்கள் என்று தோன்றுகிறது. இதுவரை கேட்டதே இல்லை. கன்னியாகுமரியை சேர்ந்த நண்பர்களிடம் விசாரித்ததில் அவர்களுக்கும் அர்த்தம் சொல்ல தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழூஉக்குறி, மங்கலம் ,இடக்கரடக்கல் எல்லாம் தமிழ் இலக்கணத்தில் உள்ளவை .நான் பள்ளி நாட்களில் படித்தவை.
      தாலி அறுந்தது எனச் சொல்லாமல் தாலி பெருகிற்று எனச் சொல்வது மங்கலம்.
      கு-- கழுவுதல் என்பதைக் கால் கழுவுதல் எனச் சொல்வது இடக்கரடக்கல்
      குழூக்குறி என்பது ஒரு குழுவுக்குள் நிலவும் சங்கேத மொழி. பொதுவாக சந்தையில் விலை முதலியவற்றைச் சங்கேத மொழியில் பேசுவார்கள்;அதற்கு ஒரு உதாரணமே சலகை போன்றவை
      நன்றி மாது

      நீக்கு
  3. சந்தையில் சந்திக்கக் காத்திருக்கிறேன் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  4. சந்தை பற்றிய அருமையான தகவல்கள்.
    அடுத்த சந்தைக்காக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. சந்தையில் ஆரம்பித்து ‘குழூஉக்குறிகள்’ பற்றி கோடிகாட்டி, சந்தை என்பதே சண்டைக்குத்தான் என்ற திரை உலகினரின் பார்வையை வெளிச்சம்போட்டு காட்டி கோர்வையாய் அழகாய் சொன்னமைக்கு வாழ்த்துக்கள்.

    அடுத்து திங்கள் சந்தையில் சந்திப்போம் என்றிருக்கிறீர்கள். ஏன் செவ்வாய்பேட்டையில் சந்திக்கலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செவ்வாய் சந்திப்பு உண்டு ;ஆனால் அது பேட்டையில் அல்ல
      நன்றி சார்

      நீக்கு
  6. நிறைய தகவல்கள் அடுத்த சந்தையில் சந்திப்போம் ஐயா
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  7. சந்தையில் கூச்சல் குழப்பம் அதிகமாய் இருப்பதால் ,வலைத் தளத்திலேயே பேசிக் கொள்வது பெட்டர் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் ஒரு சந்தையே.பல பொருட்களும் உண்டு.மோதலும் நடக்கும் ;ஆனால் எழுத்தில்!
      நன்றி ஆண்டவரே!

      நீக்கு
  8. தில்லியில் கரோல் பாக் பகுதியில் இன்னமும் திங்கள் கிழமை தான் சந்தை! :) அஜ்மல் கான் சாலை முழுவதும் கடைகள்..... ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாள்..... ஜனக்புரி பகுதியில் புதன்! :)

    பதிலளிநீக்கு
  9. சில புதிய வார்த்தைகள் அறிமுகம்.

    பதிலளிநீக்கு