தொடரும் தோழர்கள்

வியாழன், ஏப்ரல் 09, 2015

ஓ ‘அதற்கு ஒரு பக்குவம் தேவை’



1961-1964.

நான் பட்டப்படிப்பில் இருந்த காலம் .

எங்கள் தமிழ் விரிவுரையாளர்இவரல்லரோ எழுத்தாளர்என்ற தலைப்பில் கட்டுரை எழுதப் பணித்தார்.

நான் ஒரு எழுத்தாளரைப் பற்றி ,அவரது சிறுகதைகள் பற்றியெல்லாம் எழுதி அக் கட்டுரையை  !அதற்கு ஒரு பக்குவம் தேவைஎன்று முடித்திருந்தேன்.

அப்போது விகடனில் ஒவ்வொரு வாரமும் முத்திரைக் கதை ஒன்று பிரசுரமாகி வந்தது. அப்படி வந்த முத்திரைக்கதை ஒன்றின் கடைசி வரியே நான் எழுதியிருந்தது.

அக்கதையின் பெயர்யுகசந்தி

புராதன சிந்தனைகளைப் புறந்தள்ளி.ஒரு புதிய பாதையைக் காட்டும் ஒரு பாட்டியின் கதை.

அந்தக்கால கட்டத்தில் அப்படிப் புரட்சிகரமாக எவரும் சிந்தித்திருக்க முடியாது

கௌரிப்பாட்டியின் மூலமாக அவர் சிந்தித்தார்.
காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான்” இதைத்தான் கௌரிப்பாட்டி சொல்கிறாள்.சொல்வது மட்டுமில்லை .செய்கிறாள்

கதை இப்படி முடியும்.
“வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால் ?......
' அதற்கு ஒரு பக்குவம் தேவை ”

பல முத்திரைக்கதைகள் அவர் எழுதினார்.நான் அவர் எழுத்தில் பைத்தியமானேன்.

அவரது “அக்னிப்பிரவேசம்” பெரிய சர்ச்சையைக் கிளப்பிய கதை

பலரது கேள்விகளுக்குப் பதிலே போல்தான் பிறந்தது “சில நேரங்களில் சில மனிதர்கள்”
கம்யூனிஸ்டாக இருந்தவர் காங்கிரஸ்காராக மாறி பீரங்கிப் பேச்சாளர் என்றழைக்கப் பட்ட காலத்தில்,ஐந்து மைல் சைக்கிளில் சென்று அவர் பேச்சைக் கேட்டேன் (உத்தமபாளயம் டு கம்பம்)  

திரைத் துறையிலும் தன் முத்திரை பதித்தவர்.

அவர் இயக்கிய “உன்னைப்போல் ஒருவன்” தேசிய விருது பெற்றது

ஜெயகாந்தன் என்ற எழுத்து இமயத்தின் மறைவு,தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு பேரிழப்பாகும்

அவரது ஆன்மா சாந்தியடைப் பிரார்த்திக்கிறேன்.

*************************************************************
அந்தக்கால கட்டத்தில் நான் வசித்த ஊர் உத்தமபாளையம்

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர்.

எந்த விழாவாக இருந்தாலும் தவறாமல் என் காதுகளில் விழுந்த ஒரு பாடல் ”இறைவனிடம் கையேந்துங்கள்,அவன் இல்லையென்று சொல்லுவதில்லை”

அந்த வெண்கலக்குரல் என்னை வெகுவாக கவர்ந்தது.

நான் அப்பாடலின் ரசிகனானேன்.

அக்குரல் இன்று ஓய்ந்து விட்டது

நாகூர் ஹனீபாவின் மறைவும் ஒரு பேரிழப்பே.

அன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்


12 கருத்துகள்:

  1. இருவருடைய ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம்.
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  2. Nee koduthatharke nandri solla neram illai innum
    Ini aduthatuthuk ketpathile enna niyaayam

    Divinity is at its peak in his song
    Listen it at www.vazhuvuneri.blogspot.com
    Subbu thatha

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா

    ஆழ்ந்த இரங்கல் ஐயா
    த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. சிறந்த எழுத்தாளர் . அவர் எழுத்து நான் படித்ததில்லை. ஹிந்தித்துறை சென்றதால்.

    அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

    பதிலளிநீக்கு
  5. நாகூர் ஹனிபா பாடல் இந்தியில் மொழி பெயர்த்துள்ளேன்.எழுதிள்ளேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் .

    பதிலளிநீக்கு
  6. மறைந்த இரு பெரும் கலைஞர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  7. இருவரும் மிகப்பெரும் ஆளுமைகள்! ஆழ்ந்த இரங்கல்கள்!

    பதிலளிநீக்கு
  8. நான் இட்ட பின்னூட்டத்தைக் காணோம். ஆனால் நான் பின்னூட்டம் இட்டபோது தொடரும் ஆப்ஷன் தந்ததால், பொறுப்பாக மற்ற பின்னூட்டங்கள் மட்டும் என் இன்பாக்ஸுக்கு வருகின்றன!!

    :))))))))

    பதிலளிநீக்கு
  9. இரண்டு பேருமே பெரிய ஆளுமைகள். முதல்வரின் படைப்புகளையும் இரண்டாமவரின் பாடல்களயும் கேட்டு ரசித்திருக்கிறேன்..

    அவர்களது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  10. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு