தலைப்பைப் பார்த்ததும் என்ன இந்த ஆளுக்கு
இரண்டு சுழி,மூணு சுழிக் குழப்பம் போலிருக்
கிறதே என்று நினைக்கி றீர்களா.?
எனக்குப் பேசும்போதோ எழுதும்போதோ நிச்சயமாக
னகர,ணகரக் குழப்பம் கிடையாது.
இது கண்ணா அல்ல.
கன்னாதான்
ஃபரிதாபாத்தில் என் உதவியாளராகப் பணியாற்றிய
என்.கே.கன்னாதான்.
பஞ்சாபி,சிவப்பாக இருப்பார்.உயரம் கம்மி.
பல கிளை ஆய்வுகளில் என்னுடன் உதவியாளராக
வந்தவர் அவர்.மற்றொருவர் டி.ஆர்.சாவ்லா.
எங்கள் ஆய்வின் போது இவர்கள் இருவரும் எனக்கும்
சேர்த்து மதிய உணவு கொண்டு வருவது என்பது ஒரு எழுதப்படாத விதியாகிவிட்டது.ஒரு பரிதாப உணர்வுதான்!
மதியம் உணவு நேரத்தில் என்னை”சேகர் சாப்!சாப்பிடலாம்” என அன்போடு அழைப்பார்
கன்னா.
பல கிளை ஆய்வுகளில் எனக்கு உதவியாளராகப்
பணி புரிந்திருக்கிறார்.
குர்கான் நகரில்தான் அவர்
குடும்பத்துடன் வசித்து வந்தார்,
எந்தக்கிளை ஆய்வென்றாலும் அங்கிருந்து
தினம் வந்து போவார்
ஒரு முறை குர்கான் கிளை ஆய்வே நாங்கள்
இருவரும் மேற்கொண்டோம்.
அப்போது கோடைக்கலம்.
டெல்லியின் கோடை பற்றி உங்களுக்குத்
தெரியும்.
தினமும் நான் ஃபரிதாபாத்திலிருந்து
வந்து போக வேண்டும்
சனிக்கிழமை அரை நாள் வங்கி அலுவல்
என்பதால் அந்த மதிய வெயிலில் ஃபரிதாபாத் திரும்புவது கடினம்.
எனவே கன்னா எனக்கு ஓர் அன்புக்கட்டளை
இட்டு விட்டார்-சனிக்கிழமைகளில் மதிய உணவை அவர் வீட்டில் முடித்துக் கொண்டு
ஓய்வெடுத்தபின் மாலைதான் ஃபரிதாபாத் திரும்ப வேண்டும் ஏன்று.
அது முதல் ஆய்வு முடியும் வரை
சனிக்கிழமை மதிய உணவு அவர் வீட்டில்தான்.உணவுக்குப் பின் அவர் குழந்தைகளுடன்--ஒரு
பெண்,இரு பையன்கள்--, உடைந்த இந்தியில் பேசிக் கொண்டி ருப்பேன்.பையன்கள் செஸ்
ஆட்டத்தில் செய்த தவறுகளைத் திருத்தினேன்.மாம்பழ சீசன்.அவர் சஃபேதா மாம்பழம்
வாங்கி வந்தார்.அதை வெட்டித் துண்டுகளாக்கிச் சாப்பிடுவதா அல்லது மாம்பழ ,பால்
சாறு அருந்துவதா என்று..குழந்தைகளின் ஆசை மில்க்ஷேக்.கன்னா சொன்னார்”சேகர் சாப்
நீங்கள் சொல்லுங்கள் .என்ன வேண்டும்”. குழந்தைகளைப் பார்த்து ரகசியமாகக் கண்
சிமிட்டி விட்டுச் சொன்னேன் ”மில்க் ஷேக்” இதுபோல் கிட்டத்தட்ட ஐந்தாறு வாரங்கள்,ஆய்வு முடியும் வரை.
அன்று ஞாயிற்றுக் கிழமை,ஃபரிதாபாத்தில்.வீட்டில் ஓய்வாக அமர்ந்திருந்தேன்,
ஃபரிதாபாத் கிளை நண்பர்கள் இருவர்
வந்தனர்
உற்சாகமாக வரவேற்றேன்
ஆனால் அவர்கள் முகம்
இறுகிப்போயிருந்தது.
சொன்னார்கள்”கன்னா இறந்து விட்டார்’
நான் அப்படியே அருகில் இருந்த சோபாவில் சாய்ந்து விட்டேன்.
மிகப்பெரிய அதிர்ச்சி.
மறுநாள் ஓர் ஆய்வில் அவர் என்னுடன்
சேர்ந்து பணியாற்ற வேண்டியவர்
இப்போது.....குர்கான் சென்று இறுதிச்
சடங்கில் கலந்து கொண்டு திரும்பினோம்.
வேறொருவர் என்னுடன் ஆய்வுப்பணியில் சேர்ந்து
கொண்டார்.
சில மாதங்களில் தெரிய வந்தது கருணை
அடிப்படையில் அவர் மனைவிக்கு எங்கள் வங்கியில் ,குர்கான் கிளையிலேயே வேலை
கொடுக்கப்பட்டது என்று.
சில நாட்கள் கழித்து ஒரு விசாரணைக்காக
குர்கான் செல்ல வேண்டி இருந்தது.
கிளையில் கன்னாவின் மனைவியைப் பார்த்து நலம்
விசாரித்தேன்.
மதிய இடைவேளையின் போது அவர் என்னருகே
வந்து ஒரு கவரை நீட்டினார்””இதில் 1500 ரூபாய் இருக்கிறது.என் கணவருக்கு நீங்கள்
கடனாக்க கொடுத்த பணம்’
திகைத்தேன்.கன்னாவுக்கு நான் பணம்
கொடுத்தது எங்கள் இருவரைத் தவிர யாருக்கும் தெரியாது என எண்ணினேன். ஆனால்,,,
என் கண்களில் கண்ணீர் பெருகியது---அந்த
நல்ல மனிதரையும் அவருக்கேற்ற மனைவியையும் நினைத்து!
கன்னா!உன் குடும்பத்துக்கு எந்தக்
குறையும் வராது!
திடீர் மரணங்கள் சுற்றியிருப்போரை கலங்கடித்துவிடும்...
பதிலளிநீக்குநேர்மையான மனிதர்கள் மறைவு எப்போதும் பேசப்படும்...
அவர் எப்படி இறந்தார்..? என்னவாயிற்று அவருக்கு
Cardiac arrest.இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர் நினைவில் நெஞ்சம் கனக்கிறது.அவர் மனைவியின் பண்பு கண்ணீர் வரச் செய்கிறது.
நீக்குமிக்க நன்றி சவுந்தர்.
Cardiac arrest.இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர் நினைவில் நெஞ்சம் கனக்கிறது.அவர் மனைவியின் பண்பு கண்ணீர் வரச் செய்கிறது.
நீக்குமிக்க நன்றி சவுந்தர்.
//பரிதாபாத்திலிருந்து// அவசரத்தில் அக்'கன்னா'வை விட்டு படித்து சற்று குழம்பி விட்டேன்.. ;)
பதிலளிநீக்குநான் கன்னா பற்றி எழுதியிருக்கிறேன்.நீங்கள் "அக்கன்னா" வை விட்டு விட்டுப் படித்தீர்களாக்கும்!
நீக்குநன்றி ஆவி
நான் கன்னா பற்றி எழுதியிருக்கிறேன்.நீங்கள் "அக்கன்னா" வை விட்டு விட்டுப் படித்தீர்களாக்கும்!
நீக்குநன்றி ஆவி
நெகிழ்வான பதிவு.. :)
பதிலளிநீக்குஎன்னவொரு நேர்மையான தம்பதிகள்...
பதிலளிநீக்குஅவர் மறைவு மனம் கனத்தது ஐயா...
என்னால் மறக்கமுடியாதவர்கள்.
நீக்குநன்றிDD
என்னால் மறக்கமுடியாதவர்கள்.
நீக்குநன்றிDD
Really great. Very few are blessed with good staff in Banking industry.
பதிலளிநீக்குகன்னா போன்றவர்கலுக்கு ஆயுள் கம்மிதான்
பதிலளிநீக்குநெகிழ வைத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குநானும்கூட நெகிழ்ந்துவிட்டேன்.
பதிலளிநீக்குநேர்மையானவர்கள் இன்னும் வாழத்தான் செய்கிறார்கள் ஐயா.
பதிலளிநீக்குத.ம 7
நல்ல மனிதர்கள் நீண்ட நாள் வாழ்வதில்லையே
பதிலளிநீக்குஏன் ஐயா?
தம 8
பதிலளிநீக்குநேற்று இருந்தார் இன்று இலரென்னும்
பதிலளிநீக்குஎவ்வம் உடைய துலகு
என்பது நினைவுக்கு வருகிறது.
நெஞ்சைத்தொருகிறது அய்யா
தனது துயரத்திலும் தன் கணவர் தரவேண்டிய பணத்தை திருப்பித் தந்த திருமதி கன்னா அவர்களை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. நல்லவர்கள் வாழ்வார்கள்!
பதிலளிநீக்குநெகிழ வைத்த பதிவு.
பதிலளிநீக்குமிகவும் நெகிழ்ந்து விட்டேன். அருமையான பதிவு. நன்றி சார்.
பதிலளிநீக்கு