”காதல் காதல் காதல்
காதல்
போயின் காதல் போயின்
சாதல்
சாதல் சாதல்”
பாரதியின்
குயில் சொல்கிறது.
எனக்கு
உடன்பாடில்லை.
உலகத்தில்
எத்தனையோ பேர் காதலிக்கிறார்கள்.
அனைவர்
காதலும் வெற்றியடைகிறதா?
இல்லையெனில் ,அவர்களுக்குச் சாவுதான்
வழியா?
இன்னும்
ஒரு கேள்வி.
காதலில்
வெற்றி என்றால் என்ன?
திருமணமா?
காதலிக்க
ஆரம்பித்தபோது திருமணம் பற்றிய எண்ணம் இருந்ததா?
காதல்,திருமணத்தில் முடியவில்லை
எனில் அது காதலின் தோல்வியா?
நிச்சயம்
இல்லை.
காதல்
தோற்பதில்லை.
ஒரு
கவிஞன் சொல்கிறான்
//உன் காதல் தோற்றதா என
நண்பன் கேட்டான்
உண்மைக் காதலுக்குத் தோல்வியும் உண்டோ?
காதலித்துப் பிரிந்த பின் காலம் பல
கடந்த பின்னும் ,
காதலின் நினைவிலேயே வாழ்கின்ற நம்
காதல் வென்றதன்றோ!//
காதல் நினைவுகள் என்றும் சாவதில்லை.
நினைவுகளில் வாழும்போது சாக மனம் வராது.
உருகி உருகிக் காதலித்தவர்கள் ஈருடல் ஓருயிராக
மாறி விடுகிறார்கள்.உயிரையே
அவளிடம்/அவனிடம் கொடுத்த பின் அதன் மீது ஏது உரிமை?
அதை எப்படித் துறக்க முடியும்?
ஆனால் காதல் போயின் இன்னொரு காதல் சாத்தியமா?
முதல் காதல் உண்மையாயின்,அதன் நினைவில் வாழத்தான் முடியுமே தவிர மீண்டும்
ஒரு காதல் சாத்தியமில்லை.
கல்யாணம் நடக்கலாம்.
அவ்வளவே.
ஆகவே காதல் போயின் காதல் என்றால்?
புதிய காதல் அல்ல.
அதே காதல்தான்
இதயத்தில் ரணமாகித் தழும்பாகி விட்ட காதல்தான்.
அந்தத் தழும்பை வருடிக் கொடுப்பதே ஒரு சுகம்!
காதல் ஒரு முறைதான் வரும்.
மீண்டும் வந்தால் அது காதல் அல்ல.
வெறும் இனக்கவர்ச்சி.
இவ்வளவும் சொல்லி விட்டு.இதைச் சொல்லக்
காரணமாக இருந்த அல்டிமேட் இயக்குனர் ஆவியின்,ஷைனிங் ஸ்டார் கலக்கிய ”காதல் போயின் காதல்” பற்றிச் சொல்லவில்ல எனில் அது
துரோகம்!
நான் சிவா போல் ஒரு விமர்சகன் அல்லன்.
எனவே ஒரு சாமானியாக----------
சீனுவின் அண்டர்ப்ளே பிடித்திருந்தது.
சில செய்திகளை ஆவி சொல்லாமல் சொல்லிய விதம்
பிடித்திருந்தது
மதுவந்தியின் உணர்ச்சி வெளிப்பாடு பிடித்திருந்தது.
கடைசியாக ஆனால் குறைவாக
அல்ல,ஸ்கூல் பையனின் செல்லப்பையன் நடிப்புப் பிடித்திருந்தது.
முடிக்கும் முன் இன்னும் ஒரு கேள்வி.
ரிஷ்விக்-ரேஷ்மா காதல் வென்றதா?
காதல் போயின்?
பதில் கூறுங்கள்.
காதல் போயின் காதல்.காதல் காதல். மீண்டும் அதே காதல்தான்.இதயத்தில் ரணமாகித் தழும்பாகி விட்ட காதல்தான்.எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம்.பதில் இது தான்.
பதிலளிநீக்குஉண்மையான காதலாயிருந்தால் அந்தக் காதல் போகாது!!
பதிலளிநீக்குபடம் ரசிக்கும் வண்ணம் செய்திருந்தார்கள் நம் நண்பர்கள். நானும் ரசித்தேன்.
அவங்க காதல் வெற்றியடைஞ்சதானு தெரியலைங்ணா ! ஆனா ஆவி வெற்றியடைஞ்சிட்டாரு ...
பதிலளிநீக்குஉங்கள் பாணியில் படம் பற்றிய பகிர்வு..... ரசித்தேன்.
பதிலளிநீக்குவிமர்சனக் கவிதை அருமை.
பதிலளிநீக்குவிமர்சனம் அருமை ஐயா
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
வித்தியாசமான விமர்சனக் கவிதை... அருமை... ரசிக்க வைத்தது ஐயா...
பதிலளிநீக்குஅதானே...? ஏது உரிமை...?
பதிலளிநீக்குவென்றதா...? இல்லையா...? என்பதை ஆவி(யாக) வந்து சொல்வார்(கள்)...!
ரிஷ்விக்-ரேஷ்மா காதல் வென்றதா? என்ற கேள்விக்கு வென்றது என்றே சொல்வேன். காதல் திருமணத்தில் முடியவில்லை அவ்வளவு தான். எனக்கும் திரு சீனு அவர்களின் மிகைப்படாத நடிப்பு பிடித்திருக்கிறது.
பதிலளிநீக்குபதிவு சொல்வதெல்லாம் உண்மை! உண்மையைத் தவிர வேறில்லை!
பதிலளிநீக்கு