”ரவி!போலீஸ் உன்னை நெருங்கிட்டாங்க!நீ
இருக்கும் இடத்தை குறி வெச்சிக்கிட்டே இருக்காங்க.அவங்க கிட்ட மாட்டினேன்னா
என்கவுண்டர்தான்;கைது எல்லாம் கிடையாது.தப்பிக்க முயற்சி செய்.” அவனது வக்கீல்
தந்த தகவல்.
ஒரு மனிதன் முகம் போல் மற்றவர் முகம் இருப்பதில்லை.அது போலவே நடைகளும்வேறுபடுகின்றன.எத்தனை
விதமான நடைகள்!குறுகலான அடிகள்,நீண்டஅடிகள்;கைகளை
நன்கு வீசி,கைகளை
அதிகம் வீசாமல்;நன்கு
நிமிர்ந்து,சற்றேகூனியவாறு;முழங்கால்களை
நன்கு மடக்கி,அதிகம்
மடக்காமல்;யானை
போல் ஆடிஆடி,ஒரே
சீராக என்று எத்தனை விதமான நடைகள்!நடக்கும் விதமே ஒருவரின் குணத்தைஅடிப்
படையாகக் கொண்டது என் நான் எண்ணுகிறேன்.