தொடரும் தோழர்கள்

ஞாயிறு, நவம்பர் 03, 2013

உணவும் உணவு சார்ந்த இடமும்-வாழைக்காய்ப் பொடிமாஸ்!

இன்று ஞாயிற்றுக்கிழமை!

(ஆமாம்!நேற்று சனிக்கிழமை,நாளை திங்கள் கிழமை,தெரியாதோ!பெரிசாச் சொல்ல வந்துட்டான் என்று முணுமுணுக்கிறீர்களா!)

அதாவது முன்பே எடுத்த முடிவின்படி இன்று கேடரருக்கு ஓய்வு!

இன்று அமாவாசை வேறு.

சாப்பாட்டில் கட்டாயம் வாழைக்காய் இருக்க வேண்டும்.

எனவே இன்று வாழைக்காய்ப் பொடிமாஸ் செய்யலாம் எனத் தீர்மானித்தேன்!

அதைச் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு!

எளிமையான சமையல்தான்.

பருப்பு,தயிர்ப்பச்சடி,பருப்பு ரசம்+பொடிமாஸ்.

பொடிமாஸ் கீழே.............


தேவையான பொருட்கள்:

வாழைக்காய்-2
கடுகு,உ.பருப்பு,இஞ்சி,பச்சை மிளகாய்,தேங்காய் துருவல்.

வாழைக்காயை நான்கு துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.

வெந்தபின் தோலை உரித்து எடுத்து விட்டு,துண்டுகளைக் காரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு,கடுகு,உ.பருப்பு(நான் சேர்க்கவில்லை, அம்மாவுக்கு கடிப்பது சிரமம் என்பதால்),நறுக்கிய இஞ்சி ,ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்;துருவிய வாழைக் காயையைப் போட்டு தேவையான உப்பையும் போட்டுக் கிளறவும்கடைசியாக,துருவிய தேங்காயைப்போட்டுக் கிளறி இறக்கவும்!

இனி அடுத்த ஞாயிறு என்ன செய்வது என யோசிக்க வேண்டும்!

30 கருத்துகள்:

  1. எனக்கு இதுவும் பிடிக்கும் என்றாலும் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இதைவிட பிடிக்கும். அது சரி... ஒரு சந்தேகம். அமாவாசைக்கும் வாழக்காய்க்கும் என்ன சம்மந்தம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமாவாசையன்று மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்வது வழக்கம்.திதியன்று வாழைக்கய் முக்கிய இடம் பெறுகிறது வருட.திதியன்று புரோகிதருக்கு வாழைக்காய் ,அரிசி கொடுப்பதும் ஒரு பொதுவான பழக்கமாக இருந்து வருகிறது!
      எனக்கும் உ.கி.பொடிமாஸ் மிகப் பிடிக்கும்!
      நன்றி ஜோசப் சார்

      நீக்கு
  2. பதில்கள்
    1. என்ன யோசனை?யார் யோசிக்க வேண்டும்?ஏன் யோசிக்க வேண்டும்?
      நன்றி DD

      நீக்கு
  3. வாழைக்காய் பொடிமாஸ். பருப்பு துவையல், சுட்ட அப்பளம்

    இது எல்லாம் சாப்பிட்டு எத்தனனை நாளாச்சு..

    அடடா..அடடா....டா..

    முன்னாலே சொல்லிருந்தா நான் பஸ் புடிச்சு

    மதுரைக்கு வந்திருப்பேனே

    ப்ரோப்சனால் கொரியர் வழியா அனுப்ப முடியுமா ப்ளீஸ்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா!நான் சென்னை பித்தன்;சென்னையில்தான் இருக்கிறேன்!
      அனுப்பலாம் துவையல் ஊசிவிடும்!
      நன்றி

      நீக்கு
  4. Sir, பொடிமாஸ் சூப்பர். எனக்கும் வாழைக்காய் கறியை விட இதுதான் மிகவும் பிடிக்கும்.. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. நாக்கில் நீர் ஊற வைத்து விட்டீர்கள். ;).

    பதிலளிநீக்கு
  5. வாழைக்காயில் என்ன செய்தாலும் தனி ருசி தான் ஐயா..
    பொடிமாஸ் கலக்கல்...

    பதிலளிநீக்கு
  6. திரு டிபிஆர்.ஜோசப் அவர்களின் சந்தேகம் தான் எனக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணம் தெரியாது ஆனால் திதியன்று உபயோகிக்கும் காய் இது!
      நன்றி

      நீக்கு
  7. அம்மாவுக்கு சமைத்து போடும் உங்கள் அன்பு அலாதியானது. இதற்கெல்லாம் நிறைய பொறுமை வேண்டும்! வள்ளுவர் iஇருந்தால்..மகன் தாய்க்கு ஆற்றும் உதவி என்றும் எழுதியிருப்பார்! வாழ்க உங்கள் சேவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 90 வயது வரை அவர்கள்தான் சமைத்துவந்தார்கள்.நான் செய்வது ஒரு தூசி!
      நன்றி நம்பள்கி

      நீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    வாழைக்காய்ப் பொடிமாஸ் தயாரிக்கும் முறைபற்றிய விளக்கம் அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. தெரியாத ஒன்றை பிடித்த ஐட்டம் ஒன்றை
    செய்யும் முறையைத் தங்க்கள் முலம்
    தெரிந்து கொண்டேன்
    இப்போது அடிக்கடி சுய சமையல்
    செய்யவேண்டியுள்ளதால் தங்கள்
    நளபாகப் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாய் உள்ளது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. அட சமையல் கலை கூட தல"க்கு தெரியுமா சூப்பரு !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் ஏற்பட்டால் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்!
      நன்றி

      நீக்கு
  11. வாழக்காய் பொடிமாஸ்..... பார்க்கவே நல்லா இருக்கு சென்னை பித்தன் ஐயா.....

    பதிலளிநீக்கு
  12. (ஆமாம்!நேற்று சனிக்கிழமை,நாளை திங்கள் கிழமை,தெரியாதோ!பெரிசாச் சொல்ல வந்துட்டான் என்று முணுமுணுக்கிறீர்களா!)

    இப்படி எழுதுவதால் தான் எங்களுக்கு உங்களை அதிகம் பிடித்துள்ளது ஐயா :)))))
    சமையல் கலையிலும் தேர்ச்சி பெற்ற தங்களின் உணர்வைக் கண்டு மகிழ்ந்தேன் .
    இன்றைய பகிர்வினையும் முயற்சித்துப் பார்கின்றோம் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  13. சூப்பர் பொடிமாஸ்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. கடைசில கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்துக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எலுமிச்சை வாங்கி வைத்திருந்தேன்..அம்மா சாறு கலக்க வேண்டாம் எனச் சொல்லவே விட்டுவிட்டேன்!
      நன்றி

      நீக்கு
  15. பொடிமாசை விடவும் "உ.பருப்பு(நான் சேர்க்கவில்லை, அம்மாவுக்கு கடிப்பது சிரமம் என்பதால்)" - என்ற தங்களின் கரிசனம் மிகவும் சுவையானது...

    பதிலளிநீக்கு