வழக்கம் போல் இன்று,மாலைநேர
உலாவலுடன் சேர்ந்த சில வாங்குதல்களுக்காக வெளியே சென்றேன்.எப்போதும் என்னைச் சுற்றி
நடக்கும் நிகழ்வுகளை,கடந்து,நடந்து செல்லும் மனிதர்களை,அக்காட்சிகளில் வெளிப்படும்
ஏதாவது தனித்தன்மையை கவனித்தபடியே செல்வேன்.
இன்று என் உலாவில் என்னைக்
கவர்ந்த,கவர்ந்த என்பதை விட நெகிழ வைத்த காட்சியின் நாயகர்கள் ஒரு கணவன் மனைவி!கணவருக்கு
70 வயது இருக்கலாம்;மனைவிக்கு 60க்கு மேல்.முதலில் அவர்களைப் பூக்காரியின் முன் பார்த்தேன்.
பூக்காரியிடம் பூ வாங்கிக் கணவர் அதை மனைவிக்குத்தர அவர் அதைச் சூடிக் கொண்டார்.அக்காட்சி
என்னை இழுத்து நிறுத்தியது. இளம் தம்பதியினர் எத்தனையோ பேரின் இத்தகைய செயலைக் கண்டதுண்டு.
ஆனால் அதில் இல்லாத ஏதோ ஒன்று என்னை நிறுத்தியது.
அவர்கள் புறப்பட்டனர்.நான்
செல்லவேண்டிய வழியிலேயே அவர்கள் செல்ல ,அவர்களை நான் பின்தொடர வேண்டியதாயிற்று(முன்னால்
போயிருக்கலாமே என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது!) சாலையில் மாலை நேரத்து போக்குவரத்து
நெரிசல்.நடைபாதை என்பதே ஒன்று இல்லாத நிலை.நான் பார்த்துக்கொண்டிருந்தேன்;கணவரின் கையை
மனைவி ஆதரவாகப் பற்றிக் கொள்ள இருவரும் கை கோத்தபடி நடக்கத் தொடங்கினர்.இது போன்ற காட்சியும்
பலமுறை பார்த்திருக்கலாம்;இளம் தம்பதி ,காதலர்கள்
என்று பலரின் வடிவில். ஆனால் அதில் ,அந் நெருக்கத்தின் அடிப்படையில் காமம் தெரியாமல்
இருக்காது;அன்றைய இரவின் கற்பனைகள் கலக்காமல் இருக்காது .
ஆனால் இது வேறு.இவர்களுக்கு
மணமாகி 40 ஆண்டுகளாகியிருக்கவேண்டும்.பேரன் பேத்திகள் எடுத்திருக்கலாம்.வாழ்க்கையில்
பல இன்ப,துன்பங்களை,ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து வந்திருப் பார்கள்.ஆனால் இந்த வயதில்
அவர்கள்,ஒருவரின் அவசியத்தை மற்றவர் புரிந்து கொண்டிருக் கிறார்கள்.அந்தக் கைகோர்த்தலில்,புரிதல்
தெரிந்தது;அன்பு தெரிந்தது, ஆதரவு தெரிந்தது.ஒருவருக் கொருவர் நாங்கள் துணையாக இருக்கிறோம்
என்றுரைக்கும் கர்வம் தெரிந்தது.
நெகிழ்ந்து போனேன்.என்ன உன்னதமான ஒரு தாம்பத்தியம்!
வெள்ளிவிழா என்றொரு திரைப்படம்.அதில்
மனைவியை இழந்த ஜெமினி ஒரு மழை நேரத்தில் ஒதுங்கி நிற்கையில் மழைக்காக
ஒதுங்கிய ஒரு வயதான கணவனை அவரது மனைவி குடையுடன் வந்து அழைக்க இருவரும் ஒரு குடைக்கீழ்
அணைத்தபடி செல்வதைப் பார்க்கும் ஜெமினி உணர்ச்சிகரமாக நடித்திருப்பார்.ஜெமினி ஏற்ற
அந்தப்பாத்திரத்தின் நெகிழ்ச்சி எனக்குப் புரிந்தது.
அந்தக் காட்சியைப் படம்
பிடித்தேன்.ஒரு தனிநபர் சுதந்திரத்தில் நான் தலையிடுகிறேனோ என்ற உறுத்தல்.ஆனல் படம்
பின்னிருந்து எடுக்கப் பட்டிருப்பதால் யாரென்று தெரியாது. இந்தப் படத்தைப் பகிர்ந்து
கொளவதே நான் அந்த உன்னத தாம்பத்தியத்துக்குச் செய்யும் மரியாதை என்றெண்ணுகிறேன். இது
அவர்கள் அன்புக்கு எனது தலைதாழ்ந்த வணக்கம்!.
இளமையில் கணவர் வழிநடத்தச் சென்றவள்
இன்று கணவரை வழி நடத்திச் செல்கிறாள்!
இன்று கணவரை வழி நடத்திச் செல்கிறாள்!
இந்நேரத்தில்,2008 இல் என் பதிவில் நான் எழுதிய ஒரு குட்டிக்கதையை மீள்பதிவாக்க்
கொடுப்பது பொருந்தும் என எண்ணுகிறேன்.இதோ.........
//"ஏய்,சொர்ணம்,சொர்ண நாயகி,இங்க வாடி.ஒரே ஒரு தடவை."
"உங்களுக்கு வேற வேலையில்லை.பிள்ளையில்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடினானாம். "
"யாருடி கிழவன்?கையை மடக்கிக் காட்டறேன் பாரு,எப்படிக் கிண்ணுனு இருக்குன்னு.இரும்பு உடம்புடி, தெரியுமா?"
"ஆமாம் உங்க உடம்பைப் பத்தி எனக்குத் தெரியாம யாருக்குத் தெரியுமாம்? இப்போ கொஞ்சம் தொந்தரவு பண்ணாம இருங்க.எனக்குத் தூக்கம் வருது."
"எனக்கு வரல்லையே.வாடி.ஒரே ஒரு தடவை மட்டும்."
"அய்யோ,சொன்னாக் கேக்க மாட்டிங்களே.எனக்கு லேசாத் தலையை வலிக்குதுங்க.அதை சொல்ல வேணாமுன்னு பாத்தேன்."
"தலைவலியா?இதோ நான் தைலம் தேச்சு விடறேன்.அப்படியே படுத்துக்க."
"வேண்டாங்க,தன்னாலே சரியாயிடும்"
"ஒண்ணும் பேசாதே. கண்ணை மூடிப் படுத்துக்கோ.இப்படி நல்லாத்தேச்சு, அமுக்கி விட்டாத் தலவலி பறந்து போயிரும்"
"உங்க கை பட்டதுமே வலி போயிருச்சுங்க.வாங்க.இப்ப நான் தயார்"
"வேண்டாம் சொர்ணம்.நீ ஒய்வெடுத்துக்கோ.நானும் அப்படியே படுக்கிறேன்."
"ரொம்ப ஆசையாக் கூப்பிட்டீங்க.ஏமாத்தமாப் போயிடும்.வாங்க. "
"சரி,வா.உன்னை எப்படிக் கட்டறேன் பாரு"
"ஆமாம்,அதிலெ நீங்கதான் கெட்டிக்காரராச்சே "
இருவரும் "ஆடு புலி ஆட்டம்"ஆட ஆரம்பித்தனர்.
கணவன் மனைவி உறவில் உடல் முக்கியமல்ல.மனமே பிரதானம்.வயதாகி உடல் தளர்ந்து இச்சைகள் அற்றுப் போனாலும்,அன்பு குறைவதில்லை.மாறாக அதிகமாகிறது.இது ஒருவரின் துணையை மற்றவர் உணர்ந்த நிலை.ஒருவர் இன்றி மற்றவர் வாழ்க்கையைப் பற்றி நினைப்பதற்கே பயப்படும் நிலை. ஒருவரைச் சார்ந்தே மற்றவர் வாழும்,இயங்கும் நிலை.
இதுவே இல்லறம் என்னும் நல்லறம்.//

-
"உடம்பொடு உயிரிடைஎன்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு"----(குறள்)Top of Form
ஒவ்வொரு பதிவு முடிந்ததும் குறளை சொல்வது சரியில்லை... இதை நான் கண்டிப்பாக ஆதரிக்கிறேன்... ஹிஹி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா...
எதை ஆதரிக்கிறீர்கள்?குறள் சொல்வதையா? சொல்வது சரியில்லை என்ற உங்கள் கருத்தையா?
நீக்குநன்றி தனபாலன்
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
அன்பின் வெளிப்பாடு பற்றிய பதிவு அருமையாக உள்ளது..
இளமையில் கணவர் வழிநடத்தச் சென்றவள்
இன்று கணவரை வழி நடத்திச் செல்கிறாள்!
அருமையான சொற்பதம்.. வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்.
நீக்குஇதிலிருந்து மூன்று விஷயங்கள் தெரிகின்றன: (1) உங்களுக்கு வயதாகிவிட்டது. (2) நீங்கள் பார்த்த எழுபது வயதுப் பெண்மணிக்குத் தலையில் பூவைக்கும் அளவுக்குக் கூந்தல் இருக்கிறது.(3) பூவை எங்குப் பார்த்தாலும் உடனே வாங்கித்தரவேண்டும் என்று அந்த அம்மாள் என்றோ இட்ட கட்டளையை இன்னும் அவரது கணவன் நினைவில் வைத்திருக்கிறார். இதனால் அவரது ஞாபக சக்தி இன்னும் குறையாமல் இருக்கிறது.
பதிலளிநீக்கு1)இது ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்ததுதான்.என் புகைப்படம் கூடச் சமீபத்தியதுதான்!
நீக்கு2)அவசியிமில்லை!சவுரி இருந்தால் போதாதோ!
3)எதை மறந்தாலும் இப்படிப்பட்ட விஷயங்களை மறக்க முடியுமா?!
:) :)
நன்றி கவிஞரே
//வயதாகி உடல் தளர்ந்து இச்சைகள் அற்றுப் போனாலும்,அன்பு குறைவதில்லை.மாறாக அதிகமாகிறது//
பதிலளிநீக்குயதார்த்தைப் படம் பிடித்துக் காட்டியமைக்கு நன்றி!
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளாக இருக்கலாம்.
ஆனால் அன்புக்கு நாட்கள் கணக்கு உண்டோ?
இல்லை இல்லவே இல்லை!
உண்மைதான் சார்!
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அருமையான காட்சி அதை தொடர்ந்து சொன்ன குட்டிக்கதையும் பிரமாதம். எழுத வந்தால் போதும் எந்த ஒரு காட்சியையும் அழகாக சொல்லிவிட முடியும் என்பதற்கு உங்களுடைய எழுத்து ஒரு உதாரணம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜோசப் சார்
நீக்குஎன்கருத்தை இப் பதிவுக்கு எழுத வேண்டுமா ! பித்தரே! நீங்கள் அறியாததா!
பதிலளிநீக்குஉங்கள் மௌனமே பேசும்!
நீக்குநன்றி ஐயா
அருமையான பகிர்வு,ஐயா!நன்று,இந்தக் காலத்திலும்..............மகிழ்ச்சி!!!
பதிலளிநீக்குநன்றி சுப்பிரமணியம் யோகராசா
நீக்குதாம்பத்திய வாழ்கையின் ரகசியத்தை அழகாக சொல்லி விட்டீர்கள் தல...!
பதிலளிநீக்குநன்றி மனோ!
நீக்குஅந்த ஆதர்ஷ தம்பதிக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குகதை அருமை.
நன்றி குமார்!
நீக்குதிருமண பந்தத்திற்கு இதை விட நல்லதொரு எடுத்துக்காட்டு
பதிலளிநீக்குஎன்ன தான் உண்டு ! காமம் கடந்த அன்பில் தான் ஜீவன்
வாழ்கிறது .அருமையான பகிர்வு ஐயா .உங்கள் ரசனையைக்
கண்டு வணகுகின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
மனத்தின் உணர்வுகள் சொற்களாகி வந்தன!
நீக்குநன்றி அம்பாளடியாள்
ஆதர்ஷ தம்பதிகளுக்கு குறள் நெறி விளக்கம் அருமை !
பதிலளிநீக்குத.ம 8
நெகிழ்ந்தேன்......
பதிலளிநீக்குஆழமான அன்பின் வெளிப்பாட்டை
பதிலளிநீக்குரசித்ததும் ரசிக்கும்படிக் கொடுத்ததும்
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 9
பதிலளிநீக்குஅன்பின் அடையாளம்
பதிலளிநீக்கு