ஆரம்பம் படம் நேற்று வெளியாகி பல பதிவர்கள்
விமரிசனமும் எழுதி விட்டார்கள். விடியும்
விடியாத காலைப்பொழுதின்
அரை இருட்டில் திரை அரங்கில் நிற்கும் புகைப் படம் வேறு!
இப்படி
எல்லாம் கவலை இன்றி ஜாலியாக இவர்கள் படத்துக்குப்
போவதைப் பார்க்கும்
போது காதில் புகை வருகிறது!.பல விமரிசனங்களைப்
படித்த பின் பொதுவாக எனக்குப்
புலப்படுவது படம் ”பெட்டி அலுவலக
அடி”( box office hit)!அஜித் ஒரு நல்ல மனிதர்.
அதற்காகவேனும் படம் வெற்றியடைய வேண்டும்.
எந்தச் செயலிலும் ஆரம்பம் என்பது முக்கியம்.ஆரம்பம்
சரியாக அமைந்தால்தான் செயல்
சிறப்பாக முடியும்.’நல்ல ஆரம்பம் பாதி முடிந்தது போல ’என்று
சொல்வார்கள்.எந்தச்
செயலை யும் நன்கு சிந்தித்துப் பின் தாமதமின்றி ஆரம்பிக்க
வேண்டும்.இது சரியாக நடக்குமா நடக்காதா என்ற யோசனையில் காலம் கடத்திக் கொண்டே
இருந்தால் என்ன பயன்?
வள்ளுவர் சொல்கிறார்...
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு”
ஆரம்பிக்கும் முன் சிந்திக்க வேண்டும்
ஆரம்பித்த பின் சரியா தவறா என யோசிப்பது தவறு
ஆரம்பிப்பதற்கு நாள், நட்சத்திரம்,நல்ல
நேரம் பார்க்கும் பழக்கம் அநேகமாக எல்லோருக்கும்
இருக்கிறது.இங்கு’ செவ்வாயோ
வெறுவாயோ’ என செவ்வாய்க் கிழமையை ஒதுக்குகிறோம்.
ஆனால் வடக்கே அந்நாள்’
மங்கள்வார்’ எனச் சிறப்புப் பெறுகிறது. ராகு காலம்,எமகண்டம் போன்றவற்றில் எதையும்
ஆரம்பிக்க கூடாது என்று சொல்வார்கள்.
கல்வி ஆரம்பிக்க விஜயதசமி.
வீடு கட்ட ஆரம்பங்களுக்கு வாஸ்து
நாட்கள்
இப்படி ஆரம்பம் செய்ய நாட்கள்
குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வியின் ஆரம்பம் அட்சராப்பியாசம்
சாப்பிட ஆரம்பம் அன்னப்பிராசனம்
மணவாழ்வுக்கு ஆரம்பம் சாந்தி
முகூர்த்தம்!
இவ்வாறு எச்செயலுமே நல்லவிதமாக
ஆரம்பிக்கப்பட வேண்டும்!
நமது எண்ணங்கள் எப்போதும் ஆரம்பத்தின்
முடிவிலோ,முடிவின் ஆரம்பத்திலோ இல்லாமல் ஆரம்பத்தின் ஆரம்பத்தில் இருக்க வேண்டும்!
’
’ஆரம்பத்’துக்கும் நல்ல ஆரம்பம்
இருப்பதாக அறிகிறேன்!
நாளைக் காலை தீபாவளியை ஒரு லட்சுமி
வெடியுடன் ஆரம்பிப்போம்!
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
டிஸ்கி:இதைப்படித்து முடித்து விட்டு
பலர்”ஆ.......ரம்பம்!” என்று அலறுவது எனக்குக் கேட்கிறது!ஹி,ஹி,!
இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் அய்யா...
பதிலளிநீக்குநன்றி யுடன் வாழ்த்துகள்
நீக்குஅஜீத் ஐயா கூடா சினிமா விமர்சனம் எழுதுறாரேன்னு ஆச்சரயப்பட்டுக்கிட்டே வந்தால்..., அணுகுண்டு புஸ்ஸ்சுன்னு போன மாதிரி ஒரு ஃபீல்
பதிலளிநீக்குல்க்ஷ்மி வெடி வெடிக்கு பதிலா ஒரு மத்தாப்பு போட்டுக்கலாம் .;)
பதிலளிநீக்கு‘அடையாறு அஜீத்’ அவர்கள் ‘ஆரம்பம்’ வெற்றிபெற வேண்டுமென நினைப்பதில் தவறில்லை!
பதிலளிநீக்குஆரம்பம் தகவல்கள் அருமை! அஜித் திற்கு இது வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு'தல' அவர்கள் சொன்னால் சரி...
பதிலளிநீக்குஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
தீபாவளி நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குடிஸ்கி:இதைப்படித்து முடித்து விட்டு பலர்”ஆ.......ரம்பம்!” என்று அலறுவது எனக்குக் கேட்கிறது!ஹி,ஹி,!///இல்லையே,ஐயா?அருமையாக ஆரம்பித்து,அருமையாகக் கொண்டு சென்று அருமையாக.....நிறைவு செய்திருக்கிறீர்கள்!
பதிலளிநீக்குதல அஜீத்தின் படத்துக்கு அடையாறு அஜீத்தின் விமர்சனமா? அதுவும் வந்த மறுநாளேன்னு கொஞ்சம் சர்ப்ரைஸோட தான் உள்ள வந்தேன். தலைப்பையும் ஜஸ்டிஃபை பண்ணி, படிககறவங்களையும் ஏமாத்தாம இப்படி ஒரு அழகான பதிவு தர்றது உங்களுக்கு (மட்டுமே) உரிய தனிக்கலை தல! உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அய்யா!
பதிலளிநீக்குஆரம்பம் படத்திற்கு சிறப்பான விமர்சனம் அய்யா. நண்பர் பால கணேஷ் அவர்கள் சொல்வது உண்மையா அய்யா! (தல அஜீத்தின் படத்துக்கு அடையாறு அஜீத்தின் விமர்சனமா?)
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
Delete
நீங்களும் ஆரம்பித்து விட்டீர்களா ? சபாஷ்!
பதிலளிநீக்குTyped with Panini Keypad
சிறப்பான தத்துவங்களுடன் ஆரம்பித்த தீப ஒளி வாழ்த்துக்களுக்கு
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா .தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கூட
எமது தீப ஒளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ...
பதிவு அருமை வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு