சைத்தான் ஒரு முறை தன் தொழிலை நிறுத்தி
விட்டு ஓய்வெடுக்கத் தீர்மானித்தான்.
அவனது தொழிற்கருவிகளையெல்லாம் குறைந்த
விலைக்கு விற்பதாக அறிவித்தான்.
அனைத்துக் கருவிகளும் பார்வைக்கு
வைக்கப்பட்டன
ஆணவம்,காமம்,வெறுப்பு,கோபம்,பொறாமை ,பேராசை,அதிகார
வெறி இப்படிப் பலப்பல..
ஒரு கருவி…பயன்பாட்டால் தேய்ந்து போன ஒரு கருவிக்கு மட்டும் சைத்தான் மிக அதிக விலை
கேட்டான்.
ஒருவர் கேட்டார்”அது என்ன?”
”இதுவா?ஊக்கமின்மை,மனச்சோர்வு ,நம்பிக்கையின்மை!” என்றான் சைத்தான்
“அதற்கு மட்டும் ஏன் அதிக விலை?”
ஏனென்றால் இதுதான் எனக்கு மிக உபயோகமாக இருந்திருக்கிறது,இதன்மூலம்
எந்த மனிதனின் இதயத்துக்குள்ளும் புகுந்து அவனை மனச்சோர்வுக்கும் அதைரியத்துக்கும்
ஆளாக்க என்னால் முடியும்.அவன் அவ்வாறு ஆகிவிட்டான் என்றால் நான் நினப்பதை யெல்லாம் அவனைச்
செய்ய வைக்க என்னால் முடியும்.அநேகமாக இந்தக் கருவியை, மற்றவற்றைக்காட்டிலும், எல்லா
மனிதர்கள் மீதும் பயன்படு த்தியிருக்கிறேன்.எனவேதான் இது தேய்ந்து போயிருக்கிறது.”
ஆம் அன்பர்களே!நம் முயற்சியில்
வெற்றி பெறவில்லை,நம் இலக்கை எட்டவில்லை என்றால்,எளிதில் மனச்சோர்வடைகிறோம்.தைரியத்தை
இழக்கிறோம்.கடவுள் மீதான நம்பிக்கையை ,நம் தன்னம்பிக்கையுடன் சேர்த்து இழக்கிறோம்.
அந்த நிலையில் வெற்றி பெற்றவனைப் பார்த்து பொறாமை வருகிறது;வெறுப்பு
வருகிறது; பிறர்மீதெல்லாம் கோபம் வருகிறது.நம்பிக்கையற்றுப் போகிறது.நாமும் வெற்றி
பெற வேண்டும் என்ற வெறியில் தகாத வழியில் கூடச் செல்ல எண்ணுகிறோம்.
இப்படி எல்லா அவலங்களுக்கும் நமது அதைரியமும்,மனச்சோர்வும் வழி
வகுத்து விடுகின்றன. எனவே எப்போது நம்பிக்கை இழக்காதீர்கள்.எதிர் மறையான எண்ணங்களுக்கு
இடம் கொடுக்காதீர்கள்.என்னால் முடியும் என்ற உறுதியுடன் முயற்சியைத் தொடருங்கள்.
வெற்றி
நிச்சயம்.
(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)
(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)
// எதிர் மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்... //
பதிலளிநீக்குஸ்வாமி பித்தானந்தாவின் வெற்றி உரை arumai...!
பித்தானந்தாவின் ஆசிகள் உங்களுக்கு!
நீக்குநன்றி தனபாலன்
ஊக்கமின்மை,மனச்சோர்வு ,நம்பிக்கையின்மை!
பதிலளிநீக்கு>>
நிஜமாவே மிகப்பயங்கரமான ஆய்தங்கள்தான் இவை.
நன்றி ராஜி
நீக்குகண்ணுக்கு எட்டியதெல்லாம் கானல் நீர்
பதிலளிநீக்குகடவுளை நம்புவதால் முக்தி தரும் இன்பம்
இது முனிவர்கள் மகான்கள் பெற்ற இன்பம் நாம்
இதுவரைப் பெற்றது போதும் பெறுதற்கரிய அந்த
முக்தி தரும் இன்பத்தைப் பெற்றிட முயல்வோம் .
சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா
நன்றி அம்பாள் அடியாள்
நீக்குபித்தம் தெளிந்தது... சுவாமி அடியேனை தங்கள் சிஷ்யனாய் ஏற்றுக் கொண்டால் யாம் பாக்யவான் ஆவோம் ஸ்வாமி :-)
பதிலளிநீக்குசீனு!ஸ்வாமியிடம் கேட்டேன்.நீங்கள் ஏற்கனவே சிஷ்யர்தான் என்று சொல்கிறார்!
நீக்குநன்றி
தொடரட்டும் பித்தானந்தாவின் சொற்பொழிவு......
பதிலளிநீக்குத.ம. 4
தொடரும் என்று சொல்கிறார் ஸ்வாமி
நீக்குசுவாமி பித்தானந்தா அடிகளின் உபதேசங்கள் பிரமாதம் . அவர் ஆசிரமம் எது அமைகின்றாரா? அவரிடம் சீடராக சென்று சேர ஒரு எண்ணம் உள்ளது.
பதிலளிநீக்குலிஸ்ட்டில் உங்கள் பெய்ரும் இருப்பதாகச் சொல்கிறார் ஸ்வாமி!
நீக்குநன்றி மாணிக்கம்
ஸ்வாமி பித்தானந்தா எங்கு இருந்து அருள்வாக்கு சொல்கிறார் ?
பதிலளிநீக்குஎங்கும் இருப்பார்! தற்சமயம் சென்னை கேம்ப்!
நீக்குநன்றி ரூபக்
சுவாமி பித்தானந்தாவின் கருத்துக்கள் அருமை. அவரது முழு உரை கிடைக்குமா?
பதிலளிநீக்குஅச்சில் இருக்கிறது!
நீக்குநன்றி சார்
சென்னை பித்தானந்தா அவர்களின் அறிவுரை சூப்பர்
பதிலளிநீக்குநன்றி முரளி.
நீக்குஸ்வாமியின் ஆசிகள் உங்களுக்கு
//எனவே எப்போது நம்பிக்கை இழக்காதீர்கள்.எதிர் மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.என்னால் முடியும் என்ற உறுதியுடன் முயற்சியைத் தொடருங்கள்.
பதிலளிநீக்குவெற்றி நிச்சயம்.//
நல்லதொரு பயனுள்ள விஷ்யம். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
நன்றி வைகோ சார்
நீக்குநல்லதொரு குட்டிக்கதை...
பதிலளிநீக்குநன்று...
தன்னம்பிக்கையோடும் ஊக்கத்தோடும் செயல்படுவோம்...
நன்றி சௌந்தர்
நீக்குசுவாமிஜி... மேதகு பித்தானந்தா அவர்களின் (அறி)உரை ரொம்ப அருமை.... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி குமார்
நீக்குஇதன்மூலம் எந்த மனிதனின் இதயத்துக்குள்ளும் புகுந்து அவனை மனச்சோர்வுக்கும் அதைரியத்துக்கும் ஆளாக்க என்னால் முடியும்.//பாருங்களேன் தைரியத்தை?
பதிலளிநீக்குநல்லப் பகிர்வு
நமது பலவீனமே கெட்ட சக்திகளின் பலம்!
நீக்குநன்றி கண்ணதாசன்
ம்..நன்றாக இருக்கு அருளுரை
பதிலளிநீக்குநன்றி கோவைநேரம்
நீக்குarumai.....
பதிலளிநீக்குayya....
நன்றி சீனி
நீக்குசாத்தானின் சக்திகளை எதிர்த்து தடுக்க ஆண்டவன் துணை புரிவானாக...
பதிலளிநீக்குநன்றி மனோ
நீக்குஎல்லா அவலங்களுக்கும் நமது அதைரியமும்,மனச்சோர்வும் வழி வகுத்து விடுகின்றன. எனவே எப்போது நம்பிக்கை இழக்காதீர்கள்.எதிர் மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.என்னால் முடியும் என்ற உறுதியுடன் முயற்சியைத் தொடருங்கள்.
பதிலளிநீக்குவெற்றி நிச்சயம்.
பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
நன்றி இராஜராஜேஸ்வரி
நீக்குபித்தானந்தாவின் கருத்து புத்திக்குள் புகுத்தி கொண்டேன்
பதிலளிநீக்குநன்றி அரசன்
நீக்குஎனவே எப்போது நம்பிக்கை இழக்காதீர்கள்.எதிர் மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.என்னால் முடியும் என்ற உறுதியுடன் முயற்சியைத் தொடருங்கள்.//
பதிலளிநீக்குஅற்புதமான வரிகள் சார். இந்த நம்பிக்கை இழப்புதான் இன்று பல படித்த இளைஞர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. சரியான நேரத்தில் வந்துள்ள சரியான அறிவுரை.
நன்றி ஜோசப் சார்
நீக்கு