தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூலை 19, 2013

யார் அழகி?!



அழகு என்பது என்ன?

ஒருவரது அழகு முகத்தில் இருக்கிறதா?உடலில் இருக்கிறதா?உள்ளத்தில் இருக்கிறதா?

ஒருவருக்கு அழகாக இருப்பது மற்றவருக்கும் அழகாய்த் தெரியுமா?

கீட்ஸ் சொன்னார்”அழகிய பொருள் என்றும் ஆனந்தம் தருவது” என்று.

கீட்ஸுக்கு அழகாகத் தோன்றுவது எனக்கும் தோன்ற வேண்டும் என அவசியம் இருக்கிறதா?

இந்தக் கேள்விகள் குறிப்பாக மனிதர்களின் அழகு குறித்தே இங்கு எழுப்பப்படுகின்றன!

நீங்கள் அழகென்று நினைக்கும் ஒரு பெண் எனக்கு அழகாகத் தோன்றாமல் போகலாம்!

பார்க்கும் பார்வையில்தான் வேறுபாடு.

ஒரு மன்னன் இருந்தான்.

அவனுக்கு கவிதை மிகவும் பிடிக்கும்;

கவிஞர்களைத் தேடித்தேடி அழைத்துக் கவிதை கேட்பான்.

ஒரு முறை பக்கத்து ஊரில் உள்ள ஒரு கவிஞரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை அழைத்து வரச் சொன்னான்.

ஆனால் அவர் இன்னும் ஓராண்டுக்கு எங்கும் செல்ல முடியாது என்று சொல்லி விட்டார்.

ஏனெனில் அவர் காதலிக்கும் பெண்ணுக்கும் அவருக்கும் ஓராண்டுக்குப் பின்தான் திருமணம். 

அதுவரை அவளை விட்டு வர விருப்பமில்லை;அவளை உடன் அழைத்து வரவும் முடியாது.

மன்னன் அவள் பேரழகியோ என எண்ணினான்

கவிஞரின் வருகைக்காக் காத்திருந்தான்..

கவிஞர் மனைவியோடு வந்தார்.

மன்னன் மிகுந்த ஏமாற்றம் அடைந்தான்.

ஏனெனில்”அவள் அப்படி ஒன்றும் அழகில்லை”

மன்னன் கவிஞரிடம் கேட்டான்”இவளையா பிரிந்து வர முடியாது என்றீர்கள்;அவ்வளவு அழகாக இல்லையே?”

கவிஞர் சொன்னார்”மன்னா!என் கண்களால் பாருங்கள்!”

காதல் மணம் செய்து கொண்ட பல இணைகளைப் பார்க்கும்போது எனக்கு இதுதான் தோன்றுகிறது.

என்ன பார்த்தான்(ள்) அவன்(ள்) அவளி(னி)டம் காதலில் விழுவதற்கு?

அவர்கள் கண்களால் நாம் பார்த்தால் தான் நமகு அது புரியும்!

எனவேதான் காதலுக்குக் கண்ணில்லை என்று சொன்னார்களோ!



10 கருத்துகள்:

  1. //என்ன பார்த்தான்(ள்) அவன்(ள்) அவளி(னி)டம் காதலில் விழுவதற்கு?

    அவர்கள் கண்களால் நாம் பார்த்தால் தான் நமகு அது புரியும்!//

    யெஸ். கரெக்ட். ஏதோ ஒருவித கவர்ச்சி.

    அது அழ்காகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

    அறிவாக, அன்பாக, பண்பாக, புத்திசாலித்தனமாக, நகைச்சுவை உணர்வாக ...... என எதுவாக வேண்டுமானாலும் இருக்கக்கூடும்.

    அதையெல்லாம் யாருக்குமே விளக்கவோ புரிய வைக்கவோ இயலாது. அதுதான் காதலின் சூட்சுமம். ;)

    பதிலளிநீக்கு
  2. கீட்ஸ் சொன்னது :
    Beauty is Truth , and Truth Beauty
    That's all Ye knew on earth, and
    All ye need to know.

    கீட்ஸின் கூற்றுப்படி, உண்மையே அழகு.
    எது உண்மை ?
    எது நிலைத்திருப்பதோ அதுவே உண்மை.
    எது நிலையில்லையோ அது உண்மையில்லை.
    அழகு எனக்கொள்வது நமது மனதில் உள்ள மாயையே.

    ஆகவே சத்யம் சிவம் சுந்தரம் என்றும் சொல்லப்பட்டது.
    சிவம் என்னும் பொருள் இவ்விடத்து மங்களம் .
    எது உண்மையோ மன நிறைவினைத்தருமோ அதுவே அழகு.

    வயது பதினாறு இருக்கும் இள வயது மங்கை. அவளை
    மங்கியதோர் நிலவினிலே பார்த்து மயங்கினது அழகு எனச்சொன்னால்,

    அதே நங்கை தனது அடுத்த நாற்பது வருடங்களில்,
    தனது பண்பாலும் அன்பாலும் வசீகரிக்கின்றாள்.

    Beauty is then perceived as Truthfulness, Grace, Magnanimity, and
    that which emits Universal Love.

    இவை யாவும் எங்கு காணப்படினும் அதுவே அழகு.

    மதர் தெரிசா அழகு.

    தனது தொண்ணூறு வயதிலும் என்
    மதர் எனக்கு அழகாகத் தோன்றினாள்.

    சுப்பு தாத்தா
    www.subbuthatha72.blogspot.com
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. //எனவேதான் காதலுக்குக் கண்ணில்லை என்று சொன்னார்களோ!//
    உண்மைதான்.காதலுக்கு கண்ணில்லையே தவிர காதலர்களுக்கு கண்கள் உண்டு என்பது சரிதானே!

    பதிலளிநீக்கு
  4. உள்ளங்களால் சேர்வதுண்டு... (மனதிற்கு கண்கள் உண்டு...!)

    பதிலளிநீக்கு
  5. காதலுக்கு கண்ணில்லைன்னு உங்களுக்கு தெரியாதா ஐயா?!

    பதிலளிநீக்கு
  6. பார்க்கும் பார்வையில்தான் வேறுபாடு.//உண்மையே

    பதிலளிநீக்கு
  7. கண்ணில் படுவது மட்டுமே அழகில்லை! நடத்தை, பேசும் முறை, பழகும்விதம்னு பலதும் இருக்கு. அதெல்லாம் ஒருமுறை பார்ப்பவங்களுக்கு எப்படித் தெரியும்? காதலனின் கண் வழியாகப் பார்ததால்தான் அவள் பேரழகு புலப்படும். வெகுசரி!

    பதிலளிநீக்கு
  8. :)

    காதலுக்கு கண்ணில்லை..... பார்க்கும் பார்வையில் தான் வித்தியாசம்!

    பதிலளிநீக்கு