தொடரும் தோழர்கள்

சனி, ஜூலை 27, 2013

பதிவுக்குப் பின்?!(சென்ற பதிவின் தொடர் வினை)

சென்ற பதிவின் பின்னூட்டத்தில் திரு தமிழ் இளங்கோ அவர்கள் சொல்லியிருந்தார்......... ..............”உங்களின் இந்த பதிவைப் படித்துவிட்டு, நான் தானய்யா அந்த ஒருநாள் ரயில் சிநேகம் என்று ஒருவர் வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை”

அதன் விளைவே இப்பதிவு...........



கணினி முன் அமர்ந்து வலைப்பூகளைப் படித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் கூப்பிட்டார் ”ராதா!இங்கே வா!”

அருகில் வந்தாள் அவர் மனைவி ராதா.

”பாரு,ரயிலில் போகும்போது பார்த்த ஒரு பெண்ணிடம் ஏற்பட்ட காதல் பற்றிப் பதிவு எழுதியிருக்கிறார் ஒருவர்.காலை ரயிலில் ஏறினாராம்;இருவரும் பார்த்தார்களாம்;மாலை சென்னை வருவதற்குள் இருவரும் காதலில் விழுந்தார்களாம்!சுத்த மாட்டுச் சாணம்!இது காதலா?து வெறும் இளம் வயது மோகம்;அவ்வளவுதான்.”

ராதாவுக்கு மனத்தில் ஒரு நெருடல்.

விசு தொடர்ந்தார்”ஒரு வேடிக்கை பாரு! நீ கல்யாணத்துக்கு முன்னால் இருந்தயே,தலையைத் தழைய வாரிப் பின்னல் பின்னி பூ வச்சு,அப்புறம் அம்மன் படம் மாதிரி மூக்கில ரெண்டு மூக்குத்தியோடு கட்டுப்பெட்டித்தனமா! அந்தமாதிரி இருந்தாளாம் அந்தப் பெண்!பாத்தவுடன் விழுந்துட்டாராம்!வெறும் பைத்தியக்காரத்தனம்.அப்புறம் ராதா அந்த வர்ணனையைப் படிக்கும்போதுஏனோ உன் பழைய தோற்றமே நினைவுக்கு வருகிறது”சொல்லிச் சிரித்தார் விஸ்வநாதன்.

திருமணத்துக்கு முன் அவள் அப்படித்தான் இருந்தாள்.அதுதான் அவளுக்குப் பிடித்திருந்தது. கல்லூரித்தோழிகள் கேலி செய்ததையெல்லாம் அவள் பொருட்படுத்தியதேயில்லை.

ஆனால் எல்லாம் மாறி விட்டது.பெண்பார்த்துப் பிடித்திருக்கிறது என்று சொல்லும்போதே விசு சொல்லி விட்டார்,கல்யாணத்துக்கு முன் மூக்குத்தியெல்லாம் கழட்டி விட வேண்டுமென்று. திருமணமாகி தில்லி வந்த பின் அவரே அவளை ஒரு அழகு நிலையத்துக்கு அழைத்துச் சென்று முடியைக் குட்டையாக வெட்டச் சொல்லி விட்டார்.நடை உடை பாவனை எல்லாம் மாறிவிட்டது.

இத்தனை ஆண்டுகள் கழிந்தும் மறக்க இயலாத அந்த நாள்;அந்தஒரு பகல் நேர ரயில் பயணம்.அவனாக...அவராக இருக்குமோ?நம்மைப் போலவே அவரும் அதை மறக்காமல் இருக்கிறாரோ? அப்படியானால் அந்தப் பயணத்துக்குப்பின் ஏன் அவர் தன்னைத் தொடர்பு கொள்ள முயலவில்லை?

கொஞ்சம் ரத்த அழுத்தம் ஏறுவது போல் உணர்ந்தாள்.

விஸ்வநாதன் எழுந்தார்”சரி ராதா,நான் போய் ரங்கனைப் பாத்துப் பேசிட்டு வரேன் .ஒரு இரண்டு மணி நேரத்துல வந்துடுவேன்.வந்ததும் சாப்பாடுதான்” வெளியே போய் விட்டார்.

ராதா கணினி முன் அமர்ந்தாள்.அவர் கடைசியாகப் பார்த்த தளத்தைத் திறந்தாள்”நான்பேச நினைப்பதெல்லாம்!”படித்தாள்.ஓ!விலாசம் காதில் விழவில்லையா?ஒரு சிறு ஆறுதல்.நீண்ட நாள் உறுத்திய கேள்விக்கு விடை!

சுய குறிப்புக்கான புகைப்படத்தைப் பார்த்தாள்”வயதைக் குறைத்துப் பார்த்தாள். அவர்தான்; தன்னை இன்னும் மறக்காமல் எழுதியிருப்பது அவரேதான்!”

”ரவிவர்மாவின் லட்சுமி!” சிரிப்பு வந்தது.இப்போது பார்த்தால் என்ன சொல்வார்?நவீன ஓவியம்?!

வாய்விட்டுச் சிரித்தாள்;ஆனால் அதனுள்ளும் ஒரு சோகம்!

மீண்டும் பதிவைப் பார்த்தாள்.

கைபேசி எண் கண்ணில் பட்டது.

தொலைபேசியை எடுத்தாள்

எண்களை ஒற்றினாள்.

இதயம் படபட என்று அடித்தது.

மணி அடித்தது;எடுக்கப்பட்டது

“ஓம் நமச்சிவாய”

என்ன இது யாராவது சாமியாரா?

“தயங்கிக்கேட்டாள்”ராதாகிருஷ்ணன்?”

”ஆம்!ராதாகிருஷ்ணன்தான் பேசுகிறேன்.நீங்கள்...?”

முகமெல்லாம் வியர்வை.துடைத்துக் கொண்டாள்.

“ஹலோ!யார் பேசுவது ” குரல்

இத்தனை நாளுக்குப்பின் ஏன் குழப்ப வேண்டும்;யாருக்கு என்ன பயன்?அந்த ராதா இன்று இல்லை.அவரவருக்கு அவரவர் வாழ்க்கை.நினைவுகள்,நினைவுகளாகவே இருக்கட்டும்.

தொடர்பைத் துண்டித்து விட்டு நாற்காலியில் சாய்ந்தாள்
  
டிஸ்கி:(பெயர்களை மாற்றியிருக்கிறேன்)

40 கருத்துகள்:

  1. நினைவுகள் நினைவுகளாகவே இருப்பது நினைவிற்கு நல்லது...!

    இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று...!

    பதிலளிநீக்கு
  2. என்ன ஆச்சரியம் இப்படியும் நடக்குமா ?

    பதிலளிநீக்கு
  3. முந்தைய பதிவை அப்படியே தொடர்ந்து சிறுகதை ஆக்கியது அருமை

    பதிலளிநீக்கு
  4. நல்ல கற்பனை!
    " எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் " - என்ற தங்கள் பதிவின் தலைப்பில் உள்ள சொற்களில் ஒரு எழுத்தை மட்டும் எடுத்து விட்டேன். இப்போது ... ...

    ” எதனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் “

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சத்தை அதிகமாக்கியது தாங்களே!
      நன்றி தமிழ் இளங்கோ

      நீக்கு
  5. முதலில் கவிதை.. பிறகு சிறு கதை....அடுத்து என்ன ?

    கட்டுரையா?


    மிகவும் ரசிக்கும்படியான பகிர்வு...!!!

    ஓரீரு வார்த்தைகள்... ஆனால் வெகு விரைவாக படித்து முடித்து புரிந்துகொள்ள போதுமானதாக இருந்தது... !!

    மிக்க நன்றி ஐயா..!!

    பதிலளிநீக்கு
  6. //(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )//

    நான் சொல்ல வந்ததை எனக்கு முன்பே அழகாகச் சொல்லிவிட்டார் என் அருமை நண்பர் திருச்சி திரு தி. தமிழ் இளங்கோ, ஐயா. அவருக்கு என் நன்றிகள்.

    உங்களின் இந்தப்பதிவுக்குப் பாராட்டுக்கள், ஐயா..

    பதிலளிநீக்கு
  7. Visit : http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_27.html

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான படைப்பிற்கு பாராட்டுக்கள் ஐயா .தமிழ் இளங்கோ ஐயாவின்
    வலைத்தளத்தையும் இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்ய முற்பட்ட
    போதுதான் தெரிந்துகொண்டேன் .உங்கள் தளத்திற்கு முன்னர் கொடுத்த
    அதே மருந்து தான் இப்போது இவர் தளத்திற்கும் தேவைப் படுகிறது .இந்தத்
    தகவலையும் முடிந்தால் அவருக்கு அறியத் தாருங்கள் ஐயா .மிக்க நன்றி
    பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலைத் தெரிவித்து விட்டேன்!

      நீக்கு
    2. இன்று இதுபற்றி “ துள்ளித் துள்ளி ஓடும் வலைத்தளம் ” என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன். நன்றி! http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_9497.html

      நீக்கு
  9. கற்பனை மிக அருமை! சிறப்பாக சிறுகதையாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. இந்த பதிவு, திரு தி.தமிழ் இளங்கோ அவர்களின் கருத்துப்படி நடந்தால் எப்படி இருக்கும் என நினைத்து எழுதி இருக்கிறீர்கள். கலைமகளில் முன்பு இதுபோல் ஒரு எழுத்தாளர் ‘அவளுக்கு’ என்று எழுத, இன்னொரு எழுத்தாளர் அந்த கதையையொட்டி ‘அவருக்கு’ என எழுத மூன்றாமவர் அதன் தொடர்ச்சியாக ‘அவளுக்கும் அவருக்கும்’ என எழுதியது நினைவுக்கு வருகிறது. ஆனால் இங்கு நீங்களே தொடங்கி, நீங்களே முடித்துவிட்டீர்கள். அருமை. வாழ்த்துக்கள்! உண்மையில் இராதா கைப்பேசியில் கூப்பிட்டிருந்தால் பதில் அளித்தவர் பெயர் இராதாகிருஷ்ணனாக இருந்திருக்காதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ராதாவானால் ராதாகிருஷ்ணன்--வேறு யாரோவானால் ,வேறு யாரோ
      நன்றி சபாபதி சார்

      நீக்கு
  11. நினைவுகள் நினைவுகளாகவே இருக்கட்டும் ஐயா...
    கதையாக இருந்தாலும் நிஜமே ஆனாலும் அவரவர் வாழ்க்கை அவரவருக்கு....
    அருமை....

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சென்னைகாதலரே,
    மீண்டும் வந்துவிட்டேன். இனியும் வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கக்கு மாணிக்கம்!வாங்க!மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,முன்பு போல் கலக்குங்க!

      நீக்கு
  13. இத்தனை நாளுக்குப்பின் ஏன் குழப்ப வேண்டும்;யாருக்கு என்ன பயன்?அந்த ராதா இன்று இல்லை.அவரவருக்கு அவரவர் வாழ்க்கை.நினைவுகள்,நினைவுகளாகவே இருக்கட்டும்.

    அழகான முடிவு ...!

    பதிலளிநீக்கு
  14. நம்மில் பலர் ஏதோ ஒரு காலத்தில் நழுவிய ஏதோ ஒன்றை ஏன் தேடுகிறோம் ,கிடைத்துவிட்டால் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமலே தேடிக்கொண்டு
    இருக்கிறோம்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  15. ஆஹா நினைவுகள் அப்படியே ரகசியமாக இருப்பது நல்லது!ம்ம் நீண்ட காலத்தின் பின் உங்கள் வலை என்னக்கு கபடி ஆடாமல் இயல்பாக வருகின்றதே இந்த மாயம் வேண்டி !சீர்செய்த உறவுக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  16. அட பதிவுக்குப் பின் இன்னொரு பதிவு! :)

    சில நினைவுகள் நினைவுகளாகவே இருப்பது தான் நல்லது...... :)

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. கற்பனையே ஆனாலும் ‘அவரவர் வாழ்க்கை’ என்ற கடைசி வரிகள் அழியா நினைவுகளாக தங்கிவிட்டன.

    பதிலளிநீக்கு
  19. கற்பனையே ஆனாலும் “அவரவர் வாழ்க்கை” என்ற கடைசி வரிகள் நீங்காத நினைவுகளாக மனதில் தங்கி விட்டன.

    பதிலளிநீக்கு