தொடரும் தோழர்கள்

புதன், டிசம்பர் 07, 2011

சேது சமுத்திரத் திட்டம்!

முனிவர்  சுதீட்சணர்  திகைத்தார்.

 காலையில் பூசை செய்து முடித்துப்  பின் பீடத்தில் வைத்திருந்த சாளக் கிராமம் எவ்வாறு மறைந்தது?

ஆசிரமத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடிப் பார்த்தார்.

 வெளியிலும் போய்ப்  புதர்களிலெல்லாம் தேடினார்; கிடைக்கவில்லை.

இளமையில் அகத்தியரின் சீடராக இருந்தபோது தான் செய்த தவறுகளால் பெற்ற சாபத்திலிருந்து விமோசனம் கிடைத்த பின்னும் ஏன் இப்படி என வருந்தினார்.

மறுநாள் வேறு சாளக்கிராமங்களுடன் பூசை செய்தார்.

ஆனால் அவையும் காணாமல் போயின.

முனிவர் தன் ஞானதிருஷ்டியால் பார்த்தார்.இரு குரங்குகள் சாளக்கிராமத்தை எடுத்துப்போய் நீரில் போட்டு அது மூழ்குவதைக் கண்டு மகிழ்வதைப் பார்த்தார்.

நளன்,நீலன் என்பது அவற்றின் பெயர்.

அவருக்குக் கோபம் வந்தது.சபிக்க எண்ணினார்.

ஆனால் இந்த வானரங்களுக்கு என்ன சாபம் கொடுப்பது?மனிதன் என்றால் குரங்காகப் போ எனச் சபிக்கலாம்.குரங்குகளை மனிதனாகப் போ என்றா சபிக்க முடியும்?

குரங்குகளின் இயல்பே குறும்பு செய்வதுதான்.

சாளக்கிராமம் காணமல் போய் தான் சிரமப்பட வேண்டும் என அவை எண்ணியிருக்கின்றன.

சிந்தித்தார்.யோசனை தோன்றியது.

இனி இந்த இரு வானரங்களும் எந்தப் பொருளை நீரில் போட்டாலும் அது மூழ்காமல் மிதக்கட்டும் என சாபம் அளித்தார்.

அதன்பின் அவ்வானரங்கள் எத்தனை முறை சாளக்கிராமங்களை எடுத்து நீரில் வீசினாலும் அவை மிதந்தன.முனிவரும் திரும்ப எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சி முழுவதும் அனுமனுக்குத்தெரியும்.

 எனவே இலங்கைக்குப் பாலம் கட்டும் நேரத்தில்,அனுமன் நளன்,நீலன் இருவரையும்  கற்களை எடுத்துக் கடலில் போடச்சொல்ல அவை மிதந்தன. பாலம் கட்டப்பட்டது.

யாரும் எந்தப்  பொறியியற் கல்லூரியிலும் படிக்காமலே பாலம் கட்டப்பட்டது!

அதுதான் கடலில் மூழ்கியிருப்பதாக நம்பப்படும் இராமர் பாலம்!

இந்தக்கதையை எழுதியதும் எனக்கு வேறு ஒரு நினைவு.

சில காலத்துக்கு முன் சேது சமுத்திரத்திட்டம் என்ற ஒன்று செய்தியில் அடிபட்டதே !.பெரும் சர்சைக்கெல்லாம் காரணமாக இருந்ததே!!

அது என்னவாயிற்று?

அதன் தற்போதைய நிலை என்ன?

42 கருத்துகள்:

  1. நானும் செய்தியில் சுத்தமாக காணோமே என்று பார்த்தேன்.நீதிமன்றத்தில் இருக்கலாம் என்று தோன்றுகிறது.புராணக்கதை மனதைக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  2. யாரும் எந்தப் பொறியியற் கல்லூரியிலும் படிக்காமலே பாலம் கட்டப்பட்டது!

    இப்போது அளவுக்கதிகமான பொறியியல் கல்லூரிகள்..

    ஆகவே பேச்சோடு சரி..

    பதிலளிநீக்கு
  3. வழக்கம்போல் தெரியாத விஷயங்களைச் சொன்னதற்கு நன்றி! ஆமாம். சேது சமுத்திரத் திட்டம் என்றால் என்ன?????!!!!!!!

    பதிலளிநீக்கு
  4. இன்றைய சேது சமுத்திர திட்டம் லஞ்சம் கொட்டும் அட்சய பாத்திரம். கடலில் இருந்து தூர் வாரும் தொடர் வேலைக்கு அளவேது?. அதை உணர்ந்து தான் எல்லாமே அமுங்கி விட்டது!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்,ஐயா!////சில காலத்துக்கு முன் சேது சமுத்திரத்திட்டம் என்ற ஒன்று செய்தியில் அடிபட்டதே !.பெரும் சர்சைக்கெல்லாம் காரணமாக இருந்ததே!!

    அது என்னவாயிற்று?///அது,மத்தியும்,மா நிலமும் சேர்ந்து ஆட்டையப் போட்டுட்டாங்க,ஐயா!

    பதிலளிநீக்கு
  6. மன்மோகன் சிங் இரண்டே விஷயத்தில் பிடிவாதம் பிடித்தார்.
    1. எதைப்பற்றியும் எப்போதும் பேசுவதில்லை
    2. TR பாலுவுக்கு மந்திரி பதவி கொடுப்பதில்லை
    காரணம்????

    பதிலளிநீக்கு
  7. முனிவர் சமயோசித புத்தியுடன் கொடுத்த சாபம்,
    கடைசியில் அனுமனுக்கு உதவிற்று...
    புராணத்தில் வரும் இச்சம்பவம் பற்றி தெரிய வைத்தமைக்கு
    நன்றி ஐயா...

    இப்போது சேது சமுத்திர திட்டம் பற்றி சிந்திக்க எல்லாம் இவர்களுக்கு
    நேரமில்லை... கொள்ளை கொள்ளையா கொள்ளையடிக்கவே நேரம்
    போதவில்லை...

    பதிலளிநீக்கு
  8. அப்படியே பழைய கதையை மிக இனிமையாகக் கூறினீர்கள் நன்றி ஐயா. இராமர் அணையும் வந்தது.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  9. புராண சம்பவங்களில் முனிவர்கள் கொடுக்கும் சாபங்களுக்கெல்லாம் பின்னணியில் ஒரு நல்ல விஷயமும் அர்த்தமும் இருக்கும் என்பதை இந்தக் கதை தெளிவுபடுத்தியது. என் நண்பன் சேதுவைத் தெரியும். சேது சமுத்திரத் திட்டம்ணு ஒண்ணு இருந்ததும் தெரியும். இப்ப நிலை என்னவோ... தெரியலை.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு.
    பணத்தை கடலில் கொட்டி விட்டோம்.

    பதிலளிநீக்கு
  11. சொல்லாமல் சொல்லி யினைவூட்டிய பொல்லாதவர்
    வாழ்க!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  12. முழுகக் கூடாத சாபம்னா எப்படி முழுகிச்சு?
    இருப்பினும், சுவாரசியமான கதை.

    பதிலளிநீக்கு
  13. அண்ணே கதை அருமை..கேள்வி கேள்வியாய் நிற்கிறது!

    பதிலளிநீக்கு
  14. போகிற போக்கில் எல்லோரையும் குட்டி விட்டு செல்கிறீர்களே; அப்படி?

    பதிலளிநீக்கு
  15. @சைதை அஜீஸ்
    அப்படிப் பாலு என்ன செய்தார்??!!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. @மகேந்திரன்
    அப்படிச் சொல்லுங்க.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. @அப்பாதுரை
    யுக மாற்றத்தில் சாபம் நீங்கிப் பாலம் முழுகி விட்டது!!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. @suryajeeva
    நீண்ட இடைவெளிக்குப் பின் வருகை!நலந்தானே?
    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. எதை எங்கே வந்து கோர்த்து விடனும்னு எங்கண்ணனுக்கு நல்லாவே தெரியும்

    பதிலளிநீக்கு
  20. நல்ல பகிர்வு... நீரில் மூழ்காத கற்கள் - ஆனால் திட்டம் தான் மூழ்கிவிட்டது போல... :)

    பதிலளிநீக்கு
  21. //சில காலத்துக்கு முன் சேது சமுத்திரத்திட்டம் என்ற ஒன்று செய்தியில் அடிபட்டதே !.பெரும் சர்சைக்கெல்லாம் காரணமாக இருந்ததே!!

    அது என்னவாயிற்று?//

    ஜாடில அடைச்ச பூதத்த மீண்டும் கிளப்புறிங்க பித்தன் :-))

    2007 ல ரொம்ப காரசாரமாக பேச கிடைச்ச அவல் சேது திட்டம், இப்போ வால் மார்ட் வந்தாச்சுல அத தான் பேசுவாங்க மக்கள், மீண்டும் பேசனும்னா பேசிடலாம் ,நான் ரெடி,நீங்க ரெடியா?

    ஆனாலும் அப்போ போட்ட என் பதிவுகளை நீங்க படிக்க தடை இல்லை,படிச்சுப்பாருங்க,

    சேது தீட்டம் பற்றிய பதிவுகள்,

    சேது சமுத்திர திட்டம் எதிர்ப்புகளும்,காரணங்களும்-1


    சேது சமுத்திர திட்டம் எதிர்ப்புகளும்,காரணங்களும்-2

    பதிலளிநீக்கு
  22. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //எதை எங்கே வந்து கோர்த்து விடனும்னு எங்கண்ணனுக்கு நல்லாவே தெரியும்//
    நன்றி சிபி.

    பதிலளிநீக்கு
  23. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //நல்ல பகிர்வு... நீரில் மூழ்காத கற்கள் - ஆனால் திட்டம் தான் மூழ்கிவிட்டது போல... :)//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  24. வவ்வால் கூறியது...

    //சில காலத்துக்கு முன் சேது சமுத்திரத்திட்டம் என்ற ஒன்று செய்தியில் அடிபட்டதே !.பெரும் சர்சைக்கெல்லாம் காரணமாக இருந்ததே!!

    அது என்னவாயிற்று?//

    // ஜாடில அடைச்ச பூதத்த மீண்டும் கிளப்புறிங்க பித்தன் :-))//
    :))

    //2007 ல ரொம்ப காரசாரமாக பேச கிடைச்ச அவல் சேது திட்டம், இப்போ வால் மார்ட் வந்தாச்சுல அத தான் பேசுவாங்க மக்கள், மீண்டும் பேசனும்னா பேசிடலாம் ,நான் ரெடி,நீங்க ரெடியா?//

    நான் தருமி மாதிரி!கேள்வி கேட்கத்தான் தெரியும்!:))

    //ஆனாலும் அப்போ போட்ட என் பதிவுகளை நீங்க படிக்க தடை இல்லை,படிச்சுப்பாருங்க,

    சேது தீட்டம் பற்றிய பதிவுகள்,

    சேது சமுத்திர திட்டம் எதிர்ப்புகளும்,காரணங்களும்-1


    சேது சமுத்திர திட்டம் எதிர்ப்புகளும்,காரணங்களும்-2//
    கண்டிப்பாகப் படிக்கிறேன்.
    நன்றி வவ்வால்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ஐயா,

    இராமரின் நினைவூமீட்டலூடாக வரலாற்றுக் கதையினை மீண்டும் படிக்கும் வாய்ப்பினைத் தந்திருக்கிறீங்க.

    சேது சமுத்திரத் திட்டத்திற்கு என்ன ஆச்சு?’

    கவலைப் பட வேணாம்.
    அடுத்த தேர்தல் வரும் போது சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேச்சு வரும்! அப்புறமா காணாமற் போய்விடும் ஐயா.

    ஹி.....ஹி...

    பதிலளிநீக்கு
  26. கடல் கடந்து இலங்கை செல்ல மட்டுமே அந்தப் பாலம் .. அது அப்படியே இருந்தால் பின்னர் அரக்கர்கள் அவவழியே வந்துவிடக்கூடும் என்பதால் ராமர் சேனை கடலைத் தாண்டியதும் அதை கடல் தனக்குள் இழுத்துக் கொள்ளுமாறு இராமர் சமுத்திர ராஜனிடம் கேட்டுக் கொண்டாராம். அதனால்தான் பாலம் உள்ளடங்கி விட்டதாய் இதிகாசப் பதிவு.

    பதிலளிநீக்கு
  27. திண்டுக்கல் தனபாலன்
    நிரூபன்
    ரிஷபன்
    ந்ன்றி

    பதிலளிநீக்கு