தொடரும் தோழர்கள்

ஞாயிறு, டிசம்பர் 04, 2011

ஹாலிடே!ஜாலிடே!!


ஒரு கணவனும் மனைவியும் மாலை நேரத்தில்  பால்கனியில் அமர்ந்திருக்க,கணவன் மது  அருந்திக் கொண்டிருந்தான்.

அந்தக் கணவன் மது அருந்தியவாறே சொன்னான்”உன்னை நான் மிக விரும்புகிறேன்;நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.அப்படி ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப்பார்க்கவே இயலவில்லை”

மனைவி கேட்டாள்”என்ன மிக ரொமாண்டிக் மூட் போல!நீங்கள் பேசுகிறீர்களா உங்களுக்குள் போன மது பேசுகிறதா?”

கனவன் சொன்னான்”நான்தான் பேசுகிறேன்.மதுவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்!!”
--------------------------------------------------------------

என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..
 
நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு !
---------------------------------------------------------------

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
 
கணவன் : 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை!
 
நீதிபதி : நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்!
------------------------------------------------------------------

37 கருத்துகள்:

  1. இந்த பொம்பளைங்களே இப்படிதான், உண்மையை பேச விடமாட்டாங்க! (மதுவோடு பேசியது)
    இந்த பொம்பளைங்களே இப்படிதான், சமைக்கத் தெரியாது! ஆனால் நல்லா இருக்குனு சொல்லனுமாம்!
    (ஃபெனாயில் காபி)
    நீதிபதி ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பார் போல!!!
    ஹ ஹ ஹா
    அனைத்தும் சூப்பர்

    பதிலளிநீக்கு
  2. மதுவுக்கும் மாதுவுக்கும் ஆன
    வசனம் அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹ்ஹ்ஹாஆஆஆஆஆஆஆஅ
    அருமையான பதிவு அய்யா.

    பதிலளிநீக்கு
  4. ஹாலிடே செம ஜாலி மூடுல இருப்பீங்க போல.
    கலக்கலா இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. நான்தான் பேசுகிறேன்.மதுவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்!!”

    யார் அந்த மதுன்னு கேடகலியா.. அவங்க.

    பதிலளிநீக்கு
  6. நெறைய பேரு மது குடிச்சா...தானா பேசுவாங்க...மது கிட்ட பேசுறது கலக்கல்

    பதிலளிநீக்கு
  7. :):)
    சென்னை பித்தன் ஜோக்ஸ்னு ஒரு புக் போடுங்க..

    பதிலளிநீக்கு
  8. கணவன்,மனைவி ஜோக் சூப்பர் சார்.

    பதிலளிநீக்கு
  9. ////ஹாலிடே!ஜாலிடே////

    பிரமாதம்

    பதிலளிநீக்கு
  10. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

    // ஹி..ஹி...ஹி...//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. @ரிஷபன்
    ஜோக்குக்குள் ஜோக்கா?
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. @அப்பாதுரை

    எல்லாம்சொந்தமாயிருந்தால் போடலாம்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மூன்று நகைச்சுவை துணுக்குகளுமே முத்தானவை.

    பதிலளிநீக்கு
  14. மதுவைக் குடித்தால் மதுவுடன் தானே பேச முடியும்..

    ஹே...ஹே...

    பதிலளிநீக்கு
  15. ஆறு மாசமா பேசாவிட்டால் நிம்மதியாக இருக்கலாமா..

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  16. ரொம்ப நல்லாஇருக்கு சார்.....

    பதிலளிநீக்கு