தொடரும் தோழர்கள்

புதன், ஆகஸ்ட் 31, 2011

ராமனின் தம்பிகள்!

இங்கு ஒரு சிறு முன்னுரை தேவைப்படுகிறது.

கம்பராமாயணப் பட்டி மன்றங்களில்,”சிறந்தவன் இராமனா,பரதனா” என்றோ,”வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் செய்தது சரியா” என்றோ வாதிடுவார்கள்.அவர்கள் வாதத்தில் முன்னிறுத்தப்படும் இராமன் ஒரு இலக்கியப் பாத்திரம் மட்டுமே.இந்துக்களின் கடவுள் என்ற நிலையிலிருந்து வேறு பட்ட ஒரு பார்வையே அது.அவர்கள் நோக்கம் இழிவு படுத்துவதல்ல.ஒரு இலக்கியப் பார்வை மட்டுமே.

அது போலத்தான் இதுவும்.

ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ராம தத்துல்யம் ராமநாம வரானனே---(விஷ்ணு ஸஹஸ்ரநாமம்)

ஸ்ரீ ராம ராம என்று மனத்துக்கு இனியவனான ராமனிடத்தில் நான் ரமிக்கின்றேன்.அந்த ராம நாமம் ஸஹஸ்ரநாமத்துக்குச் ச்மம்.
....................
பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது.

என் நண்பன் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

பேச்சு இராமாயணத்தைப் பற்றிக் குறிப்பாகக் கம்ப ராமாயணத்தை பற்றியது.

ராமனின் பெருமைகளைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
கம்ப ராமாயணத்தில் வரும் ஒரு பாடலைப் பற்றிச் சொன்னேன்

”குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்; எம் உழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
புகல் அரும் கானம்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை''.”

வேடனான குகனையும்,வானரமான சுக்கிரீவனையும்,அரக்கனான வீடணனையும்
தன் உடன் பிறப்புகளாக ஏற்றுக் கொண்ட அரசனான ராமனின் பெருந்தன்மை பற்றி,சமத்துவ மனப்பான்மை பற்றி உயர்வாக நான் சொல்லிக் கொண்டிருந்தேன். அரசர் குலத்தோன்றலாக இருந்தும்,தன்னை விடக் கீழான வேடனை, வானரனை, அரக்கனைத் தன் உடன் பிறப்பாக ஏற்றுக் கொண்டதன் மூலம் மனித வாழ்வில் உயர்வு தாழ்வில்லை என்பதை உணர்த்தியவன் ராமன் என்பதே என் கூற்று.

நண்பன் சிரித்தான்.

நான் கேட்டேன்”ஏன் சிரிக்கிறாய்.?”

அவன்கேட்டான்”குகன் யார்?”

“ஒரு வேடன்” நான்

”வேடர் கூட்டத்தைச் சேர்ந்த சாதாரண வேடனா?”

“இல்லை வேடர்களின் தலைவன்”

“அதாவது வேடர் குல அரசன்.சரி.சுக்கிரீவன் யார்?”

”ஒரு வானரம்”

“சாதாரண வானரமா?”

"இல்லை.வானரங்களின் அரசன்”

”சரி வீடணன் வெறும் சாதாரண அரக்கனா?”

“இல்லை. அரக்கர் வேந்தன் ராவணனின் தம்பி”

“அடுத்து அரசனாகப் போகிறவன்,அல்லவா?”

”ஆம்”

”ஆக,ராமன் உடன் பிறப்பாக ஏற்றுக் கொண்டதெல்லாம், அரசர்களைத்தான். சாதாரணமானவர்களை அல்ல. சொல்லின் செல்வன் எனப் பாராட்டிய அனுமனையும் ஒரு தொண்டனாகத்தான் ஏற்றுக் கொண்டான்.உடன் பிறப்பாக அல்ல.இதில் எங்கிருந்து வந்தது சமத்துவம்?”

எனக்குப் பதில் சொல்லத்தெரியவில்லை.

உங்களுக்குத் தெரியுமா?

நண்பனின் கருத்து சரியா,தவறா?

விவாத மேடை திறந்திருக்கிறது—கண்ணியமான.ஆரோக்கியமான விவாதத்துக்காக!

ராமாயணத்தை கரைத்துக் குடித்தவர்களும்,கம்பனில் ஊறித்திளைத்தவர்களும், மற்ற அனைவரும் வாருங்கள்.வெட்டியும் ஒட்டியும் கருத்துச் சொல்லுங்கள்!

வாங்கய்யா!உங்க கருத்தைச் சொல்லுங்க,இதோ வாராறு நம்ம முனைவரு,வாங்க.வந்து கலக்குங்க!

தமிழ் மணம் குறிப்பிட்டுள்ள அணுகு முறைகளில் ஒன்று--//மற்ற வலைப்பதிவர்கள் விவாதிக்க ஒரு மேடை அமைத்துக்கொடுக்கவும் முயலலாம்.//

இதோ மேடை!


56 கருத்துகள்:

  1. யோசிக்க வேண்டிய விசயம் தான் ஐயா

    பதிலளிநீக்கு
  2. ராம அவதாரத்திற்கு அரசன் ஆண்டி என்ற பேதமெல்லாம் ஒரு பொருட்டா?

    மானுடம் வென்றதம்மா என்று மானுடத்தைப் பெருமைப் படுத்த அவதார நோக்கத்திற்கு ஏற்ப நட்ந்தான் ராமன்.

    பதிலளிநீக்கு
  3. வலை வந்து கருத்துரை வழங்
    கினிர் நன்றி
    கடுமையான முதுகுவலி
    காரணமாக அமர்ந்து கருத்துரை
    வழங்க இயலவில்லை மன்னிக்க!

    பின்னர் எழுதுகிறேன்
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  4. அண்ணாச்சி கேக்குறாருல்ல சொல்லுங்கய்யா சொல்லுங்க .....வர்ட்டா

    பதிலளிநீக்கு
  5. நல்ல விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறீர்கள் அன்பரே.

    பிற மொழிகளில் வழங்கப்படும் இராமாயணங்களையும்,

    இராவண காவியத்தையும் படித்தபின்னர்

    கம்பனின் இராமயணத்தைப் படித்தால் பல உண்மைகள் புலனாகும்.

    பதிலளிநீக்கு
  6. ”ஆக,ராமன் உடன் பிறப்பாக ஏற்றுக் கொண்டதெல்லாம், அரசர்களைத்தான். சாதாரணமானவர்களை அல்ல. சொல்லின் செல்வன் எனப் பாராட்டிய அனுமனையும் ஒரு தொண்டனாகத்தான் ஏற்றுக் கொண்டான்.உடன் பிறப்பாக அல்ல.இதில் எங்கிருந்து வந்தது சமத்துவம்?”


    நல்ல வினா..

    நாணயத்துக்குக் கூட இருபக்கம் உண்டு!

    அதுபோலத்தான் இராமனின் பாத்திர அமைப்பும்.

    இதுபோல பல களங்களை கம்பன் படைத்த இராமாயணத்தில் காணமுடியும்!!

    பதிலளிநீக்கு
  7. தமிழ்மொழியைப் பக்தியின் மொழி என்பர்

    ஏனென்றால் தமிழில் பக்தியைச் சொன்ன அளவுக்கு வேறுமொழிகளில் சொல்லவில்லை.

    கம்பராமாயணம் என்பது வைணவ சமயத்தின் கருத்துக்களை எடுத்துரைக்க வந்த நூல் என்பதை முதலில் உணரவேண்டும்.

    தம் கருத்தை முன்னிருத்த இராமாயணக் கதையில் பல மரபு மாற்றங்களைச் செய்துள்ளார் கம்பர் என்பதை ஆழ்ந்து அறிந்தோர் உணர்வர்.

    பதிலளிநீக்கு
  8. நட்புக்கு இலக்கணமாகவும்,
    உறவுக்குக் கை கொடுப்பவனாகவும்
    இருந்து சிறந்தவன் கம்பனின் காவிய நாயகன் இராமன் என பலர் மயங்கிக்கிடக்க...

    இக்களத்தை வேறுபட்ட நோக்கில் விவாதத்திற்கு வைத்தது பாராட்டுக்குரியது அன்பரே..

    பதிலளிநீக்கு
  9. கடவுள் பற்றில்லாதவனான நான்
    இராவண காவியமும் படித்துவிட்டதால்

    கம்பனின் கவிநயத்தை மட்டுமே இரசிக்கமுடிகிறது.

    இராமனுக்காகக் கம்பன் எடுத்துரைக்கும் வாழ்வியல் தத்துவங்களை முழுதும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை!!

    பதிலளிநீக்கு
  10. உங்கள் நண்பர் சொன்னது சரி போலத்தோன்றினாலும் அது சரி இல்லை என் கருத்து.காரணம் இராமன் உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும் இராமனுக்கு சரி சமமானவர்கள் அல்ல.குகன் வேடுவகுல அரசனானாலும் நாட்டை ஆளும் அரசனல்ல.சுக்கிரீவனோ வானரக்கூட்டத்தின் தலைவன். விபீடணனோ நாட்டை ஆள்பவனல்ல.எனவே இராமன் அரசர்களைத்தான் உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டான் என்ற கருத்து சரி அல்ல.

    பதிலளிநீக்கு
  11. ராமாயணத்தை கரைத்துக் குடித்தவர்களும்,கம்பனில் ஊறித்திளைத்தவர்களும், மற்ற அனைவரும் வாருங்கள்.வெட்டியும் ஒட்டியும் கருத்துச் சொல்லுங்கள்! ///

    வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இதுல விவாதிக்கற அளவுக்கு என்கிட்ட எதுவுமே இல்லைங்க! அதுக்காக மன்னிச்சிடுங்க!

    ஆனா ஓட்டுக்கள் எல்லாம் போட்டுட்டு கெளம்புறேன் சார்!

    பதிலளிநீக்கு
  12. அனுமார் தான் ராமனின் தொண்டனாக /பக்தனாகவே இருக்கவே ஆசை பட்டார் ...என்று தான் ராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  13. இது அனுபவஸ்தர்கள் சொல்ல வேண்டியது. நான் அப்பீட்டு

    பதிலளிநீக்கு
  14. ஆம் ஐயா... ஒரு ஹீரோ... மறைந்திருந்து அம்பு எய்தது எந்த விதத்தில் ஞாயம் என்ற விவாதம் கூட எனது நண்பருடன் ஏற்பட்டது.... என்னால் பதிலளிக்க இயலவில்லை .. இதிலும் என்னால் பதிலளிக்க வில்லை அதனால் தங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  15. M.R கூறியது...

    // தமிழ் மணம் இரண்டு//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  16. M.R கூறியது...

    //யோசிக்க வேண்டிய விசயம் தான் ஐயா//
    யோசியுங்க!

    பதிலளிநீக்கு
  17. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    // I expect Good discussion//
    I too!
    நன்றி ராஜா!

    பதிலளிநீக்கு
  18. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    // Really Good question. . .//

    நல்ல பதில்கள் தேவை!

    பதிலளிநீக்கு
  19. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //ராம அவதாரத்திற்கு அரசன் ஆண்டி என்ற பேதமெல்லாம் ஒரு பொருட்டா?

    மானுடம் வென்றதம்மா என்று மானுடத்தைப் பெருமைப் படுத்த அவதார நோக்கத்திற்கு ஏற்ப நட்ந்தான் ராமன்.//
    நன்றி இராஜ ராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  20. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    // வலை வந்து கருத்துரை வழங்
    கினிர் நன்றி
    கடுமையான முதுகுவலி
    காரணமாக அமர்ந்து கருத்துரை
    வழங்க இயலவில்லை மன்னிக்க!

    பின்னர் எழுதுகிறேன்//

    விரைவில் நலமாக நாராயணன் அருள் புரியட்டும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  21. koodal bala கூறியது...

    //அண்ணாச்சி கேக்குறாருல்ல சொல்லுங்கய்யா சொல்லுங்க .....வர்ட்டா//

    ஓடிட்டீங்க?!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  22. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    //நல்ல விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறீர்கள் அன்பரே.

    பிற மொழிகளில் வழங்கப்படும் இராமாயணங்களையும்,

    இராவண காவியத்தையும் படித்தபின்னர்

    கம்பனின் இராமயணத்தைப் படித்தால் பல உண்மைகள் புலனாகும்.//
    கம்பனைக் கற்ற உங்கள் போன்றோர் பங்குடன் விவாதம் சிறப்புறட்டும்1

    பதிலளிநீக்கு
  23. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    ”ஆக,ராமன் உடன் பிறப்பாக ஏற்றுக் கொண்டதெல்லாம், அரசர்களைத்தான். சாதாரணமானவர்களை அல்ல. சொல்லின் செல்வன் எனப் பாராட்டிய அனுமனையும் ஒரு தொண்டனாகத்தான் ஏற்றுக் கொண்டான்.உடன் பிறப்பாக அல்ல.இதில் எங்கிருந்து வந்தது சமத்துவம்?”


    // நல்ல வினா..

    நாணயத்துக்குக் கூட இருபக்கம் உண்டு!

    அதுபோலத்தான் இராமனின் பாத்திர அமைப்பும்.

    இதுபோல பல களங்களை கம்பன் படைத்த இராமாயணத்தில் காணமுடியும்!!//
    அந்த இரு பக்கங்களையும் காணவே இவ்விவாதம்!

    பதிலளிநீக்கு
  24. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    // தமிழ்மொழியைப் பக்தியின் மொழி என்பர்

    ஏனென்றால் தமிழில் பக்தியைச் சொன்ன அளவுக்கு வேறுமொழிகளில் சொல்லவில்லை.

    கம்பராமாயணம் என்பது வைணவ சமயத்தின் கருத்துக்களை எடுத்துரைக்க வந்த நூல் என்பதை முதலில் உணரவேண்டும்.

    தம் கருத்தை முன்னிருத்த இராமாயணக் கதையில் பல மரபு மாற்றங்களைச் செய்துள்ளார் கம்பர் என்பதை ஆழ்ந்து அறிந்தோர் உணர்வர்.//
    வால்மீகத்தையே பல இடங்களில் கம்பன் மாற்றியுள்ளான் என்பது அறிந்ததே!இந்த குறிப்பிட்ட விடயத்தில் எப்படியோ?

    பதிலளிநீக்கு
  25. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    // நட்புக்கு இலக்கணமாகவும்,
    உறவுக்குக் கை கொடுப்பவனாகவும்
    இருந்து சிறந்தவன் கம்பனின் காவிய நாயகன் இராமன் என பலர் மயங்கிக்கிடக்க...

    இக்களத்தை வேறுபட்ட நோக்கில் விவாதத்திற்கு வைத்தது பாராட்டுக்குரியது அன்பரே..//
    தொடக்கத்திலேயே நான் கூறியது போல் இது ஒரு அறிவு பூர்வ, இலக்கிய பூர்வ விவாதமே!

    பதிலளிநீக்கு
  26. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    // கடவுள் பற்றில்லாதவனான நான்
    இராவண காவியமும் படித்துவிட்டதால்

    கம்பனின் கவிநயத்தை மட்டுமே இரசிக்கமுடிகிறது.

    இராமனுக்காகக் கம்பன் எடுத்துரைக்கும் வாழ்வியல் தத்துவங்களை முழுதும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை!!//
    கவிநயத்தை எடுத்துச் சொல்லுங்கள் ஐயா!நாங்களும் ரசிக்கிறோம்!

    விளக்கமான கருத்துக்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  27. வே.நடனசபாபதி கூறியது...

    // உங்கள் நண்பர் சொன்னது சரி போலத்தோன்றினாலும் அது சரி இல்லை என் கருத்து.காரணம் இராமன் உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும் இராமனுக்கு சரி சமமானவர்கள் அல்ல.குகன் வேடுவகுல அரசனானாலும் நாட்டை ஆளும் அரசனல்ல.சுக்கிரீவனோ வானரக்கூட்டத்தின் தலைவன். விபீடணனோ நாட்டை ஆள்பவனல்ல.எனவே இராமன் அரசர்களைத்தான் உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டான் என்ற கருத்து சரி அல்ல//
    குகனுக்குக் காடே நாடு! சுக்கிரீவனுக்கு அக் கிஷ்கிந்தையே நாடு.இராவணைனைக் கொன்றபின் வீடணனுக்குத்தான் முடி சூட்டப் போகிறான் ராமன்.
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  28. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr கூறியது...

    ராமாயணத்தை கரைத்துக் குடித்தவர்களும்,கம்பனில் ஊறித்திளைத்தவர்களும், மற்ற அனைவரும் வாருங்கள்.வெட்டியும் ஒட்டியும் கருத்துச் சொல்லுங்கள்! ///

    //வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இதுல விவாதிக்கற அளவுக்கு என்கிட்ட எதுவுமே இல்லைங்க! அதுக்காக மன்னிச்சிடுங்க!

    ஆனா ஓட்டுக்கள் எல்லாம் போட்டுட்டு கெளம்புறேன் சார்!//
    நல்ல ஐடியா!
    நன்றி மணி!

    பதிலளிநீக்கு
  29. கந்தசாமி. கூறியது...

    //அனுமார் தான் ராமனின் தொண்டனாக /பக்தனாகவே இருக்கவே ஆசை பட்டார் ...என்று தான் ராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது என்று நினைக்கிறேன்...//
    இருக்கலாம். என் நண்பனின் கேள்விக்குச் சரியான விடை கிடைக்கவில்லை!
    நன்றி கந்தசாமி!

    பதிலளிநீக்கு
  30. Prabu Krishna (பலே பிரபு) கூறியது...

    //இது அனுபவஸ்தர்கள் சொல்ல வேண்டியது. நான் அப்பீட்டு//
    எஸ் ஆயிட்டீங்க!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  31. மாய உலகம் கூறியது...

    //ஆம் ஐயா... ஒரு ஹீரோ... மறைந்திருந்து அம்பு எய்தது எந்த விதத்தில் ஞாயம் என்ற விவாதம் கூட எனது நண்பருடன் ஏற்பட்டது.... என்னால் பதிலளிக்க இயலவில்லை .. இதிலும் என்னால் பதிலளிக்க வில்லை அதனால் தங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்...//
    உங்கள் நிலைதான் என் நிலையும்!

    பதிலளிநீக்கு
  32. மாய உலகம் கூறியது...

    // தமிழ் மணம் 8//
    நன்றி ராஜேஷ்!

    பதிலளிநீக்கு
  33. காத்திரமான கருப் பொருளொன்றினை அரங்கினில் வைத்திருக்கிறீங்க ஐயா.
    இராமன் அரச வம்சத்தினைச் சேர்ந்தவன் ஆதலால், சாதாரணர்களைத் தனக்கு ஈடாக நிறுத்திப் பழகுவது சிக்கலினைத் உருவாக்கும் எனக் கருதி இப்படிச் செய்திருக்கலாம் அல்லவா.

    பதிலளிநீக்கு
  34. @ நிரூபன்
    நல்ல கருத்தே!
    நன்றி நிரூ!

    பதிலளிநீக்கு
  35. வால்மீகி - இவர் ராமர் வாழ்ந்த காலத்துக்கு கிட்ட தட்ட வாழ்ந்திருக்க வேண்டும்......அதனால் தான் ராமனை மனித உருவில் படைத்திருந்தார்....அதே கம்பன் ராமனின் பக்தன்....எனவே தான் கூட பல மசாலாக்களை தூவி(!) படைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்(!).....தவறு இருந்தால் மன்னிக்கவும்...
    என்னைப்பொறுத்தவரை பலம் மிக்கவர்களே அரசர்கள்...இதில் எங்கிருந்து சமத்துவம் வரும்.....தாங்கள் சுகமாக வாழ மக்களை பயன் படுத்தியவர்களே அதிகம்.....இதற்க்கு எந்த வித எதிர்க்கருத்தும் இருக்கலாம்(!)...இது என் தாழ்மையான கருத்து அவ்வளவே அண்ணே!

    பதிலளிநீக்கு
  36. வால்மீகி - இவர் ராமர் வாழ்ந்த காலத்துக்கு கிட்ட தட்ட வாழ்ந்திருக்க வேண்டும்......அதனால் தான் ராமனை மனித உருவில் படைத்திருந்தார்....அதே கம்பன் ராமனின் பக்தன்....எனவே தான் கூட பல மசாலாக்களை தூவி(!) படைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்(!).....தவறு இருந்தால் மன்னிக்கவும்...என்னைப்பொறுத்தவரை பலம் மிக்கவர்களே அரசர்கள்...இதில் எங்கிருந்து சமத்துவம் வரும்.....தாங்கள் சுகமாக வாழ மக்களை பயன் படுத்தியவர்களே அதிகம்.....இதற்க்கு எந்த வித எதிர்க்கருத்தும் இருக்கலாம்(!)...இது என் தாழ்மையான கருத்து அவ்வளவே அண்ணே!

    பதிலளிநீக்கு
  37. கடவுள் மனிதனாகப் பிறந்துவிட்டால், அவரும் தவறிழைப்பதைத் தவிர்க்க முடியாதோ?

    பதிலளிநீக்கு
  38. இருப்பினும் பதில் நான் சொல்வேன்..

    குகனை யாராவது கடவுளாக வழிபடுகிறார்களா? சுக்ரீவனை? விபீணனை?

    உண்மையில் ராமன் இவர்களை தம்பியாக ஏற்றுக்கொண்டார், அவ்வளவே!

    அனுமன் கடவுளாகவே அல்லவா ஆகி இருக்கிறார். அடுத்த பிரம்மா என்ற சிறப்பு வேறு.

    தன்னைப் போன்றே அனுமனையும் கடவுள் ஆக்கியதே ராமபிரானின் தனிப்பெருங் கருணை.

    பதிலளிநீக்கு
  39. விக்கியுலகம் கூறியது...

    //வால்மீகி - இவர் ராமர் வாழ்ந்த காலத்துக்கு கிட்ட தட்ட வாழ்ந்திருக்க வேண்டும்......அதனால் தான் ராமனை மனித உருவில் படைத்திருந்தார்....அதே கம்பன் ராமனின் பக்தன்....எனவே தான் கூட பல மசாலாக்களை தூவி(!) படைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்(!).....தவறு இருந்தால் மன்னிக்கவும்...
    என்னைப்பொறுத்தவரை பலம் மிக்கவர்களே அரசர்கள்...இதில் எங்கிருந்து சமத்துவம் வரும்.....தாங்கள் சுகமாக வாழ மக்களை பயன் படுத்தியவர்களே அதிகம்.....இதற்க்கு எந்த வித எதிர்க்கருத்தும் இருக்கலாம்(!)...இது என் தாழ்மையான கருத்து அவ்வளவே அண்ணே!//
    உண்மை விக்கி. வால்மீகியிட மிருந்து கம்பன் பல இடங்களில் மாறு படுகிறான்.பாத்திரத்தின் சிறப்பைக் கூட்டுவதற்காகப் பலமாற்றங்கள் செய்ததாக அறிகிறேன்!
    நன்றி விக்கி!

    பதிலளிநீக்கு
  40. செங்கோவி கூறியது...

    // கடவுள் மனிதனாகப் பிறந்துவிட்டால், அவரும் தவறிழைப்பதைத் தவிர்க்க முடியாதோ?//
    எடுக்கின்ற அவதாரத்தின் அடிப்படைக் குணங்களை ஏற்றுத்தானே ஆக வேண்டும்? ஆனால் எவ்வாறு வாழ வேண்டும் என்று அவதாரம் காட்டும்!

    பதிலளிநீக்கு
  41. செங்கோவி கூறியது...

    இருப்பினும் பதில் நான் சொல்வேன்..

    குகனை யாராவது கடவுளாக வழிபடுகிறார்களா? சுக்ரீவனை? விபீணனை?

    // உண்மையில் ராமன் இவர்களை தம்பியாக ஏற்றுக்கொண்டார், அவ்வளவே!

    அனுமன் கடவுளாகவே அல்லவா ஆகி இருக்கிறார். அடுத்த பிரம்மா என்ற சிறப்பு வேறு.

    தன்னைப் போன்றே அனுமனையும் கடவுள் ஆக்கியதே ராமபிரானின் தனிப்பெருங் கருணை.//
    தனித்துவம் வாய்ந்த நல்ல பார்வை!
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  42. ராஜபாட்டை ராஜா உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லியதைக் கவனித்து நட்சத்திர வாழ்த்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  43. த. ம. 12.....

    யோசிக்க வேண்டிய விஷயம்.... பெரும்பாலான காப்பியங்களில் நிறைய விஷயங்கள் இப்படித்தான் விவாதக்குரியவையாக இருக்கின்றன....

    பதிலளிநீக்கு
  44. நட்சத்திர வாழ்த்துகள். உங்கள் சுய அறிமுகத்தை இன்று தான் பார்த்தேன்.
    உங்கள் வயதில் எனக்குத் தெரிந்து மூன்று பேர்கள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டு இருக்காங்க.

    பதிலளிநீக்கு
  45. //இந்துக்களின் கடவுள் என்ற நிலையிலிருந்து வேறு பட்ட ஒரு பார்வையே அது.அவர்கள் நோக்கம் இழிவு படுத்துவதல்ல.ஒரு இலக்கியப் பார்வை மட்டுமே.//

    Since you said that, I don't deviate.

    If one want to influence a country or society, first influence the head of state. Then the rest will follow automatically. This is how things has happened in the past. May be Ram could have done that.

    Chanakya quote also seems relevant here.

    "Never make friends with people who are above or below you in status.
    Such friendships will never give you any happiness."
    Chanakya quotes (Indian politician, strategist and writer, 350 BC-275 BC)

    பதிலளிநீக்கு
  46. இதில் நடைபெற்ற காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. இராமன் வாழ்ந்த காலம் அரசர்களின் காலம். சாதாரணமாக அரசர்கள் அரசர்களிடமேயே தொடர்பு வைத்திருப்பார்கள். பொதுமக்களிடம் தொடர்பு இருந்திருக்க வாய்ப்பு குறைவு. [சித்தார்தருக்கு அரண்மனையில் இருந்த வரை பொதுமக்களிடம் தொடர்பில்லை].
    இராமன் கானகம் வந்த பின் தொடர்பு வைத்திருந்தவர்கள் பொதுவாக முனிவர்கள் மட்டுமே (கானகத்தில் அவர்கள் தானே இருப்பார்கள்).

    மேலும் கானகத்தில் இருந்தாலும் இராமன் அயோத்திக்கு ஒரு representative (அ) ambassador -ஆகவோ தான் செயல் பட்டுள்ளான். அவன் அரச பதவியை தான் துறந்தானே அன்றி துறவறம் மேற்கொள்ளவில்லை.

    அதுவும் காரணமாக இருக்கலாம்.

    ”நட்சத்திர” வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  47. ராஜ நடராஜன் கூறியது...

    //ராஜபாட்டை ராஜா உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லியதைக் கவனித்து நட்சத்திர வாழ்த்தில் நானும் பங்கு கொள்கிறேன்.//
    நன்றி ராஜ நடராஜன்.

    பதிலளிநீக்கு
  48. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // த. ம. 12.....

    யோசிக்க வேண்டிய விஷயம்.... பெரும்பாலான காப்பியங்களில் நிறைய விஷயங்கள் இப்படித்தான் விவாதக்குரியவையாக இருக்கின்றன....//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  49. JOTHIG ஜோதிஜி கூறியது...

    //நட்சத்திர வாழ்த்துகள். உங்கள் சுய அறிமுகத்தை இன்று தான் பார்த்தேன்.
    உங்கள் வயதில் எனக்குத் தெரிந்து மூன்று பேர்கள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டு இருக்காங்க.//
    நன்றி ஜோதிஜி!

    பதிலளிநீக்கு
  50. Packirisamy N கூறியது...

    //இந்துக்களின் கடவுள் என்ற நிலையிலிருந்து வேறு பட்ட ஒரு பார்வையே அது.அவர்கள் நோக்கம் இழிவு படுத்துவதல்ல.ஒரு இலக்கியப் பார்வை மட்டுமே.//

    //Since you said that, I don't deviate.

    If one want to influence a country or society, first influence the head of state. Then the rest will follow automatically. This is how things has happened in the past. May be Ram could have done that.

    Chanakya quote also seems relevant here.

    "Never make friends with people who are above or below you in status.
    Such friendships will never give you any happiness."
    Chanakya quotes (Indian politician, strategist and writer, 350 BC-275 BC)//
    A very good and relevant point.
    thank you!

    பதிலளிநீக்கு
  51. அன்பின் பித்தன் அவர்களே ! விவாதம் சூடு பிடிக்க வில்லை. ஒரு முடிவிற்கும் வர இயலவில்லை. தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் தமிழறிஞ்ர்கள் கருத்துக் கூறலாமே ! ( முனைவ்ர் குண சீலன் கூறி விட்டார் ) ம்ம்ம்ம் - பார்க்கலாம். நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  52. cheena (சீனா) கூறியது...

    //அன்பின் பித்தன் அவர்களே ! விவாதம் சூடு பிடிக்க வில்லை. ஒரு முடிவிற்கும் வர இயலவில்லை. தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் தமிழறிஞ்ர்கள் கருத்துக் கூறலாமே ! ( முனைவ்ர் குண சீலன் கூறி விட்டார் ) ம்ம்ம்ம் - பார்க்கலாம். நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா//
    அன்பர் சீனா அவர்களே.நான் மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கிறேன். எதிர்பார்த்த அளவுக்குக் கருத்துகள் வரவில்லை. காரணம் பதிவுக்கு அந்த அளவுக்கு reach இல்லை என்பதே!
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு