தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

கடவுள் கேட்கும் வரம்!....கவிதை

இந்த வார நட்சத்திரமாக விளங்க அழைத்து எனக்கும் ஒரு அங்கீகாரமும் , கௌரவமும் அளித்த தமிழ்மணத்துக்கு முதற்கண் என் நன்றி!
.............................
எதையுமே கடவுள் வாழ்த்துடன் தொடங்குவதுதானே மரபு!இதோ--

”பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா !”

நான் கேட்டுவிட்டேன்,கடவுள் என்ன சொல்கிறார்?!-----இதோ

உனக்கு வேண்டுவன எல்லாம் என்னிடம் கேட்கின்றாய்
எனக்கு வேண்டுவ தென்ன வென்று நீ கேட்டதுண்டா?

பண்டிகைகள் கொண்டாடி படையல் படைக்கின்றாய்
உண்பதற்கு விதவிதமாய் செய்து மகிழ்கின்றாய்

பிள்ளையாராய்க் கும்பிட்டுக் கொழுக்கட்டை படைக்கின்றாய்
பிரப்பம் பழம் விளாம்பழமெனப் பலபழமும் கொடுக்கின்றாய்

கண்ணனாய் வணங்கி வெண்ணைய் வைக்கின்றாய்
எண்ணெய்ப் பலகாரம் பலவும் படைக்கின்றாய்.

கோவில்களில் எனக்கு பால் தயிர் பன்னீர் என்று
ஓய்வில்லாமல் அபிஷேகம் பலவும் செய்கின்றாய்.

உண்டியல் தேடிப் போய் பணம் நகை எனப் பலவும்
கொண்டு போய் நீ தவறாமல் கொட்டுகின்றாய்.

திருக் கல்யாணம் என்று சொல்லி யெனக்குத்
தினம் தினம் திருமணம் செய்விக் கின்றாய்

பட்டு வேட்டிப் புடவை கழுத்தில் தாலியெனப்
பலவும் வாங்கி யெனக்கு நீ அணிவிக்கின்றாய்


நான் உன்னை என்றுமே கேட்டதில்லை
எனக்கு இவையெல்லாம் கட்டாயம் வேண்டுமென்று

இன்று நான் சொல்கின்றேன் கேள் மனிதா
என் விருப்பம் என்னவென்று நீ அறிய.

நான் என்றுமே கொடுப்பவன்தான்,கேட்பவன் அல்ல!

படைக்கின்ற பழங்களெல்லாம் பசித்தவர்க்குக் கொடு
உடைக்கின்ற தேங்காயெல்லாம் நலிந்தவர்க்கு உண்ணக் கொடு.

குடம் குடமாய்க் கொட்டுகின்ற பாலெல்லாம் கொண்டு போய்
குடிக்கக் கஞ்சி கூட இல்லாக் குழந்தைகளுக்குக் கொடு.

எனக்குப் போர்த்துகின்ற வேட்டி சேலை இவை எல்லாம்
கனக்கின்ற குளிரில் வாடும் கணக்கற்றோருக்குக் கொடு.

கட்டுக்கட்டாய் உண்டியலில் கொட்டுகின்ற பணத்தில் நீ
கட்டித்தா இலவச கல்விச்சாலை,மருத்துவமனை இவையெல்லாம்.

திருக் கல்யாணம் செய்விக்கும் செலவினிலே
திக்கற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து வை!

என்னிடம் எப்போதும் நீ வரம் வேண்டி நிற்பாய்
இன்று நான் கேட்கின்றேன் இந்த வரம் நீ தா!


டிஸ்கி--(இந்தக் கவிதைக்கான விதை பல ஆண்டுகளுக்கு முன் விழுந்தது.அப்போது கரூரில் இருந்தோம்.ஒரு நாள் அம்மன் கோவில் சென்று திரும்பியவுடன் என் தாயார்(தற்போது வயது 93) சொன்னார்கள்.”குடம் குடமாப் பாலபிஷேகம் பண்ணினா.அப்ப எனக்குத் தோணித்து இப்படிப் பாலெல்லாம் வீணாப்போறதே.இதுக்குப் பதிலா யாராவது பசித்த ஏழைக் குழந்தைகளுக்குக் குடுக்கக் கூடாதான்னு.உடனே சந்நிதியில் நின்னு இப்படி யோசிக்கறது தப்புன்னு அம்மன் கிட்ட மன்னிப்பும் கேட்டுண்டேன்”

நான் சொன்னேன் ”தவறில்லை.உன்னை அப்படி யோசிக்க வைத்ததே அந்த அம்மன்தானே!”)

109 கருத்துகள்:

  1. நட்ச்சத்திர வாழ்த்துக்கள்!

    உனக்கு வேண்டுவன எல்லாம் என்னிடம் கேட்கின்றாய்
    எனக்கு வேண்டுவ தென்ன வென்று நீ கேட்டதுண்டா?

    கேட்காதவருக்கு கொட்டுகிறோம்!
    கேட்பவர்களை துரத்துகிறோம்!

    பதிலளிநீக்கு
  2. தமிழ் 10 இப்படியான வரங்களைக் கொடுத்தேன்
    இந்த அருமையான கவிதைக்கு வரமாக இந்தக்
    கடவுள் எனக்கும் தருவார் தானே இந்த வரத்தை?....ஹி......ஹி...ஹி...

    பதிலளிநீக்கு
  3. நட்சத்திரப் பதிவருக்கு
    முதலில்
    மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. "தவறில்லை... யோசிக்க வைத்ததே அந்த அம்மன் தானே... "

    சரியாக சொன்னீர்கள் உங்கள் கவிதயில்.....

    தமிழ் மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. தமிழ்மண நட்சத்திரமாய் ஜொலிக்கப்போகும் எங்கள் உச்ச நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான இடுகை அன்பரே..
    நல்லதொரு சிந்தனை..

    கடவுள் என்ற ஒரு ஆற்றல்
    இருந்தால் இதுதானே கேட்கும்.

    பொம்மைகளை வைத்து விளையாடுவதுபோல இந்த பக்தர்கள் கடவுளரை வைத்து விளையாடும் விளையாட்டை நான் இரசிப்பதோடு சரி!!

    பதிலளிநீக்கு
  7. இந்த வார நட்சத்திரமாக விளங்க அழைத்து எனக்கும் ஒரு அங்கீகாரமும் , கௌரவமும் அளித்த தமிழ்மணத்துக்கு முதற்கண் என் நன்றி! //

    தமிழ் மண நட்சத்திரமா இந்த வாரம் முழுவதும் மணம் வீசவுள்ள உங்களுக்கு இச் சிறியேனின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஐயா
    எப்படி இருக்கிறீங்க?
    நலம், தானே?

    பதிலளிநீக்கு
  9. உனக்கு வேண்டுவன எல்லாம் என்னிடம் கேட்கின்றாய்
    எனக்கு வேண்டுவ தென்ன வென்று நீ கேட்டதுண்டா? //

    அவ்....இவர் நவீன கம்பியூட்டர் கடவுளாக இருப்பார் போல இருக்கிறதே?

    பதிலளிநீக்கு
  10. நான் உன்னை என்றுமே கேட்டதில்லை
    எனக்கு இவையெல்லாம் கட்டாயம் வேண்டுமென்று //

    அடடா...இவற்றையெல்லாம் கடவுளுக்குக் கொடுப்பது போன்று, நாமும் ஏழைகளின் இல்லங்களிற்கு கொடுத்தால் நன்மை பயக்கும் அல்லவா?

    பதிலளிநீக்கு
  11. ”குடம் குடமாப் பாலபிஷேகம் பண்ணினா.அப்ப எனக்குத் தோணித்து இப்படிப் பாலெல்லாம் வீணாப்போறதே.இதுக்குப் பதிலா யாராவது பசித்த ஏழைக் குழந்தைகளுக்குக் குடுக்கக் கூடாதான்னு.உடனே சந்நிதியில் நின்னு இப்படி யோசிக்கறது தப்புன்னு அம்மன் கிட்ட மன்னிப்பும் கேட்டுண்டேன்”//

    அவ்...ஏனய்யா...அம்மனுக்கு கொடுப்பதை ஏழைகளுக்குக் கொடுத்தாலும் அம்மனின் உள்ளம் குளிராதா?

    பதிலளிநீக்கு
  12. உண்மைதான்..குடம் குடமாய் பால் அபிஷேகம் செய்வதை விட, பசியால் துடிக்கும் ஒரு ஏழைக்கு கொடுப்பது என்பது மிக நல்லது. அம்மனுக்கு மிக மகிழ்ச்சியை இது தான் உண்டாக்கும்.. உண்மையான பக்தி இது தான் என்று தெய்வம் மகிழும்.

    பதிலளிநீக்கு
  13. தமிழ்மண நட்சத்திரமாய் தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துகளும், பாராட்டுக்களும்..

    பதிலளிநீக்கு
  14. தமிழ் மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. தமிழ் மணம் இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. நான் சொன்னேன் ”தவறில்லை.உன்னை அப்படி யோசிக்க வைத்ததே அந்த அம்மன்தானே!”)//

    அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  17. என்னிடம் எப்போதும் நீ வரம் வேண்டி நிற்பாய்
    இன்று நான் கேட்கின்றேன் இந்த வரம் நீ தா! //

    வரம் கேட்ட சாமி மனம் நிறைய வைக்கிறார்.

    பதிலளிநீக்கு
  18. கடவுளின் வேண்டுதல்கள்
    பட்டியல் அருமை ஐயா.
    தமிழ்மணம் நட்சத்திரமானதற்கு
    என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. கடவுள் வேண்டுவன அற்புதமாய் வடித்துள்ளீர்கள் வரிகளை .... ஏழ்மையின் சிரிப்பில் தான் கடவுளை காணமுடியும் என்பதே உமயவலின் வாக்காக கொண்டு செயல்பட்டோம் எனில் பஞ்சம் பறந்து போகும் பசி மறந்து போகும் .....

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துகள் . நல்ல பதிவு.. கடவுளுக்கே லஞ்சம் கொடுக்கும் மக்கள்..

    பதிலளிநீக்கு
  21. சார் உண்மையான கருத்துக்களை உடைய வார்த்தைகள். நாம்தான் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து புரோக்கர் வேலை பார்க்க செய்கிறோம்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  22. அட்டகாசம் பாஸ்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  23. தமிழ்மணத்தின் நட்சத்திர பதிவராக அங்கீகரிக்கப்பட்டதற்கு முதற்கண் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!!

    சிந்தனையும் கருத்தும் அருமை. மக்களுக்கு செய்யும் பணியே மகேசனுக்கு செய்யும் பணி என்பதை கடவுள் சொல்வதுபோல் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் நினைப்பது நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  24. // குடம் குடமாய்க் கொட்டுகின்ற பாலெல்லாம் கொண்டு போய்
    குடிக்கக் கஞ்சி கூட இல்லாக் குழந்தைகளுக்குக் கொடு.//

    புதுப்படம் வெளியாகும்போதெல்லாம்
    பால் அபிஷேகம் செய்யும் எல்லா ரசிகர் பெருமக்களுக்கும்
    இது ஒரு அறை கூவல்.

    //எனக்குப் போர்த்துகின்ற வேட்டி சேலை இவை எல்லாம்
    கனக்கின்ற குளிரில் வாடும் கணக்கற்றோருக்குக் கொடு.//

    அன்றாடம் உங்களுக்கு உங்கள் தொண்டர்கள் போர்த்தும் துண்டுகள், சால்வைகள்
    எல்லாவற்றையும் " உதவும் கரங்கள் " போன்ற அமைப்புகளுக்கு
    அடுத்த நாளே , ஏன் ! அன்றே அனுப்பு.

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  25. நட்சத்திரப் பதிவரை நானும் வாழ்த்துக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. திருக்கோவில்களைக் கல்விக் கூடங்களாகவும், கணிப்பொறி மையங்களாகவும் ஆக்கிடல் வேண்டும். கோவில் சிலைகளை எல்லாம் விற்றுக் காசாக்கி எழை எளியோருக்குப் பயன்படுமாறு செய்திடல் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  27. அம்பாளடியாள் கூறியது...

    //.தமிழ்மணம் 2//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  28. @அம்பாளடியாள்
    கேளுங்கள் கிடைக்கும்!

    பதிலளிநீக்கு
  29. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    // மிக அருமையான இடுகை அன்பரே..
    நல்லதொரு சிந்தனை..//
    நன்றி குணசீலன்!

    பதிலளிநீக்கு
  30. உண்மை தான் ஐயா! நான் கூட கடந்த ஆண்டு வரை ஒரு அபிஷேகம் செய்து வந்தேன்.இப்போது நிறுத்தி விட்டேன்,காரணம் நீங்கள் கூறியதுவும் தான்.அத்தோடு இந்த பூசகர்களின் தொல்லையும் தான்!"மனமது நல்லதானால் மந்திரம் செபிக்க வேண்டியதில்லை."இது எனது தாயார் அடிக்கடி சொல்வது.உண்மையும் அது தானே?

    பதிலளிநீக்கு
  31. நிரூபன் கூறியது...



    // அடடா...இவற்றையெல்லாம் கடவுளுக்குக் கொடுப்பது போன்று, நாமும் ஏழைகளின் இல்லங்களிற்கு கொடுத்தால் நன்மை பயக்கும் அல்லவா?//
    சந்தேகம் வேறா?

    பதிலளிநீக்கு
  32. நிரூபன் கூறியது...

    //அவ்...ஏனய்யா...அம்மனுக்கு கொடுப்பதை ஏழைகளுக்குக் கொடுத்தாலும் அம்மனின் உள்ளம் குளிராதா?//
    பழமையிலும் பாரம்பரியத்திலும் ஊறிய ஒரு பெண்மணி அம்மன் முன் நின்ரு இவ்வாரு சிந்தித்ததே ஒரு புரட்சிதானே?
    நன்றி நிரூ!

    பதிலளிநீக்கு
  33. பாரத்... பாரதி... கூறியது...

    // உண்மையான பக்தி இது தான் என்று தெய்வம் மகிழும்.//
    உண்மை!

    பதிலளிநீக்கு
  34. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்//
    நன்றி இராஜராஜேஸ்வரி!

    பதிலளிநீக்கு
  35. இராஜராஜேஸ்வரி கூறியது...



    //வரம் கேட்ட சாமி மனம் நிறைய வைக்கிறார்.//
    சாமி கேட்ட வரம் தருவோம்!

    பதிலளிநீக்கு
  36. @சி.பி.செந்தில்குமார்
    நன்றி சிபி!

    பதிலளிநீக்கு
  37. //உடலுக்கு-65 உள்ளத்துக்கு-25//

    க‌விதை அதை நிரூபிக்கிற‌து.

    வாழ்த்துக்க‌ள் சென்னைப்பித்த‌ன்.

    குணா.

    பதிலளிநீக்கு
  38. @வே.நடனசபாபதி
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  39. FOOD கூறியது...

    //நட்சத்திரப் பதிவரை நானும் வாழ்த்துக்கிறேன்.//
    நன்றி!(மூன்று)!

    பதிலளிநீக்கு
  40. @# கவிதை வீதி # சௌந்தர்..

    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  41. @!* வேடந்தாங்கல் - கருன்

    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  42. நட்சத்திர பதிவிற்கு வாழ்த்துக்கள்

    தொடக்கமே அருமை

    கலக்குங்கள்

    பதிலளிநீக்கு
  43. தமிழ் மணத்தின் இந்த வார நட்சத்திரம், நண்பர் சென்னைப் பித்தனுக்கு வாழ்த்துக்கள். கடவுளுக்கும் கம்யூனிஸ சிந்தனை உண்டு என்பதை எடுத்துக் காட்டியிருக்கும் கடவுளே, (அஹம் ப்ரம்மாஸ்மி!)உனக்கொரு கும்பிடு!

    பதிலளிநீக்கு
  44. அட இது நல்லாய் இருக்கே ...

    பதிலளிநீக்கு
  45. பித்தரே!
    இல்லை! இல்லை!
    நட்சத்திர பித்தரே!
    தமிழ்மணத்தில் ஒளி விடும்
    பித்தரே
    வாழ்த்துக்கள் வணக்கம்!
    தாமதமாக வந்தேன் மன்னிக்க

    கடவுளுக்கே வரம்
    தரும் கவிதை மிகவும்
    சிறப்பே நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  46. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  47. நட்சத்திரதிற்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  48. நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  49. நட்சத்திர அந்தஸ்துக்கு வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  50. நான் சொன்னேன் ”தவறில்லை.உன்னை அப்படி யோசிக்க வைத்ததே அந்த அம்மன்தானே!”)//

    ஏழைகளுக்கும் கொடு மன நிம்மதிக்கு கடவுளுக்கு செய்யும் நம்பிக்கையும் கெட வேண்டாம் வழக்கம்போல் அதுவும் நடை பெறட்டும்.... ஏனென்றால் நம்பிக்கை வளம் பெற்றால் நல்வாழ்க்கை அமைந்து ஒரு ஏழைக்கு செய்யும் உதவி பலாயிரம் ஏழைக்களுக்கு செய்யலாம் பகிருவ்க்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  51. தமிழ் மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  52. சாமி கேட்கிற வரத்தையெல்லாம் கொடுத்தால் சமுதாயத்துக்கு ரொம்பவும் நல்லது.

    நட்சத்திர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  53. ஒரு சின்னக் கவிஞனாக மெய்சிலிர்த்தேன் வாழ்த்துக்கள்..>!

    பதிலளிநீக்கு
  54. நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

    உங்க அம்மா மாதிரியே எப்பவும் நினைப்பேன். பசியால் வாடும் குழந்தைக்கு அந்தப் பாலைக் கொடுத்தால் சாமி வேணாமுன்னா சொல்லப்போகுது?

    பதிலளிநீக்கு
  55. Congratulations on the recognition conferred on you. Thought provoking blog. In a way contributions made in different forms to the almighty is by and large channelized for the welfare of the masses in many cases like the numerous welfare activities undertaken by Tirupati devastanam and other temples where Annadanams are undertaken regularly . Vasudevan

    பதிலளிநீக்கு
  56. மாய உலகம் கூறியது
    // பகிருவ்க்கு நன்றி ஐயா//

    நன்றி ராஜேஷ்!

    பதிலளிநீக்கு
  57. மாய உலகம் கூறியது...

    // தமிழ் மணம் 17//

    // தமிழ் மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்//
    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  58. @துளசி கோபால்
    நன்றி துளசி கோபால் அவர்களே!

    பதிலளிநீக்கு
  59. வாழ்த்துக்கள்.
    வேண்டுதல் beautiful!

    பதிலளிநீக்கு
  60. அட்டகாசமான photo தமிழ்மணத்தில்.
    என் அடுத்த படத்தில் நீங்க தான் ஹீரோ. டபுள் ஹீரோயின். நீங்க தான் எப்படியாவது நடிச்சுக் கொடுக்கணும்.

    பதிலளிநீக்கு
  61. அன்பின் பித்தன் அவர்களே - தமிழ் மண நடசத்திரமாக ஜொலிப்பதற்கு நல்வாழ்த்துகள்.

    சிந்தனை நன்று. ஆனாலும் நாம் இரண்டினையும் செய்யலாமே ! ஆண்டவனுக்கும் படைக்கலாம் - தேவைப்படுபவர்களுக்கும் கொடுக்கலாம்.

    கடவுள் வாழ்த்துடன் துவங்கிய நடசத்திர வாரம் சிறப்புற நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  62. அப்பாதுரை கூறியது...

    //வாழ்த்துக்கள்.
    வேண்டுதல் beautiful!//
    நன்றி அப்பாதுரை!

    பதிலளிநீக்கு
  63. @அப்பாதுரை
    கமிட் பண்ணும் முன் சில கேள்விகள்
    1)ஹீரோயின் யாராக இருந்தாலும் கவலயில்லை.ஷூட்டிங் வெளிநாடு களில்தானே?
    2)லோ/ஹை பட்ஜெட்?
    நடிப்பைப் பற்றிக் கவலைப்படா
    தீர்கள்.பள்ளி நாட்களிலேயே ’குட்டி நடிகர்திலகம் ’ எனப் பெயர் வாங்கியவன் நான்!

    பதிலளிநீக்கு
  64. @cheena (சீனா)

    நன்றி சீனா அவர்களே!
    செய்யக்கூடாது என்பதல்ல என் கருத்து.எதுவுமே அளவோடு இருக்கலாம்.அதைத்தான் அவனும் வேண்டுவான் என்பதே!
    நான் தினம் சிவபூசை செய்யும் முழு ஆத்திகன்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  65. நட்சத்திரப் பதிவருக்கு மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்
    ஆரம்பமே வித்தியாசமான கடவுள் வாழ்த்துடன்
    பதிவு களைகட்டிவிட்டது பதிவு ஜமாயுங்கள்

    பதிலளிநீக்கு
  66. Ramani சொன்னது…

    //நட்சத்திரப் பதிவருக்கு மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்
    ஆரம்பமே வித்தியாசமான கடவுள் வாழ்த்துடன்
    பதிவு களைகட்டிவிட்டது பதிவு ஜமாயுங்கள்//
    நன்றி ரமணி!

    பதிலளிநீக்கு
  67. வாளும் வடிவேலும் வாய்த்த வெடிகுண்டும்
    நாளும் உயிர் குடிக்க நான் தருவேன் - நீளும்கை
    பொங்கும் எரிமுகத்துப் பூதக் கணபதியே
    எங்கும் கலவரத்தைத் தா!

    பதிலளிநீக்கு
  68. சங்கமித்திரன் கூறியது...

    //வாளும் வடிவேலும் வாய்த்த வெடிகுண்டும்
    நாளும் உயிர் குடிக்க நான் தருவேன் - நீளும்கை
    பொங்கும் எரிமுகத்துப் பூதக் கணபதியே
    எங்கும் கலவரத்தைத் தா!//

    அங்கயற் கண்ணி மைந்தா அருமை கணேசா
    சங்கமித்ரன் கேட்கின்றார் கேட்கக் கூடாத வரம்-எங்கும்
    கலவரம் பரவக் கேட்கும் அவரையும் சேர்த்து
    நல வாழ்வு அனைவருக்கும் தா!

    பதிலளிநீக்கு