தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

சென்னை அடையாரில் நடக்கும் போராட்டம்






இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்,சென்னையின் சார்பில் சென்னை, அடையாறு, எல்.பி.ரோடில் ஊழல் எதிர்ப்புப் போட்டமும்,உண்ணாவிரதமும் நடைபெற்று வருகின்றன. சனியன்றுதான் என்னால் அங்கு செல்ல முடிந்தது.உண்ணாவிரதம் என்பது எனக்கு இயலாத ஒன்று.எனவே அங்கு இரண்டு மணிநேரம் அமர்ந்தும்,என் பெயரைப் பதிவு செய்தும்,என்னால் இயன்ற ஒரு சிறு தொகையை நன்கொடையாகக் கொடுத்தும் என் ஆதரவைத் தெரிவித்தேன்.
அங்கு வந்த மக்களில் எல்லா வயதினரும் காணப்பட்டனர்.எல்லோரது முகங்களிலும் ஒரு தீவிரம் தெரிந்தது.எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்த விஷயம்,பங்கு கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை;அவர்கள் அங்கு செயல்படும் விதம்;அவர்கள் முகத்தில் தெரிந்த செயல் திண்ணம்.எதிர்கால இந்தியாவை சிறப்பான நிலைகளுக்கு அவர்கள் எடுத்துச் செல்வது உறுதி.
ஊழல் பெருச்சாளிகளே!எம் நாட்டின் இளைஞர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்! இனி அவர்களை ஏமாற்ற முடியாது!
இளைய பாரத்தினாய் வா,வா,வா!

60 கருத்துகள்:

  1. அங்கு வந்த மக்களில் எல்லா வயதினரும் காணப்பட்டனர்.எல்லோரது முகங்களிலும் ஒரு தீவிரம் தெரிந்தது.எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்த விஷயம்,பங்கு கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை;அவர்கள் அங்கு செயல்படும் விதம்;அவர்கள் முகத்தில் தெரிந்த செயல் திண்ணம்.எதிர்கால இந்தியாவை சிறப்பான நிலைகளுக்கு அவர்கள் எடுத்துச் செல்வது உறுதி.


    ....Jai Ho!

    பதிலளிநீக்கு
  2. தமிழ் மணத்தில் யாராவது இணைத்து விடுங்களேன்,தயவு செய்து.

    பதிலளிநீக்கு
  3. தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்

    பதிலளிநீக்கு
  4. தமிழ்னை இன்னும் உசுப்பிவிட,பிரபலங்கள் முன்வரவேண்டும்

    பதிலளிநீக்கு
  5. !எம் நாட்டின் இளைஞர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்! இனி அவர்களை ஏமாற்ற முடியாது! //

    ஆமாம்!எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

    பதிலளிநீக்கு
  6. நல்ல தகவல் ஐயா..சென்னையில் இருந்தால் கலந்து கொள்ளலாம்..

    பதிலளிநீக்கு
  7. இந்தியாவிலிருந்து ஊழல் விரட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் நல்ல இந்தியன்களின் மனங்களில் எல்லாம் தேங்கி கிடக்கிறது. அதன் வெளிப்பாடு தான் அன்னாவின் போராட்டத்திற்கு கிடைத்த இளைஞர்களின் ஆதரவு..
    ஆனால் அன்னாவின் போராட்டம் தமிழகத்தில் சற்று மாறுபட்ட பார்வையில் பார்க்கப்படுகிறது. இதிலும் சர்ச்சைகள் செய்யவே சிலர் விரும்புகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  8. நல்லதே நடந்தால் சரி ...

    பதிலளிநீக்கு
  9. நம்பிக்கை துளிர் விட ஆரம்பிக்கிறது.. பகிர்வுக்கு நன்றி சகோதரரே ...தமிழ்மணம் எட்டு

    பதிலளிநீக்கு
  10. அடையாரில் நடக்கும் இப் போராட்டம் பெரு வெற்றி பெற்று, ஊழல் இல்லாத வளமான பாரதம் உருவாக என் வாத்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. உண்மைதான் ஐயா எல்லோருக்குள்ளும் இந்த தீயைப் பார்க்கமுடிகிறது.

    அதோடு அவர்களின் வலியுயையும் உணர முடிகிறது.

    பதிலளிநீக்கு
  12. விழித்துக்கொண்டு விட்டார்கள் என்று சொல்கிறீர்கள்... ஆனால் அந்த இரண்டாவது படத்தில் சிலர் படுத்திருக்கிறார்களே...? ஒருவேளை வீட்ல பொண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு இங்க வந்து படுத்துருப்பாங்களோ...???

    பதிலளிநீக்கு
  13. நல்ல விஷயத்தை நாடறிய செய்திருக்கீங்க. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. ஊழல் இல்லா பாரத்துக்கு ஈழ மைந்தனின் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. M.R கூறியது...

    // தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன்/
    நன்றி!

    பதிலளிநீக்கு
  16. M.R கூறியது...

    // நல்ல விஷயம்//
    // தமிழ் மணம் 2//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  17. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //தமிழ்னை இன்னும் உசுப்பிவிட,பிரபலங்கள் முன்வரவேண்டும்//
    சரியே!
    நன்றி சதீஷ்!

    பதிலளிநீக்கு
  18. கோகுல் கூறியது...

    !எம் நாட்டின் இளைஞர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்! இனி அவர்களை ஏமாற்ற முடியாது! //

    //ஆமாம்!எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?//
    மிகச்சரி!
    நன்றி கோகுல்.

    பதிலளிநீக்கு
  19. செங்கோவி கூறியது...

    //நல்ல தகவல் ஐயா..சென்னையில் இருந்தால் கலந்து கொள்ளலாம்..//
    இந்த எண்ணம் போதும்!
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  20. பாரத்... பாரதி... கூறியது...

    //இந்தியாவிலிருந்து ஊழல் விரட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் நல்ல இந்தியன்களின் மனங்களில் எல்லாம் தேங்கி கிடக்கிறது. அதன் வெளிப்பாடு தான் அன்னாவின் போராட்டத்திற்கு கிடைத்த இளைஞர்களின் ஆதரவு..
    ஆனால் அன்னாவின் போராட்டம் தமிழகத்தில் சற்று மாறுபட்ட பார்வையில் பார்க்கப்படுகிறது. இதிலும் சர்ச்சைகள் செய்யவே சிலர் விரும்புகிறார்கள்.//
    அதுதான் தமிழ்நாடு!
    நன்றி பாரத்.

    பதிலளிநீக்கு
  21. கந்தசாமி. கூறியது...

    //நல்லதே நடந்தால் சரி ...//

    நடக்கும்! நன்றி கந்தசாமி.

    பதிலளிநீக்கு
  22. மாய உலகம் கூறியது...

    //நம்பிக்கை துளிர் விட ஆரம்பிக்கிறது.. பகிர்வுக்கு நன்றி சகோதரரே ...தமிழ்மணம் எட்டு//
    நம்புவோம்!
    நன்றி மாய உலகம்!

    பதிலளிநீக்கு
  23. நிரூபன் கூறியது...

    //அடையாரில் நடக்கும் இப் போராட்டம் பெரு வெற்றி பெற்று, ஊழல் இல்லாத வளமான பாரதம் உருவாக என் வாத்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.//
    நன்றி நிரூ!(ஒரு எழுத்து மிஸ்ஸிங்!)

    பதிலளிநீக்கு
  24. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    //உண்மைதான் ஐயா எல்லோருக்குள்ளும் இந்த தீயைப் பார்க்கமுடிகிறது.

    அதோடு அவர்களின் வலியுயையும் உணர முடிகிறது.//
    ஆம்!
    நன்றி குணசீலன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  25. Philosophy Prabhakaran கூறியது...

    //விழித்துக்கொண்டு விட்டார்கள் என்று சொல்கிறீர்கள்... ஆனால் அந்த இரண்டாவது படத்தில் சிலர் படுத்திருக்கிறார்களே...? ஒருவேளை வீட்ல பொண்டாட்டி கூட சண்டை போட்டுட்டு இங்க வந்து படுத்துருப்பாங்களோ...???//
    உள்ளம் விழித்திருப்பதால்தான் உண்ணாவிரதம் மேற்கொண்டு களைப்படையாதிருக்கப் படுத்தி ருக்கிறார்கள்! புரிந்து கொள்ளுங்கள்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  26. FOOD கூறியது...

    //நல்ல விஷயத்தை நாடறிய செய்திருக்கீங்க. நன்றி.//
    நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  27. கவி அழகன் கூறியது...

    //ஊழல் இல்லா பாரத்துக்கு ஈழ மைந்தனின் வாழ்த்துக்கள்//
    நன்றி கவி அழகன்.

    பதிலளிநீக்கு
  28. விக்கியுலகம் கூறியது...

    // ஜெய் ஹிந்த்!//

    ”ஸாரே ஜஹான் சே அச்சா!”
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  29. நல்ல பதிவு. 'திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது.' என்பார் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். என்னதான் சட்டம் கொண்டுவந்தாலும் ஊழல் புரிவோர் அந்த சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து சுலபமாக தப்பிவிடுவார்கள். பொதுமக்களாகிய நாம்தான் இலஞ்சம் கொடுக்காமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். எப்படியோ நல்லது நடந்தால் சரி.

    பதிலளிநீக்கு
  30. தமிழ் மணத்தில் யாராவது இணைத்து விடுங்களேன்,தயவு செய்து.
    ஐயா இதுக்கேனுங்கையா கவலைப்படுகுறீங்க?...நான் இணைஞ்ச விசயத்த
    யார் சொல்லி இருப்பாங்க !!!!...........ரெண்டு கவிதை இருக்குது அதனால
    நாலு ஒட்டு விழும் ஐயாமூலமா எண்டுதான் நினைக்குறன் பாப்பம் ....

    பதிலளிநீக்கு
  31. Good Post... Let us hope something good comes out of this....

    [Tamil font not available in the place presently I am in]

    பதிலளிநீக்கு
  32. !எம் நாட்டின் இளைஞர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்! இனி அவர்களை ஏமாற்ற முடியாது! //mm

    பதிலளிநீக்கு
  33. அம்பாளடியாள் கூறியது...

    //தமிழ் மணத்தில் யாராவது இணைத்து விடுங்களேன்,தயவு செய்து.
    ஐயா இதுக்கேனுங்கையா கவலைப்படுகுறீங்க?...நான் இணைஞ்ச விசயத்த
    யார் சொல்லி இருப்பாங்க !!!!...........ரெண்டு கவிதை இருக்குது அதனால
    நாலு ஒட்டு விழும் ஐயாமூலமா எண்டுதான் நினைக்குறன் பாப்பம் ...//
    விழுந்த்தாச்சு!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  34. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // Good Post... Let us hope something good comes out of this....

    [Tamil font not available in the place presently I am in]//
    நம்புவோம்!
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  35. மாலதி கூறியது...

    !எம் நாட்டின் இளைஞர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்! இனி அவர்களை ஏமாற்ற முடியாது! ////mm//
    சந்தேகமா?
    நன்றி மாலதி!

    பதிலளிநீக்கு
  36. அப்பாதுரை கூறியது...

    //நன்று//
    நன்றி அப்பாதுரை!

    பதிலளிநீக்கு
  37. அடையார் உ.விரததுல இருக்கிற இவர்களெல்லாம் அரசாங்க வேலைக்குத்தான் அடிபோடுவான். கிடைச்சவுடனே எவ்வளவு கிம்பளம் கிடைக்க வழியிருக்குன்னுதான் பார்ப்பான். இப்போ வேலை இல்ல. உ.விரதம். தனியார் வேலைன்னா இங்கே நமக்கு வெறும் சம்பளம் ஒரு கஸ்டம்ஸி கிளார்க்க் அள்றனேன்னு பொறாமைப்பட்டு, ஹசாரே ஹசாரேன்னு கத்திறான். பொறாமை

    ஒரேநாளலே அல்லாட்டி ரண்டு நாளிலே எவானாச்சும் யோக்கியனாயி விடுவானா ? பிலிம் காட்ட்றானுக.

    பதிலளிநீக்கு
  38. தாங்கள் அங்கே சென்று வந்திருப்
    பது மனதிற்கு இதமாக உள்ளது
    பித்தரே!
    படங்களும் அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  39. இன்றைய இளைஞர்கள் நாளைய தூண்கள் என்பது சரிதானே சார்

    பதிலளிநீக்கு
  40. >>அங்கு வந்த மக்களில் எல்லா வயதினரும் காணப்பட்டனர்.எல்லோரது முகங்களிலும் ஒரு தீவிரம் தெரிந்தது.எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்த விஷயம்,பங்கு கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை;அவர்கள் அங்கு செயல்படும் விதம்;அவர்கள் முகத்தில் தெரிந்த செயல் திண்ணம்.எதிர்கால இந்தியாவை சிறப்பான நிலைகளுக்கு அவர்கள் எடுத்துச் செல்வது உறுதி.

    குட்

    பதிலளிநீக்கு
  41. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    //தாங்கள் அங்கே சென்று வந்திருப்
    பது மனதிற்கு இதமாக உள்ளது
    பித்தரே!
    படங்களும் அருமை!//
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  42. ராக்கெட் ராஜா கூறியது...

    //இன்றைய இளைஞர்கள் நாளைய தூண்கள் என்பது சரிதானே சார்//
    சந்தேகமின்றி!
    நன்றி ராஜா!

    பதிலளிநீக்கு
  43. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    >>அங்கு வந்த மக்களில் எல்லா வயதினரும் காணப்பட்டனர்.எல்லோரது முகங்களிலும் ஒரு தீவிரம் தெரிந்தது.எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்த விஷயம்,பங்கு கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை;அவர்கள் அங்கு செயல்படும் விதம்;அவர்கள் முகத்தில் தெரிந்த செயல் திண்ணம்.எதிர்கால இந்தியாவை சிறப்பான நிலைகளுக்கு அவர்கள் எடுத்துச் செல்வது உறுதி.

    // குட்//
    நன்றி சிபி!

    பதிலளிநீக்கு
  44. Chitra சொன்னது…

    அங்கு வந்த மக்களில் எல்லா வயதினரும் காணப்பட்டனர்.எல்லோரது முகங்களிலும் ஒரு தீவிரம் தெரிந்தது.எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்த விஷயம்,பங்கு கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை;அவர்கள் அங்கு செயல்படும் விதம்;அவர்கள் முகத்தில் தெரிந்த செயல் திண்ணம்.எதிர்கால இந்தியாவை சிறப்பான நிலைகளுக்கு அவர்கள் எடுத்துச் செல்வது உறுதி.


    //....Jai Ho!//

    வெல்க பாரதம்!நன்றி சித்ரா!
    (கமெண்ட் போடாம எப்படியோ விட்டுப் போச்சு!சித்ரா மன்னிக்க!)

    பதிலளிநீக்கு
  45. ஐயா இந்த லோக்பால் சட்டம் ஊழலை ஒழிக்கும் என்றால் நானும் என் முழு ஆதரவை
    தருகிறேன் ..ஐயா இந்த சட்டம் வேறு விதமான விளைவுகளை தருமோ என்ற அச்சமும் இருக்கு.
    பிரதமர்,நீதிபதி என எல்லோரையும் செல்லாக் காசாக ஆகிவிட்டு ஒரு மாற்றாக வரபோகும் ஒரு குழுவினர் ஊழல் செய்யாமல் இருக்க எதுன்னை சதவிதம் வாய்புகள் இருக்கு என்று எனக்கு புரிய வில்லை ஐயா..
    ஊழலுக்கு எதிரான போரட்டதிருக்கு என் முழு ஆதரவு உண்டு அனால் ஜன லோக் பாலுக்கு ????
    குழப்பிட்டேனோ தெளிவா தெரிஞ்சுக்க இங்கே போங்க ஐயா ...

    http://pinnoottavaathi.blogspot.com/2011/08/blog-post_21.html

    படிச்சுட்டு பதில் அவசியம் சொல்லுங்க ஐயா ...உங்கள் போன்ற அனுபவம் உள்ளவர்களின் வழிகாட்டுதல் இளைங்கர்களுக்கு தேவை ...

    பதிலளிநீக்கு
  46. "நம்மால் முடியாவிட்டாலும் கூட, போராடுபவர்கள் கட்டாயம் ஜெயிக்க வேண்டும்" என்ற எண்ணம் சாமானிய மக்களிடம் இருப்பதை மறந்து விடக்கூடாது.

    பதிலளிநீக்கு
  47. அன்னாவுக்கு வேறு சாயம் பூசி ஊழலுக்கு எதிரான "ஒரே"
    போராட்டத்தை வலுவிழக்க வைக்கக்கூடாது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  48. நல்ல முயற்சி..

    ஆனால் அன்னா மீது சந்தேகம் என்பதால் நான் அப்பீட்டு

    பதிலளிநீக்கு
  49. ரியாஸ் அஹமது கூறியது...

    //ஐயா இந்த லோக்பால் சட்டம் ஊழலை ஒழிக்கும் என்றால் நானும் என் முழு ஆதரவை
    தருகிறேன் ..ஐயா இந்த சட்டம் வேறு விதமான விளைவுகளை தருமோ என்ற அச்சமும் இருக்கு.
    பிரதமர்,நீதிபதி என எல்லோரையும் செல்லாக் காசாக ஆகிவிட்டு ஒரு மாற்றாக வரபோகும் ஒரு குழுவினர் ஊழல் செய்யாமல் இருக்க எதுன்னை சதவிதம் வாய்புகள் இருக்கு என்று எனக்கு புரிய வில்லை ஐயா..
    ஊழலுக்கு எதிரான போரட்டதிருக்கு என் முழு ஆதரவு உண்டு அனால் ஜன லோக் பாலுக்கு ????
    குழப்பிட்டேனோ தெளிவா தெரிஞ்சுக்க இங்கே போங்க ஐயா ...

    http://pinnoottavaathi.blogspot.com/2011/08/blog-post_21.html

    படிச்சுட்டு பதில் அவசியம் சொல்லுங்க ஐயா ...உங்கள் போன்ற அனுபவம் உள்ளவர்களின் வழிகாட்டுதல் இளைங்கர்களுக்கு தேவை ...//


    ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதால் என் ஆதரவு.
    நீங்கள் சுட்டி கொடுத்த பதிவைப் படித்தேன்.ஜன் லோக்பால் பற்றிய முழுமையான தகவலகள் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  50. ரியாஸ் அஹமது கூறியது...

    // TAMIL MANAM 17//
    நன்றி ரியாஸ்.

    பதிலளிநீக்கு
  51. பாரத்... பாரதி... கூறியது...

    // "நம்மால் முடியாவிட்டாலும் கூட, போராடுபவர்கள் கட்டாயம் ஜெயிக்க வேண்டும்" என்ற எண்ணம் சாமானிய மக்களிடம் இருப்பதை மறந்து விடக்கூடாது.//
    உண்மை பாரத்!நான் சந்தித்த பலரும் அது போலவே நினைக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  52. பாரத்... பாரதி... கூறியது...

    //அன்னாவுக்கு வேறு சாயம் பூசி ஊழலுக்கு எதிரான "ஒரே"
    போராட்டத்தை வலுவிழக்க வைக்கக்கூடாது என்பது என் கருத்து//
    அன்னாவுக்கு மட்டுமல்ல! போராட்டத்துக்கும் சாயம் பூசும் முயற்சி நடந்து கொண்டுதானிருக்கிறது!
    நன்றி பாரத்!

    பதிலளிநீக்கு
  53. பலே பிரபு கூறியது...

    //நல்ல முயற்சி..

    ஆனால் அன்னா மீது சந்தேகம் என்பதால் நான் அப்பீட்டு//
    சந்தேகம்?
    நன்றி பிரபு.

    பதிலளிநீக்கு