தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 18, 2011

அந்தப் பலகைகளை அகற்றி விடலாம்!

பெட்டிக் கடைகளில் காணப்படும் ஒரு அறிவிப்புப் பலகை--”இது புகை பிடிக்கத்தடை செய்யப்பட்ட பகுதி.இங்கே புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றம்”

சிகரெட்டை முற்றாக ஒழிக்க முடியாத நிலையில், பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதைத் தடுப்பது நல்ல யோசனைதான்.ஆனால்,அமல்படுத்த முடியாத இடத்தில் தடை உத்தரவு போடுவது ஒரு கேலிக்கூத்துதான்.

புகை பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என அரசு நினைத்தால்-அது தேவையா இல்லையா என்பதல்ல இங்கு விவாதம்-சிகரெட் உற்பத்தியை,விற்பனையைத் தடை செய்ய வேண்டும்.

பெட்டிக்கடையில் சிகரெட் வாங்குபவர்கள் அதை எங்கே சென்று பிடிப்பார்கள்?ஒவ்வொரு தெருவிலும் சிகரெட் பிடிப்பதற்கென்று தனி இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறதா?பெட்டிக் கடைகளில் வாங்கும்பொருள்களில் சிலவற்றை அங்கேயே பயன் படுத்த முடியும்.சிலவற்றை அப்படிப் பயன் படுத்த முடியாது.சிகரெட் என்பது பிஸ்கட்,சாக்லெட்டைப் போலக் கடை வாசலிலேயே நுகரக்கூடிய ஒன்று.அப்படி நுகர்வது பொதுச் சூழலுக்கும் சிகரெட் பிடிக்காத வர்களுக்கும் எதிரான செயல் என்பதில் ஐயமில்லை.இதைத்தடுக்க வேண்டும் என்ற அக்கறையோடு அரசு இந்தத் தடையைக் கொண்டு வந்திருக்கிறது என்றால் அது செய்ய வேண்டிய காரியங்கள்,தடையைக் கறாராக அமல் படுத்துதல்,ஒவ்வொரு தெருவிலும் புகை பிடிக்க இடம் ஒதுக்குதல் ஆகியவைதான்.

சாலைகளில் செல்பவர்கள் அவசரத்துக்குச் சிறுநீர் கழிக்கக்கூட ஏற்பாடு செய்ய இயலாத நிர்வாகத்திடம் புதிதாக எந்த வசதியையும் எதிர்பார்க்க முடியாது.தன் மக்கள் புகை பிடிப்பது குறித்து அவர்கள் உடல் நலம் சார்ந்த அக்கறை அரசுக்கு இருக்கும் என்றால்,சிகரெட் மூலம் வரும் கோடிக் கணக்கான வருமானத்தை இழக்க அது தயாராக இருக்க வேண்டும்.கள்ளச் சந்தையில் சிகரெட் விற்பனை நடப்பதைத் தடுக்கும் திறமை வேண்டும்.

இவற்றில் எதுவுமே சாத்தியமில்லை என்பதால்,சாத்தியமான ஒரே விஷயத்தைச் செய்யலாம்--

அந்த அறிவிப்புப் பலகைகளை எடுத்துவிடலாம்!

நன்றி:நம்ம chennai

47 கருத்துகள்:

  1. ///தன் மக்கள் புகை பிடிப்பது குறித்து அவர்கள் உடல் நலம் சார்ந்த அக்கறை அரசுக்கு இருக்கும் என்றால்,சிகரெட் மூலம் வரும் கோடிக் கணக்கான வருமானத்தை இழக்க அது தயாராக இருக்க வேண்டும்.கள்ளச் சந்தையில் சிகரெட் விற்பனை நடப்பதைத் தடுக்கும் திறமை வேண்டும்.

    இவற்றில் எதுவுமே சாத்தியமில்லை என்பதால்,சாத்தியமான ஒரே விஷயத்தைச் செய்யலாம்--

    அந்த அறிவிப்புப் பலகைகளை எடுத்துவிடலாம்! /// இந்த வசனங்கள் சூப்பர்.. இதால் வரும் வருவாயை அரசு இழக்க தயாராக இல்லை. ஆனால் இதை கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு.

    பதிலளிநீக்கு
  2. அந்த அறிவிப்புப் பலகைகளை எடுத்துவிடலாம்! ///

    எடுக்கமாட்டார்கள். விளம்பர வருமானம்..!!

    பதிலளிநீக்கு
  3. நம்ம ஆளுக சும்மா பேருக்குத் தானே பல சட்டங்களை இயற்றி வச்சிருக்காங்க..அதுல இதுவும் ஒன்னு!..உற்பத்தியை தடை பண்ணா டேக்ஸ் வருமானம் போயிடும், கூடவே அந்த கம்பெனிக்காரன் தர்ற தேர்தல் நிதியும் போயிடுமே!

    பதிலளிநீக்கு
  4. இதை நான் ஆமோதிக்கிறேன்
    ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  5. மிக சரியாக சொனீங்க ஐயா
    சமுக அக்கறையுடன் ஒரு சுளீர் பதிவு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. அந்த பலகையை, புகைப்பிடிப்பவர்களின் நாம் சுட்டிக்காட்டினால் எதிரியைப் போல பார்க்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ரீதியிலான பிரச்சனை தான் இது.

    பதிலளிநீக்கு
  8. கந்தசாமி. கூறியது...

    ///தன் மக்கள் புகை பிடிப்பது குறித்து அவர்கள் உடல் நலம் சார்ந்த அக்கறை அரசுக்கு இருக்கும் என்றால்,சிகரெட் மூலம் வரும் கோடிக் கணக்கான வருமானத்தை இழக்க அது தயாராக இருக்க வேண்டும்.கள்ளச் சந்தையில் சிகரெட் விற்பனை நடப்பதைத் தடுக்கும் திறமை வேண்டும்.

    இவற்றில் எதுவுமே சாத்தியமில்லை என்பதால்,சாத்தியமான ஒரே விஷயத்தைச் செய்யலாம்--

    அந்த அறிவிப்புப் பலகைகளை எடுத்துவிடலாம்! ///
    //இந்த வசனங்கள் சூப்பர்.. இதால் வரும் வருவாயை அரசு இழக்க தயாராக இல்லை. ஆனால் இதை கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு.//
    உண்மையே!
    நன்றி கந்தசாமி!

    பதிலளிநீக்கு
  9. இராஜராஜேஸ்வரி கூறியது...

    அந்த அறிவிப்புப் பலகைகளை எடுத்துவிடலாம்! ///

    // எடுக்கமாட்டார்கள். விளம்பர வருமானம்..!!//
    ஆம்!
    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  10. செங்கோவி கூறியது...

    //நம்ம ஆளுக சும்மா பேருக்குத் தானே பல சட்டங்களை இயற்றி வச்சிருக்காங்க..அதுல இதுவும் ஒன்னு!..உற்பத்தியை தடை பண்ணா டேக்ஸ் வருமானம் போயிடும், கூடவே அந்த கம்பெனிக்காரன் தர்ற தேர்தல் நிதியும் போயிடுமே!//
    அப்படிச் சொல்லுங்க செங்கோவி!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //நல்ல அருமையான யோசனை அய்யா..//
    நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  12. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    //இதை நான் ஆமோதிக்கிறேன்
    ஐயா!//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  13. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    // Your statement is very true//
    நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  14. ரியாஸ் அஹமது கூறியது...

    // மிக சரியாக சொனீங்க ஐயா
    சமுக அக்கறையுடன் ஒரு சுளீர் பதிவு
    நன்றி ஐயா//
    நன்றி ரியாஸ்.

    பதிலளிநீக்கு
  15. ரியாஸ் அஹமது கூறியது...

    // tamil manam voted//
    thanks!

    பதிலளிநீக்கு
  16. பாரத்... பாரதி... கூறியது...

    //அந்த பலகையை, புகைப்பிடிப்பவர்களின் நாம் சுட்டிக்காட்டினால் எதிரியைப் போல பார்க்கிறார்கள்.//
    பார்வையோடு நின்றால் பரவாயில்லை பாரத்!

    பதிலளிநீக்கு
  17. பாரத்... பாரதி... கூறியது...

    // திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ரீதியிலான பிரச்சனை தான் இது.//
    நடக்குமா!
    நன்றி பாரத்.

    பதிலளிநீக்கு
  18. உங்கள் ஐடியா சுப்பர்தான் ..
    ஆனால் அதைச்செய்வார்களா?/??????????
    அருமையான பதிவு....
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா ..

    பதிலளிநீக்கு
  19. உண்மை தான் அய்யா ,

    நீங்கள் சொன்ன விஷயம் மறுக்க முடியாத உண்மை .
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. vidivelli சொன்னது…

    //உங்கள் ஐடியா சுப்பர்தான் ..
    ஆனால் அதைச்செய்வார்களா?/??????????
    அருமையான பதிவு....
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா ..//

    நன்றி விடிவெள்ளி!

    பதிலளிநீக்கு
  21. M.R கூறியது...

    //உண்மை தான் அய்யா ,

    நீங்கள் சொன்ன விஷயம் மறுக்க முடியாத உண்மை .
    பகிர்வுக்கு நன்றி//
    நன்றி .

    பதிலளிநீக்கு
  22. M.R கூறியது...

    //தமிழ் மணம் 9//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  23. நல்ல பகிர்வு. பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் தாலாட்டுவது போல தான் இதுவும்.

    பணம் வருவதால் இவர்களால் புகையிலையையும், சாராயத்தினையும் தடை செய்ய முடிவதில்லை :(

    பதிலளிநீக்கு
  24. இதை நானும் ஆமோதிக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  25. சிந்திக்க வைக்கும் இடுகை வழங்கியிருக்கிறீர்கள் ஐயா.

    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  26. அந்த அறிவிப்புப் பலகைகளை எடுத்துவிடலாம்! //
    யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் உள்ளது.யாருமே மதிக்காத பலகை எதற்கு?

    பதிலளிநீக்கு
  27. /பெட்டிக்கடையில் சிகரெட் வாங்குபவர்கள் அதை எங்கே சென்று பிடிப்பார்கள்?//

    வாங்கும்போது கையில் பிடித்துதானே சார் வாங்குகிறார்கள். பிறகு அதை வேறெங்கு சென்று மறுபடியும் பிடிக்க வேண்டும்? :)

    பதிலளிநீக்கு
  28. எங்கள் ஆசிரியர் சொல்லுவார். ‘இது அபாயம் தொடாதே என்று அறிவிப்பு இருந்தால் தொட்டு பார்ப்பது நமது வழக்கம்.’என்று. அதுபோல் புகை பிடிக்க தடை செய்யப்பட்ட இடம் என்றால் புகை பிடித்து பார்ப்போமே என்ற எண்ணம் வர, அந்த அறிவிப்பும் காரணம். எனவே அந்த அறிவிப்பை எடுத்துவிடலாம்.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் ஐயா,
    புகை பிடிப்பதைத் தடுக்கும் அறிவிப்புப் பலகைகளால் பயனேதும் இல்லையே எனும் ஆதங்கத்தினை உங்கள் பதிவு தாங்கி வந்துள்ளது.

    உங்களது இப் பதிவின் மையக் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்.

    கடுமையான சட்டங்கள் மூலமாகப் புகைப் பிடித்தலைத் தவிர்க்கலாமேயன்றி,
    இவ்வாறான அறிவிப்புப் பலகைகளால் நிகழப் போவது ஏதுமில்லைத் தான்.

    பதிலளிநீக்கு
  30. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //நல்ல பகிர்வு. பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் தாலாட்டுவது போல தான் இதுவும்.

    பணம் வருவதால் இவர்களால் புகையிலையையும், சாராயத்தினையும் தடை செய்ய முடிவதில்லை :(//
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  31. மாய உலகம் கூறியது...

    // இதை நானும் ஆமோதிக்கிறேன் ஐயா...
    மாய உலகம் கூறியது...

    //thamil manam 10//

    நன்றிகள் மாய உலகம்!

    பதிலளிநீக்கு
  32. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    //சிந்திக்க வைக்கும் இடுகை வழங்கியிருக்கிறீர்கள் ஐயா.

    மகிழ்ச்சி.//

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  33. கோகுல் கூறியது...

    அந்த அறிவிப்புப் பலகைகளை எடுத்துவிடலாம்! //
    //யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் உள்ளது.யாருமே மதிக்காத பலகை எதற்கு?//
    ரொம்பச் சரி!
    நன்றி கோகுல்.

    பதிலளிநீக்கு
  34. ! சிவகுமார் ! கூறியது...

    /பெட்டிக்கடையில் சிகரெட் வாங்குபவர்கள் அதை எங்கே சென்று பிடிப்பார்கள்?//

    //வாங்கும்போது கையில் பிடித்துதானே சார் வாங்குகிறார்கள். பிறகு அதை வேறெங்கு சென்று மறுபடியும் பிடிக்க வேண்டும்? :)//

    மதராசி ஓட்டல்காரர் குஜராத்தி உணவு வழங்குகிறாரே!(கடி!):)
    நன்றி சிவகுமார்!

    பதிலளிநீக்கு
  35. வே.நடனசபாபதி கூறியது...

    //எங்கள் ஆசிரியர் சொல்லுவார். ‘இது அபாயம் தொடாதே என்று அறிவிப்பு இருந்தால் தொட்டு பார்ப்பது நமது வழக்கம்.’என்று. அதுபோல் புகை பிடிக்க தடை செய்யப்பட்ட இடம் என்றால் புகை பிடித்து பார்ப்போமே என்ற எண்ணம் வர, அந்த அறிவிப்பும் காரணம். எனவே அந்த அறிவிப்பை எடுத்துவிடலாம்.//

    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  36. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    // நல்ல எண்ணங்கள்//

    நன்றி சிபி!

    பதிலளிநீக்கு
  37. நிரூபன் கூறியது...

    // வணக்கம் ஐயா,
    புகை பிடிப்பதைத் தடுக்கும் அறிவிப்புப் பலகைகளால் பயனேதும் இல்லையே எனும் ஆதங்கத்தினை உங்கள் பதிவு தாங்கி வந்துள்ளது.

    உங்களது இப் பதிவின் மையக் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்.

    கடுமையான சட்டங்கள் மூலமாகப் புகைப் பிடித்தலைத் தவிர்க்கலாமேயன்றி,
    இவ்வாறான அறிவிப்புப் பலகைகளால் நிகழப் போவது ஏதுமில்லைத் தான்.//
    உண்மையே!
    நன்றி நிரூபன்.

    பதிலளிநீக்கு
  38. 60 ரூபா குவாட்டரை குடிக்கவும் கொடுத்துவிட்டு வெளியே வந்து பைக்கை தொட்டதும் 2000 ரூபாய் அபராதம் விதிக்கின்ற அரசு தானே இது இவர்களிடம் என்னதான் எதிர்பார்க்க முடியும்.

    பதிலளிநீக்கு
  39. கே. ஆர்.விஜயன் கூறியது...

    //60 ரூபா குவாட்டரை குடிக்கவும் கொடுத்துவிட்டு வெளியே வந்து பைக்கை தொட்டதும் 2000 ரூபாய் அபராதம் விதிக்கின்ற அரசு தானே இது இவர்களிடம் என்னதான் எதிர்பார்க்க முடியும்.//

    சரிதான்.

    நன்றி விஜயன்.

    பதிலளிநீக்கு
  40. FOOD கூறியது...

    //கோபம் நியாயம்.//

    நன்றி சங்கரலிங்கம் சார்.

    பதிலளிநீக்கு
  41. It is clear that the govt can't enforce the laws nor can afford to lose the revenue accruing from sale of cigarettes/liquor. These are measures to hood wink the masses and to project an image as if it cares for the welfare of the masses.

    As has been pointed out smoking zones should be created ; well this would be a tall order when the authorities do not seem to worry about public urination/defecation. The only alternative is to embark on massive campaigns aimed atbout the dangerous and deleterious effects of smoking etc. I have often wondered as to why these issues do not engage the attention of the Govt . A govt which could spend crores on Aids awareness program ( almost to the extent of glorifying the same what with film stars hugging aid victims etc ) me does not appear to be keen to project ill effects of other evils. Vasudevan

    பதிலளிநீக்கு