தொடரும் தோழர்கள்

ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

காமம் இல்லாக் கதை-3

"ஏய்,சொர்ணம்,சொர்ண நாயகி,இங்க வாடி.ஒரே ஒரு தடவை."

"உங்களுக்கு வேற வேலையில்லை.பிள்ளையில்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடினானாம். "

"யாருடி கிழவன்?கையை மடக்கிக் காட்டறேன் பாரு,எப்படிக் கிண்ணுனு இருக்குன்னு.இரும்பு உடம்புடி, தெரியுமா?"

"ஆமாம் உங்க உடம்பைப் பத்தி எனக்குத் தெரியாம யாருக்குத் தெரியுமாம்? இப்போ கொஞ்சம் தொந்தரவு பண்ணாம இருங்க.எனக்குத் தூக்கம் வருது."

"எனக்கு வரல்லையே.வாடி.ஒரே ஒரு தடவை மட்டும்."

"அய்யோ,சொன்னாக் கேக்க மாட்டிங்களே.எனக்கு லேசாத் தலையை வலிக்குதுங்க.அதை சொல்ல வேணாமுன்னு பாத்தேன்."

"தலைவலியா?இதோ நான் தைலம் தேச்சு விடறேன்.அப்படியே படுத்துக்க."

"வேண்டாங்க,தன்னாலே சரியாயிடும்"

"ஒண்ணும் பேசாதே. கண்ணை மூடிப் படுத்துக்கோ.இப்படி நல்லாத்தேச்சு, அமுக்கி விட்டாத் தலவலி பறந்து போயிரும்"

"உங்க கை பட்டதுமே வலி போயிருச்சுங்க.வாங்க.இப்ப நான் தயார்"

"வேண்டாம் சொர்ணம்.நீ ஒய்வெடுத்துக்கோ.நானும் அப்படியே படுக்கிறேன்."

"ரொம்ப ஆசையாக் கூப்பிட்டீங்க.ஏமாத்தமாப் போயிடும்.வாங்க. "

"சரி,வா.உன்னை எப்படிக் கட்டறேன் பாரு"

"ஆமாம்,அதிலெ நீங்கதான் கெட்டிக்காரராச்சே "

இருவரும் "ஆடு புலி ஆட்டம்"ஆட ஆரம்பித்தனர்.

கணவன் மனைவி உறவில் உடல் முக்கியமல்ல.மனமே பிரதானம்.வயதாகி உடல் தளர்ந்து இச்சைகள் அற்றுப் போனாலும்,அன்பு குறைவதில்லை.மாறாக அதிகமாகிறது.இது ஒருவரின் துணையை மற்றவர் உணர்ந்த நிலை.ஒருவர் இன்றி மற்றவர் வாழ்க்கையைப் பற்றி நினைப்பதற்கே பயப்படும் நிலை. ஒருவரைச் சார்ந்தே மற்றவர் வாழும்,இயங்கும் நிலை.

இதுவே இல்லறம் என்னும் நல்லறம்.

2 கருத்துகள்:

  1. "இந்த" ஆட்டத்துக்குத்தான் இவ்வளவு பில்ட்அப்-ஆ?

    பதிலளிநீக்கு
  2. @ஜுர்கேன் க்ருகேர்,
    எல்லாவற்றுக்கும் பில்ட்அப் தேவைப்படுகிறதே? தலைப்பிலேயே விவகாரம் இருந்தால்தானே பதி்வு படிக்கப் படுகிறது?பதிவின் ஆரம்பமே கொக்கியுடன் இருந்தால்தானே மேலே படிக்கிறார்கள்?
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு