தொடரும் தோழர்கள்

திங்கள், டிசம்பர் 10, 2012

அண்ணா கற்பித்த பகவத்கீதை!

நான் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்ட மேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த நேரம்.

சென்னையின் ’அழகு’களில் என்னை இழந்து கொண்டிருந்த காலம்.

திங்கட்கிழமை காலையில் முதல் வகுப்பு, சமயம் பற்றிய வகுப்பு.

பகவத்கீதை,உபநிடதங்கள் எல்லாம் போதிக்கப்படும்.

இப்போது நினைத்துப் பார்க்கையில் எப்படிப்பட்ட அரிய வாய்ப்பு எனத் தோன்றுகிறது.

அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தாமல் நழுவ விட்டதற்காக இன்று வருந்துகிறேன்

ஏனெனில் இன்று என் வயது அப்படி!

ஆனால் அந்த இனிய இருபதில் கீதை ரசிக்குமா?கீதாவாக இருந்தால் ரசித்திருக்கலாம்!!

எனவே பல நாட்களில் அந்த வகுப்பை வெட்டி விட்டுச் செல்வோம்.

ஆனால் அது எப்போதும் இயலாது.

அவ்வாறு வகுப்பில் மாட்டிக் கொண்ட நாட்களில் தலையெழுத்தே என்று அமர்ந்திருப்போம். 

பகவத்கீதை பற்றி மிக அற்புதமாக விளக்கி வந்தவர்---
அண்ணா அவர்கள்.

ஆச்சரியப்படாதீர்கள். அண்ணாதான்.

என்றாவது நீங்கள் ராமகிருஷ்ணா மடப் புத்தக நிலையத்துக்குச் சென்றால் அங்கு காணலாம், உபநிடதம் ,வேதம் பற்றிய பல புத்தகங்களை .

புத்தகத்தைத் திறந்து பார்த்தால் ஆசிரியர் பெயர் “அண்ணா” என்று இருக்கும்.

அவர்தான் எங்களுக்கு வகுப்பு எடுத்தவர்.

அவர் பெயர்’அண்ணா’ சுப்பிரமணிய ஐயர்.

ஆனால் அண்ணா என்றே அழைக்கப்பட்டவர்.

இனி அந்த வாய்ப்புக் கிடைக்குமா?!

.

வெள்ளி, நவம்பர் 30, 2012

பரதேசி-படமும் பாடல்களும்!

பரதேசி—இந்தப் படத்தில் ஆறு அருமையான பாடல்கள்.

பாடியவர்கள்—மீனா கபூர்,மன்னா டே,அனில் பிஸ்வாஸ்

இசையமைப்பு-அனில் பிஸ்வாஸ்

அந்தப்படம் ஒரு இந்திய ரஷ்யக் கூட்டுத் தயாரிப்பு.இயக்குனர்களில் ஒருவர் கே.ஏ.அப்பாஸ்

நடித்தவர்கள்—ஓலக் த்ரிஷனோவ்(ரஷ்யா),நர்கீஸ்,பத்மினி,பிரித்வி ராஜ் கபூர்,பால்ராஜ் சஹானி மற்றும் பலர்.

இந்தியாவுக்கு வணிகத்துக்காக வந்து ஒரு இந்தியப் பெண்ணைக் காதலிக்கும் ஒரு ரஷ்ய வணிகனின் கதை.

இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படம் இது.

1957 இல் வெளியான படம்!

ஒரு சிறு தவறு-படத்தின் பெயர் பர்தேசி;பரதேசி அல்ல

இந்திப் படம்!

கோவில்பட்டியில்  டெண்ட் கொட்டகையில் பார்த்தேன்(டூரிங் டாக்கீஸ்)

அப்போது பள்ளியில் படித்து வந்தேன்!

சனி, நவம்பர் 24, 2012

அப்பா vs மகள்--அரசியல் யுத்தம்!!

சரக்கு முக்கியமா?சரக்குப் பொதியின் தோற்றம் முக்கியமா?

உருவம் முக்கியமா?உள்ளடக்கம் முக்கியமா?

புற அழகு முக்கியமா?அக அழகு முக்கியமா?

இந்தக்கேள்விகளை நான் எழுப்பக்காரணமாக இருந்தது சமீபத்திய  என் இரு பதிவுகள்.

பத்திரிகைச் செய்தியை ஆதாரமாகக் கொண்ட என் நடையில் எழுதப்பட்ட பதிவு “ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் கதை.”

யோசித்து,மன நிறைவுடன் எழுதிய சிறு கதை “தட்ச யக்ஞம்”

முதலாவதற்கு ஒரே நாளில் 1300 ஹிட்ஸ்.

இரண்டாவதற்கு 250 ஹிட்ஸ்.

இதிலிருந்து தெரிவது என்ன?

நீங்கள் எதை எழுதினாலும் தலைப்பு மிக முக்கியம்.

தலைப்பே ஹிட்ஸ் கொண்டு வருகிறது.

எனவே இன்று ஒரு சோதனை.

சிறுகதையின் தலைப்பை மாற்றி மீள்பதிவாக வெளியிடு
கிறேன்.

பதிவுலக வரலாற்றிலேயே ஒரு பதிவு மறுநாளே மீள் பதிவாக வருவது இதுவே முதல் முறை என்றே எண்ணுகிறேன்!

பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று!

இதோ கதை--------

அந்தச் செய்தி கேட்டதிலிருந்தே அபர்ணா பரபரப்பானாள்.

இத்தனை நாட்களாக அடக்கியிருந்த பாசம் தலை தூக்கியது.

கங்காதர் வருகைக்காகக் காத்திருந்தாள்.

வழக்கமாகச் சீக்கிரம் வருபவன் அன்று நீண்ட நேரம் தாமதமாக்குவது போல் தோன்றியது.

அவன் வந்தான்.

என்னங்க!அப்பாவுக்கு இன்னைக்கு அறுபதாம் கல்யாணமாம்.வாங்க ;போயிட்டு வரலாம்

நம்மை மதிச்சு நமக்கு அழைப்பு அனுப்பியிருக்காரா உங்க அப்பா?இல்லையே!அப்ப எப்படிப்போவது?”

அதுக்காக என்னால எப்படிப் போகாம இருக்க முடியும்?நான் போனா அவங்க சந்தோஷம் தான் படுவாங்க.நான் போயிட்டு வந்துடறேங்க

அபர்ணா!போய் அவமானப்பட்டுத் திரும்பப் போறே

இல்லீங்க!அப்படியெல்லாம் ஆகாது.போகாம என்னால இருக்க முடியாது என்னை மன்னிச்சிடுங்க.

நான் சொல்றதைக் கேக்காமப் போறே!போ!

அபர்ணா புறப்பட்டாள்.போகும் வழியில் அப்பாவுக்கு வேட்டி சட்டையும்,அம்மாவுக்குப் புடவை, ரவிக்கைத்துணியும் மற்றும் பழம்,பூவெல்லாம் வாங்கிக்கொண்டாள்.

மண்டபத்தில் ஒரே கூட்டம்.

உள்ளே நுழைந்தவளை வரவேற்க யாருமில்லை.

முக்கிய நிகழ்ச்சியான தாலி கட்டுதல் முடிந்து போயிருந்தது.

எல்லோரும் பரிசு கொடுப்பதற்காக மணமக்களைச் சுற்றிக் குழுமியிருந்தனர்.

அபர்ணா அவர்களை நோக்கி முன்னேறினாள்.அப்பா,அம்மா இருவரும் அவளைப் பார்த்து விட்டனர்.

அம்மா முகத்தில் மகிழ்ச்சி,பயம்,என்று கலவையான உணர்ச்சி.

அப்பா முகம் கோபத்தில் சிவந்தது;வெறுப்பில் சுளித்தது.

 வெடித்தார்கண்டவளையெல்லாம் யார் வரச் சொன்னது?இந்த மாதிரி விழாவுக்கு வருவதற்கு ஒரு தகுதி வேண்டும்.அவளை வெளியே அனுப்புங்க.

இந்த நேரத்தில் தன் கோபத்தைக் காட்ட மாட்டார் என்று நினைத்து வந்த  அபர்ணா அதிர்ந்தாள்.

மீண்டும் அப்பாவின் உரத்த குரல்.

வாங்கோ,நம்ம சொந்தக்காராள்ளாம் வாங்கோ.யாரோ ரெட்டிப் பொம்பளைக்கு இங்க என்ன வேலை?”

எல்லோரும் இவளையே பார்த்தனர்.அப்படியே பூமி பிளந்து தன்னை விழுங்கி விடக் கூடாதோ   எனத்தோன்றியது.

அழுகை வந்தது.

கட்டுப்படுத்திக் கொண்டாள்.

இவர் முன் அழுது நாம் தாழ்ந்து விடக்கூடாது.

மண்டப வாசலுக்கு வந்தாள்.அடக்கி வைத்திருந்த அழுகை சரேலென வந்தது.

அப்போது ஒரு போலிஸ் ஜீப்பும்,பின்னால் ஒரு அரசு  காரும் வந்து நின்றன.

காரிலிருந்து அமைச்சர் குமார ரெட்டி இறங்கினார்.

கங்காதரின்  ஊர்க்காரர்.ஒரே ஊர் ஒரே சாதி என்பதால் கங்காதரிடம் நிறைய நெருக்கம் உண்டு.இவளையும் நன்கு அறிவார்.

அவர் இவளைப் பார்த்தவுடன்அடடே,அபர்ணா!எப்படிம்மா இருக்கே?நடேச ஐயரை உங்களுக்குத்  தெரியுமா ?கங்காதர் வரல்லையா?” பேசிக்கொண்டே நெருங்கியவர் ,அவள் கண்ணீரைப் பார்த்துத் திடுக்கிட்டுஏம்மா அழுவறேஎன்று விசாரித்தார்.

அந்த நொடியில் அவளது கோபம்,வன்மம் மேலோங்க அவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

இல்ல அங்கிள்,உள்ளே போய்ப் பரிசு கொடுக்கப்போகும்போது அவங்க சாதிக்காரங்களா இருந்தாங்க.என்னைப் பார்த்து ரெட்டிப் பொம்பளைக்கு என்ன அவசரம்னு கேவலமா பேசிட்டார்.நம்ம சாதியையே கேவலப்படுத்திட்டாரேன்னுதான் வருத்தம்

அமைச்சரின் முகம் சிவந்தது.

அப்படியா சொன்னான் அந்த நடேசன்?.இந்த ரெட்டி கிட்டதானே வரணும். பார்த்துக் கறேன்என்று சொல்லி விட்டு  வண்டியிலே ஏறும்மா;போகலாம்.உன்னை வீட்டில் விட்டுவிட்டு கங்கா வையும் பார்த்துவிட்டுப் போகிறேன்என்று அவளுடன் புறப்பட்டுப் போய் விட்டார்.

அமைச்சரின் வருகை அறிந்து அவரை வரவேற்க வாசலுக்கு வந்த நடேசன், அவர், அபர்ணாவுடன் காரில் ஏறிப்போவதைப் பார்த்து,அதிர்ந்து போனார்,

காரில் சென்று கொண்டிருந்த அபர்ணாவுக்கு ஒரு குரூர திருப்தி,அரசாங்க ஒப்பந்தப் பணிகளில் லட்சக்கணக்காக சம்பாதித்து வரும் அப்பாவின் தொழில் அடையப்போகும் வீழ்ச்சியை எண்ணி.

வெள்ளி, நவம்பர் 23, 2012

தட்ச யக்ஞம்!

அந்தச் செய்தி கேட்டதிலிருந்தே அபர்ணா பரபரப்பானாள்.

இத்தனை நாட்களாக அடக்கியிருந்த பாசம் தலை தூக்கியது.

கங்காதர் வருகைக்காகக் காத்திருந்தாள்.

வழக்கமாகச் சீக்கிரம் வருபவன் அன்று நீண்ட நேரம் தாமதமாக்குவது போல் தோன்றியது.

அவன் வந்தான்.

என்னங்க!அப்பாவுக்கு இன்னைக்கு அறுபதாம் கல்யாணமாம்.வாங்க ;போயிட்டு வரலாம்”

”நம்மை மதிச்சு நமக்கு அழைப்பு அனுப்பியிருக்காரா உங்க அப்பா?இல்லையே!அப்ப எப்படிப்போவது?”

”அதுக்காக என்னால எப்படிப் போகாம இருக்க முடியும்?நான் போனா அவங்க சந்தோஷம் தான் படுவாங்க.நான் போயிட்டு வந்துடறேங்க”

”அபர்ணா!போய் அவமானப்பட்டுத் திரும்பப் போறே”

” இல்லீங்க!அப்படியெல்லாம் ஆகாது.போகாம என்னால இருக்க முடியாது என்னை மன்னிச்சிடுங்க.”

நான் சொல்றதைக் கேக்காமப் போறே!போ!

அபர்ணா புறப்பட்டாள்.போகும் வழியில் அப்பாவுக்கு வேட்டி சட்டையும்,அம்மாவுக்குப் புடவை, ரவிக்கைத்துணியும் மற்றும் பழம்,பூவெல்லாம் வாங்கிக்கொண்டாள்.

மண்டபத்தில் ஒரே கூட்டம்.

உள்ளே நுழைந்தவளை வரவேற்க யாருமில்லை.

முக்கிய நிகழ்ச்சியான தாலி கட்டுதல் முடிந்து போயிருந்தது.

எல்லோரும் பரிசு கொடுப்பதற்காக மணமக்களைச் சுற்றிக் குழுமியிருந்தனர்.

அபர்ணா அவர்களை நோக்கி முன்னேறினாள்.அப்பா,அம்மா இருவரும் அவளைப் பார்த்து விட்டனர்.

அம்மா முகத்தில் மகிழ்ச்சி,பயம்,என்று கலவையான உணர்ச்சி.

அப்பா முகம் கோபத்தில் சிவந்தது;வெறுப்பில் சுளித்தது.

 வெடித்தார்”கண்டவளையெல்லாம் யார் வரச் சொன்னது?இந்த மாதிரி விழாவுக்கு வருவதற்கு ஒரு தகுதி வேண்டும்.அவளை வெளியே அனுப்புங்க.”

இந்த நேரத்தில் தன் கோபத்தைக் காட்ட மாட்டார் என்று நினைத்து வந்த  அபர்ணா அதிர்ந்தாள்.

மீண்டும் அப்பாவின் உரத்த குரல்.

“வாங்கோ,நம்ம சொந்தக்காராள்ளாம் வாங்கோ.யாரோ ரெட்டிப் பொம்பளைக்கு இங்க என்ன வேலை?”

எல்லோரும் இவளையே பார்த்தனர்.அப்படியே பூமி பிளந்து தன்னை விழுங்கி விடக் கூடாதோ   எனத்தோன்றியது.

அழுகை வந்தது.

கட்டுப்படுத்திக் கொண்டாள்.

இவர் முன் அழுது நாம் தாழ்ந்து விடக்கூடாது.

மண்டப வாசலுக்கு வந்தாள்.அடக்கி வைத்திருந்த அழுகை சரேலென வந்தது.

அப்போது ஒரு போலிஸ் ஜீப்பும்,பின்னால் ஒரு அரசு  காரும் வந்து நின்றன.

காரிலிருந்து அமைச்சர் குமார ரெட்டி இறங்கினார்.

கங்காதரின்  ஊர்க்காரர்.ஒரே ஊர் ஒரே சாதி என்பதால் கங்காதரிடம் நிறைய நெருக்கம் உண்டு.இவளையும் நன்கு அறிவார்.

அவர் இவளைப் பார்த்தவுடன்”அடடே,அபர்ணா!எப்படிம்மா இருக்கே?நடேச ஐயரை உங்களுக்குத்  தெரியுமா ?கங்காதர் வரல்லையா?” பேசிக்கொண்டே நெருங்கியவர் ,அவள் கண்ணீரைப் பார்த்துத் திடுக்கிட்டு”ஏம்மா அழுவறே”என்று விசாரித்தார்.

அந்த நொடியில் அவளது கோபம்,வன்மம் மேலோங்க அவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

“இல்ல அங்கிள்,உள்ளே போய்ப் பரிசு கொடுக்கப்போகும்போது அவங்க சாதிக்காரங்களா இருந்தாங்க.என்னைப் பார்த்து ரெட்டிப் பொம்பளைக்கு என்ன அவசரம்னு கேவலமா பேசிட்டார்.நம்ம சாதியையே கேவலப்படுத்திட்டாரேன்னுதான் வருத்தம்”

அமைச்சரின் முகம் சிவந்தது.

“அப்படியா சொன்னான் அந்த நடேசன்?.இந்த ரெட்டி கிட்டதானே வரணும். பார்த்துக் கறேன்” என்று சொல்லி விட்டு  ‘வண்டியிலே ஏறும்மா;போகலாம்.உன்னை வீட்டில் விட்டுவிட்டு கங்கா வையும் பார்த்துவிட்டுப் போகிறேன்” என்று அவளுடன் புறப்பட்டுப் போய் விட்டார்.