ஆண்டு
1996-97 ஆக இருக்கலாம்.
எங்கள்
கிளை வாடிக்கையாளரின் அலுவலகத்துக்குக் கடன் வசூல் சம்பந்தமாகப் போயிருந்தேன்
அவருடன்
பேசிக்கொண்டிருக்கும்போது கவனித்தேன் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு
படத்தை.
அதில்
ஒரு சாமியார்,தாடி மீசையுடன், உடல் முழுவதும் மறைத்து மஞ்சள் உடையணிந்து, தலையிலும்
துணியைக்கட்டிக் கொண்டு இரு கைகளையும் ஏந்தியவாறு நின்றிருந்தார்.
(இப்போது
தோற்றம் மாறி விட்டது.தம்பதி சமேதராகக் காட்சியளிக்கிறார் அம்மா பகவான்!)
பேச்சு
முடிந்ததும் நான் கேட்டேன் படத்தில் இருப்பவர் யார் என்று.
அவர்
சொன்னார் அவர்தான் கல்கி பகவான்.சென்னையை ஒட்டிய நேமத்தில் இருக்கிறார் என்றும் தன்
வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய அற்புதம் பற்றி எல்லாம்!(கடன் தொல்லை தீர அற்புதம்
ஒன்றும் செய்யவில்லை போலும்!)
எனக்கு
எப்போதுமே இந்த மாதிரிச் சாமியார்கள் விசயத்தில் ஒரு உந்துதல்,ஆராயுங்குணம் உண்டு.
அடுத்த
முறை அவர் வங்கிக்கு வந்தபோது மேலும் அவர் பற்றி வினவினேன்.
அப்போதுதான்
அவர் என்னை ஒரு வீட்டில் இருக்கும் கல்கி பகவான் கோவிலில் நடக்கும் பஜனுக்கு
அழைத்தார்.
குறிப்பிட்ட
நாளன்று போனேன்.
ஒரு
பெரிய கூடத்தில் கல்கியின் மிகப்பெரிய படம்,முதன்முதலில் நான் பார்த்த அதே
படம்,பெரிய அளவில்.
அந்த
வாடிக்கையாளரும் வந்து விட்டார்.
மொத்தம்
ஆறே பேர்-ஐந்து ஆண்கள்,ஒரு பெண்.-அந்த வீட்டைச் சேர்ந்தவள்.
பஜன்
துவங்கியது.
அதில்
லயிக்கவில்லை என் மனம்;ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை
அவரிடம்
செல்பவர்களை மூளைச் சலவை செய்வதாகக் கேள்விப்பட்டிருந்தேன்
ஆனால்
அது பற்றி என்னால் கூற இயலாது,ஏனெனில் எனக்கு நேரடி அனுபவம் இல்லை.
ஆனால்
அந்த பக்தர்கள் ஒரு சிறிய மூளைச்சலவையில் ஈடுபட்டனர் என்பது போல் உணர்ந்தேன்.
அந்தப்பெண்
பஜன் நடக்கையில் சிறிது நேரம் அழுவதும்,சிறிது நேரம் சிரிப்பதுமாயிருந்தாள்.
அந்த
வீட்டுச் சொந்தக்காரர் என்னிட ம் சொன்னார்”அந்தப் பெண் மாதிரி ஒரு நிலை
உங்களுக்கும் வரும் பகவானையே உற்றுப்
பார்த்தபடி இருங்கள்”
வேறு
ஒருவர் வந்து சொன்னார்”பகவனையே பார்த்தபடி இருங்கள் அவர் உங்களை நோக்கி வருவார்:
அப்பா!வாய்நாற்றம்
தாங்க முடியவில்லை.
பகவானின்
பக்திமயக்கத்தில் ஆழ்வேனோ என்னவோ இந்த ஆள் இன்னும் கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டிருந்தால் அந்த நாற்றமே என்னை மயக்கமடையச் செய்து விடும்!பகவானிடம்
இந்த நாற்றத்தை நீக்கக் கோரிக்கை வைக்கவில்லையோ?
நானும்
படத்தை உற்றுப் பார்த்தபடியே இருந்தேன்.
ஒரு
பக்தியோ பரவசமோ ஏற்படவில்லை.
நான்
ஒரு துரதிருஷ்டசாலிதான்.
இது போன்ற சாமியார்கள் முன்அது மாதிரி
நிலையெல்லாம் வருவதில்லை!
பஜன்
முடிந்தது.
நான்
வாடிக்கையாளரிடமும் மற்றவர்களிடமும் சொன்னேன்”பகவானைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.அதில்
அவர் மறைந்து கழுத்தில் ஆடும் பாம்புடன் சிவன் தெரிந்தார்”(ச்சும்மா!)
அவர்களுக்கு
மகிழ்ச்சி(பாவம்)
உங்களுக்கு
”ஆவிர்பாவம்” வந்து விட்டது என்றனர்(அப்படியென்றால் என்ன?)
கிளம்புமுன்
ஒருவர் சொன்னார் “ஞாயிறன்று என் வீட்டில் இண்டென்சிவ் இருக்கிறது கட்டாயம் கலந்து
கொள்ளுங்கள்”
தலையசைத்து
விட்டு நடந்தேன்
பின்
அந்தப்பக்கமே போகவில்லை!
டிஸ்கி:இதையெல்லாம்
கேள்விப்பட்ட என்னுடன் பணி புரிந்த சில இளைஞர்கள் நேமம் சென்று என்ன நடக்கிறதென்று
பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் ஏனோ அது நடக்கவில்லை,பகவானின்
அனுக்கிரகம் இல்லை போலும்!