தொடரும் தோழர்கள்

சனி, ஜூன் 15, 2013

அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்?!



ஒரு இளைஞன்,தன் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் பெறுவதற்காக் காத்திருந்தான்.

ஒரு அழகிய விலை உயர்ந்த மகிழ்வுந்தைக் கடையில் கண்டு அது வேண்டும் என ஆசைப் பட்டான்.பண வசதியுள்ள தன் தந்தையிடம் தனக்கு அது பட்டம் பெறும் தினப் பரிசாக வேண்டும் எனத் தெரிவித்தான்.

தந்தை புன்னகைத்தவாறு தலையசைத்தார்.

பட்டம் பெற்றான்.

அன்று அவன் தந்தை அவனைத் தன் அறைக்கு அழைத்து அவனைப் பாராட்டி விட்டு அவன் கையில் ஒரு பரிசுப் பொட்டலத்தைக் கொடுத்துச் சொன்னார்”இது உனக்கு மிக உதவியாக இருக்கும்”.

அவன் அதை ஆர்வத்துடன் பிரித்தான்.உள்ளே ஒரு அழகிய பகவத்கீதைப் புத்தகம் இருந்தது.

அவனுக்கு அளவற்ற கோபம் வந்தது.

புத்தகத்தை மேசை மீது போட்டான்.

தந்தையை கண்டவாறு இகழ்ந்தான்.

வீட்டை விட்டு வெளியேறினான்.

ஆண்டுகள் ஓடின.

அவன் நல்ல வேலை,பணம்,வீடு குடும்பம் எல்லாம் பெற்றான்.

ஒரு நாள் அவன் தந்தை இறந்ததாகச் செய்தி வந்தது .

அவன் தன் ஊருக்குச் சென்றான்.

தந்தையின் அறைக்குச் சென்றபோது அந்த பகவத்கீதை கண்ணில் பட்டது.

அதை எடுத்துப் பிரித்தான்.அது திறந்த பக்கத்தில் ஓர் உறை ஒட்டப்பட்டிருந்தது.

அதன் மேல் என் அன்பு மகனுக்கு என எழுதப்பட்டிருந்தது.

அந்த உறையைப் பிரித்தான் .உள்ளே ஒரு மகிழ்வுந்து சாவியும், முழுத்தொகயும் செலுத்தி யதற்கான சீட்டும் இருந்தன.

அவன் கண்ணீர் விட்டான்.
………………………………..
ஆம்! நாம் பல நேரங்களில் நம் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்வதில்லை!

அன்பு மட்டுமல்ல;அவர்களின் உணர்வுகள் எதையுமே சரியாகப் புரிந்து கொள்ளாமல், அவர்க ளைக் காயப்படுத்தி விடுகிறோம்.

எத்தனையோ பெற்றோர் தங்கள் வறுமை நிலையிலும் குழந்தைகளுக்கு வேண்டியவற்றை இயன்ற அளவு செய்து கொடுக்கிறார்கள்,தங்கள் தேவைகளைச் சுருக்கிக் கொண்டு!

ஆனால் நாமோ பெரியவர்களான பின் அவற்றை மறந்து அவர்களை அலட்சியப் படுத்து கிறோம்.

முதியோர் வேண்டுவது மிகப்பெரிய வசதிகளை அல்ல.

அவர்கள் முக்கியத் தேவை அன்பு மட்டுமே.

அது கிடைத்தால் நீங்கள் குடிக்கும் கூழோ கஞ்சியோ குடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக 
உங்களுடன் காலம் கழிப்பார்கள்.

இந்த உலக முதியோர் கொடுமை பற்றிய விழிப்புணர்வு நாளில் ,எல்லா மகன்/மகள்களுக்கும் 
அந்த விழிப்புணர்வு வரட்டும்!
.......................................................

29 கருத்துகள்:

  1. ஆழ்ந்த கருத்துடைய அருமையான கதை
    முதியோர் தின சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மிகச்சிறிய கதையுடன் மிகப்பெரிய விஷயத்தை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள், ஐயா. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நெகிழ்ச்சியான பதிவு.
    உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்று சிறுவயதில் படித்தாலும் மறந்துவிடுகிறோம். முதியோர்கள் வெறும் உயிர் மட்டுமில்லையே? உயிர் கொடுத்த உயிர் அல்லவா?

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் நமக்காகத் தான் செய்கிறார்கள்... வாழ்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...

    இன்றைய தலைமுறையினருக்கு புரிய வைக்கவும் வேண்டும்... (இன்றைய நிலை அப்படி...!)

    பதிலளிநீக்கு
  5. அனுபவ வரிகள்....

    //உலக முதியோர் கொடுமை பற்றிய விழிப்புணர்வு நாளில் ,எல்லா மகன்/மகள்களுக்கும்
    அந்த விழிப்புணர்வு வரட்டும்//

    பதிலளிநீக்கு
  6. // இந்த உலக முதியோர் கொடுமை பற்றிய விழிப்புணர்வு நாளில் ,எல்லா மகன்/மகள்களுக்கும் அந்த விழிப்புணர்வு வரட்டும்! //

    முதியோர் கொடுமை விழிப்புணர்வு வேண்டும் என்ற நிலையில் நாடு இருக்கிறது என்பது , நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.


    பதிலளிநீக்கு
  7. உண்மைதான் தல, பல நேரங்களில் பெற்றோரின் அன்பை நாம் மறந்து காயப்படுத்தி விடுகிறோம்....!

    பதிலளிநீக்கு
  8. People can fully realise the value of the parents, only when they became a parent.

    பதிலளிநீக்கு
  9. இந்த நாளுக்கேற்ற, மனதை நெகிழவைத்த பதிவு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. இந்த உலக முதியோர் கொடுமை பற்றிய விழிப்புணர்வு நாளில் ,
    எல்லா மகன்/மகள்களுக்கும் அந்த விழிப்புணர்வு வரட்டும்!

    பதிலளிநீக்கு
  11. அருமையான பதிவு! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. முக்கியமான அறிவுரை தாங்கிய கதை அருமை

    பதிலளிநீக்கு
  13. அழகாகச்சொல்லியுள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு
  14. மனதை நெகிழ்ச்சி கொள்ள வைத்த பகிர்வு......

    பல சமயங்களில் புரிந்து கொள்ளாதே வாழ்க்கையை ஓட்டி விடுகிறோம். புரியும் போது எல்லாம் முடிந்து விடுகிறது!

    பதிலளிநீக்கு