தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூன் 10, 2013

நமோவும் மோடியும்!



”நமோ” என்றால் என்ன?

அவசரப்படாதீர்கள்!

”ஓம் நமோ நாராயணாய” என்று சொல்கிறோம்.

அங்கு நமோ என்றால் என்ன?

நாராயணாய நம:-- நாராயணனுக்கு வணக்கம்,நமஸ்காரம் என்பதே!

ஆனால் இப்போது இந்த ’நமோ’ என்ற ஓசை காதில் விழுந்தாலே பலர் நடுங்குகிறார்கள்.

ஹிரண்யகசிபுவுக்கு “நமோ நாராயணாய” என்று சொன்னால்தான் எரிச்சல் வரும்.

ஆனால் இன்றோ  ’நமோ’ என்று சொன்னாலே  பலருக்கு எரிச்சல் வருகிறது!

புதிதாகப் பல வியாதிகள் சொல்கிறார்கள்....நமோனியா(இத்தனை நாளாக நிமோனியாதான் தெரியும்) என்று ஒரு நோய்!

நமோனிடிஸ் என்று ஒரு நோய்க் கிருமி!

இப்படிப் பல புதிய கண்டு பிடிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன!

இன்னும் என்னவெல்லாம் கண்டு பிடிப்பார்களோ?

இதை விடுங்கள்!

அந்தக்காலத் தமிழ்ப் பாடல்களில் ’மோடி’ என்ற ஒரு சொல் வரும்

“ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கெந்தன் மீதையா?”

“அனுதினம் செய்வார் மோடி
அகமகிழ்வார் போராடி”

இந்தச் சொல்லுக்கான சரியான பொருள் என்ன?

சண்டை?ஊடல்?குறும்பு?கோபம்?..........

தெரிந்தால் சொல்லுங்களேன்!

நமோ நம!





11 கருத்துகள்:

  1. தல நீங்க பெரிய பெரிய பத்திரிகைகள்ல எழுத வேண்டிய ஆளு தல... :-)
    ஏன்னா உங்க கிட்ட தான் பெரிய பெரிய மோடி மஸ்தான் வித்தை எல்லாம் இருக்கு...

    நமோ நமக :-)

    பதிலளிநீக்கு
  2. அனுதினம் செய்வார் மோடி

    மோசடி ..!!???

    பதிலளிநீக்கு
  3. //“அனுதினம் செய்வார் மோடி
    அகமகிழ்வார் போராடி”//

    இது தற்போது BJP யில் உள்ள பெரிய தலைவர்களுக்காக அந்த காலத்திலேயே எழுதப்பட்ட பாடல் என நினைக்கிறேன்!!!

    பதிலளிநீக்கு
  4. எனக்கு நரேந்திர மோடிதான் தெரியும்

    பதிலளிநீக்கு