”வைதேகி,வைதேகி”
“ஏன்னா
கூப்பாடு போடறேள்”
இன்னிக்கு
என்னதேதி
இதைக்
கேக்கறதுக்கா கூப்பிட்டேள்
இல்லடி
;ஒனக்கு நெனவிருக்கா பாத்தேன்
இது
கூடத்தெரியாதா? 12
மார்கழி மாசம்
என்ன தேதி? 27 டி
அதுக்கென்ன?
இன்னிக்குக்
கூடாரவல்லியாச்சே!
தெரியுமே
இன்னிக்குச் சக்கரைப் பொங்கல் ஞாபகம் வந்துடுத்தாக்கும்.ஏதாவது ஒரு பண்டிகைன்னு சொல்லி விதவிதமாத் தின்னுட்டு அஜீர்ணத்தில அவஸ்தைப் பட வேண்டியது! அன்னிக்கு
அப்படித்தான்;அனுமத் ஜெயந்திக்கு உளுந்தவடை பண்ணி னேன்; எத்தனை வடை தின்னேள்னு
ஒங்களுக்கும் தெரியாது அந்த அனுமாருக்கும் தெரியாது. அப்பறம் ரெண்டு நாள் பத்தியம்.இன்னிக்குச்
சக்கரைப் பொங்கல். கொஞ்சமாத்தான் பண்ணப் போறேன்
அடியே!எவ்வளவு
பண்ணாலும் அதை நன்னாப் பண்ணணும்.நெய்யைக் கஞ்சத்தனம் பண்ணாம ஊத்தணும்!அள்ளிச்
சாப்பிட்டா நெய் அப்படியே முழங்கை வழியா வழிஞ்சு ஓடணும்!
ஆமா!
இன்னிக்கு நெய் ஓடும்;நாளைக்கு டாக்டர் கிட்ட நீங்க ஓடணும்;இந்தக் கொழுப்பு குறைய
பத்து நாள் ஓடணும்! அதெல்லாம் அந்தக்காலத்துக்குச் சரின்னா! இப்பல்லாம்
மாறிடுத்து;சக்கரை வியாதி,கொலஸ்ட்ரால்னு ஆயிரம் வியாதி.
போங்கோ,போய்
மொதல்ல ஸ்நானம் பண்ணிட்டுக் கோவிந்தனைச் சேவிச்சுட்டு வாங்கோ; அப்பறம்தான் காபியே!
கூடாரை
வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்---
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்---
படத்தில் இருப்பது அக்கார அடிசில்! சகோதரி ஜெயஸ்ரீ கோவிந்தராஜனுக்கு நன்றி
எப்படிச் செய்வது? செய்முறை அவர் பதிவில்!
