அவர்கள் இருவரும் கைகோத்தபடி,ஹாலுக்குள் நுழைந்தனர். அவனுக்கும் ஓவியத்தில் விருப்பமும் சிறிது புரிதலும் இருந்தாலும், அவள் ஒவ்வொரு ஒவியத்தின் முன் நின்று அதை விமரிசித்த பாங்கைக் கண்டு வியந்தான்.ஒரு ஓவியத்தின் முன் நின்று”வாவ்,இளங்கோவின் ஒவியம்;வண்ணங்களை அவர் கையாளும் விதத்தை பாருங்கள் அஸ்வின்!” என்று வியந்து பாராட்டும்போதே அருகில் வந்து நின்ற மனிதர் அவளைப் பார்த்து”ஹலோ காயத்ரி” என்றழைக்க,”மிஸ்டர் இளங்கோ! எப்படியிருக்கீங்க.! இவர் என் நண்பர் அஸ்வின் குமார்—அஸ்வின்,மிஸ்டர் இளங்கோ” என்று அறிமுகம் செய்து வைத்து விட்டு,”இப்போதுதான் உங்கள் ஒவியத்தின் சிறப்புப் பற்றி அஸ்வினிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்”என்றாள்.
”ஹலோ” என்றவாறு கைகுலுக்கிய அவர் காயத்ரியிடம் சொன்னார்”இன்றுதான் உங்களை ஒரு கண்காட்சியில், தனியாகவின்றி, ஒரு துணையுடன் பார்க்கிறேன்..மிக விசேஷமான நண்பர் என நினைக்கிறேன்”காயத்ரியின் கன்னம் வெட்கத்தால் சிவந்தது போல் குமாருக்குத் தோன்றியது. ஒவியங்களை ரசியுங்கள் என்று சொல்லி அவர் சென்று விட்டார்.
அவர்கள் கண்காட்சியை முழுதும் இரு முறை சுற்றி வந்தனர். வெளியே வந்து மதிய உணவு அருந்தினர்.அப்போது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
”நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக்
குறுமுறுவல் பதித்த முகம்
தரளம் மிடைந்து ஒளி தவழக் குடைந்து இரு
பவளம் பதித்த இதழ் ”
என்ற நா.பா.வின் வரிகள் மனதில் ஓடின.
அவளது அழகு அவனைப் பேச்சற்றவனாக ஆக்கியது.அதே நேரம் ஒரு பெண் அவர்களைகடந்து செல்லும்போது அவனைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.காயத்ரி சிறிது பொய்க் கோபத்துடன் கேட்டாள்”என்ன, அவளைப் பார்த்ததும் பேச்சே வரவில்லையோ?’
” நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று ”
(அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும்,யாரை நினத்து ஒப்புமையாக என்னைப் பார்க்கிறீர் என்று சினம் கொள்வாள்).
அவளிடம் கெஞ்சி,கொஞ்சி, தணிந்து, பணிந்து அவளது ஊடலை நீக்க வேண்டியதாயிற்று.
இப்படியாக அவர்கள் காதல் வளர்ந்தது.ஒரு கட்டத்தில் இனி திருமணத்தை தள்ளிப் போடக் கூடாது என்று முடிவு செய்தவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினர்.எந்த வித எதிர்ப்பும் இடையூறுமின்றி திருமணம் நடந்தேறியது.
முதல் இரவு—
அத்தனை நாட்கள் வெறும் கைகளின் தொடுகையில் மட்டுமே இருந்த அவர்களுக்கு உரிமம் வழங்கப் பட்டு விட்டது.
அவர்கள் தழுவிக் கொண்டனர்.ஒருவருக்குள் ஒருவர் புதைந்து போக வேண்டும் என நினைப்பது போன்ற ஒரு தழுவல்.இதய உணர்வுகளுக்கு வடிகாலே போன்ற தழுவல்.அதில் வெறும் காமம் இல்லை.அளவற்ற காதல் இருந்தது.
“வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.”
(காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்)
அவள் முகத்தை அவன் முகம் நெருங்கியது.இதழ்களை இதழ்கள் நெருங்கின.
“ஆரஞ்சுத் தேன்சுளையா !
அங்கென்ன தத்தையொன்று
கூரலகால் கொத்திவந்த
கோவையா- யார்தான்
பவளத்தைக் கீறிவைத்தார்
பார்ப்போம் ! அடடா
அவளின் இதழா
அவை.
(நன்றி,சிவகுமாரன்)
.............
இணைந்தன...
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.”
(மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்,பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.)
இனி அங்கு இருப்பது நாகரிகமில்லை.
அவர்கள் இனிதே வாழ வாழ்த்தி விடை பெறுவோம்.
(இனி இல்லறம் என்ற நல்லறம் ஆரம்பம்.அதையும் வள்ளுவர் காட்டிய வழியில் வாழ்வார்களா?!)
தொடரும் தோழர்கள்
காதல்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, மார்ச் 16, 2012
வியாழன், மார்ச் 15, 2012
காதல்-திருக்குறள் கதை-பகுதி-3
அவன் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தோளில் தட்டி விட்டுச் சென்ற இடம் இனித்தது. தோளில் எப்படி இனிக்கும் என்று யோசிக்காதீர்கள்!இது நாவின் சுவையல்ல;நெஞ்சின் சுவை.அதே சமயம் அவள் செல்வது நெஞ்சில் ஒரு சுகமான வலியாகப் பரவியது.ஒரு வாரம்!ஒரு வாரம் அவளைப் பார்க்காமல் எப்படி இருக்கப் போகிறோம் என்று நினைத்தாலே நெஞ்சின் வலி கூடியது; ஆனால் அடுத்த ஞாயிறன்று அவளைக் கட்டாயம் பார்க்கப் போகிறோம் என்ற நம்பிக்கை உடல் முழுவதும் ஒரு பரவசமாய்ப் பரவியது.ஒரே ஒரு பிரச்சினை.இந்த ஏழு நாட்கள் தொலைபேசக் கூடாது என்று அவள் கண்டிப்பாகச் சொல்லிச் சென்று விட்டாள்.கடவுளே!நாட்களை வேகமாக நகரச்செய் என்று வேண்டினான்.
அந்த ஞாயிறும் வந்தது.மறுநாள் அவளைச் சந்திக்கப் போவதை நினைத்து நினத்து முதள் நாள் இரவு நித்திரை போயிற்று. ஞாயிறு காலை எழுந்தது முதல் நிலை கொள்ளவில்லை
ஒரு லக்னோவி குர்த்தா பைஜாமா அணிந்தான்(போகும் இடம் ஒரு ஒவியக்கண்காட்சி அல்லவா?).’ஹ்யூகோ பாஸ்’ செண்ட் டைத் தெளித்துக் கொண்டான்.புறப்பட்டான்.தான் முதலில் சென்று அவளை வரவேற்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அவள் முந்திக் கொண்டாள்.காலரியின் நுழை வாயிலிலேயே காத்திருந்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றனர்.ஒரு வாரப் பிரிவு முடிந்து இன்று பார்க்கும்போது எத்தனையோ பேச வேண்டும் என்ற எண்ணியதெல்லாம் அந்தக் கணத்திலே மறந்து போனது.கண்கள் பார்த்துக் கொண்டே இருந்தன. ஆயிரம் செய்திகள் பேசின.இதயங்கள் உருகி ஓடிச் சங்கமித்தன.அங்கு பேச்சா முக்கியம்?
”கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”
(கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமல் போகின்றன.)
அவள் கைகளை மெல்லப் பற்றினான்.என்ன மென்மை! இன்னும் பார்வைகள் விலகவில்லை.சுற்றுப்புறத்தை மறந்து ஒரு தனி உலகில் நின்றனர்.அவர்களை தாண்டிச் சென்ற சிலர் அவர்களப் பார்த்துச் சிரித்தவாறு சென்றனர்.
யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.
(யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால்,அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக் கண்டு நகைக்கின்றனர்.)
“இவள்தான்,இவள்தான் நான் தேடிக் கொண்டிருந்த என் துணை.இவளே என்னில் ஒரு பாதி.இவள் இல்லாமல் எனக்கு ஒரு வாழ்க்கையே இல்லை.இறைவா இவளை என்னிடம் கொண்டு சேர்த்தமைக்கு நன்றி”—அவன் எண்ண ஒட்டம்.
”இவர்தான்.எந்த ஆடவனைப் பார்க்கும்போதும்,எந்த ஆடவோனோடு பேசும்போதும் ஏற்படாத ஒரு மகிழ்ச்சி இவரைப் பார்க்கும்போது என்னில் அலையலையாய்ப் பரவுகிறதே.இவரே என் துணை. இவரே இனி என் வாழ்க்கை;வாழ்க்கையின் பொருள்.”-அவள் எண்ண ஓட்டம்
கொஞ்ச நேரத்தில், கனவுலகை விட்டு நினைவுலகுக்கு வந்தனர்.
இனிய பிதற்றல்கள் ஆரம்பித்தன.
அவர்களை அவர்கள் உலகத்திலே கொஞ்சம் தனியாய் இருக்க விடுவோமா?
(இன்னும் வரும்)

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)