தொடரும் தோழர்கள்

கதை.புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை.புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 11, 2015

புலியின் மீசை!



ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் என்றார் வள்ளலார்.

அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ் என்றார் வள்ளுவர்.

அன்பு என்பது ஒரு வழிப்பாதையல்ல.நம்மிடம் பிறர் அன்பு செலுத்தவில்லையே என வருந்தும் நேரத்தில் நாம் சிந்திக்கிறோமா அந்த அன்புக்குத் தகுதியானவராய் நாம் இருக்கிறோமா என்பதை? 

அன்பு என்பது ஒரு வளைஎறி போன்றது.

நாம் செலுத்தும் அன்பு அங்கிருந்து நிச்சயமாக நம்மை நோக்கித் திரும்பி வரும்.

அன்பு செலுத்துங்கள்.அன்பு செலுத்தப் படுவீர்கள்

ஒரு நாடோடிக் கதை

//முனிவர் ஒருவர் மலைப்பகுதியில் வாழ்ந்து வந்தார்.

அவரிடம் பல அதிசய சக்திகள் இருப்பதாகப் பலர் நம்பினர்.

ஒரு பெண் அவரிடம் வந்து சொன்னாள்”என் கணவர் என்னிடம் அன்பாகவே இல்லை.அவர் என்னிடம் அன்புடன் இருப்பதற்கு நீங்கள்தான் வழிகாட்டவேண்டும்.”

முனிவர் சொன்னார்”செய்யலாம்.அது கொஞ்சம் கடினம்;அதற்குப் புலி மீசை முடி வேண்டும் உன்னால் கொண்டு வர முடியுமா?”

“நிச்சயம் கொண்டு வருவேன்” எனச்சொல்லி அந்தப் பெண் அகன்றாள்

புலியைத்தேடி காட்டுக்குள் சென்றாள்

ஒரு ஆற்றின் கரையில் புலியைப் பார்த்தாள்.அவளைப் பார்த்ததும் புலி உறுமியது.

மறுநாளும் சென்றாள்,அதே போல் நடந்தது.

தினமும் சென்றாள்.

சில நாட்களில் புலி பழகி விட்டது.

அவளும் புலிக்கு உணவு கொண்டு போய்க் கொடுத்தாள்.

நன்கு பழகிய பின் ஒரு நாள் புலி இருகில் இருந்தபோது அவள் அதன் மீசை முடியைப் பிடுங்கிக்கொண்டு ஓடி வந்து விட்டாள்.

முனிவரிடம் கொண்டு தந்தாள்

முனிவர் அதைப் புலி முடி என உறுதி செய்து கொண்டு அதைத் தீயில் போட்டு விட்டார்.

அவள் பதறினாள்

முனிவர் சொன்னார்”ஒரு புலியையே பிரியமாக இருக்கச் செய்த உனக்கு ஒரு மனிதனின் அன்பைப் பெறுவது கடினமா என்ன?’

அவள் புரிந்து கொண்டாள்//

ஆம் தேவையானதெல்லாம் அதிகஅன்பு. நிறையப் பொறுமை.

வேறென்ன?