தொடரும் தோழர்கள்

கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 25, 2013

கணினியுடனான கைகுலுக்கல்!(தொடர்பதிவு)



அழைத்து விட்டார் அன்புடன் தமிழ் இளங்கோ
அனுபவப் பதிவொன்று எழுதச் சொல்லி
ஆம்!கணினியுடனான கைகுலுக்கல்
எப்படி நேர்ந்ததென்று எழுத வேண்டும்!



உடன் பிறப்பே!
நீ அறிந்திடுவாயா,இந்தச் சாமானியன்
கணினி படித்த கதை!

வங்கிப் பணியில் குப்பை கொட்டிய காலமது.
எண்பத்தெட்டென எண்ணிடுகிறேன் ஆண்டு.
கணினி படித்திட்டால் கட்டிய பணம்
கட்டாயம் திருப்பித்தரும் வங்கி என்றார்.
ஓசியில் கிடைத்தால் உதவாப் பொருளென்றாலும்
ஒன்பது கொடு எனக் கேட்பவர்தாமே நாம்!

சேர்ந்தேன் அலுவலக நண்பர் சிலருடன்
என்.ஐ.ஐ.டி யில் கணினி கற்றுக் கொள்ள
அலுவலகம் மயிலையில்,பயிற்சி நுங்கம்பாக்கம்
மாலை வேளை வகுப்புகள் என்று அறிந்தோம்!

முதல்நாள்!கணினி முன் அமர்ந்து
கலக்கும் கனவுகள் கலர் கலராய்
வகுப்பறைக்குள் நுழைந்தோம்
என்ன ஏமாற்றம் ஒரு கணினி கூட இல்லை அங்கு!
கையில் அட்டை வைத்த நாற்காலிகள்.
வந்தார் ஆசிரியர்,அறிமுகப்படலம் ஆரம்பம்
அடிப்படை பற்றிச் சொன்னார்
டாஸ் என்றார்,ஆபரேடிங் சிஸ்டம் என்றார்
முதலில் ஃப்லோசார்ட் என்றார்
ஒரு கட்டம் அதிலிருந்து ஒரு அம்புக்குறி
கட்டங்கள் ஒன்று இரண்டாகி இரண்டு பலவாகி
எங்கோ முடியும்;  விடை பிறக்கும்!

இப்படியே கழிந்தன நாட்கள்!
கணினியைக் கண்ணிலேயே காணோமே!
நான் கற்றுக் கொண்ட்து டிபேஸ் 3
ஞாபகம் கொஞ்சமும் இல்லை இன்று.

ஒரு கணினியில் இருவராய்ப் பயிற்சி தொடங்கியது
பிறகு வந்தது தேர்வென்ற ஒன்று!
வேறென்ன,எல்லாரும் பாஸ்தான்!
எங்களுக்கு லாபம் ஒன்றுமில்லை
வங்கிக்குத்தான் நஷ்டம்!

பின்னாளில் வந்தது கணினி வங்கியிலும்
என் அறை மேசையில் ஒரு கணினி
என்ன செய்தேன் அதைக் கொண்டு.
கணக்கு வைத்த சிலர் இருப்புக் கேட்டால்
கரெக்டாகச் சொல்லிடுவேன்,அவ்வளவே!

இன்றும் என்ன? வலைப்பதிவில் எழுதும்போதும்
இளங்கோ போல் நானும் ஒரு விரல் கிருஷ்ணா ராவ்தான்
இன்று வரை கற்றுக்கொண்டே இருக்கிறேன்!
கணினிஎன்னும் கடலின் கரை காண்பது என்று?!




வியாழன், அக்டோபர் 06, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்!

ஸ்டீவ் ஜாப்ஸ்-1955-2011
.........................................

சிலர் பெருமையோடு பிறக்கிறார்கள்.

சிலர் மீது பெருமை வலிந்து திணிக்கப்படுகிறது.

சிலர் பெருமையைச் சம்பாதிக்கிறார்கள்.----தங்கள் புத்தியால்,உழைப்பால்.

இந்தக் கடைசிப் பிரிவைச் சேர்ந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆப்பிள் நிறுவனத்தின் கூட்டு நிறுவனரான ஜாப்ஸ்,கணைய புற்றுநோயினால்
மரணமடைந்தார்.

ஜாப்ஸ்,வாஸ்னியாக் இருவரும் சேர்ந்து முதல் ஆப்பிள் கணினியை,ஜாப்ஸின்,வீட்டுக் கேரேஜில் உருவாக்கினர்.

1984--முதல் மக்கிண்டாஷ் அறிமுகம்
2001- ஐ-பாட் அறி முகம்
2007 ஐ ஃபோன் அறிமுகம்
2010 ஐ பேட்(i pad) அறிமுகம்.

ஆகஸ்ட் மாதத்தில் தலமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகினார்.

தொழில் நுட்பவியலில் புதிய சிகரங்களைத் தொட்ட இந்தச் சாதனையாளருக்கு அஞ்சலி.

இவரது மறைவுச் செய்தி அட்லாண்டாவில் இருக்கும் என் அண்ணன் மகளால் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது-----அவளது ஐ பேட் வழியாக.

what a fitting tribute!